ஆச்சி, நான், “எனக்கு ஜூரம்,”ன்னு வர்ஷினிக்கிட்டே சொன்னப்போ, வர்ஷினி வெண்மதிக்கிட்டே, “குறிஞ்சிக்கு ஜுரமாம்”ன்னு வெண்மதிக்கிட்டே சொன்னா.
என்னது...(பின்ன, காலையிலே கண்ணைத் திறந்த உடனே இப்படி பேச ஆரம்பிச்சா, புரிஞ்சுக்க நேரம் வேணாமா?)
நான், 'எனக்கு ஃபீவர்'ன்னு வர்ஷினிகிட்டே சொன்னப்போ, வர்ஷினி வெண்மதிக்கிட்டே “குறிஞ்சிக்கு ஃபீவர்”ன்னு சொன்னா.... ஃபீவர்-ன்னாலும் ஜூரம்-ன்னாலும் ஒண்ணுதான்.
(எனக்கு என்னவோ ஜூரம்-ன்னா ஃபீவர்ன்னு தெரியாத மாதிரி...அவ்வ்வ்)
காலை தத்துவம் 101 :
”ஆச்சி, நான் வர்ஷினி ஃப்ரெண்டே இருக்க மாட்டேன். விக்கி ஃப்ரெண்டேதான் இருப்பேன்! ” (ரொம்ப முக்கியம்...அதுவும் காலையிலே ஆறரைக்கு!)
காலை தத்துவம் 101.6 :
”வெண்மதி வர்ஷினி ஃப்ரெண்ட், வர்ஷினி என் ஃப்ரெண்ட், குறிஞ்சி விலாசினி ஃப்ரெண்ட், விலாசினி சுதர்சன் காதுலே “அர்ஷித் கைலாஷ் என்னை கிள்ளிட்டான்”ன்னு சொன்னதும் நாங்க பார்த்தப்போ இல்லே..கிள்ளவே இல்ல!”
(ஸ்ப்பாஆஆ...என்ன ஒரு ஆராய்ச்சி!)
"ஜான்சன்'ஸ் பேபி சோப்-ன்னு போட்டிருக்கா, big பேபி சோப்-ன்னு போட்டிருக்கா?""ஜான்சன்'ஸ் பேபி சோப். "
"நான் என்ன ஜான்சன்'ஸ் பேபி-யா...?”
“....”
”நான் ஜான்சன்'ஸ் பேபியா?, குறிஞ்சி மலர், பப்பு - ன்னு தானே எனக்கு ரெண்டு பேரு இருக்கு...பிக் பேபி சோப் போடு எனக்கு! "
...Which means, அவளுக்கு என்னோட சோப் வேணும்! ;-)
மேடம் இப்போ கண்ணடிக்கறாங்க...பார்க்கதான் கொஞ்சம் டெரரா இருக்கு...24 மணி நேரமும் கண்ணாடி முன்னாடி நின்னு தலைமுடியை சீவோ சீவுன்னு சீவி மூணு குடுமி போட ஆரம்பிச்சிருக்காங்க...சிலசமயங்களில், ட்ரெஸ் போட்டிருக்கோமான்னு இல்லையான்னு கூட கவலைப்படாம சீவறதைப் பார்த்தாத்தான் ...
ஓ...ப்ரியமான என் கடவுளே, கத்திரிக்கோல் கையில் கிடைத்தால் யாருக்கும் தெரியாமல் தானாகவே முடிவெட்டிக்கொள்ளும் அந்த சின்னஞ்சிறு என் மகளெங்கே?!!
27 comments:
//"ஜான்சன்'ஸ் பேபி சோப். "
"நான் என்ன ஜான்சன்'ஸ் பேபி-யா...?”//
எனக்கு அழுவனும்னு தோணுது.... அவ்வ்வ்வ்வ்வ்..............
//ஓ...ப்ரியமான என் கடவுளே, கத்திரிக்கோல் கையில் கிடைத்தால் யாருக்கும் தெரியாமல் தானாகவே முடிவெட்டிக்கொள்ளும் அந்த சின்னஞ்சிறு என் மகளெங்கே?!//
அந்தக் கண்ணாடிக்குள்ள தொலைஞ்சி போயிட்டா.. :)))
//(பின்ன, காலையிலே கண்ணைத் திறந்த உடனே இப்படி பேச ஆரம்பிச்சா, புரிஞ்சுக்க நேரம் வேணாமா?)
அப்படியே நேரம் இருந்திட்டாலும் உடனே புரிஞ்சுடும் உங்களுக்கு !
ஹய்யோ ஹய்யோ பப்புவ நினைச்சா பாவமா இருக்கு அவுங்களோட- ஐடியா’ஸோட -வேவ்லெங்க்துக்கு ஆச்சி இல்லியேஏஏஏஏஏஏஏஏ!!!!
"ஓ...ப்ரியமான என் கடவுளே, கத்திரிக்கோல் கையில் கிடைத்தால் யாருக்கும் தெரியாமல் தானாகவே முடிவெட்டிக்கொள்ளும் அந்த சின்னஞ்சிறு என் மகளெங்கே?!!"
இப்படி நிறையப் பார்க்கப் போறீங்களே சந்தனமுல்லை...:)
குழந்தைகள் உலகத்திற்குத் திரும்பிப் போகமுடிந்தால் நன்றாக இருக்கும்... இத்தனை வன்மம், அமனிதம் எல்லாம் பார்க்க வேண்டாமே...
/24 மணி நேரமும் கண்ணாடி முன்னாடி நின்னு தலைமுடியை சீவோ சீவுன்னு சீவி//
பொண்ணுன்னா அப்படித்தான். கொஞ நாள்ல சரியாகிடும்
:-)
நான் வளர்கிறேனே மம்மி!!!
:) thathuvamellam kettu ungallukku fever varuthaa? :)
//ஃபீவர்-ன்னாலும் ஜூரம்-ன்னாலும் ஒண்ணுதான்.//
//”ஆச்சி, நான் வர்ஷினி ஃப்ரெண்டே இருக்க மாட்டேன். விக்கி ஃப்ரெண்டேதான் இருப்பேன்!//
//...பிக் பேபி சோப் போடு எனக்கு! "//
:-)))
ஓ...ப்ரியமான என் கடவுளே, கத்திரிக்கோல் கையில் கிடைத்தால் யாருக்கும் தெரியாமல் தானாகவே முடிவெட்டிக்கொள்ளும் அந்த சின்னஞ்சிறு என் மகளெங்கே?!! //
பப்புவோட வளர்ச்சிப்படிகள் சீராத்தானே போய்க்கிட்டிருக்கு.
நீங்க ஏன் இதுக்கு கடவுளையெல்லாம் டிஸ்டர்ப் செய்றீங்க ஆச்சி.
அப்புறம் குறிஞ்சிகிட்ட சொல்லவேண்டிவரும்.
பிக் பேபி ;))))))))))))))
தத்துவம், சோப்பு, சீப்பு..ஹைய்யோ ஸோ ஸ்வீட் பப்பு:)!
நீங்க எவ்வளவோ பரவாயில்லை ஆறுமணிக்கு மேலதான் தத்துவம் கேட்கறீங்க.
நான் நாலு, நாலரைக்கே கேட்க ஆரம்பிச்சுடுவேன் ;))))) சில சமயம் ஆராய்ச்சி கூட செய்ய ஆரம்பிப்போம்.
இப்பதானே ஆரம்பிச்சிருக்காங்க. போகப் போக வேற டெரர் எல்லாம் இருக்கு இல்ல:)
பப்பு பெரு குறிஞ்சி மலரா! ஹ்ம்ம். பின்ன முகிலுக்கும் முல்லைக்கும் பிறந்தது வேற என்னவா இருக்கும்!!
;) அதானே குறிஞ்சி மலர்னு வச்சிட்டு அதென்ன ஜான் ஓட சன் சோப் வேண்டிக் கிடக்கு. பப்புவை ஆதரிக்கிறோம்.
பாட்டி பேரவை
பழையபடி சிட்னி கிளை
//ஓ...ப்ரியமான என் கடவுளே, கத்திரிக்கோல் கையில் கிடைத்தால் யாருக்கும் தெரியாமல் தானாகவே முடிவெட்டிக்கொள்ளும் அந்த சின்னஞ்சிறு என் மகளெங்கே?!!//
பப்பு இனிமேல உங்களுக்கு தான் முடி வெட்டி விடுவாள்
நைஸ்.
நல்ல ஆராய்ச்சி...
ஜான்சன்’ஸ் பேபி சோப் - ஹா ஹா ஹா - என்னே ஒரு பாசம் பப்புவுக்கு
கொஞ்ச வருடங்கள் கடந்து பப்பு கேப்பாங்க ஓ! ப்ரியமான கடவுளே - நான் எது செய்தாலும் இரசித்து அதை ப்லாக்கில் எழுதும் என் பிக் பேபி ஆச்சி எங்கேன்னு ;)
//"நான் என்ன ஜான்சன்'ஸ் பேபி-யா...?”//
ஐயோ!! தலை சுத்தி இருக்குமே உங்களுக்கு.
இதெல்லாம் படிக்கும் போது என் பையன் என்ன செய்ய காத்து இருக்கானொன்னு தோணுது :))
///”நான் ஜான்சன்'ஸ் பேபியா?, குறிஞ்சி மலர், பப்பு - ன்னு தானே எனக்கு ரெண்டு பேரு இருக்கு...பிக் பேபி சோப் போடு எனக்கு! "
...Which means, அவளுக்கு என்னோட சோப் வேணும்! ;-) ////
:))
///நீங்க எவ்வளவோ பரவாயில்லை ஆறுமணிக்கு மேலதான் தத்துவம் கேட்கறீங்க.
நான் நாலு, நாலரைக்கே கேட்க ஆரம்பிச்சுடுவேன் ///
:))
அந்தக் கண்ணாடிக்குள்ள தொலைஞ்சி போயிட்டா.. :))//
அதேதான்..:))
ஜீன்ஸ்.:))
அப்படியே நேரம் இருந்திட்டாலும் உடனே புரிஞ்சுடும் உங்களுக்கு !
ஹய்யோ ஹய்யோ பப்புவ நினைச்சா பாவமா இருக்கு அவுங்களோட- ஐடியா’ஸோட -வேவ்லெங்க்துக்கு ஆச்சி இல்லியேஏஏஏஏஏஏஏஏ!!!!
அப்படியே ஒரு டென் டையமுக்கு ரிப்பீட்டிக்கிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.
பப்புஸ் சோப் வாங்கிக் கொடுங்க!
/////////ஓ...ப்ரியமான என் கடவுளே, கத்திரிக்கோல் கையில் கிடைத்தால் யாருக்கும் தெரியாமல் தானாகவே முடிவெட்டிக்கொள்ளும் அந்த சின்னஞ்சிறு என் மகளெங்கே?!! ///////
ஹா ஹா ஹா ஹா ஹா
///24 மணி நேரமும் கண்ணாடி முன்னாடி நின்னு தலைமுடியை சீவோ சீவுன்னு சீவி////
:-))))
//”நான் ஜான்சன்'ஸ் பேபியா?, குறிஞ்சி மலர், பப்பு - ன்னு தானே எனக்கு ரெண்டு பேரு இருக்கு...பிக் பேபி சோப் போடு எனக்கு! "
...Which means, அவளுக்கு என்னோட சோப் வேணும்! ;-) //
யாருங்க பிக் பேபி? நீங்களாங்க? ரைட்டுங்க!
:-)))))))))))))))
//நான் ஜான்சன்'ஸ் பேபியா?, குறிஞ்சி மலர், பப்பு - ன்னு தானே எனக்கு ரெண்டு பேரு இருக்கு...பிக் பேபி சோப் போடு எனக்கு! "
...Which means, அவளுக்கு என்னோட சோப் வேணும்!//
ஓஓஓஓஓஓஓ! பாருங்க பப்பு! உங்க அம்மா சந்தடிச்சாக்குல ஓட்டறத!
:-)).. பப்பு வளர்ற முல்லை.
Post a Comment