Tuesday, March 30, 2010

பதிவர் வீட்டு...

...கட்டுத்தறியும் பதிவெழுதும்-ன்னு சங்க(த்துத்!) நூலிலேயே சொல்லியிருக்கும்போது பதிவரின் கணவர் எழுதாம இருப்பாரா?

இந்த மாதத்தில் வந்த முக்கியமான நாளுக்காக முகிலுக்கு என்ன பரிசுக் கொடுக்கலாம்னு யோசிச்சேன். முகிலுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறேனே.. அதை விட பெரிய பரிசு என்ன இருக்க முடியும்-ன்னு தோணினாலும், ‘நாம நினைக்கறதைவிட மத்தவங்க விருப்பப்படறதை நிறைவேத்தறதுதான் நாம கொடுக்கற பரிசு'ன்னு நான் பார்த்த தமிழ்சினிமா கத்துக்கொடுத்ததாலேயும் - இன்னைக்கு, Guest post by Mugil! :-)


இன்றைய(ஹிஹி..முகில் இதை எழுதினது ரெண்டு நாள் முன்னாடி) தினமணியில் படித்த செய்தி: செல்போன் வைத்துள்ள விவசாயிகளுக்கு வானிலை மாற்றம் குறித்த விவரம் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும் என்று, சென்னை மண்டல வானிலை மைய துணை இயக்குநர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

விவசாயி என்ன சொல்லவரார் தெரியுமா? விவசாயத்திற்கான மின்சாரம் கிடைக்கல! SMS மூலம் வானிலை தகவலா? முதல்ல மொபைல சார்ஜ் பண்ண மின்சாரம் குடுங்கடா!!

எது எப்படியிருந்தாலும் நம் தமிழக அரசுக்கு பட்ஜெட்டில் செலவுகணக்கு காட்ட இதுபோல இன்னும் சில யோசனைகள் கீழே!

1) மாடு மேய்ப்பவர்களுக்கு இமெயில் மூலம் தொலைந்த மாடை கண்டுபிடிக்க உதவி

2) டாஸ்மாக் குடிமகன்களுக்கு வழிகாட்ட கூகிள் மேப் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

3) மீனவர்கள் சர்வதேச எல்லையை தாண்டாதிருக்க நடுக்கடலில் சாக்பீஸால் கோடுகிழித்தல்

4) சாமியார்களை கவனிக்க சன்டிவி / நக்கீரன் கேமராவுடன் ஒப்பந்தம்

5) எதிர்க்கட்சி MLA-க்கள் தம் தொகுதி பற்றி சட்டசபையில் பேச நிதியுதவி

6) இலங்கை தமிழருக்காக பிரதமர், சோனியாஜி & பிரதிபாஜிக்கு கடிதசெலவு

7) ரேஷன் பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு செல்லாமலிருக்க அரிசிவாரியாக பூட்டு

8) அமைச்சர் பெருமக்கள் கல்வி சேவைசெய்ய இலவச பொறியியற்கல்விக்கூடம்

9) புவிவெப்பமாவதை தடுக்க வீட்டிற்கோர் AC திட்டம்

10) தடங்கலற்ற மின்வசதி பெற போன் கம்பெனி டவர்மூலம் மின்விநியோகம்

11) கள்ளவோட்டு பிளாக்கர்களுக்கு தனி நீதிமன்றம்

ஆகா..ஓகோ-ன்னு பாராட்டி உடனே தனிப்லாக் ஆரம்பிக்கற தைரியத்தை முகிலுக்குக் கொடுத்துடாதீங்க நண்பர்களே! :-)

43 comments:

ராமு said...

ஓ! நீங்க / அவர், அம்மா / அய்யா கட்சியா?

பிரியமுடன்...வசந்த் said...

//2) டாஸ்மாக் குடிமகன்களுக்கு வழிகாட்ட கூகிள் மேப் நிறுவனத்துடன் ஒப்பந்தம்//

ஜூப்பரு....
இது ஒண்ணு போதும்

முகிலுக்கு தனியா ப்ளாக் ஸ்டார்ட் பண்ணுற திறமையிருக்கு....

வெளியில வாங்க முகில் தனியா சங்கம் வச்சுடலாம்...

முகிலன் said...

ஆகா ஓகோ..

முகில் ஆச்சியெல்லாம் என்ன எழுதுறாங்க? ஒரே பதிவில நீங்க ஆச்சியத் தூக்கி தூர எறிஞ்சிட்டீங்க.. வேகமா வெளிய வாங்க.. தனிப் பதிவு ஆரம்பிச்சி நீங்க யாருங்கிறத நிரூபிங்க.. :))

(ஏதோ என்னால முடிஞ்சது)

ஆயில்யன் said...

டெரர் குடும்பமாக
டெவலப்பாக வாழ்த்துக்கள் !

//புவிவெப்பமாவதை தடுக்க வீட்டிற்கோர் AC திட்டம்//

நீங்க ஆச்சியை விட செம டெரரா யோசிக்கிறீங்கோ பாஸ் குட் !

நிறைய எழுதுங்க படிக்க மீ த வெயிட்டிங்கு :)

(ஆச்சிக்கிட்டேர்ந்து விடுதலை)

ஆயில்யன் said...

ஆஹா ஆஹா

ஒஹோ ஒஹோ


முகிலின்

சிறைக்கூடம் - ப்ளாக் டைட்டில் ஒ.கேவா? [சித்திரக்கூடத்துக்குள் ஆப்ப்போசிட்]

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வீட்டுக்கொரு ஏசி திட்டம் நல்லா ருக்கு ..:)(எப்படியும் இப்படித்தான் கரெக்ட்டா ஆப்போஸிட்டா புவி வெப்பமாகறமாதிரியே திட்டம் தீட்டுவாங்க அரசியல்வாதிங்க)

முக்கிய பின்னூட்டம்.:ஆகா! ஓஹோ!

அமிர்தவர்ஷினி அம்மா said...

தாமதமான திருமணநாள் வாழ்த்துக்கள் தம்பதியர்களே!

3) மீனவர்கள் சர்வதேச எல்லையை தாண்டாதிருக்க நடுக்கடலில் சாக்பீஸால் கோடுகிழித்தல்

4) சாமியார்களை கவனிக்க சன்டிவி / நக்கீரன் கேமராவுடன் ஒப்பந்தம் //

:))))))

முகில் சார், தயவுசெய்து நீங்களும் ப்லாக் எழுதுங்க சார் :))))))))

அமைதிச்சாரல் said...

//மாடு மேய்ப்பவர்களுக்கு இமெயில் மூலம் தொலைந்த மாடை கண்டுபிடிக்க உதவி//

மாட்டுக்கே ஒரு மெயில் அனுப்பி கேட்டுப்பாங்களாமா :-)))

Uma said...

முகில்,
ஆபீஸ் நேரத்தில் blog அடிக்க, படிக்க கட்டாய 2 மணி நேர இன்டெர்நெட் பிரேக்கும் சேர்த்து விடுங்க.
முல்லை,
அது என்னங்க நேற்றிலிருந்து வீட்டுக்கொரு ப்ளாகர் லாபி பலமா இருக்கு. விதூஷ், ஹூஸைனம்மா, அமிர்தவர்ஷனி அம்மா, நசரேயன் வரிசைல நீங்க இன்னிக்கு. எல்லாம் ஒரு மெஸ்சஜோ? :))
முகில், முல்லைக்கு,
இந்த மாதத்தில் வந்த முக்கியமான நாளுக்கான மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அமைதிச்சாரல் said...

சிரிச்சிக்கிட்டே இருந்ததில் சொல்ல மறந்தது,

முக்கியமான நாளுக்கான வாழ்த்துக்கள்.

பாபு said...

//அமைச்சர் பெருமக்கள் கல்வி சேவைசெய்ய இலவச பொறியியற்கல்விக்கூடம்//

karunanidhikku neengale idea koduthuduveenga polirukku

ராமு said...

இன்றைய நாட்டுநடப்பை காமெடியாய் எழுதியிருக்கார்.... இன்னுமெழுத சொல்லுங்க...

அம்பிகா said...

அருமையான யோசனைகள்.

\\ஆயில்யன் said...
ஆஹா ஆஹா

ஒஹோ ஒஹோ

முகிலின்

சிறைக்கூடம் - ப்ளாக் டைட்டில் ஒ.கேவா? [சித்திரக்கூடத்துக்குள் ஆப்ப்போசிட்]\\

:-}}}

பைத்தியக்காரன் said...

தாமதமாத்தான் தெரிய வந்தது.

மணநாள் வாழ்த்துகள் :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

சின்ன அம்மிணி said...

ம்ஹூம். முகில் ஏதாவது செய்திகள் ப்ளாக்தான் ஆரம்பிக்கணும். :)

ராமலக்ஷ்மி said...

வேறென்ன?

ஆஹா ஓஹோதான்! ஆயில்யன் டைட்டிலும் ரெடி பண்ணிக் கொடுத்து விட்டார்:))!

முக்கிய நாளுக்கும் வாழ்த்துக்கள்:)!

Dr.Rudhran said...

ஆரம்பமாகட்டுமே!!!
நானும் பார்க்க வேண்டாமா?!!!

KVR said...

முகிலின் satire நல்லா இருக்கு. தனிப்பதிவுக்கே என் ஓட்டு

கோமதி அரசு said...

முக்கியமான நாளுக்கு வாழ்த்துக்கள் முல்லை.

முகிலின் பதிவுக்கு வாழ்த்துக்கள்.

வீணா said...

திருமணநாள் வாழ்த்துக்கள் ஆச்சி மற்றும் முகில் !

செல்வநாயகி said...

///முகிலுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறேனே.. அதை விட பெரிய பரிசு என்ன இருக்க முடியும்-ன்னு தோணினாலும்,////

:))

முக்கிய பின்னூட்டம்.:ஆகா! ஓஹோ!

அம்பிகா said...

முகிலுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறேனே.. அதை விட பெரிய பரிசு என்ன இருக்க முடியும்-ன்னு தோணினாலும்,
:-}}
அட ! வாழ்த்து சொல்ல மறந்துவிட்டேனே ,
வாழ்த்துக்கள் முல்லை

Deepa said...

பதிவு ஷார்ட் ஆனாலும் செம ஷார்ப்.
தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்.

//டெரர் குடும்பமாக
டெவலப்பாக வாழ்த்துக்கள் !//
REPEAAAATT!

தாமதமானாலும் மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துகள்...
அதுவும் முகிலுக்குச் சிறப்பு வாழ்த்துக்கள்! (காரணம் சொல்லவும் வேண்டுமோ?!)

V.Radhakrishnan said...

:) முகில் அவர்களுக்கு வாழ்த்துகள்.

ஹுஸைனம்மா said...

திருமண நாள் வாழ்த்துக்கள் முல்லை.

இருந்தாலும், நீங்க முகிலுக்கு போஸ்ட் எழுத வாய்ப்புக் கொடுத்ததைக் கண்டிக்கிறேன் நான். இதைப் பார்த்து மற்ற பெண்பதிவர்களின் ரங்க்ஸ்களும் இப்படி வாய்ப்பு எதிர்பார்க்க ஆரம்பித்தால்? அதிலும், பின்னூட்டமிடுபவர்கள் எல்லாரும் நல்லாருக்கு என்று ஊக்குவிக்க வேறு செய்கிறார்கள். அந்தத் தைரியத்தில் தனி பிளாக் ஆரம்பித்து விட்டால்?

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!!!
அக்கா, மன்னிக்க தாமதத்திற்கு!!!

// மாடு மேய்ப்பவர்களுக்கு இமெயில் மூலம் தொலைந்த மாடை கண்டுபிடிக்க உதவி//
ஒவ்வொரு மாட்டுக்கும் தனித்தனி ஐ.பி. அட்ரஸ் கொடுக்கப்படும்!

//டாஸ்மாக் குடிமகன்களுக்கு வழிகாட்ட கூகிள் மேப் நிறுவனத்துடன் ஒப்பந்தம்//
குடித்தபின் வீட்டுக்கு போக ஒப்பந்தம்!

Mr.முகிலுக்கும் வாழ்த்துக்கள்!!!

மாதவராஜ் said...

மணநாள் வாழ்த்துக்கள்
மு-மு (முல்லை- முகில்)

//சிறைக்கூடம் - ப்ளாக் டைட்டில் ஒ.கேவா?//

:-)))))))

theja amma said...

yosanai arumai - thirumana naal nal vazhathukal - thejamma

theja amma said...

thirumana naal nal vazhthukkal - thejamma

கானா பிரபா said...

வெரிகுட் முகில் பாஸ், உங்க கிட்ட நிறைய எதிர்பார்க்கிறேன்.

முகில் இலக்கிய வட்டம்
சிட்னி கிளை

கானா பிரபா said...

2) டாஸ்மாக் குடிமகன்களுக்கு வழிகாட்ட கூகிள் மேப் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
//

உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு பாஸ்

கானா பிரபா said...

1) மாடு மேய்ப்பவர்களுக்கு இமெயில் மூலம் தொலைந்த மாடை கண்டுபிடிக்க உதவி//

மாடு மேய்ப்பவர் ஒவ்வொருவருக்கும் ஜீபிஎஸ் கருவின்னு ஒரு திட்டம் வச்சா நிறைய கல்லா கட்டலாம் பாஸ், உங்க பரிசீலனைக்கு

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள் முகிலுக்கும்,முல்லைக்கும்..

கானா பிரபா said...

8) அமைச்சர் பெருமக்கள் கல்வி சேவைசெய்ய இலவச பொறியியற்கல்விக்கூடம்//

ஒரு டவுட்டு பாஸ், இங்கே மேற்படி அமைச்சர்கள் ஆரம்ப வகுப்பில் இருந்து படிக்கும் வசதி செய்யப்படுமா?

கானா பிரபா said...

ஆயில்யன் said...

முகிலின்

சிறைக்கூடம் - ப்ளாக் டைட்டில் ஒ.கேவா? //

முகிலின்

சித்திர(வதை)கூடம் - ப்ளாக் டைட்டிலையும் பரிசீலிக்கவும்

காமராஜ் said...

முகிலின் புதுவரவுக்கு வாழ்த்துக்கள்.மணநாள் வாழ்த்துக்கள்.

நசரேயன் said...

சிறைக்கூடம் டபுள் ஓகே, டைட்டில

ஒரு சிறைப்பறவையின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்..

அமுதா said...

:-)

ஸ்ரீ.... said...

விருப்பமானவர்களுக்கு வக்காலத்து வாங்கும் பெண்களுக்கு எதிரான வழக்கு! சரியா?

ஸ்ரீ....

தமிழ் பிரியன் said...

ஆஹா... ஓஹோ.. கிரேட்... ஒரு சிங்கத்தை கூட்டில் அடைச்சி வதைச்சுக்கிட்டு இருக்கீங்க.. சீக்கிரமா ஒரு ப்ளாக் திறந்து .. கர்ஜிக்க விடுங்க.. ;-))

சந்தனமுல்லை said...

வாழ்த்திய அனைவருக்கும் எங்களின் நன்றிகள்! :-)

பா.ராஜாராம் said...

திருமண நாள் வாழ்த்துக்கள் முல்லை முகில்!

தாமதமாகிப் போச்சு :-(
.

பின்னோக்கி said...

திருமண வாழ்த்துக்க்ள்.

ஐடியாக்கள் சூப்பர். கம்பன் வீட்டு கட்டுத்தறி மாதிரி, முகில் அவர்களும் சிறந்த ப்ளாக்கர். ஒருவேளை, உங்களுக்கு எழுத நிறைய ஐடியா கொடுப்பது அவர்தானா ? :)

டாஸ்மாக் ஐடியா செயல்படுத்த வேண்டிய ஒன்று