Thursday, March 18, 2010

ஓ!வியம்

இது மேரி கோல்ட் -ன்னு சொன்னா நம்ப மாட்டீங்களா என்ன? இது மலையாம். அதை சுத்தி இருக்கற பச்சை டாட்ஸ், மாடுங்க - செத்து கிடக்காம். ரெண்டாவது தடவையும் கேட்டு உறுதிபடுத்திக்கிட்டேன், மாடுங்க செத்துதான் கிடைக்காம்! :-( என்னன்னு கண்டுபிடிக்க முடியுதா? குடை. ( வெயில் காலம் வந்துடுச்சு இல்லே...) கஸாட்டா ஐஸ்க்ரீம்-ன்னுதான் நானும் நினைச்சேன்...இல்லையாம், ரெயின்போவாம்! Choo choo train, Tucking down the track; Gotta travel on it, Never coming back;
Ooh ooh got a one way ticket to the moon!
ம்ஹூம்...பப்புவுக்கே தெரியலை...என்னன்னு தெரிஞ்சா எங்களுக்கும் சொல்லுங்க! :-) வெண்மதி பர்த்டேவுக்கு வரைஞ்சது - பீச் & பீச் அனிமல்ஸ்! 3D தர்பூசணி !டிஸ்கி : மக்களே, இந்த படங்களையெல்லாம் பார்த்துட்டு, உணர்ச்சி-
வசப்படறவங்க, கொஞ்சம் பார்த்து உணர்ச்சிவசப்படுங்க...எங்களாலே சென்னையை விட்டுட்டு கத்தார்க்கெல்லாம் போக முடியுமா?! கருணை காட்டுங்க ப்லீஸ்! ;-))

40 comments:

குடுகுடுப்பை said...

ம்ஹூம்...பப்புவுக்கே தெரியலை...என்னன்னு தெரிஞ்சா எங்களுக்கும் சொல்லுங்க! :-)

வெளியில செருப்பு கழட்டி போட்டாச்சு, ஆனா வீடு உள்ள முழுவதும் குப்பை. ஒரு முரண் ஓவியம் வரைந்திருக்கிறாள் பப்பு

நட்புடன் ஜமால் said...

ரெயின்போ - ரெயின்போ மாதிரியேத்தான் தெரிஞ்சிச்சி

தர்பூசனி சூப்பர்.

கவிதா | Kavitha said...

Art rey !! Love u pappu.

//ம்ஹூம்...பப்புவுக்கே தெரியலை...என்னன்னு தெரிஞ்சா எங்களுக்கும் சொல்லுங்க! :-)//

G3 யும் பப்பு வும் விளையாடறாங்கப்பா..!! :)

ராமலக்ஷ்மி said...

ஓ..ஓவியங்கள் ஓ..ஓகோ..ஆகோ!

வண்ணக் குடையும் தர்பூசணியும் எடுத்துக்கிட்டேன். வெயிலுக்கு வேண்டியிருக்கே. தாங்க்ஸ் பப்பு:)!

முகிலன் said...

ஆறாவது படம் உங்க முகம்.. அதுகூடவா உங்களுக்குத் தெரியல.. என்ன ஆச்சி நீங்க?

அன்புடன் அருணா said...

பப்புவுக்கு ஒரு ஓ!

Uma said...

எக்சிபிஷன் எப்போ வைக்கலாம்னு ஓவியரைக் கேட்டு சொல்லுங்க :) அவங்களுக்கு இப்பவே மலையைச் சுத்தி மாடு செத்துக் கிடக்கதுன்னு தெரியுது. நமக்கு தான் மனுஷங்க செத்துக் கிடக்கறதே தெரியலை :(

ஆயில்யன் said...

//கத்தார்க்கெல்லாம் போக முடியுமா?! கருணை காட்டுங்க ப்லீஸ்! ;-))//


நீங்க கத்தார்க்கெல்லாம் வர்ற ஆசையிருக்கா அவ்வ்வ்

கருணை காட்டுங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

ஆயில்யன் said...

/இது மலையாம். அதை சுத்தி இருக்கற பச்சை டாட்ஸ், மாடுங்க - செத்து கிடக்காம். ரெண்டாவது தடவையும் கேட்டு உறுதிபடுத்திக்கிட்டேன், மாடுங்க செத்துதான் கிடைக்காம்! :-( //

ஏனாம்?

KarthigaVasudevan said...

"ஓ"வியங்கள் எல்லாமே சூப்பரா இருக்கு.வீட்டு சுவத்துல எல்லாம் கிரேயான்ஸ்...பென்சில்ல இல்லன அட்லீஸ்ட் ஒரு பால் பென்ல கூட பப்புவை வரைய அனுமதிக்கறதில்லையா? எவ்ளோ நாளைக்கு தான் பேப்பர்லே வரைஞ்சுட்டு இருக்கறதாம் டூ பேட்!!!

:)

ஆயில்யன் said...

//3D தர்பூசணி !
//

செம டெரரா இருக்கு!

நான் சிகப்பு கலர் வண்டு ஸ்ட்ரெய்ட்டா நிக்குதுன்னு நினைச்சுட்டேன் பர்ஸ்ட்டு!

Dr.Rudhran said...

!!!

சித்தார்த். வெ said...

//..எங்களாலே சென்னையை விட்டுட்டு கத்தார்க்கெல்லாம் போக முடியுமா?! கருணை காட்டுங்க ப்லீஸ்! ;-))//

:)))))))))))

சித்தார்த். வெ said...

எல்லாமே செம க்யூட். கலரிங் புத்தகங்கள கொடுக்கறத விட இப்படி ஃப்ரீ ஸ்டைல்ல வரைய சொல்றது ரொம்ப நல்லது.

என் ஃபேவ் பப்புக்கே என்னன்னு தெரியாத ஓவியம் தான். :))

கோமதி அரசு said...

உலக தண்ணீர் தினத்திற்கு பப்புவும் அவள் அம்மாவயை போல் படம் வரைந்து தன் பங்குக்கு பதிவு போட்டு விட்டோளோ என்று தோன்றுகிறது.

மலையை சுத்தி மாடுகள் தண்ணீர் இல்லாமல் செத்து கிடக்கிறதோ!

வெயிலுக்கு தண்ணீர் தாகத்தை தடுக்க தர்பூசணி சாப்பிடுங்க ,வெயிலுக்கு குடை பிடித்துக் கொள்ளுங்கள்.
என்று தன் ஒவியம் மூலம் விளக்கு கிறாளோ!

பப்புவுக்கு வாழ்த்துக்கள்.

Deepa said...

"ஓஹோ"வியங்கள் சூப்ப்ப்பர்!

//மாடு செத்துத் தான் கிடக்காம்//
அப்பத் தானே பிரியாணி போட முடியும்? Like mother, like daughter! :))

தர்பூசனியும் ரெயின்போவும் சான்ஸே இல்ல‌! வெரிகுட் ப‌ப்பு!

//முகிலன் said...
ஆறாவது படம் உங்க முகம்.. அதுகூடவா உங்களுக்குத் தெரியல.. என்ன ஆச்சி நீங்க?
// :))))

last line punch... Mullai touch!

கானா பிரபா said...

கத்தார்னா அவ்வளவு இளப்பமா பாஸ்? பட் உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு

பப்பு கலக்கீட்டிங்
பாட்டி பேரவை
தற்காலிக‌ கிளை லிட்டில் இந்தியா சிங்கை

சின்ன அம்மிணி said...

மரிகோல்ட் இல்லை ‍ ஜாங்கிரி

குடை மாதிரி இல்லை ‍ . அரிவாள் சின்னம் ‍ வருங்கால கம்யூனிஸ்ட் பப்பு வாழ்க‌

தமிழ் பிரியன் said...

\\\\
டிஸ்கி : மக்களே, இந்த படங்களையெல்லாம் பார்த்துட்டு, உணர்ச்சி- வசப்படறவங்க, கொஞ்சம் பார்த்து உணர்ச்சிவசப்படுங்க...எங்களாலே சென்னையை விட்டுட்டு கத்தார்க்கெல்லாம் போக முடியுமா?! கருணை காட்டுங்க ப்லீஸ்! ;-)) \\\\

ஹா ஹா ஹா

☼ வெயிலான் said...

ரெயின்போ கசாட்டா ஐஸ்கிரீம் நல்லாருந்துச்சு...... :)

பா.ராஜாராம் said...

//இது மலையாம். அதை சுத்தி இருக்கற பச்சை டாட்ஸ், மாடுங்க - செத்து கிடக்காம். ரெண்டாவது தடவையும் கேட்டு உறுதிபடுத்திக்கிட்டேன், மாடுங்க செத்துதான் கிடைக்காம்! :-(//

// கஸாட்டா ஐஸ்க்ரீம்-ன்னுதான் நானும் நினைச்சேன்...இல்லையாம், ரெயின்போவாம்//

:-)))

//ம்ஹூம்...பப்புவுக்கே தெரியலை...என்னன்னு தெரிஞ்சா எங்களுக்கும் சொல்லுங்க!// :-)

அதே மலைதாண்டா பப்பு.வயலட் மலை!யானை செத்துக் கிடக்கு.வயலட் யானை! :-)

3D தர்பூசணி !

சுத்தி எறும்பு வந்தாச்சு.கட்டெறும்பு!பழத்தை பிரிட்ஜ்ல வச்சுரு..

☀நான் ஆதவன்☀ said...

:)))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரெயி்ன்போ ரெயின்போ மாதிரியே தானே இருக்கு ஏன் அப்படி கேட்டீங்க..

என்னன்னே தெரியாதது .. ஒரு கழுகு இறக்கை விரிச்சு இருக்கறமாதிரி தெரியுது.. :)

’ஓ’ ஓஹோ ஓவியம்..எக்ஸிபிசன் இருக்குன்னா சொல்லுங்க டிக்கெட் புக் செய்யனும்..

ஆயில்யன் கமெண்ட் :)))

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

புகைப்படங்கள் அனைத்தும் கலக்கல் !

சித்தார்த். வெ said...

இந்த தளத்துல இருந்த நூல்கள் + படங்கள பாருங்களேன். சும்மா ட்ரை செஞ்சு பாருங்க பப்புக்கு.

http://www.susanstriker.com/

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

எனக்கு தெரியும் ஆனால் சொல்லமாட்டேன் !

மீண்டும் வருவான் பனித்துளி

முகுந்த் அம்மா said...

ஓவியங்கள் அருமைங்க, ஒரு நல்ல ஓவியகலைங்கர் இருக்கார் உங்க வீட்டுல :)). சூப்பர்ங்க

க.பாலாசி said...

மாடர்ன் ஆர்ட்ஸ்....

நசரேயன் said...

//
முகிலன் said...
ஆறாவது படம் உங்க முகம்.. அதுகூடவா உங்களுக்குத் தெரியல.. என்ன ஆச்சி நீங்க?//

முகிலன் சொன்ன ஆச்சி, ஆடுமாடு அண்ணாச்சி சொன்ன ஆச்சி, உங்க ஊரு ஆச்சி இல்லை..
சரியா முகிலன்?

அப்புறமா ஆயில்ஸ் சொன்னதை நானும் மறுபடி சொல்லிகிறேன்.

சுரேகா.. said...

பப்பு எனும் 'ஓ!விய'க்கவைப்பவள்!

:)

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

சரி! சரி! முல்லை ஒழுங்கா அவுங்களுக்கும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சுக்குடுங்க! இப்ப முல்லை காணமப்போயி பப்புதான் நிக்கறாங்க.ச்சோ பாவம் முல்லை.

அம்பிகா said...

``ஓ !வியம்’’
அருமை!
தர்பூசணி!!
``ஓ! வியர்’’ பப்பு!!!

பின்னோக்கி said...

தர்பூசணி - அமேசிங்
வானவில் - அழகு
ரயில் - டாப் ஆங்கிளில் வரைந்தது ஆச்சர்யப்பட வைக்கிறது.

மலை, மாடு - :) ஏன் மாடு செத்துப்போச்சாம் ? காரணம் சொல்ல சொல்லுங்க

செல்வநாயகி said...

அருமை.

அமுதா said...

தர்பூசனி சூப்பர்

இரசிகை said...

!

சந்தனமுல்லை said...

நன்றி குடுகுடுப்பையார், எப்படி இப்படில்லாம்?!

நன்றி ஜமால், ரெயின்போ எனக்குத்தான் ஐஸ்க்ரிமா தெரிஞ்சது போல..பைதிவே, தர்பூசணி - ஐடியா என்னோடதாச்சே..:-))

நன்றி கவிதா, அதுலே நீங்களும் இருக்கீங்கன்னு சொல்லுங்க..ஏன்னா, G3 ன்னு சொன்னா கூடவே உங்களையும் சேர்த்து சொல்றா பப்பு! ;-)

நன்றி ராமலஷ்மி, என்சாய்!

நன்றி முகிலன், அவ்ளோ அழகா இருக்கே..நீங்கதானோ நினைச்சுட்டேன்! :P

ஓ அருணா!

நன்றி உமா, கூடிய சீக்கிரம் வைச்சுடலாம்..:-)

நன்றி கார்த்திகா, அதெல்லாம் இல்லாமலா...அவ்வ்வ்வ்...பெயிண்ட் -ன்னா பேப்பரிலே மட்டும்..க்ரேயான், பேனாவிலே எழுதறது எல்லாம் சுவரிலேன்னு மேடம் கொள்கை வச்சிருக்காங்க!

நன்றி ஆயில்ஸ், இதுக்காகவே அங்கே வந்து எக்ஸ்பிஷன் நடத்தல...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ;-) பைதிவே, தர்பூசணி - என்னோட ஐடியா பாஸ்..ஹிஹி

நன்றி டாக்டர்.ருத்ரன்

சந்தனமுல்லை said...

நன்றி சித்தார்த், பப்பு கையெழுத்து வாங்கி உங்களுக்கே அனுப்பிடறேன்..:-), அந்த லிங்க்-க்கு நன்றி...வித்தியாசமா இருக்கு - புதுசாவும். கண்டிப்பா பப்புக்கு யூஸ் ஆகும்!


நன்றி கோமதி அம்மா, பேத்திகளை பத்தி பாட்டிகளுக்குத்தான் நல்லா புரியுது! :-)

நன்றி தீபா, நாங்கல்லாம் ஒன்லி ஆடுதான்...

நன்றி கானாஸ்....சின்னபாண்டியோட கமெண்ட் பாத்தீங்களா...இதுக்காகவே நீங்க அங்கேயும் ஒரு ட்ரிப் போகணும் பாஸ்..

நன்றி தமிழ்பிரியன், வெயிலான்!

நன்றி ராஜாராம், உங்க கமெண்ட் ரொம்ப ரசிச்சேன்..பேசாம ஓவியத்துக்கெல்லாம் நீங்க கமெண்ட் கொடுங்க..:-))

நன்றி ஆதவன் பாஸ்

நன்றி முத்து...சபரி நல்லாவே ட்ரெயிங் கொடுத்திருக்கார் போலிருக்கே :-)

நன்றி சங்கர்

நன்றி சின்ன அம்மிணி, டெரர் காட்டறீங்க பாஸ்...நீங்க!

நன்றி முகுந்த் அம்மா

நன்றி பாலாசி

நன்றி நசரேயன், ரொம்ப தாங்க்ஸ்!

சந்தனமுல்லை said...

நன்றி சுரேகா, :-)

நன்றி சாந்தி, ஏதோ அவங்களை வைச்சு நான் படம் காட்டிக்கிட்டு இருக்கிறேன்...ஹிஹி

நன்றி அம்பிகா அக்கா

நன்றி பின்னோக்கி, அது மேல்நோக்கில்லாம் இல்லீங்க..ஃபோட்டோவை அப்லோட் பண்ணும்போது அப்படி ஆகிடுச்சு, கொஞ்சம் தலையை டில்ட் பண்ணி பாருங்க..:-)

நன்றி செல்வநாயகி

நன்றி அமுதா

நன்றி ரசிகை

ராஜ நடராஜன் said...

கத்தாருக்கு போக முடியலைன்னாலும் கத்தாருக்கு சவால் விடலாம் நிச்சயமாக.வாழ்த்துக்கள்.