Thursday, March 04, 2010

ஆர் எஸ் டி யூ வி.....எக்ஸ் ஒய்...

என் பெயர் ரஞ்சிதா.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சுருட்டு சாமியாருடன் தற்கொலை செய்துகொண்டேன்.
திருச்சியில சில ஆண்டுகளுக்கு முன் கற்பழிக்கப்பட்டேன்.
நூற்றாண்டுகளுக்கு முன்பு என் உடல் அசையும்போது நான் மாதா ஹரி.
துவாரகாவின் உடலென்று மிதந்து வந்தேன்.
மணிப்பூரின் மனோரமாவாக
கண்ணகியாக
அகலிகையாக
டயனாவாக
ஜீவிதாவாக
இன்னும் என்னவெல்லாமோவாக
என் உடல் எப்போதுமே இருந்துக்கொண்டேதான் இருக்கிறது...
......................................
...................................
......................................
உங்களில் எவனொருவன் என்னைப் பார்த்தமட்டில்
கண்களாலேயே கற்பழிக்காமல்
என் அளவுகளை யோசிக்காமல் இருக்கிறானோ
அந்த யோக்கியவான் எடுக்கட்டும்
எனக்கான முதல் கல்லை!

60 comments:

Vidhoosh said...

சபாஷ்..:)

gulf-tamilan said...

ரொம்ப சூடூ!!!!!

ஐந்திணை said...

படிப்பவர்களே, பின்னூட்டம் இடும்முன்பு என்ன சொல்ல வராங்கன்னு அர்த்தம் சொல்லிட்டு அப்புறம்.............

கண்மணி/kanmani said...

ஒரு ஆள் கூட இருக்க மாட்டாங்க

கண்மணி/kanmani said...

ம்ம்

☀நான் ஆதவன்☀ said...

:))) சூப்பர் பாஸ்

☀நான் ஆதவன்☀ said...

உண்மைத்தமிழன் பக்கம் பக்கமா எழுதினத நீங்க சிம்பளா முடிச்சுட்டீங்களே :)

Deepa said...

கோணல் பார்வைகளை அடித்து இழுத்து
நேராகப் பார்க்கவைக்கும் அங்குச‌ எழுத்து.
Hats off Mullai!

அமுதா said...

/*உங்களில் எவனொருவன் என்னைப் பார்த்தமட்டில்
கண்களாலேயே கற்பழிக்காமல்
என் அளவுகளை யோசிக்காமல் இருக்கிறானோ
அந்த யோக்கியவான் எடுக்கட்டும்
எனக்கான முதல் கல்லை*/
இரஞ்சிதாவிற்கு எதற்கு கல்? அப்படியே யோக்கியவானாகா இருந்தாலும் கல் அவளுக்கானது இல்லை

nanrasitha said...

//அந்த யோக்கியவான் எடுக்கட்டும்
எனக்கான முதல் கல்லை!

ரொம்ப கஷ்டம்

Satheesh said...

well said...good post!!!

சென்ஷி said...

//இன்னும் என்னவெல்லாமோவாக
என் உடல் எப்போதுமே இருந்துக்கொண்டேதான் இருக்கிறது...//

எக்ஸலண்ட்....

சின்ன அம்மிணி said...

இது கவிதை

Dr.Rudhran said...

சபாஷ்.
வலி உணர்ந்த சிலரைப் பார்த்தால் மனம் நெகிழ்கிறது.

க.பாலாசி said...

உங்க கோபம் புரியுது....

Uma said...

எக்ஸும் ஒய்யும் தானே இப்படி பண்ண வைக்குது :(

mazhalaimozhi said...

gr8 job. AAni adithadhu pole sorkal

JayanthiShathish said...

சபாஷ்.
வலி உணர்ந்த சிலரைப் பார்த்தால் மனம் நெகிழ்கிறது.

Very True

அம்பிகா said...

மனதில் பொங்கும் கோபம் வார்த்தைகளாக வெளிப்பட்டிருக்கிறது.
தேவையான பதிவு முல்லை

ராமலக்ஷ்மி said...

மீடியாக்களால் துரத்தித் துரத்திக் கொல்லப்பட்ட டயானாவின் நினைவு வந்தது எனக்கும். நல்ல பதிவு முல்லை.

வல்லிசிம்ஹன் said...

நல்ல கோணத்தில் அளந்திருக்கிறீர்கள் முல்லை. வாழ்த்துகள்.

மாதவராஜ் said...

கைகொடுங்கள். இந்தக் கோபமும், பார்வையும் வேண்டும் முதலில். அருமை.

பாலாஜி said...

இந்த டீல் ஓகே

கலை said...

நல்லா சொல்லியிருக்கிறீங்க. நான் எழுத ஆரம்பிச்சு எழுதாமல்போன இடுகையின் அடிப்படையும் இதுதான்.

vasan said...

WOW,
What an assault on this fake society with the right weapon. Penned well.
M.S.Vasan

அமிர்தவர்ஷினி அம்மா said...

excellent, hats off to you

தமிழ் பிரியன் said...

பெண் என்பதால் மட்டும் இரக்கப்பட வேண்டும் என்று எதிர்பாக்கின்றீர்களா? துவாரகா,மனோரமா, கண்ணகி, அகலிகை இவர்களுடன் இப் பெண்ணையும் ஒப்பிட முடியுமா?.. உங்கள் ஒப்புமையின் அடிப்படையிலேயே தவறு இருக்கின்றது... கணவன் இருக்கும் நிலையில்.. வேறோரு ஆணுடன் இருப்பது எந்த விதத்திலும் சரியாகாது.

மனிதன் என்பவன் பலவீனமானன்... விருப்பம் இருக்குமேயானால் கணவனை விவாகரத்து செய்து விட்டு இவரை திருமணம் செய்து மகிழ்வாக இருந்திருக்கலாம்.. யாரும் தடுக்கப் போவது இல்லை... பொய் வேசங்கள் கலையப்பட வேண்டியவை.

தவறு செய்யாதவன் மட்டும் தான் தவறைத் தட்டிக் கேட்க வேண்டுமென்றால் அநீதியை யாரும் தட்டிக் கேட்க முடியாது. யாரும் தட்டிக் கேட்காமல், தண்டனை வழங்கப்படாமல் தவறுகளோ, தப்புக்களோ திருத்தப்படாது. இவையெல்லாம் தவறு செய்பவர்களுக்கான ஒரு பாடம். இதில் ஒரு பெண் பழியாக்கப்பட்டு உள்ளாள் என்பதைக் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பிரபல நடிகையாக இருந்தவர், இன்னமும் சின்னத்திரை சீரியல்களில் நடித்தால் தினமும் லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். திருமணம் ஆகி இருக்கின்றது.. வேறு என்ன தேவைக்காக அவனிடம் சென்று சரண்டர் ஆனாள்? அவளை ஏன் புனிதப்படுத்த வேண்டும்?

இயேசு வந்து சென்று பல நூற்றாண்டுகள் ஆகி விட்டது.

Kanchana Radhakrishnan said...

Well said

அமைதிச்சாரல் said...

பெண் என்பவள் உடலால் மட்டும் ஆனவளாகவே இன்னும் இருக்கிறாள் முல்லை.

ச.முத்துவேல் said...

ஹைய்யோ ! கிரேட்ங்க.
இதிலிருக்கிற நிலைப்பாடு குறித்த தெளிவோடு நான் இக் கவிதையை அணுகவில்லை.ஆனால், இக் கவிதையின் சொல்முறையும், பளாரும் பிரமாதம்.

ஆச்சரியம்!!!!

Deivasuganthi said...

super mullai. niyayamaana kobam.

அன்புடன் அருணா said...

அவரவரின் பார்வையில் இருக்கிறது நியாயமும் அநியாயமும்.

முகிலன் said...

நல்ல கவிதை..

ரஞ்சிதா என்ற பெண்ணைக் கேவலப் படுத்தும் வண்ணம் ஊடகங்கள் வெளியிடும் படங்கள்/காணொளிகள் முழுக்க முழுக்க வியாபார நோக்கம் உடையவை.

ஆனாலும் துவாரகாவுடனும், மணிப்பூரின் மனோரமாவுடனும் ரஞ்சிதாவை ஒப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.. பெண் என்ற ஒரே காரணத்துக்காக நீங்கள் ரஞ்சிதாவுக்குப் பின்னால் நிற்பீர்கள் என்றால், யாராவது ஒரு மடையன் நித்தியானந்தாவின் செயலையும் நியாயப்படுத்தி கவிதை எழுதிவிடுவார்கள்.

யோக்கியவான் மட்டும் தான் தவறைத் தட்டிக் கேட்க வேண்டுமென்றால் தவறு நடப்பதை யாரும் தட்டிக் கேட்க முடியாது.

தர்ஷன் said...

ஞாயமான கோபம்
ஆனால் நானறிந்த மட்டில் இதுவரை எவரொருவரின் கல்லும் அந்த பேதைப் பெண்ணுக்கு எதிரானதில்லை

பிரியமுடன்...வசந்த் said...

சரியான வாதம்...!

முகுந்த் அம்மா said...

நல்ல பதிவு.

//உங்களில் எவனொருவன் என்னைப் பார்த்தமட்டில்
கண்களாலேயே கற்பழிக்காமல்
என் அளவுகளை யோசிக்காமல் இருக்கிறானோ
அந்த யோக்கியவான் எடுக்கட்டும்
எனக்கான முதல் கல்லை//

சூடான வரிகள்.

காமராஜ் said...

நல்லா பொழுது போகும்,நல்லா போதை ஏறும்,நல்லா யாவாரம் நடக்கும், செம தீனி இந்த ஊடகங்களுக்கு.

முல்லை உன் கோபம் அலாதியானது.
வாழ்த்துக்கள்.

நசரேயன் said...

நீங்க பப்புக்கு எ.. பி.. சி.. டி சொல்லிகொடுக்கீங்கன்னு வந்தேன்

இராமசாமி கண்ணண் said...

நல்ல கவிதை.

Ravi said...

//பிரபல நடிகையாக இருந்தவர், இன்னமும் சின்னத்திரை சீரியல்களில் நடித்தால் தினமும் லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். திருமணம் ஆகி இருக்கின்றது.. வேறு என்ன தேவைக்காக அவனிடம் சென்று சரண்டர் ஆனாள்? //
பணம் மட்டும் தான் உலகத்தில் பிரச்சனையா? முதலில் அவருக்கு என்ன பிரச்சனை என்று ஆராயும் உரிமையை உங்களுக்கு கொடுத்தது யார்?
சினிமா / சின்ன திரையில் நடிப்பவர்களானால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாமா? தைரியமாக அந்த பெண் இந்த மாதிரி சொல்லும் எல்லோர் மேலும் case போடவேண்டும்.

இனியா said...

"உங்களில் எவனொருவன் என்னைப் பார்த்தமட்டில்
கண்களாலேயே கற்பழிக்காமல்
என் அளவுகளை யோசிக்காமல் இருக்கிறானோ
அந்த யோக்கியவான் எடுக்கட்டும்
எனக்கான முதல் கல்லை! "

Well said at the right time the words of Jesus Christ
"Let him who is without sin among you be the first to throw a stone at her"

பா.ராஜாராம் said...

// இன்னும் என்னவெல்லாமோவாக
என் உடல் எப்போதுமே இருந்துக்கொண்டேதான் இருக்கிறது...//

oops!

"என் பெயர் ரஞ்சிதா."

என்று சூழ்நிலைகளை ஒட்டாது இந்த கவிதை தொடங்கி இருக்குமானால் எவ்வளவு அற்புதமான,ஆக்ரோசமான பொது கவிதை,கேள்வி,செருப்படி!

கவிதை தாண்டி,

//பெண் என்பதால் மட்டும் இரக்கப்பட வேண்டும் என்று எதிர்பாக்கின்றீர்களா? துவாரகா,மனோரமா, கண்ணகி, அகலிகை இவர்களுடன் இப் பெண்ணையும் ஒப்பிட முடியுமா?.. //

என்று கேட்கிற தமிழ் ப்ரியனோடும்,

//இதிலிருக்கிற நிலைப்பாடு குறித்த தெளிவோடு நான் இக் கவிதையை அணுகவில்லை.ஆனால், இக் கவிதையின் சொல்முறையும், பளாரும் பிரமாதம்.//

என்று சொல்கிற ச.முத்துவேலுடனும் உடன்படுகிறேன்.

(ஆக,முதல் கல்லை எடுக்கும் யோக்கியவான் நான் இல்லை என்பதையும் ஏற்கிறேன்)

கானா பிரபா said...

பிரபல நடிகையாக இருந்தவர், இன்னமும் சின்னத்திரை சீரியல்களில் நடித்தால் தினமும் லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். திருமணம் ஆகி இருக்கின்றது.. வேறு என்ன தேவைக்காக அவனிடம் சென்று சரண்டர் ஆனாள்? அவளை ஏன் புனிதப்படுத்த வேண்டும்?//


இதுதான் என் பார்வையும், இப்படியே திருட்டு, கொலை, கொள்ளை எல்லாவற்றுக்கும் நியாயம் கற்பிக்கலாம் நீதிமன்றமோ காவல்துறையோ கூட தேவை இல்லை பாஸ்.

cheena (சீனா) said...

அன்பின் முல்லை

கோபத்தின் உச்சத்தில் எழுதப்பட்ட கவிதை - கருத்து அருமை - இருப்பினும் இது வரை யாரும் ரஞ்சிதாவைக் குறை கூற வில்லையே

UFO said...

///அந்த யோக்கியவான் எடுக்கட்டும்
எனக்கான முதல் கல்லை!///

மிகவும் தவறான கருத்து சகோதரி..
இதை யாரைப்பார்த்து வேண்டுமானாலும் கூறலாம். அண்ணன், அப்பா, ஆசிரியர், காவல்துறையினர், நீதிபதி, அரசாங்கம்....

சரி... ஒரு பேச்சுக்கு யாருமே கல்லை தூக்க முன்வரவில்லை என்றால் விபச்சாரம் சரி என்கிறீர்களா? விபச்சாரிகள் இந்த சமுதாயத்துக்கு அவசிய தேவை என்கிறீர்களா? என்ன சொல்ல வருகிறீர்கள்?

மேலும், இப்போது கல்லின் குறி ரஞ்சிதா அல்லவே... வித்யா அல்லவா? உண்மையில் ஊருக்கும் உலகுக்கும் ஒரு படிப்பினை தருமாறு தன் அருவருக்கத்தக்க செயலால் செய்து விட்டு அதற்காக வெட்கி தலை குனிந்து அல்லவா ஓடி ஒளிந்திருக்கிறாள் அந்த விபச்சாரி... அவளுக்கு சப்போர்ட்டா? ஏன்? நீங்கள் பெண் என்பதாலா?

அப்படியானால்.... நான் வித்யாவிற்கு சப்போர்ட் பண்ணவா?

\\\நான் வித்யா.....அந்த 'யோக்கியவதி' எடுக்கட்டும்
எனக்கான முதல் கல்லை!\\\
---என்று அவனவன் பினாத்துவானே...?
அப்போது என் சகோதரி, அம்மா, ஆசிரியை, .... எல்லாரும் தகுதியற்றவர்களா 'விபச்சாரன் வித்யா' மீது கல்லெறிய?

'எதயாவது அவசமாய் எழுதித்தொலைக்க வேண்டும்' என்று எழுத ஆரம்பித்துவிட்டால் இப்படித்தான் எதையாவது அசிங்கமாய் உளறி வைக்க வேண்டி வந்து விடும்.... கவனம் தேவை சந்தனமுல்லை...(பேரு மட்டும் மனம் வீசினால் போதுமா? எழுத்து......?)

ராம்ஜி_யாஹூ said...

nice but the last 4 lines is from very old poem i guess

கண்ணகி said...

முல்லை...அனைவரின் கோபமும் ஏமாளிமக்களின் நம்பிக்கையை சிதைத்த நித்தியானந்தன் என்ற கயவனின் மீதுதான். காசுக்காகச் சென்ற ரஞ்சிதா மீது அல்ல.. அவர் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டார்..ரஞ்சிதா மாதிரி இன்னும் எத்தனை நடிகைகளுடன் தொடர்பு இருந்த்தோ...அவர்கள் எல்லாம் தப்பிவிட்டார்கள். இவர் மாட்டிக்கொண்டார்..பாவம்தான்..

காசுக்காக நடத்தை தவறும்போது சுகபோகங்களை அனுபவிப்பதுபோல இதையும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும்..

சுருட்டு சாமியாருடன் இறந்தாரே..அவர் ஒரு டாக்ட்ர் என்று ஞாபகம்..அந்தப்பெண் உண்மையேலேயே ஒரு பரிதாபத்துக்கு உரிய படித்த முட்டாள்..

பெற்ற குழந்தைகளின் வயிற்றுப்பசிக்காக கணவனால் கைவிடப்பட்டு இந்தத்தொழிலுக்கு வரும் பெண்கள் பரிதாபத்துக்குரியவர்கள். உங்கள் கவிதை அவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும்..என் கருத்து சரிதானே முல்லை..

நாமக்கல் சிபி said...

ரஞ்சிதாவுக்கான கல்லை நான் எடுக்கத் தயார்!

ஆனா ரஞ்சிதாவை ஏன் கல்லால அடிக்கணும்! அவங்க செய்த தப்பு என்ன?

சாமியாரை கல்லால அடிச்சா ஒரு லாஜிக் இருக்கு!

மங்களூர் சிவா said...

நித்யா ஒரு 420 அவன் கூட சல்லாபித்த ரஞ்சிதா ஒரு விபச்சாரி அவளுக்கு சப்போர்ட்டாக ஒரு கவிதை அதில் நீ யோக்கியமா இருந்தா கல்லெடுன்னு

:((

நான் சொல்கிறேன் நான் யோக்கியன் நான் எடுக்கிறேன் முதல் கல்லை.

காமெடி பீஸ் ஆகாதிங்க முல்லை அக்கா.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ரொம்ப ரொம்பச் சூடு..!

தாங்காதவங்கதான் சட்டத்தையும், நியாயத்தையும் பத்தி பேசுறாங்க..!

Jeeves said...

I think because she is "Women", and this stand is due to that ? if that is the case, We can also defend any one does any mistake and any crime.

May be I am wrong.

I am sorry but I stand against to your opinion on this case.

We can show many "Good Example" who succeeded life with out doing any crappy thing.

btw - poem is good :)

For those who asks " Is money the only problem "

think of the ppl succeeded in life with those problem you are gonna mention. There is no one in this world with out any problem. all got one. but not all got into such a crappy business.


AND nithyanandha must be punished for this.

ஜெரி ஈசானந்தா. said...

awesome.mindblowing.

ஜெயந்தி said...

அருமையான கவிதை!

புளியங்குடி said...

ரஞ்சிதா சாமியாரிடம் சித்திரவதைப்படவில்லை. அவள் கணவனிடம்தான் சித்திரவதைப்பட்டிருக்கிறார். வழக்கமாக ராணுவத்தினரிடம் மாட்டிக்கொள்ளும் பெண்கள் அனுபவிக்கும் கொடுமை. புரியும் என்று நினைக்கிறேன்.... சாமியாருடன் இருந்தால் விபசாரியா? அல்லது நடிகை என்பதாலா? நமக்கொரு நியாயம், ரஞ்சிதாவுக்கும் சாமியாருக்கும் ஒரு நியாயமா? சாமியார் மீது 420 கேஸ் போடக்கூட இந்த விடியோ ஆவணமாகப் பயன்படுத்தப்படக்கூடாது.

திருக்குறளில் கள்ளுண்ணாமை இருக்கு, புலால் மறுத்தல் இருக்கு... எங்கேயாவது காமம் மறுத்தல் இருக்கா? சாமியாரை மட்டும் விதிவிலக்கா பாக்கறது அநியாயம்.

இது உங்க கவிதைக்கான பதில் அல்ல சந்தனமுல்லை சாரி...

சந்தோஷ் = Santhosh said...

ஏங்க தெரசா,சீதா,மேரி மாதா இவங்களை எல்லாம் விட்டுடிங்க பாவங்க கோச்சிக்க போறாங்க

கண்ணகி said...

விட்டுப்போன கருத்து...முல்லை..ரஞ்சிதாவைப் பழிதீர்த்தது சன்.டி.வி... மக்கள் இல்லை..அவர்களின் நோக்கம் என்னவென்று மக்களுக்குத் தெரியாமலா போய்விடும்...நடுவீட்டில் ஆபாசத்தைக் கடைவிரித்தற்கு அவர்கள் பதில் என்ன...ஒன்றும் செய்யஇயலாமல் நாம்...

முகிலன் said...

//திருக்குறளில் கள்ளுண்ணாமை இருக்கு, புலால் மறுத்தல் இருக்கு... எங்கேயாவது காமம் மறுத்தல் இருக்கா? சாமியாரை மட்டும் விதிவிலக்கா பாக்கறது அநியாயம்.//

பிறன்மனை நோக்காப் பேராண்மைன்னு ஒரு அதிகாரமே இருக்கு பாஸு..

புளியங்குடி said...

முகிலன்...

தவறைச் சுட்டிக் காட்டுவதற்காக மன்னிக்கவும். புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை மட்டும்தான் அதிகாரங்கள். பிறன்மனை நோக்காப் பேராண்மை என்பது அறத்துப் பாலிலுள்ள ஒரு குறளின் தொடக்கம்..

நான் எழுதியதைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன். அதாவது கள்ளுண்ணாமை என்பதைப் பொதுவானவர்களுக்காகவும் புலால் மறுத்தல் என்பதை துறவறவியல் வாயிலாக துறவறத்தில் ஈடுபடுவோருக்கும் சொன்ன திருவள்ளுவர் யாரையும் காமம் இல்லாமல் இருங்கள் என்று சொல்லவில்லை. காமத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள் என்றுதான் சொல்லியிருக்கிறார். இது சாமியார்களுக்கும் சேர்த்துத்தான். கட்டுப்பாடு வேறு... முற்றிலுமாக மறுப்பது வேறு...

நீங்களே சொல்லுங்கள் நாம் கள்ளுண்ணாமல் இருக்கலாம்... புலால் இல்லாமல் இருக்கலாம்.. காமம் இல்லாமல்..?

அப்புறம், ரஞ்சிதாவை பிறன்மனை என்று சொல்வதுகூட விவாதத்துக்குரிய விஷயம்னு நினைக்கிறேன்...

பின்னோக்கி said...

இந்த விஷயத்தில் நித்யா மற்றும் ரஞ்சிதாவையும் சேர்த்தே திட்டுகிறார்கள் என்று நினைக்கிறேன். இந்த அளவுக்கு எதற்கு அவருக்கு சப்போர்ட் என்று தெரியவில்லை. blackmail செய்யும் ஒருவருக்கு எதற்ககாக ‘நீங்கள் எல்லாம் ஒழுக்கமா /’ என்ற கேள்வி ??

சாமியார் இப்படி செய்ததில் தான் எல்லாருக்கும் கோபம். ஒரு தனிப்பட்ட மனிதனின் ஒழுக்கத்தைப் பற்றி, அவன்/அவள் என்ன செய்கிறாள் என்று ஆராய்ந்தால், கல் அதற்கு பயன்படலாம்.

பின்னோக்கி said...

புலி, ஆடு மேல் பாய்வதைப் போன்ற வீடியோ என்றால் பரிதாபப்படலாம். ஆண்களுக்கு 4 திட்டு எக்ஸ்ட்ரா குடுக்கலாம். ஆனால், இவர், பெண்மையை, உபயோகப்படுத்திய விதத்தை எப்படி எடுத்துக்கொள்வது. எப்படி எல்லாவற்றையும் பெண்களுக்கு எதிரானது என்றே எடுத்துக்கொள்கிறீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் ஏற்கனவே பிரபல பதிவர் தான். இந்த மாதிரி பதிவுகளால் ஆக வேண்டிய கட்டாயம் இல்லை உங்களுக்கு