Thursday, March 25, 2010

பேருந்தில் நீ எனக்கு.....

எல்லாம் எங்க ஆயா பண்ணின சதி. எனக்கு அப்போவேத் தெரியும், எப்படியும் என்னோட பயாகிராஃபி வெளிவரும்போது, இந்த பக்கங்கள் ஒரு இருண்ட காலமாத்தான் இருக்கும்னு. இதையெல்லாம் தவிர்க்கணும்னு, அப்போவே சொன்னேன். 'பிஜி-க்காவது மெட்ராஸ் போறேன், என்னை விடுங்க'ன்னு. ”மெட்ராஸ் போனேனா நீ குட்டிச்சுவரா போய்டுவே”-ன்னு (இல்லன்னா மட்டும் ரொம்ப ஒழுங்கு!) பதில் சொன்னாங்க ஆயா. சரி, MAT ஸ்கோர்ல்லாம் நல்லாதானே வச்சிருக்கேன், நார்த்-க்காவது போக விடுங்கன்னு கதறினேன். கேட்டாங்களா? 'ஒண்ணும் வேணாம், நான் நிம்மதியா இருக்கணும்னா, ஆச்சி அந்த ஒன் அண்ட் ஒன்லி விமன்ஸ் யுனிவர்சிடிக்குத்தான் போகணும்” -ன்னு பெரிம்மாக்கிட்டே கைகேயி அவதாரம்தானே எடுத்தாங்க. அங்கே பேருந்து-ன்ற பெயரிலே ஸ்வராஜ் மஸ்தா ஒன்னு இருந்துச்சு. ஆனா, அதுலே காதல் இல்லே. காதலே இல்லேன்னப்பறம் காதல் ஜோடி மட்டும் எப்படி இருக்கும்? ச்சே...அங்கே ஜோடியே இல்லே...காதல் மட்டும் எப்படி இருக்கும்? சரி...ஏதோ ஒண்ணு..

ஒருவேளை, நான் மெட்ராஸ்லே மட்டும் படிச்சிருந்தேன்னா, இந்நேரம் இந்த தொடர்பதிவுலே சொல்றதுக்குத்தான் எத்தனை கதைகள் என்கிட்டேயே இருந்திருக்கும்! ப்ச்! நீங்க கொடுத்து வச்சது அவ்வளவுதான். அப்படியே, நான் ஆம்பூரிலேருந்து கொடைக்கானல் போகணும்னா, ஜோலார்பேட்டையிலே எட்டுமணி ட்ரெயின் ஏறி விடிகாலைல திண்டுக்கல்-லே இறங்கி, அங்கே வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கிற ஃப்ரெண்ட்ஸ் கூட ஜாயிண்ட் அடிச்சு, மதுரைலேருந்து வந்து வத்தலகுண்டுலே வெயிட் பண்ணிக்கிட்டிருக்கிற இன்னொரு க்ரூப் கூட ஜோதியிலே ஐக்கியமாகி ”போறாளே பொன்னுத்தாயி”-ன்னு காட் ரோடிலே மலையேறினா கீழே இறங்க ரெண்டு மாசமாவது ஆகும். இதுலே, தினமும் பேருந்து பயணம் எங்கே?!

அந்த பேருந்துலே, காதல் எபிசோட் முடிஞ்சு கல்யாண எபிசோடை ஆரம்பிக்க வர்ற ஜோடிங்களை வேணா பாக்கலாம்...எல்லாம் ஹனிமூன் கப்பிள்ஸ். ”சின்ன பசங்க நம்மக்கூட வர்றாங்களே, கொஞ்சமாவது டீசண்டா நடந்துப்போம்”னே கிடையாது. ஒரே கொஞ்சல்ஸ்தான். எங்களுக்கு, அக்கம்பக்கத்துலே மாட்டினா அவ்வளவுதான். ஆனா, அதெல்லாம் புரிஞ்சுக்கற நிலைமைலே இருப்பாங்கன்றீங்க? பாதிபேருக்கு புரியவும் புரியாது...ஏன்னா எல்லாம் ஒரே குஜ்ஜூஸ். முழங்கை வரைக்கும் வளையல் போட்டு பாதி தலைவகிடு வரைக்கும் குங்குமம் அப்பின கேஸ். சரி..விஷயத்துக்கு வாங்க.


தினமும் பேருந்துலே நான் பார்த்த காதல்-ன்னா அது சென்னைக்கு வந்தப்புறம்தான். சைக்கிள் வீலை ரிவர்ஸுலே சுத்துங்க, ப்லீஸ்! ப்ராஜக்ட்-க்காக ரெண்டு அப்பாவி பொண்ணுங்க சென்னை மண்ணை மிதிக்கறாங்களா...யெஸ்! 'எஜமான் காலடி மண்ணெடுத்து'- ன்னு பேக்ரவுண்ட்லே பாட்டு கேக்குதா...அதேதான்...
கட் கட்...கட்...

ஸ்கூட்டி வாங்கற வரைக்கும் பஸ்லேதான் நானும் லதாவும் ஆஃபிஸ் போவோம். எட்டேமுக்காலுக்கு கரெக்ட்டா பஸ் டாண்ணு ஸ்டாப்லே வந்து நிக்கும். அதே சமயம், சரியா ஸ்டாப்-க்கு மேலே ஒரு ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் க்ராஸ் பண்ணும். (டைமிங்பா!)அப்போல்லாம், ஆடி மாச பஸ்தான்(லேடீஸ் அந்த பக்கம், ஜெண்ட்ஸ் இந்த பக்கம்). ஜன்னல் சீட்டுலே உட்கார்ந்திருக்கிற அந்த அக்காவோட கண்ணு பஸ் ஸ்டாப்பை ஸ்கேன் பண்றதை பார்க்கிற எந்த சாதாரண மனுசனுக்கும் 'அவங்க யாரையோ தேடறாங்க'ன்னு புரியும். எங்களை மாதிரி மரமண்டூஸ்-க்கு , 'ஒரு சீட் பக்கத்துலே காலியா இருக்கு'ன்னு சொல்ற மாதிரி தோணுச்சு. அந்த சீட்லே லதா உட்கார்ந்துக்கிட்டா. நான், நின்னுக்கிட்டு ஜன்னல் வழியா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன்.

அப்புறம், பஸ் நகரும்போது ஃபுட்போர்டுலே ஏறுறவங்க வந்து அவங்க சொத்துகளை ஜன்னல்கிட்டே இருக்கறவங்க கிட்டே கொடுத்துட்டு ஏறுவாங்க தானே.. அதுமாதிரி இந்த அக்கா மடிலேயும் யாரோ கொடுத்த ஒரு லஞ்ச் பாக்ஸ்,இன்னும் சில நோட்டுகள். அதைப்பார்த்து அந்த அக்கா லேசா சிரிச்ச மாதிரி இருந்தது. நமக்குத்தான் பாம்புக்காது...ச்சே.. பூனைக்கண்ணு... இந்தவிஷயத்தையெல்லாம் நல்ல நோட் பண்ணுவோமே.
அப்புறம்தான் தெரிஞ்சது, அந்த அக்கா தினமும் டெர்மின்ஸ்லேருந்தே ஏறிடுவாங்க. அந்த அண்ணா ஏதோ காலேஜ் ஸ்டூடண்ட் போல. (நோட் புக்!!) அந்த அக்கா எங்கியோ வேலை செய்றாங்க போல. சிலநாட்கள், ஒரு ஆண்ட்டி கூட ஆஃபிஸ் விஷயமா பேசிக்கிட்டிருக்கிறதையும் பார்த்திருக்கோம். ஒரே ஆஃபிஸா இருப்பாங்க போல.

டிக்கட் வாங்கணும்னா, பக்கத்துலே இருக்கறவஙகிட்டெ காசை கொடுத்தாப் போதும்.அப்படியே ஒவ்வொருத்தரா பாஸ் பண்ணி கடைசிலே உட்கார்ந்திருக்கற கண்டக்டர்வரை ரீலே ஆகி டிக்கட் நம்ம கைக்கு வந்து சேரும்.
நாங்க, பெரும்பாலும் அந்த அக்காக்கிட்டே தான் கொடுப்போம். அவங்க, கண்டக்டர் பக்கத்துலே நின்னுக்கிட்டு இருக்கற அண்ணாகிட்டே பாஸ் ஆகிற வரைக்கும் பார்த்துக்கிட்டே இருப்பாங்க. அப்போ, நானும் லதாவும் ஒருத்தரை ஒருத்தர் இடிச்சுக்குவோம், கிண்டலோட. நாமதான், சினிமாலேக்கூட செண்டி சீன் வந்தா சீனைப் பார்க்காம பக்கத்துலே உட்கார்ந்து இருக்கிறவங்க ரியாக்‌ஷனைப் பார்ப்போமே...கண்ணுலே தண்ணி வருதா... கிண்டல் பண்ணி சிரிக்கலாம்னு. அதே மாதிரி அந்த அண்ணாவும் அக்காவை ஓரக்கண்ணாலே பார்த்துக்கிட்டு இருப்பார்.

அக்கா கையிலே எதாவது புக் வைச்சிருப்பாங்க வேற. சிட்னி ஷெல்டன். ஆனா, முழுசா படிக்கற மாதிரியும் தெரியாது..படிக்காத மாதிரியும் தெரியாது. கொஞ்ச நேரத்துக்கு அப்புறம், அந்த அண்ணா,எப்படியாவது நகர்ந்து அக்கா பக்கத்துலே வந்துடுவாங்க. அப்புறம் ஒரே சைட் தான். ஒரு நாடகம் பாக்கிற மாதிரியே இருக்கும். நானும் லதாவும் நமுட்டு சிரிப்பு சிரிச்சுக்குவோம். அவங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சுதான்னு தெரியலை....தெரிஞ்சிருந்தா சபிச்சிருப்பாங்க!


இப்படியே ஒரு ரெண்டு மாசம் போயிருக்கும். ஒருநாள், வேலன்டைன்ஸ் டேன்னு நினைக்கறேன். அந்த அக்கா பிங்க் கலர் ட்ரெஸ்லே வந்திருந்தாங்க. பார்க்கிறதுக்கு ஃப்ரெஷ்ஷா இருந்தாங்க. அந்த அண்ணா, ஒரு க்ரீட்டிங் கார்டோட ரோஜாவை கையிலே வச்சிக்கிட்டு ஏறினார். அன்னைக்கு அக்காவுக்கு சீட் கிடைக்காததனாலே நின்னுக்கிட்டுதான் வந்தாங்க. அண்ணா, ரோஜாப்பூவைக் கொடுத்ததும் அக்காவும் வெட்கப்பட்டுக்கிட்டே வாங்கிக்கிட்டாங்க. எல்லாரும் பார்த்தும் பாக்காத மாதிரி இருந்தாங்க. ஒரு ரெண்டு ஸ்டாப்பிங் தள்ளி டிக்கெட் கொடுக்க பஸ்ஸை நிறுத்தினாங்க. அப்போ கொஞ்சம் பேரு இறங்கி ஜன்னல்கிட்டே நிப்பாங்க இல்லே.அது மாதிரி அந்த அண்ணாவும் இறங்கி போனார்.

அப்போதான் அது நடந்தது. இன்னொரு அண்ணா,அவர், பார்க்க கருப்பா, கொஞ்சம் ரஜினி மாதிரி ஸ்டைல்லாம் பண்ணிக்கிட்டு அக்கா பக்கத்துலே வந்தார். அக்கா முதல்லே ஒண்ணும் கண்டுக்கலை. திடீர்ன்னு,அவர் அந்த அக்காகிட்டே லெட்டர் மாதிரி ஒண்ணை கொடுத்தார். அந்த அக்கா வாங்கிக்கலை. அந்த அண்ணா “ஏண்டி, வெள்ளையா இருந்தா மட்டும்தான் லவ் பண்ணுவீங்களா” - ன்னெல்லாம் கேட்டுட்டு அந்த அக்கா கையிலே இருந்த ரோஸ், கார்டை கிழிச்சு போட்டுட்டு இறங்கிபோய்ட்டார். எல்லாரும் அப்படியே அதிர்ச்சியிலே உறைஞ்சு போய்ட்டாங்க. அந்த அக்காவுக்கு ரொம்ப அவமானமாகிடுச்சுன்னு நினைச்சோம்.
கொஞ்ச நேரத்துலே கண்டக்டர் விசில் கொடுத்ததும், எல்லாரும் ஏறிட்ட்டாங்க. அண்ணாவும், அக்கா பக்கத்துலே வந்தப்போ கீழே கிடக்கிற கார்டையும் ரோசையும் பார்த்துட்டாங்க. அக்காவுக்கு, இந்த அதிர்ச்சியிலே வார்த்தையே வரலை. விட்டா அழுதுடுவாங்க போல. அந்த அக்கா, கீழேருந்து எடுக்கறதுக்- குள்ளே எல்லாரும் உள்ளே வர ஆரம்பிச்சதுனாலே ரோசை பாக்காம மிதிச்சுக்கிட்டே போய்ட்டாங்க...பாவம், அந்த அண்ணா-வுக்கு அதை நிஜமா பிச்சு போட்டது யாருன்னு தெரியாது. எல்லாம் சினிமாலே வர்ற மாதிரியே...வர்ற மாதிரியே என்ன...சினிமா மாதிரியே இருந்தது.

நானும் லதாவும் எங்க ஸ்டாபிங்லே இறங்கினப்புறமும் ஆஃபிஸுக்கு போக மனசு இல்லாம , அந்த அக்காவையும், அண்ணாவையும், இன்னொரு கருப்பு அண்ணாவையும் சுமந்துக்கிட்டு போற அந்த பஸ்ஸையே பார்த்துக்கிட்டு நின்னோம். புழுதியை எழுப்பிட்டு போன அந்த பஸ்ஸோட நம்பர் மட்டும் கண்ணுக்குத் தெளிவா ....23C!

என்னது...அப்புறம் நடந்ததெல்லாம் உங்களுக்கும் தெரியுமா? நீங்களும் ''சுடச் சுட பார்த்து ரசித்தி'ருக்கீங்களா?! (என்ன பண்றது..எங்க ஆயாவோட சதியாலே நான் பார்த்த ஒரே 'பேருந்து காதல்' கதை...இதுதான்!)

சரி சரி...'எனக்கு ஆரம்ப சீன்லேயே தெரிஞ்சுடுச்சு'.. இல்லேன்னா ‘முன்னாடியே கெஸ் பண்ணிட்டேன்'-னெல்லாம் விட்டுட்டு உண்மையை சொல்லிட்டு போங்க...:-)

தொடர்பதிவிற்கு அழைத்த தீபா-விற்கு நன்றி!

சிலபல சுவாரசியமான 'உண்மைச்' சம்பவங்களை சொல்ல நான் அழைப்பது,

சின்ன அம்மிணி,
ஆயில்யன்
பின்னோக்கி
கமெண்ட் மட்டும் போடும் padmaja (நீங்க பின்னூட்டத்திலே கூட சொல்லலாம்,மேடம் ) :-)

34 comments:

நட்புடன் ஜமால் said...

குஜ்ஜூஸ் - புதெசவி

ச்சே வேற என்னமோ எதிர்ப்பார்த்தேன் சரி விடுங்க

ஏதோ ஒரு படம், இதே போல் சீன் பேர் மறந்துடுச்சி

ராமலக்ஷ்மி said...

நிஜம்மா..
'எனக்கு ஆரம்ப சீன்லேயே தெரிஞ்சுடுச்சு'
நம்பணும் ஆமாம்..நான்
‘முன்னாடியே கெஸ் பண்ணிட்டேன்'

:)))!

பாலாஜி said...

"அப்போல்லாம், ஆடி மாச பஸ்தான் "

மிக ரசித்தேன்

முகிலன் said...

இப்பிடியா ஆச்சி ஏமாத்துவீங்க..

கருப்பு அண்ணன் வந்து லெட்டரைக் கிழிக்கிற வரைக்கும் உங்கள நான் நம்பிட்டேன்... ச்சே..

ஆயில்யன் said...

//ஸ்கூட்டி வாங்கற வரைக்கும் பஸ்லேதான் நானும் லதாவும் ஆஃபிஸ் போவோம். //

இந்த கேரக்டரை நாம கூப்பிட்டு ஒரு மீட் வைக்கணும் பாஸ்! பாவம் எப்படியெல்லாம் ஃபீல் பண்ணியிருப்பாங்க அப்ப !
ஸோ ஸேட் :)))))

Uma said...

Oh my god! Beautiful.

ஆயில்யன் said...

//தொடர்பதிவிற்கு அழைத்த தீபா-விற்கு நன்றி!//


இப்படி ஒரு கதை சொல்ல ஆச்சியை கூப்பிட்டோமேன்னு லீவு போட்டு ஃபீல் பண்ணுவாங்க :)))

ஆயில்யன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!

டோட்டலா ரொம்ப சுவாரஸ்யமா ஒரு படத்தோட கதையை சொல்லிட்ட்டு எஸ்கேப்ப்ப்ப்ப்ப் தொடர் பாவம் ச்சும்மாவிடாது ஆச்சி :))

ஆயில்யன் said...

//நானும் லதாவும் நமுட்டு சிரிப்பு சிரிச்சுக்குவோம்//


இப்படியேத்தான் போய்க்கிட்டிருக்கு போல உங்க பயணம் நல்லா இருங்க ஆச்சி !

அவனவன் எவ்ளோ கஷ்டப்பட்டு பிரசாந்த் - லைலா கால்ஷீட் வாங்கி காதல் செய்யற ஷுட்டிங்க் எடுக்கறானுங்க உங்களுக்கு நமுட்டு சிரிப்பா இருக்கா?

பாவம் பிரசாந்த் அண்ணன் நீங்க நக்கலா சிரிச்சிங்கன்னு தெரிஞ்சா குமுறி குமுறி அழுவாரு!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கருப்பு அண்ணன் வந்து லெட்டரைக் கிழிக்கிற வரைக்கும் உங்கள நான் நம்பிட்டேன்... ச்சே..//
நானும் நம்பிட்டேனே :(

ஆரம்பத்துல இருந்து சுவாரசியம் தான் :))

அப்பறம் ஆயில்யன் சொன்னமாதிரி அந்த உங்க தோழியை மீட் செய்யனுங்க :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

!)அப்போல்லாம், ஆடி மாச பஸ்தான் //

இப்போ பஸ் எல்லாம் மார்கழி மாசமாத்தான் இருக்கு :)))

க.பாலாசி said...

//ப்லீஸ்! ப்ராஜக்ட்-க்காக ரெண்டு அப்பாவி பொண்ணுங்க சென்னை மண்ணை மிதிக்கறாங்களா...யெஸ்! 'எஜமான் காலடி மண்ணெடுத்து'- ன்னு பேக்ரவுண்ட்லே பாட்டு கேக்குதா...அதேதான்... கட் கட்...கட்...//

சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசனை காட்டலையே....

கண்ணகி said...

யம்மா,,, நீங்க கில்லாடிதான். ஒத்துக்கறேன். பாதிவரைக்கும் நம்பிட்டேன்..அப்புறம் உசார் ஆயிட்டமில்ல..

Deepa said...

ஹேய், கதை இன்ட்ரஸ்டிங்கா போயிட்டிருந்துச்சு...ஏன் பாதியில் நிறுத்திட்ட? இதுவரை கேள்வியே படாத புதுமாதிரியா சூப்பரா இருந்ததே!

ஹூம்.. வேற என்ன பண்ண சொல்ற?

உன்னைப் போய்க் காதல் கதை எழுதக் கூப்பிட்டேன் பாரு. என்னைச் சொல்லணும்...ஹும்ம்! :)))))

சின்ன அம்மிணி said...

நான் கூட நிஜம்னு நம்பிட்டேன்.
(எழுத முயற்சி செய்யறேன். ஆணி அதிகம்)

அன்புடன் அருணா said...

அய்யய்யோ தொடருமாக்கும்னு நினைச்சுட்டு இருந்தா!!!!

"உழவன்" "Uzhavan" said...

12Bக்கு அப்புறம் 23C னு இப்படி ஒரு படம் வந்திருக்கலாமே.. :-)

Deepa said...

//தொடர்பதிவிற்கு அழைத்த தீபா-விற்கு நன்றி!//


இப்படி ஒரு கதை சொல்ல ஆச்சியை கூப்பிட்டோமேன்னு லீவு போட்டு ஃபீல் பண்ணுவாங்க :)))//

ஹேய் என்ன இது ஆளாளுக்கு?
என்னைப் பாத்தா ரொம்ப நல்ல்ல்ல்ல்லவ மாதிரி தெரியுதா?
:((((

தமிழ் பிரியன் said...

உண்மையிலேயே என்ன படம்ங்க அது?.. ;-)

அப்பாவிகள் சங்கம்
தோஹா - கத்தார்

Jennifer said...

//எல்லாம் எங்க ஆயா பண்ணின சதி. எனக்கு அப்போவேத் தெரியும், எப்படியும் என்னோட பயாகிராஃபி வெளிவரும்போது, இந்த பக்கங்கள் ஒரு இருண்ட காலமாத்தான் இருக்கும்னு.//

அதனாலேதான் இப்ப நிறைய பல்பு வாங்குங்க

Jennifer said...
This comment has been removed by the author.
Jennifer said...

// ப்ச்! நீங்க கொடுத்து வச்சது அவ்வளவுதான்.//
ச்சே.. ச்சே எங்களுக்கு நேரம் ரெம்ப நல்லா இருந்து இருக்கு

Jennifer said...

// 'எஜமான் காலடி மண்ணெடுத்து'- ன்னு பேக்ரவுண்ட்லே பாட்டு கேக்குதா...அதேதான்... கட் கட்...கட்...//
எமன் காலடி மண்ணெடுத்து ன்னு கேட்குது

நசரேயன் said...

//எனக்கு அப்போவேத் தெரியும், எப்படியும் என்னோட பயாகிராஃபி வெளிவரும்போது, இந்த பக்கங்கள் ஒரு இருண்ட காலமாத்தான் இருக்கும்னு//

ஒ.. அதுதான் இப்ப பல்பா வாங்குறீங்களா

// நார்த்-க்காவது போக விடுங்கன்னு கதறினேன். கேட்டாங்களா? 'ஒண்ணும் வேணாம்//

வடக்கையாவது மக்கள் நிம்மதியா இருக்கட்டுமே என்ற நல்ல எண்ணத்திலையா இருக்கும்

//ப்ச்! நீங்க கொடுத்து வச்சது அவ்வளவுதான்.//

ச்சே .. ச்சே அது எங்க நல்ல நேரம்

// 'எஜமான் காலடி மண்ணெடுத்து'- ன்னு பேக்ரவுண்ட்லே பாட்டு கேக்குதா...அதேதான்... கட் கட்...கட்...//

"எமன் காலடி மண்ணெடுத்து" அப்படின்னு மாத்தணும்.. அதுக்கு தான் இந்த கட்..கட்.. கட்

துபாய் ராஜா said...

நல்ல ஃபுளோ... கடைசி வரை கண்டுபிடிக்கமுடியலை.... :))

மாதவராஜ் said...

:-)))))

பித்தனின் வாக்கு said...

அகா அருமையான காதல் கதை சோகத்தில் முடித்து விட்டீர்கள். ஒரு கற்பனையாது பண்ணி, சுபத்தில் முடித்து இருக்கலாம். இல்லை கீழே ஒரு வரி இன்னேர் நாள் அவர்கள் இருவரை கோவிலில் அல்லது பீச்சில் பார்த்தேம் சொல்லி எங்களுக்கு ஒரு ஆறுதல் கொடுத்து இருக்கலாம். பத்மஜா பின்னூட்டத்தில் பதிவா? ஏங்க சென்னையில வெள்ளம் வரனுமா?.

naathaari said...

........................

காமராஜ் said...

கதையும் விமர்சனமும் ஒரே நபர் பண்ணுகிற நேரலை மாதிரி இருந்தது.
பேருந்தை விட வேகமாக.
பல சென்னை சம்பவங்கள் புரியவில்லை.
சென்னை நமக்கு டூரிஸ்ட் ஸ்பாட் தானே ?.

நல்லாவே கலக்குறே முல்லை.

☀நான் ஆதவன்☀ said...

பாஸ் சான்ஸே இல்ல :)))

☀நான் ஆதவன்☀ said...

சிரிச்சுட்டே இருக்கேன். தெரிஞ்சும் எவ்வளவு சீரியஸா படிச்சிருக்கேன்னு :)))

☀நான் ஆதவன்☀ said...

என்னடா பார்த்தேன் ரசித்தேன் மாதிரியே இருக்கே.... இப்படி கூட நிஜத்துல நடக்குமான்னு நினைச்சுகிட்டே வந்தா ‘பவ்வ் பவ் பவ்வ் பவ்வ்’ :)))))

சிங்கை நாதன்/SingaiNathan said...

அங்க சித்ரா , இங்க ......... சே நல்ல வேள 1-ம் தேதி படிக்கல ...

@நட்புடன் ஜமால்
குஜ்ஜூஸ் - குஜராத்திகள்

அன்புடன்
சிங்கை நாதன்

S.v.mano said...

parthen rasithen