Wednesday, November 04, 2009

பிறந்தநாள் - ரவுண்ட் அப்

கடந்த வருடத்தின் இந்த இடுகையில் கடைசியாக வந்த பின்னூட்டமே இந்தப்பதிவை எழுத இயலாமல் செய்து விட்டது! தங்களின் கேள்விக்கு என்னிடம் விடையில்லாவிட்டாலும் கூட, தங்களின் மனவருத்தத்தை எனது இடுகைகளால் தூண்டியிருக்கிறேனென்பது என்னை சங்கடத்துக்குள்ளாக்குகிறது! மன்னிக்க வேண்டுகிறேன்! தங்களுக்காகவும், தங்களின் மகனுக்காகவும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்! கண்டிப்பாக தங்கள் மகன் கேள்விக்கணைகளால் தங்களைத் துளைத்தெடுக்கும் நாள் தொலைவில் இல்லை!!

'சித்திரக்கூடம்' பப்புவின் செய்கைகளையும் நான் ரசிக்கும் கணங்களையும் பதிந்துக்கொள்ளும் ஒரு ஆன்லைன் ஜர்னல் என்ற சமாதானத்துடன் தொடர்கிறேன்!

இந்த வருடத்தின் திட்டம்

1. ஒரு ஃபோட்டோ ஆல்பம் - Troublesome Threes
2. ஒரு பரிசு - மீன் தொட்டி
3. நான்கு செலிபிரேஷன்கள் (நாங்களாக பிளான் செய்யாவிட்டாலும் அமைந்து விட்டது!)

ஃபோட்டோ ஆல்பம் - Troublesome Threes

கடந்தவருடத்தில் க்ரேஸியான மணித்துளிகள் - வழக்கம் போல சில 'முதல்'கள்- இன்னும் ஆல்பம் கைக்கு வரவில்லை.

ஒரு பரிசு - மீன் தொட்டி

இது ‘எதையாவது_வளர்க்கலாம்_மேனியா'வுக்காக. குறிப்பாக மீன்கள் வளர்ப்பதை ஆயாவும் விரும்புவது இல்லை. எனக்கும் தொல்லை. மீன்கள் உயிரிழப்பதை தாங்க இயலாது ஆயாவால். எனக்கோ அதை சுத்தம் செய்ய வேண்டிய வேலை. ஆனால், பப்புவுக்காக பெரிம்மா ஆம்பூர் செல்லும் போதெல்லாம் மீன் தொட்டியை சரி செய்து வைத்திருப்பார். அதிலிருந்து பப்புவுக்கு இஷ்டமானது மீன்களும் மீந்தொட்டியும்!

நான்கு கொண்டாட்டங்கள்

1. முதல் கேக் கட்டிங்
2. பிறந்தநாளன்று பள்ளியில் - பள்ளிக்கு சாக்லேட் அனுமதி இல்லை. பள்ளியில் அனைவருக்கும் டிரை ஃப்ரூட்ஸும், அவளது வகுப்பினருக்கு ஸ்கெட்ச் பேனாக்களும். பப்பு இன் பாவாடை சட்டை.
3. ரோஷினி ஹோம் @ பள்ளிக்கரணை - சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும். அங்கிருந்த அனைவரும் நன்றாக நினைவு வைத்திருந்தனர். சென்ற முறை கற்றுக்கொண்ட பாடல்களையும் அடிக்கடி நினைவுகூர்வதாகக் கூறினர். இந்த முறை பப்பு தயக்கமில்லாமல் பாடல்கள் பாடினாள். ஒரு மணிநேரத்திற்கும் மேலாக குழந்தைகளுடன் விளையாடி, பாடல்கள் பாடி நேரம் செலவழித்தோம். பின்னர், கொண்டு சென்றிருந்த நொறுக்குத்தீனிகளை பகிர்ந்துக்கொண்டோம்.(ஆரஞ்சு வண்ண உடையில் பப்பு - சிறார்களை பெரிம்மா விளையாட்டை நடத்திக்கொண்டிருக்கும்போது)

4.வீட்டில் நண்பர்களுடனும், அண்டை வீட்டாருடனும். வழக்கம்போல pin the tail கேம்.வர்ஷினி, வெண்மதி குடும்பத்துடன் வந்திருந்தனர். குட்டீஸ் எல்லோரும் ஓடியாடினர் வண்ணந்தீட்டினர்.கூச்சலிட்டனர். பப்புவுக்கு இருக்கும் இன்னொரு முகம் வெளிப்பட்டது.
வர்ஷினியோ, வெண்மதியோ வீட்டிற்குக் கிளம்புவதை விரும்பவில்லை. பப்புவும் விரும்பவில்லை. ”வீட்டுக்கு போய் ட்ரெஸ் எடுத்துட்டு வந்துடலா'மென்ற சமாதானத்துடன் கிளம்பிச் சென்றனர். பதிவர்களில் g3 வந்திருந்தார். குட்டீஸோடு குட்டீஸாகவே மாறிவிட்டார். :-)

மின் வாழ்த்தட்டைகள் அனுப்பியும், தொலைபேசியிலும், பதிவுகளிலும் வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு பப்புவின் சார்பாக நன்றி!

20 comments:

ராமலக்ஷ்மி said...

படங்களையும் கொண்டாட்டங்களையும் பகிர்ந்து கொண்டிருப்பதற்கு நன்றி முல்லை. பப்புவுக்கு வாழ்த்துக்கள்!

சின்ன அம்மிணி said...

கேக் நல்லாருக்கு

rapp said...

enakku munnadi yaar comment potttalum adhu sellaathu. me the first

கோமதி அரசு said...

பப்பு ,ரோஷினி ஹோம் பிள்ளைகளுடன்
நல்ல சந்தோஷமாய் இருந்தது அறிந்து
மகிழ்ச்சி.பப்புக்கு வாழ்த்துக்கள்.

கடந்த வருடத்தில் தன் குழந்தையைப் பற்றி வருத்தமாய் எழுதியிருந்தவர் குழந்தை இப்போது அவரை
கேள்விகளால் துளைத்துக் கொண்டு இருக்கும் என்று நம்புவோம்.

கலையரசன் said...

கேக் எடு கொண்டாடு...
பப்புவுக்கு வாழ்த்துக்கள்!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

போன வருஷம் மாதிரி இந்த வருஷம் பண்ணலியோன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன், அதற்கான காரணம் உண்மையிலேயே மனதை சங்கடப்படுத்துகிறது.

இப்போது பகிர்ந்ததற்கு நன்றி, பப்பு நல்லா என்ஞாய் செஞ்சிருக்கா போல.

பா.ராஜாராம் said...

நல்ல மனசு முல்லை.வாழ்த்துக்கள்டா பப்பு!

ஆயில்யன் said...

கொண்டாட்டங்களுக்கு முழு ஊக்கமும், ஆர்வமும், கொண்ட பப்புவின் பெற்றோர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!

ஆயில்யன் said...

// rapp said...

enakku munnadi yaar comment potttalum adhu sellaathu. me the first///

அட பாஸ் இது என்னாது? இப்பிடியெல்லாம் மிரட்டப்பிடாது!

இன்னிக்கு எங்க ராமா அக்காதான் பர்ஸ்ட்டு!

ஆயில்யன் said...

// சின்ன அம்மிணி said...

கேக் நல்லாருக்கு//

எனக்கு மட்டும் ஒண்ணு வைச்சுட்டு மத்ததெல்லாம் எடுத்துக்கோங்க நோ ப்ராப்ளம் ! :)

☀நான் ஆதவன்☀ said...

//இது ‘எதையாவது_வளர்க்கலாம்_மேனியா'வுக்காக.///

ஹிஹிஹி

☀நான் ஆதவன்☀ said...

//rapp said...

enakku munnadi yaar comment potttalum adhu sellaathu. me the first
//

பாஸ் இந்த கள்ள ஓட்டெல்லாம் இங்க செல்லாது செல்லாது

☀நான் ஆதவன்☀ said...

பாஸ் பிறந்தநாள் விழாவை நல்லா கொண்டாடிருக்கிறீங்க பாஸ். எங்களுக்கு கேக் எடுத்து வைங்க வந்து சாப்பிடுறேன்

டம்பி மேவீ said...

பப்புக்கு வாழ்த்துக்கள்

பித்தனின் வாக்கு said...

படங்களுடன் அருமையான பதிவு. நாங்களும் கொண்டாடிய உணர்வு. பப்புவிற்கு வாழ்த்துக்கள். நன்றி.

சுந்தரா said...

பப்புவுக்கு என் வாழ்த்துக்கள்!

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள் பப்பு!

நாகா said...

பப்புவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்..!

தீஷு said...

கொண்டாடங்கள் சூப்பர்.. ஒவ்வொரு வருடமும் ஹோமுக்குப் போவது நல்ல ஐடியா.. குழந்தைக்கு நிறைய வாழ்கைப் பாடம் கற்றுக் கொடுக்கும்.