Monday, November 23, 2009

சனி-ஞாயிறு

சனிக்கிழமை ஒரு திருமண வரவேற்புக்கு சென்றிருந்தோம். 'இனிமே கல்யாணிக்கெல்லாம்(கல்யாணம் இன் பப்புஸ் வெர்ஷன்) நான் வரமாட்டேன், அங்கே ரொம்ப நாய்ஸ்(Noice) இருக்கு'!! ஆர்கெஸ்ட்ராவுக்கு அருகில் நின்றுக்கொண்டிருந்தோம்! வரும்வழியில், ஏன் ரெண்டு பேருக்கும் கல்யாணி் நடக்குது, ஏன் எனக்கு நடக்கலை என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள். நல்லா படிச்சு,வளர்ந்து, காலேஜ்-ல்லாம் போய் அப்புறம் ஆஃபீஸ் போனாத்தான் கல்யாணம் நடக்கும் என்று சொல்லிவைத்தேன். நீ தான் வளர்ந்து ஆஃபீஸ் போறியே, ஒனக்கு ஏன் கல்யாணம் நடக்கலை? என்று கேட்டாள்.

'வாழ்க்கையிலே டிராஜிடி வரலாம், ஆனா டிராஜிடியே வாழ்க்கையா இருந்தா' என்றெல்லாம் தத்துபித்துவங்கள் தோன்றினாலும் சொல்லாமல், “நீ பெரிய பொண்ணாகி ஏரோபிளேன்லே எங்கெல்லாம் போவே” என்று பேச்சை மாற்றினேன். ஒருமுறை அவள் 'பெரியவளாகி சன் கிட்டே போய் ஏரோபிளேன் ஓட்டுவேன்' என்று சொல்லியிருந்தாள்.


இந்தவாரயிறுதியில் பப்புவும் என்னோடு அலுவலகம் வந்தாள். வெளியே வரும் போது, எது அவளை அப்படி கேட்க வைத்தது என்று தெரியவில்லை!

“ஆச்சி, நீ ஆஃபீஸ்லே தூங்குவியா?”

35 comments:

குடுகுடுப்பை said...

pappu may have sleep time at school.

ராமலக்ஷ்மி said...

அந்தக் கடைசிக் கேள்வி:))))))?

ஐயோ பாவம் நீங்கள், எத்தனை பல்புதான் வாங்குவீர்கள்:)?

அமுதா said...

/*ஆச்சி, நீ ஆஃபீஸ்லே தூங்குவியா*/
:-) குழந்தைகள் எப்பவும் உண்மை பேசுவார்கள் . எப்படி அவளுக்கு தெரிஞ்சது?

சின்ன அம்மிணி said...

//ஆச்சி, நீ ஆஃபீஸ்லே தூங்குவியா?//

எங்களுக்கெல்லாம் தெரிஞ்ச ரகசியம் பப்புவுக்கு இன்னும் தெரியாதா?

செல்வநாயகி said...

///“ஆச்சி, நீ ஆஃபீஸ்லே தூங்குவியா?” ///

:))

S.A. நவாஸுதீன் said...

//நீ தான் வளர்ந்து ஆஃபீஸ் போறியே, ஒனக்கு ஏன் கல்யாணம் நடக்கலை?//

பப்பு பப்புதான்.

//“ஆச்சி, நீ ஆஃபீஸ்லே தூங்குவியா?
”//

நீங்க உண்மைய சொன்னீங்களா?

பித்தனின் வாக்கு said...

அது பால்வாடி பள்ளியில் தூங்குவதைப் போல நீங்கள் தூங்கவில்லை என்ற காரணத்தினால் இருக்கலாம். அல்லது அன்னைக்கி மட்டும் நீங்க தூங்காம வேலை செய்ததாக நடித்ததால் கேட்டும் இருக்கலாம். (ஹி ஹி) இருந்தாலும் நல்ல சென்சிட்டிவ். நன்றி.

பைத்தியக்காரன் said...

//“ஆச்சி, நீ ஆஃபீஸ்லே தூங்குவியா?”//

என்ன பதில் சொன்னீங்க? 'ஆமா'னு உண்மையா... இல்ல, 'மாட்டேன்'னு பொய்யா?

குழந்தைங்ககிட்ட பொய் சொல்லக் கூடாது ஆச்சிமா :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

///“ஆச்சி, நீ ஆஃபீஸ்லே தூங்குவியா?”///
இத பப்பு கேட்டுதான் தெரிஞ்சுக்கனுமா?
///எது அவளை அப்படி கேட்க வைத்தது என்று தெரியவில்லை!///
ஒரு வேலை ஏசி, ஆபீஸ் அட்மாஸ்பியர், இன்னும் பிற அப்படி கேட்க வைத்தது என்று நினைகிறேன்.

ஸ்ரீமதி said...

//“ஆச்சி, நீ ஆஃபீஸ்லே தூங்குவியா?”//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எப்படி அக்கா சமாளிச்சீங்க?? ;))))

மங்களூர் சிவா said...

/
இந்தவாரயிறுதியில் பப்புவும் என்னோடு அலுவலகம் வந்தாள். வெளியே வரும் போது, எது அவளை அப்படி கேட்க வைத்தது என்று தெரியவில்லை!

“ஆச்சி, நீ ஆஃபீஸ்லே தூங்குவியா?”
/

:))))))))))))))))))

வல்லிசிம்ஹன் said...

முல்லை, உங்க அம்மா கிட்டத்தன் உங்க பேச்சைப் பற்றிக் கேக்கணும். அப்போ தெரியும் இந்த அரட்டை எங்கேருந்து வருதுன்னு.

லெமூரியன்... said...

\\நீ தான் வளர்ந்து ஆஃபீஸ் போறியே, ஒனக்கு ஏன் கல்யாணம் நடக்கலை? என்று கேட்டாள்.....//
:-)
உங்கள் திருமண நிழற்படங்களை அந்த சுட்டி பெண் பார்க்கவில்லையா என்ன ???

காமராஜ் said...

என் அன்புத்தம்பி ப்ரியாகார்த்தி தூக்கத்தை நல்ல சிந்தனை நேரம் என்சொல்லுவான்.காலமிது காலமிது பாட்டு ஞாபகம் வருதா ?
தூக்கம்ங்கறது எடுத்துக்கொண்டுபோய் மாட்டிக்கொள்வதல்ல. சூழல் கொண்டுவரும், அசதி கொண்டு வரும் ஒரு இயற்கையின் அழைப்பு. ஆபீசில் லஞ்சம் வாங்குவது, போட்டுக்கொடுப்பது, வேலைசெய்வது போல நடிப்பது. அப்றம் காக்காய்கள் பிடிப்பது எல்லாம் நல்ல ஒரு ஆரோக்கியமான அலுவலகச்செயலாகும்போது தூங்குவது தேசத்துரோகம்.
ச்சும்மா. சொன்னேன் முல்லை. பப்புவுக்கு சமத்துக்கு அன்பும் வணக்கமும்.

என் அன்புத்தம்பி ப்ரியாகார்த்தி தூக்கத்தை நல்ல சிந்தனை நேரம் என்சொல்லுவான்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ம்மா, ஆப்பிச்ல நீ ஊங்குவியா ன்னு
இதே கேள்வியை என்னை அமித்துவும் கேட்டாள் முல்லை

:(((

கல்யாணி :)))) சூப்பர்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அமுதா said...
/*ஆச்சி, நீ ஆஃபீஸ்லே தூங்குவியா*/
:-) குழந்தைகள் எப்பவும் உண்மை பேசுவார்கள் . எப்படி அவளுக்கு தெரிஞ்சது?

அப்போ இந்த கேள்விய நீங்க நெறைய தடவ எதிர்கொண்டிருப்பீங்களே அமுதா ;)

ஹுஸைனம்மா said...

நல்ல கேள்வி!!

என் சின்னவனும் கேள்விகளால் துளைத்துக் கொண்டு இருக்கிறான். செகண்ட் இன்னிங்க்ஸ் நடக்கிறது வீட்டில்!!

☀நான் ஆதவன்☀ said...

//“ஆச்சி, நீ ஆஃபீஸ்லே தூங்குவியா?” //

:)))))))))) பாஸ் ஒரு வித்துவானைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வியா இது?

☀நான் ஆதவன்☀ said...

எப்படியெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சுருச்சுங்க குழந்தைகளெல்லாம்.. :)

க.பாலாசி said...

//“ஆச்சி, நீ ஆஃபீஸ்லே தூங்குவியா?”//

உண்மையை பதிலாய் கேட்கும்போது எதை சொல்வது.... :)))

Deepa (#07420021555503028936) said...

//(கல்யாணம் இன் பப்புஸ் வெர்ஷன்) நான் வரமாட்டேன், அங்கே ரொம்ப நாய்ஸ்(Noice) இருக்கு'!! //

:-))))

last line: bulb #10040????

SanjaiGandhi™ said...

//-)
உங்கள் திருமண நிழற்படங்களை அந்த சுட்டி பெண் பார்க்கவில்லையா என்ன ???//

ஆல்பம் பார்த்த பிறகு...

பப்பு: ஊர்ல நடக்கிற கல்யாணிக்கெல்லாம் கூட்டிட்டுப் போற. ஏன் உன் கல்யாணிக்குக் கூட்டிட்டுப் போகலை?

ஆயில்யன் said...

//எது அவளை அப்படி கேட்க வைத்தது என்று தெரியவில்லை!

“ஆச்சி, நீ ஆஃபீஸ்லே தூங்குவியா?”//

:(((

ஆச்சி still you have to do more hard work அப்பத்தான் பப்புவுக்கு உலகம்ன்னா என்னான்னு புரியும்! பாவம் எம்புட்டு ஏமாளியா இருந்தா இப்படி ஒரு கொஸ்டீனு க்கேக்கும் பப்பு!

ஆயில்யன் said...

எந்திரி ஆச்சி எந்திரி

எந்திரி ஆச்சி எந்திரி கமெண்ட் ரீலிசு செய்யுதுட்டு வீட்டுக்கு கிளம்புற வேலையை பாருங்க :))))))

☼ வெயிலான் said...

பப்பு ஆபீஸ்க்கு வந்தன்னைக்காவது முழிச்சிட்டிருக்கலாம்ல ;)

பா.ராஜாராம் said...

//சனிக்கிழமை ஒரு திருமண வரவேற்புக்கு சென்றிருந்தோம். 'இனிமே கல்யாணிக்கெல்லாம்(கல்யாணம் இன் பப்புஸ் வெர்ஷன்) நான் வரமாட்டேன், அங்கே ரொம்ப நாய்ஸ்(Noice) இருக்கு'!! ஆர்கெஸ்ட்ராவுக்கு அருகில் நின்றுக்கொண்டிருந்தோம்! வரும்வழியில், ஏன் ரெண்டு பேருக்கும் கல்யாணி் நடக்குது, ஏன் எனக்கு நடக்கலை என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள். நல்லா படிச்சு,வளர்ந்து, காலேஜ்-ல்லாம் போய் அப்புறம் ஆஃபீஸ் போனாத்தான் கல்யாணம் நடக்கும் என்று சொல்லிவைத்தேன். நீ தான் வளர்ந்து ஆஃபீஸ் போறியே, ஒனக்கு ஏன் கல்யாணம் நடக்கலை? என்று கேட்டாள்.//

'வாழ்க்கையிலே டிராஜிடி வரலாம், ஆனா டிராஜிடியே வாழ்க்கையா இருந்தா' என்றெல்லாம் தத்துபித்துவங்கள் தோன்றினாலும் சொல்லாமல்//

ஹா..ஹா............

//ஆச்சி, நீ ஆஃபீஸ்லே தூங்குவியா?//

"ஐயோ,சனி ஞாயிறா போச்சே..பப்பு ஆச்சி,அமித்தம்மாவிடமிருந்து பின்னூட்டம் வராதே"என்று நானும் யோசிக்கிறது உண்டு.

பப்பு ரேஞ்சுக்கு பப்பு.நம்ம ரேஞ்சுக்கு நாம. :-))

நிஜமா நல்லவன் said...

:)

அன்புடன் அருணா said...

பப்பு முன்னாடியே நீங்க ஆஃபீஸ்லெ தூங்கிருக்கீங்க முல்லை!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வர வர முல்லை, நீங்க பப்பு கேட்ட கேள்வியை மட்டும் போட்டுட்டு எஸ்கேப் ஆகறீங்க.. வேர் இஸ் த ஆன்ஸ்வர்..?
:)))

rapp said...

நைசா அடுத்த பதிவில் போய் ரெண்டு வார்த்தையையும் இப்போதான் சேத்திருக்கீங்களா? அவ்ளோ என்ன மறதி:):):) அதான் பப்பு

//“ஆச்சி, நீ ஆஃபீஸ்லே தூங்குவியா?
”//

இப்டி நியாயமானக் கேள்விகளக் கேக்குறாங்க.

rapp said...

இந்தக் கல்யாணிக் கேள்விய விட குபீர் கபீர் கேள்விகள் லைன் கட்டி வரும் பாருங்க. நான் கேட்ட கேள்விய நெனச்சா சமயத்துல என் கவுஜய நானே திரும்பப் படிச்சிட்டாப்டி கலவரமா இருக்கும். (ஆனாலும் இந்தக் கல்யாணி ரொம்ப ரொம்ப சூப்பர்:):):))

Divyapriya said...

haa haa :D

rapp said...

//அங்கே ரொம்ப நாய்ஸ்(Noice) இருக்கு'//

தோடா, இங்கப் பாருங்க மக்களே, இவங்க மட்டும் இப்டி ஒரு ஸ்பெல்லிங்கெல்லாம் போடலாமாம், ஆனா, பப்பு பேசுறத மட்டும் நைசா காமிராவ 'ஒளைச்சு' வெச்செல்லாம் படம் புடிச்சு நக்கலடிப்பாங்க. இது நியாயமா? தர்மமா? இதுக்கு நாம 'அமதியா' இருக்கறதா? நாளைக்குக் காலையில 'அம்போது' மணிக்குள்ள விடை கெடைக்கணும்:):):)

நசரேயன் said...

//“ஆச்சி, நீ ஆஃபீஸ்லே தூங்குவியா?”//

மெய்யாலுமா ?

தீஷு said...

//“ஆச்சி, நீ ஆஃபீஸ்லே தூங்குவியா?”
//

முதல் நாள் யூஸ் பண்ணின பாயை எடுத்து வைக்கலையா முல்லை?