Thursday, November 19, 2009

பப்பு டைம்ஸ்

”நீராரும் கடலுடுத்த” பாடிக்கொண்டிருந்தாள். தக்கசிறு -க்கு பின்னர் என்னவெல்லாமோ பாடிக்கொண்டிருந்தாள். நானும் கூட பாட(?) ஆரம்பித்தேன். ஆச்சர்யம் தாங்கமால்,

“ஹேய், நாங்க பாடினது உங்க ஆபிஸுக்கு கேட்டுச்சா?” என்று இரண்டு மூன்று தடவை கேட்டுக்கொண்டாள்! நானும் ஆமென்று தலையாட்டினேன்! :-))

ஆச்சி, நான் வயித்துக்குள்ளே என்னெல்லாம் பண்ணேன்?

இது ஒரு அட்வென்ச்சர் ஸ்டோரி போல..பத்து நிமிடத்திற்கு ஓடும்! அதே போல, நான் பேபியா இருக்கும்போது என்னெல்லாம் பண்ணேன்(?) என்றும்!

மேலும், அவள் குட்டிக்குழந்தையாக இருந்து ஃப்ர்ஸ்ட் பர்த்டே, செகண்ட் பர்த்டேவெல்லாம் கொண்டாடியதை கேட்டுக்கொள்வாள்.

இதெல்லாம் தினமும் நடக்கும் கதைதான் இப்போதெல்லாம் என்றாலும் இரண்டு நாட்கள் முன்பு கேட்டாள்.

“நான் ஃப்ர்ஸ்ட் உன் வயித்துக்குள்ளே எப்படி வந்தேன், குட்டியா?”

காலையில் குளிக்கும்போது முகத்தில் சோப்பு போடுவதுதான் போராட்டமாக இருக்கிறது. சோப்பை அவளது கையில் குழைத்து போட வைப்பேன். முதலிரண்டு நாட்கள் வரை நன்றாக போய் கொண்டிருந்தது! அதன்பிறகு சுணக்கம். இப்படி ஏற்படும் நேரங்களில், கண்ணை மூடிக்கொண்டு திறப்பதற்குள் செய்து முடிப்பது அல்லது ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணுவது என்ற வழிவகைகளை கடைப்பிடிப்போம்.

என் கண்களை மூடிக்கொள்ளவேண்டுமென்றும், திறப்பதற்குள் அவள் முகத்தில் போட்டு முடிக்கவேண்டுமென்றும் முடிவாயிற்று! நானும் கைகளால் முகத்தை மூடிக்கொண்டேன், கை துவாரங்களின் வழியே பார்த்தவாறு! போடுவது போல தெரியவில்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். பொறுத்து பொறுத்து பார்த்து, 'நீ போடவேயில்லை பப்பு, இப்ப நாந்தான் போடப்போறேன்' என்றேன். டக்கென்று வந்தது பதில்,

”நீ ஓட்டை வழியா பார்க்கிறே..நீ பார்க்கிறியான்னுதான் நான் பாத்துக்கிட்டிருந்தேன் ”

ஆமை குடும்பம் பிக்னிக் போன கதைதான் நினைவுக்கு வந்தது!!

37 comments:

Agila said...

:-)))
Had a good laugh!
..Ag

ஜெயந்தி said...

குழந்தைகள் கேள்விக்கு நம்மால் பதில் சொல்ல முடியாது. ஃப்ளாக் மாற்றம் நன்றாக இருக்கிறது.

ஆயில்யன் said...

:))))))))))))

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

nice post.
what is that story?
but don't cheat pappu, without closing ur eyes. next time you'll be fined.

by,
Pappu Fan Club,
Fahaheel,
Kuwait.
(Opening shortly in UAE)

rapp said...

ஹா ஹா ஹா கலக்கல்:):):) பேசாம முல்லையின் பவ்வ்வ்வவ்வ்வ்வ்............. டைம்ஸ் அப்டின்னு பேர் மாத்திடலாம்:):):)

rapp said...

//”நீராரும் கடலுடுத்த” பாடிக்கொண்டிருந்தாள். தக்கசிறு -க்கு பின்னர் என்னவெல்லாமோ பாடிக்கொண்டிருந்தாள்.//

ஹி ஹி ஹி, நான்கூட அஞ்சாங்கிளாசு வரை இதையும் ஜன கண ரெண்டையும் கன்னாபின்னான்னு பாடுவேன்:):):) என்னைய மாதிரி தெய்வப்புலவரா வரக்கூடிய அருள் பப்புக்கு கெடச்சிருக்கோ:):):)

//மேலும், அவள் குட்டிக்குழந்தையாக இருந்து ஃப்ர்ஸ்ட் பர்த்டே, செகண்ட் பர்த்டேவெல்லாம் கொண்டாடியதை கேட்டுக்கொள்வாள். //

யப்பா, எவ்ளோ வருஷங்களுக்கு முன்ன நடந்த, கொண்டாடுன விஷயத்த எல்லாம் பப்பு கேட்டிருக்காங்க:):):) எல்லாத்தையும் ஞாபகம் வெச்சு சொல்றது சிரமமா இருந்துதா உங்களுக்கு?:):):)

//
”நீ ஓட்டை வழியா பார்க்கிறே..நீ பார்க்கிறியான்னுதான் நான் பாத்துக்கிட்டிருந்தேன் ”//

ஹேய் அது!!!!!!
ஜூனியர் ரிவால்வர் ரீட்டா பப்புவ என்னான்னு நெனச்சீங்க?:):):)

மணிநரேன் said...

:))

சின்ன அம்மிணி said...

ஆஹா, பப்பு உங்ககிட்ட கேள்விக்கெல்லாம் நீங்க எப்புடி முழிப்பீங்கன்னு கற்பனை பண்ணிக்கிட்டு இருக்கேன்.

நசரேயன் said...

//நானும் கூட பாட(?) ஆரம்பித்தேன். ஆச்சர்யம் தாங்கமால்//

ஒ.. இப்படியெல்லாம் பயமுறுத்தலாமா?

பித்தனின் வாக்கு said...

ஆகா உங்களுக்கு பப்புவுடன் நல்ல சமயம் போகின்றது. நல்ல பகிர்வு. நன்றி.

செல்வநாயகி said...

///”நீ ஓட்டை வழியா பார்க்கிறே..நீ பார்க்கிறியான்னுதான் நான் பாத்துக்கிட்டிருந்தேன் ”/////


:)) good job pappu.

தியாவின் பேனா said...

கலக்கல்

ராமலக்ஷ்மி said...

//“ஹேய், நாங்க பாடினது உங்க ஆபிஸுக்கு கேட்டுச்சா?”//

:)))!

பைத்தியக்காரன் said...

ஆச்சிமா...

பப்பு வளர ஆரம்பித்துவிட்டார் என்பது அவர் கேட்கும் கேள்விகளில் இருந்தே தெரிகிறது... சந்தோஷமாகவும் இருக்கிறது. உங்கள் இடுகையின் வழியே, 'நான் வளர்கிறேனே...' என்று எங்களுக்கு தெரியப்படுத்துகிறார் :)

கடைசி வரி ஆச்சி டச்.

புது டெம்ப்ளேட் அழகா இருக்கு. பட், கொஞ்சம் நீளமான இடுகை எழுதினா, வெளிய போகும் போல தெரியுது. முடிஞ்சா அதை சரி பண்ணிடுங்க...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)))

Raj said...

//என் கண்களை மூடிக்கொள்ளவேண்டுமென்றும், திறப்பதற்குள் அவள் முகத்தில் போட்டு முடிக்கவேண்டுமென்றும் முடிவாயிற்று! நானும் கைகளால் முகத்தை மூடிக்கொண்டேன், கை துவாரங்களின் வழியே பார்த்தவாறு! போடுவது போல தெரியவில்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். பொறுத்து பொறுத்து பார்த்து, 'நீ போடவேயில்லை பப்பு, இப்ப நாந்தான் போடப்போறேன்' என்றேன். டக்கென்று வந்தது பதில்,

”நீ ஓட்டை வழியா பார்க்கிறே..நீ பார்க்கிறியான்னுதான் நான் பாத்துக்கிட்டிருந்தேன் ”

ஆமை குடும்பம் பிக்னிக் போன கதைதான் நினைவுக்கு வந்தது!! //

நல்ல பொண்ணு...நல்ல அம்மா!

பிரியமுடன்...வசந்த் said...

//”நீ ஓட்டை வழியா பார்க்கிறே..நீ பார்க்கிறியான்னுதான் நான் பாத்துக்கிட்டிருந்தேன் ”//

அது பப்பு...

நீங்க எப்டி பப்புவ ஏமாத்தப்போச்சு...

:)))

குடுகுடுப்பை said...

அம்மா வயித்துக்குள்ள நான் வந்துட்டேன், நானும் அம்மாவும் ஒரு பேமிலி, ஆனா நீங்க எனக்கு நிறைய உதவி பண்றீங்கப்பா? அதுனாலதான் எனக்கு உங்களை ரொம்பப்பிடிக்கும்.

இந்தப்புரிதலுக்கு இங்கே அதிகமாக உள்ள முதல் அப்பா , இரண்டாவது அப்பாவும் காரணமாக இருக்கலாம்.

ஆனாலும் எல்லாரும் ஒரே மாதிரி கேள்வி கேக்கிறாங்க, பதில்கள் அவர்களே தெரிந்துகொள்கிறார்கள்.

தாரணி பிரியா said...

புது டெம்ப்ளேட் சூப்பர் முல்லை
பப்புவை ஏமாத்த பார்த்தா முடியுமா

வல்லிசிம்ஹன் said...

அடடா பப்பு வளந்துடுச்சுப்பா.
என்ன கில்லாடியாக் கேள்வி கேட்கிறா
சிரிச்சு சிரிச்சுப் படித்தேன்.
குட் கோயிங் பப்புமா. :)))

டம்பி மேவீ said...

சூப்பர் ......

எங்க வீட்டில் ரிதிகுட்டி தான் ஆட்சி செய்றாங்க ...... அண்ணா,அண்ணி இரண்டு பெரும் அவங்க கைக்குள்ளே

என்ன ஒன்னு என்னையை தான் ரொம்ப திட்டுகிறாள்....(என்ன ஒரு வசதின்ன அவ பேசுறது ஒன்னும் எனக்கு புரிவதில்லை.....)
ஒரு வயசு தான் ஆகுது மேடம்க்கு .....

அவங்களும் வளர்ந்தால் இப்படி தான் லூட்டி அடிப்பாங்க போல் இருக்கு

அமுதா said...

:-))

லெமூரியன்... said...

\\”நீ ஓட்டை வழியா பார்க்கிறே..நீ பார்க்கிறியான்னுதான் நான் பாத்துக்கிட்டிருந்தேன் ”//

ஹா ஹா ஹா.....குழந்தைகள் உலகத்துக்குள்ள போய்ட்டா நாமளும் குழந்தையாகிற வேண்டியதுதான்

அமிர்தவர்ஷினி அம்மா said...

நீங்க ஏன் ஓட்டை வழியா பாக்கறீங்க ஆச்சி

:)))))
சிரிப்பை அடக்கமுடியலை

விக்னேஷ்வரி said...

“ஹேய், நாங்க பாடினது உங்க ஆபிஸுக்கு கேட்டுச்சா?” //
So sweet. :)

“நான் ஃப்ர்ஸ்ட் உன் வயித்துக்குள்ளே எப்படி வந்தேன், குட்டியா?” //
ஹாஹாஹா.... பப்பு வளர்றா.

”நீ ஓட்டை வழியா பார்க்கிறே..நீ பார்க்கிறியான்னுதான் நான் பாத்துக்கிட்டிருந்தேன் ” //
Hilarious...

நட்புடன் ஜமால் said...

அப்படியெல்லாம் பார்க்கப்படாது

பப்பு பேரவை
சிங்கை.

கானா பிரபா said...

“ஹேய், நாங்க பாடினது உங்க ஆபிஸுக்கு கேட்டுச்சா?” என்று இரண்டு மூன்று தடவை கேட்டுக்கொண்டாள்! நானும் ஆமென்று தலையாட்டினேன்! :-))//

பப்புவா கொக்காலே

பாட்டி பேரவை
சிட்னி

☼ வெயிலான் said...

பப்புவுக்கு இவ்வளவு ரசிகர்களா?

சித்திரக்கூடத்தை பப்புவுக்கு விட்டுவிட்டு, சீக்கிரம் நீங்கள் தனிவலைத் தளம் அமைத்துக் கொள்ளுங்கள் :)

பைத்தியக்காரன் said...

//சித்திரக்கூடத்தை பப்புவுக்கு விட்டுவிட்டு, சீக்கிரம் நீங்கள் தனிவலைத் தளம் அமைத்துக் கொள்ளுங்கள் :)//

நண்பர் வெயிலானை ஆமோதிக்கிறேன் :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

அன்புடன் அருணா said...

The moral of the story is "Do not try to cheat kids!....pappu!

மங்களூர் சிவா said...

//
ஹேய், நாங்க பாடினது உங்க ஆபிஸுக்கு கேட்டுச்சா?
//


//
நான் ஃப்ர்ஸ்ட் உன் வயித்துக்குள்ளே எப்படி வந்தேன், குட்டியா?
//


//
நீ ஓட்டை வழியா பார்க்கிறே..நீ பார்க்கிறியான்னுதான் நான் பாத்துக்கிட்டிருந்தேன்
//

ஒரு கேள்விக்காவது வடை ச்ச விடை சொன்னீங்களா??
:))

சிங்கக்குட்டி said...

ஹா ஹா ஹா...

ரொம்ப நல்லா இருக்கு உங்கள் பதிவு :-)

☀நான் ஆதவன்☀ said...

//”நீ ஓட்டை வழியா பார்க்கிறே..நீ பார்க்கிறியான்னுதான் நான் பாத்துக்கிட்டிருந்தேன் ”//

ஹா ஹா ஹா :))))) எப்படியெல்லாம் கோல் வாங்குறீங்க பாஸ் நீங்க :)

Deepa (#07420021555503028936) said...

//நீராரும் கடலுடுத்த” பாடிக்கொண்டிருந்தாள். தக்கசிறு -க்கு பின்னர் என்னவெல்லாமோ பாடிக்கொண்டிருந்தாள். நானும் கூட பாட(?) ஆரம்பித்தேன். ஆச்சர்யம் தாங்கமால்,

“ஹேய், நாங்க பாடினது உங்க ஆபிஸுக்கு கேட்டுச்சா?” என்று இரண்டு மூன்று தடவை கேட்டுக்கொண்டாள்! நானும் ஆமென்று தலையாட்டினேன்! //

கவிதையே தான்! :)

//”நீ ஓட்டை வழியா பார்க்கிறே..நீ பார்க்கிறியான்னுதான் நான் பாத்துக்கிட்டிருந்தேன் ”//

:-))) கேட்ட மாத்திரத்தில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆச்சரியம், சந்தோஷம், பரவசம் அனைத்தையும் உணர முடிகிறது!

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

:O) விவரமாத்தான் இருக்காங்க.

சின்ன வயசிலே என்ன குறும்பு பண்ணினேன் என்று பபு வளர்ந்த பின் கேட்டால் உங்க பதிவைக் காட்டிவிடலாம்.

தீஷு said...

//”நீ ஓட்டை வழியா பார்க்கிறே..நீ பார்க்கிறியான்னுதான் நான் பாத்துக்கிட்டிருந்தேன் ”

ஆமை குடும்பம் பிக்னிக் போன கதைதான் நினைவுக்கு வந்தது!! //

மிகவும் ரசித்தேன் முல்லை. இந்த பசங்கள ஏமாத்தவே முடியாது..

இரசிகை said...

:))