Tuesday, November 17, 2009

பப்பு மணி மாலை...
தெர்மோகோல் மணிமாலை. மாலை மாதிரி வரைந்து தந்ததும் கோந்தை தடவி பப்பு ஒட்டினாள்.


பழக்கூடை - வரைந்து_வண்ணமடித்து_வெட்டி_ஒட்டியது! அதிலிருப்பது, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் மற்றும் பச்சை ஆப்பிள். ( யாருப்பா அது, வாழை ஏன் சிவப்பா இருக்குன்னு கேக்கறது...!!!) சிலசமயங்களில் படங்களுக்கு விதவித வண்ணம் தீட்டுவாள். சிலசமயங்களில் எல்லாம் ஒரே வண்ணமாக இருக்கும்..முழு படத்திற்கும் பிரவுன், சிவப்பு, மஞ்சள் என்று - சிலசமயங்களில் எ.கா.படத்திலிருப்பது போலவே தீட்டப்பட்டிருக்கும்! என்ன இருக்குமோ...அவள் மனதில்! கூடை என் கை வண்ணம்..ஹிஹி!
கண்டுபிடிக்க முடிகிறதா இது என்னவென்று?!! :-)

32 comments:

Deepa (#07420021555503028936) said...

fruit basket ரொம்ப அழகாக வரைந்திருக்கிறாள். வண்ணங்கள் எல்லாம் outline ஐ விட்டு வெளியே போகாமல் சீராக இருக்கிறது.

ஹேய்! டெம்ப்ளேட் மாத்தியாச்சா... நல்லா இருக்கு! ஆனா பழகின இடத்தை விட்டு ஒரு புது இடத்துக்கு வந்த மாதிரி ஒரு ஃபீலிங்! ;-)

மூன்றாவது படம் என்ன மீனா?

பிரசன்ன குமார் said...

//கண்டுபிடிக்க முடிகிறதா இது என்னவென்று//

ஏழு கடல் ஏழு மலை தாண்டி போனா கடலுக்கடியில் ஒரு கோட்டை வரும். அதில் இருக்கும் அரச மீன் தானே இது ?
(பப்பு பார்வையில் அது என்னனு தானே சொல்லணும்).. :))

பிரியமுடன்...வசந்த் said...

டெம்ப்லேட் அழகா இருக்கு

பப்புவின் கைவண்ணம் நல்லாயிருக்கே...

கடைசியில மீனா?

rapp said...

நெத்திசுட்டியா?

மாலைக்கு நீங்கதான் வரைஞ்சு கொடுத்தீங்களா? அவ்வ்வ்வவ்வ்வ்வ்............ வரையறதுல, எனக்கு போட்டியா நீங்க?

//வாழை ஏன் சிவப்பா இருக்குன்னு //

கிர்ர்ரர்ர்ர்ர்...........செவ்வாழை கொஞ்சம் டார்க்கா வந்திடுச்சி. அதுக்கு நக்கலா?

சின்ன அம்மிணி said...

மீன் தானே, கரெக்டா கண்டுபிடிச்சா என்ன தருவீங்க

சின்ன அம்மிணி said...

புது டெம்ப்ளேட் நல்லா இருக்கு.

நசரேயன் said...

//கண்டுபிடிக்க முடிகிறதா இது என்னவென்று?!! //

மீன் மாதிரி இருக்கு

நிஜமா நல்லவன் said...

டெம்ப்ளேட் நல்லா இருக்கு!

நிஜமா நல்லவன் said...

கடைசி படம் மீன்:)

ராமலக்ஷ்மி said...

தலைப்பு ரொம்ப அழகு:)! டெம்ப்ளேட்டும்.

கடைசிப் படம்: மீனே மீனே மீனம்மா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\மூன்றாவது படம் என்ன மீனா?/ முல்லை டெம்ப்ளேட் மாத்தினமாதிரி பேரை மாத்திட்டீங்களா? ;)

இதுக்கு ஏன் டெம்ப்ளேட் மாத்தினீங்க உங்களைப்போலவே ஒரு யங் கேர்ள் இருந்தாளே முகப்பில்? :)

க.பாலாசி said...

நைஸ் மாலை.....கடைசியா உள்ள மீனும் நல்லாருக்கு...

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஹேய்! டெம்ப்ளேட் மாத்தியாச்சா... நல்லா இருக்கு! ஆனா பழகின இடத்தை விட்டு ஒரு புது இடத்துக்கு வந்த மாதிரி ஒரு ஃபீலிங்! ;-)

அஃதே அஃதே

எனக்கு மணிமாலை ரொம்ப பிடிச்சிருக்கு,

பித்தனின் வாக்கு said...

நல்ல கைவேலை, இதிலிருந்து குழந்தைகளின் கிரியேட்டிவிட்டியை உருவாக்கலாம்.
கடைசி கரப்பான் பூச்சி அழகு. நன்றி.

ஆயில்யன் said...

மீனு ,கரெக்டா கண்டுபிடிச்சுட்டேன் என்னா தருவீங்க? -
சோறு போடுவீங்களா?

ஆயில்யன் said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\மூன்றாவது படம் என்ன மீனா?/ முல்லை டெம்ப்ளேட் மாத்தினமாதிரி பேரை மாத்திட்டீங்களா? ;)

இதுக்கு ஏன் டெம்ப்ளேட் மாத்தினீங்க உங்களைப்போலவே ஒரு யங் கேர்ள் இருந்தாளே முகப்பில்? :)//


அவுங்க கிழிஞ்ச டிரெஸ் போட்டுக்கிட்டு நின்னாங்களா அதான் மாத்தியாச்சு! - ஆமாம் அது இருக்கட்டும் [யங்] டைப்பிங்க் மிஸ்டேக் ரொம்ப்ப இருக்கு சரி பாருங்க அக்கா!

ஆயில்யன் said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

ஹேய்! டெம்ப்ளேட் மாத்தியாச்சா... நல்லா இருக்கு! ஆனா பழகின இடத்தை விட்டு ஒரு புது இடத்துக்கு வந்த மாதிரி ஒரு ஃபீலிங்! ;-)///


இருந்துட்டு போவட்டும் வேணும்னா அந்த பேக் அப் ஃபைல அமித்து அம்மாகிட்ட கொடுக்க சொல்லி பாஸுக்கு நான் ரெக்கமண்ட் செய்யுறேன்!

☀நான் ஆதவன்☀ said...

பாஸ் அது மீன் தானே?

☀நான் ஆதவன்☀ said...

பாஸ் டெம்ப்ளேட் நல்லாயிருக்கு. ஆனா சைடுல இருக்குற செங்கலுக்கு வர்ர பொங்கலுக்குள்ள வெள்ளையடிங்க பாஸ்

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

//யாருப்பா அது, வாழை ஏன் சிவப்பா இருக்குன்னு கேக்கறது...!!!//
பப்புக்கு அது செவ்வாழைன்னு தெரியும்.

கடைசில இருக்கிறது மீன் இல்ல. அன்னாசிபழம்.

குசும்பன் said...

//கூடை என் கை வண்ணம்..ஹிஹி!
//
பழங்கள் எல்லாம் சரியாக அடையாளம் கண்டுப்பிடிச்சாச்சு, என்னடா இது எல்லா பழத்தையும் சல்லடை கரண்டியில் வெச்சு பொறிச்சு எடுக்க போவது போல் இருக்கேன்னு நினைச்சேன், அப்புறம் தான் புரியுது, அது கூடை என்று:)

ஸ்ரீமதி said...

மீன் தானே அது? :)))

தளம் ரொம்ப அழகு.. :))))

கானா பிரபா said...

பாஸ்

டெம்ப்ளேட் சூப்பர், ஆனா பாருங்க பப்பு மாதிரியே டெம்ப்ளேட் வயசை குறைச்சிட்டீங்க

எலே சின்னப்பாண்டி

எங்கேய்யா இருக்கே

அமுதா said...

டெம்ப்ளேட் நல்லா இருக்கு

மீன் தானே?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\அவுங்க கிழிஞ்ச டிரெஸ் போட்டுக்கிட்டு நின்னாங்களா அதான் மாத்தியாச்சு! - ஆமாம் அது இருக்கட்டும் [யங்] டைப்பிங்க் மிஸ்டேக் ரொம்ப்ப இருக்கு சரி பாருங்க அக்கா!//

கிழிஞ்ச ட்ரஸா அது அய்யோ ஹயோ
அது ஃபேஷன் ஓல்ட் மேன்( ஆயில்யன்)
ஃபேஷன் .. :)

தீஷு said...

டெம்ப்ளேட் நல்லாயிருக்கு முல்லை..

மாலையும் நல்லாயிருக்கு.. இதே மாதிரி caterpillar கூட பண்ணலாம்.

அன்புடன் அருணா said...

சூப்பர்டா பப்பு!பூங்கொத்து பப்புவுக்கு!

காமராஜ் said...

அது மீன் தானே ? சந்தன முல்லை.
பப்புவுக்கு அன்பு.

சந்தனமுல்லை said...

பதிலளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி!!

அது சோளமாக நினைத்துக்கொண்டுதான் செய்ய ஆரம்பித்தோம்..இப்படி முடிந்துவிட்டது! :-))


தங்கள் அனைவரின் பதிலளிக்கும் ஆர்வம் எங்களை உற்சாகப்படுத்துகிறது!! :-)

ஆயில்யன் said...

//பாஸ்

டெம்ப்ளேட் சூப்பர், ஆனா பாருங்க பப்பு மாதிரியே டெம்ப்ளேட் வயசை குறைச்சிட்டீங்க

எலே சின்னப்பாண்டி

எங்கேய்யா இருக்கே//

எஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கம் இன் :)

ஆயில்யன் said...

//தங்கள் அனைவரின் பதிலளிக்கும் ஆர்வம் எங்களை உற்சாகப்படுத்துகிறது!! :-)///


ஒ அப்ப இன்னும் நிறைய கேள்வி கேட்க ப்ளான் பண்ணியிருக்கீங்களா?

நட்புடன் ஜமால் said...

டெம்ப்ளேட் சூப்பர் ...

--------------

கடைசில உள்ளது மீன் போல தெரியுது ...