Friday, November 13, 2009

அதோ பாரு காரு...

”என்ன சார் இருக்கு? ”

”தோசை, சப்பாத்தி, பூரி, ப்ரெட் - உங்களுக்கு என்ன வேணும்?”

”எனக்கு ஐஸ்க்ரீம் வேணும். குட்டி, நீங்க என்ன சாப்பிடறீங்க?”

”நான் நூடுல்ஸ் சாப்பிடறேங்க. ”

இரு தட்டுகளில் முக்கோண வடிவ சப்பாத்தியின் உள்ளே முட்டை பொரியல் அடைக்கப்பட்டு ”சமோசா” என்ற பெயரில் வருகிறது. சாப்பிட்டுக்கொண்டே,

”ஐஸ்கிரீம் சூப்பரா இருக்கு”

”நூடுல்ஸ் செம டேஸ்டா இருக்கு”

”காட்டு, பாக்கிறேன், ஆமா.ஜாலி..”

”ஐஸ்க்ரீம் கூட சூப்பரா இருக்கு, பாரு”

”ஹே ஆமா”

- புரிந்திருக்குமே...இது ஹோட்டல் விளையாட்டு!

பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் என் தம்பியும் நானும் ஆயாவுடன் விளையாடும் விளையாட்டு இது. ஆயா ஹோட்டல்காரர்/சர்வர். சொல்லப்படும் மெனு எப்போதும் மாறாது. கேட்கும் ஐட்டங்களும்தான். என்ன இருக்கிறதோ அதை ஐஸ்க்ரீமாக, நூடுல்ஸாக கற்பனை செய்துக்கொண்டு சாப்பிட வேண்டியதுதான்.

குழந்தைகளாக இருப்பதில்தான் எவ்வளவு வசதி - என்ன மாதிரியான இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்ற குழப்பமில்லை - ஐம்பது வயதுக்குப் பின் என்ன செய்ய போகிறோம் என்ற பயமில்லை - செலுத்த வேண்டிய இஎம்ஐ பற்றிய கவலையில்லை - எப்போது நாம் பெரியவர்களாவோமென்ற ஒரே கனவோடு - உலகில் காணும் எல்லாவற்றிலும் ஆச்சர்யங்கள் தொக்கி நிற்க - குழந்தைகளாக இருப்பதில்தான் எவ்வளவு சந்தோஷம்!!
குழந்தைகளுக்கும், குழந்தைகளாக இருந்தவர்களுக்கும், மனதளவில் இப்போதும் குழந்தைகளாக இருப்பவர்கள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்!! :-))

தலைப்பு *

அதோ பாரு காரு
காருக்குள்ள யாரு
நம்ப மாமா நேரு
நேரு என்னா சொன்னாரு
நல்லா படிக்க சொன்னாரு

தீபா,முத்து,ஆயில்ஸ்,கானாஸ், நான் ஆதவன் மற்றும் ராப்..ஸ்டார்ட் மீசிக்..இது போன்ற, தங்களுக்கு தெரிந்த அனைத்து கருத்தாழ மிக்க பாடல்களை எடுத்து விடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்! :-)))

குறிப்பு : பப்பு பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் தின விழா முடிந்து வந்தேன்...அந்த எஃபெக்ட்!!

53 comments:

ஆயில்யன் said...

ஹைய்ய்ய் மீ த பர்ஸ்ட்டேய்ய்ய் :))

ஆயில்யன் said...

//பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் என் தம்பியும் நானும் ஆயாவுடன் விளையாடும் விளையாட்டு இது. ஆயா ஹோட்டல்காரர்/சர்வர். சொல்லப்படும் மெனு எப்போதும் மாறாது///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆயில்யன் said...

/குழந்தைகளாக இருப்பதில்தான் எவ்வளவு வசதி - என்ன மாதிரியான இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்ற குழப்பமில்லை - ஐம்பது வயதுக்குப் பின் என்ன செய்ய போகிறோம் என்ற பயமில்லை - செலுத்த வேண்டிய இஎம்ஐ பற்றிய கவலையில்லை - எப்போது நாம் பெரியவர்களாவோமென்ற ஒரே கனவோடு - உலகில் காணும் எல்லாவற்றிலும் ஆச்சர்யங்கள் தொக்கி நிற்க - குழந்தைகளாக இருப்பதில்தான் எவ்வளவு சந்தோஷம்!!//

ப்ரைடேஃபீலிங்கா :(

ஆயில்யன் said...

அதோ பாரு காக்கா

கடையில விக்கிது சீயக்காய்

பொண்ணு வருது ஷோக்கா

புரிஞ்சுக்கோடா பேக்கா :))))))

[யாம் அறிந்தது இவ்வரிகள் மட்டுமே]

ஆயில்யன் said...

ஜின்ஜின் னாக்கடி ஜின்ஜின் நாக்கடி
ஜின்ஜின் னாக்கடி ஜின்ஜின் நாக்கடி
ஜின்ஜின் னாக்கடி ஜின்ஜின்னா..


இது போன்ற வரிகளும்ம் ஆட்டத்துக்கு உண்டா??? :))))

க.பாலாசி said...

//எப்போது நாம் பெரியவர்களாவோமென்ற ஒரே கனவோடு - உலகில் காணும் எல்லாவற்றிலும் ஆச்சர்யங்கள் தொக்கி நிற்க - குழந்தைகளாக இருப்பதில்தான் எவ்வளவு சந்தோஷம்!!//

சரிதான்....:))

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

///என்ன சார் இருக்கு? ”
”தோசை, சப்பாத்தி, பூரி, ப்ரெட் - உங்களுக்கு என்ன வேணும்?”///
"எனக்கு எப்பூரி வேணும்" என்று கேட்க்கவில்லையா

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

இன்னக்கி ஆயில்ஸ் அண்ணே, இங்க கும்மியா...

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

அதோ பாரு ஆயா,
ஆயா கடையில பாயா,
பாயால இருப்பது காயா?
வாங்கி தின்னுட்டு போயா...
நாங்களும் எழுதுவோம்ல...

கதிர் - ஈரோடு said...

அந்த எஃபெக்ட்-ல போட்ட இடுகை மிக நன்றாக இருக்கிறது

லெமூரியன் said...

உடுமல பேட்ட....
ஊரைச் சுட்டிக் கோட்ட...
சந்தக் கட்ட.....
சாமித் தல மொட்ட...

சத்தியமா பள்ளிக் கூடத்ல கத்துகிட்ட பாட்டுதான்....! :-)

பித்தனின் வாக்கு said...

ஆகா அற்புதம்.
எனக்கும் ஏக்கம் குழந்தையாய் இருந்துவிட்டால் இல்லை ஒரு துக்கம். இப்போது ஏது தூக்கம்?
நல்லச் சொன்னீங்க எனக்கு எல்லாம் பாட்டி வடை சுட்ட கதைதான் தெரியும்.
நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

rapp said...

அடடே மீ தி லாஸ்டா:(:(:(

அப்போ கத்துக்கிட்டதுன்னா, ஈனா மீனா ஐக்கசா, குயின் இன் தி பாலஸ், இப்டித்தான் இப்போ ஞாபகம் இருக்கு.

அதுலயும் ரிங்கா ரிங்கா வெள்ளாடுறது ரொம்ப ஓல்ட் பேஷன்.

ஓ ஒண்ணர டுவர டக்கர
யரல கவல மஸ்கிடன், கள்ளன் குள்ளன் யவனவன்.(இது இன்னும் பெருசு, ஆனா ஞாபகமில்ல).
(அதுல குள்ளன் சேர்த்ததுக்கு நல்லா வாங்கி கட்டினோம், ஆனா அடிப்படை நியாயமான கேள்வி என்னன்னா, அதை இட்டுக்கட்டினது நாங்களா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....)

நான் ஒரு அடல்ட்ஸ் ஒன்லி ரைம்ஸ் வேற கத்துக்கிட்டு கத்தினேன். யாரு சொல்லிக்கொடுத்த புண்ணியாத்துமான்னு அப்பவே ஞாபகம் இல்ல. நல்லா மொத்து வாங்கினதுதான் நினைவிருக்கு:):):)

கைப்புள்ள said...

//அதோ பாரு காரு
காருக்குள்ள யாரு
நம்ப மாமா நேரு
நேரு என்னா சொன்னாரு
நல்லா படிக்க சொன்னாரு//

இதுக்கு ஒரு கண்டினியூவேஷன் கூட இருக்கு...கோக்குமாக்கான கண்டினியூவேஷன்...

"காந்தி என்னா சொன்னாரு
நல்லா பூந்தி தின்ன சொன்னாரு
பட்வாரி என்னா சொன்னாரு
நல்லா பட்பட்டுன்னு அடிக்க சொன்னாரு"

பட்வாரின்னு சொல்லும் போதே தள்ளி நின்னுக்கனும் இல்லன்னா பட்டுபட்டுன்னு ரெண்டு அடி வேடிக்கை பாக்கறவங்களுக்கும் விழும். இது நாள் வரைக்கும் பட்வாரி யாருன்னு தெரியாது :)

இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்.
:)

rapp said...

நீங்க இங்க வேற ஒரு அதிமுக்கியமானப் பணிக் கொடுத்திட்டீங்க. அதுல மறந்துட்டேன். இன்னைக்குப் பதிவு அருமை. நாங்களும் இதே மாதிரி விளையாடுவோம். இதுல வந்து நான்தான் இன்சார்ஜ், சாயந்திர நொறுக்குத்தீனி டிஸ்டிரிப்யூஷனுக்கு. அது என் இம்சைலருந்து தப்பிக்க எங்கக்காவேக் கொடுத்த ஐடியான்னு தெரியாம, எத்தன வருஷம் இந்த பிஞ்சு உள்ளம் பெருமப்பட்டுக்கிட்டுத் திரிஞ்சது தெரியுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........

Deepa (#07420021555503028936) said...

"ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்ததாம்
ரெண்டு குட‌ம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்ததாம்
மூணு குட‌ம் தண்ணி ஊத்தி மூணே பூ பூத்ததாம்...!"

"ஆக்கு பாக்கு வெத்த‌ல‌ பாக்கு
தாம் தூம் தையா
அஸ்கு ல‌க்க‌டி புஸ்கு ல‌க்க‌டி என் பேரு கொய்யா!" இவை இரண்டும் விளையாட்டுக்கள்.

மத்தபடி...

"ஸாரி பூரி குப்ப‌த்தொட்டி லாரி!""

"அச்ச‌ச்சோ அவ‌ர‌க்கா அடுப்பில‌ போட்ட‌ நெல்லிக்கா"

"யாரோ த‌ல‌ மேல‌ ஆட்டுக்குட்டி மேயுது" (த‌லை மேல் காகித்த‌தைக் கிழித்துப் போட்டு விட்டு)

யோசிச்சா இன்னும் நிறைய‌ நினைவுக்கு வ‌ர‌லாம்! (வீட்டில் கேட்டாலும்!) :-)

ராமலக்ஷ்மி said...

ராப், எங்களுக்கு நர்சரியில் சொல்லித் தந்த பாட்டுங்க! இப்பவரை வழக்கில இருக்கு.

rapp said...

இன்னும் ஏராளமானவைகள் இருந்தாலும், இப்பொழுது நினைவில் நிற்பவை மட்டும் இங்கன கொடுக்குறேன்.

ஈனா மீனா ஐக்கசா
டிப் டோ நக்கபா
நக்கபுக்க இக்கசே டிப் டோ அவுட்
ஸ்டேஷன் மாஸ்டர், ஸ்டேஷன் மாஸ்டர்
கித்னா பஜே
ஹாப் பாஸ் டிரெயின்
பாம்பே சக்கர டிரெயின்
அன் ஓல்ட் மேன் கேம்
அண்ட் ஆஸ்க்ட் மை நேம்
சிக்கா லிக்கா சிக்கா லிக்கா ஈஸ் மை நேம்.

rapp said...

queen in the palace
lost her ring
some say this and some say that
but i say,

sandanamullai madam

me madam

yes madam

no madam

then who madam

(contd)

கைப்புள்ள said...

ஒவ்வொருமுறையும் விமானம் வீட்டைத் தாண்டி பறந்துச் செல்லும் போதும் வெளியே ஓடி வந்து "ஏரோப்ளேன் டாட்டா" என்று கத்தியதும், ஹெலிகாப்டர் என்றால் அதில் உட்கார்ந்திருப்பவர்கள் நமக்கு பதிலுக்குக் கையசைத்து டாட்டா காண்பிக்கிறார்கள் என்ற பிரமை ஏற்பட்டதையும் இப்போது நினைத்து பார்க்கிறேன்.

Golden days :) :(

Deepa (#07420021555503028936) said...

மாங்கொரங்கே பூங்கொரங்கே மரத்த விட்டு எறங்கு!

நான் வாழப்பழம் வாங்கித் தரேன் தின்னுப்புட்டு ஒறங்கு!

மாங்குயிலே பாட்டை வைத்து எந்தக் குட்டிக் கொரங்கு இட்டுக்கட்டினதோ தெரியல.
:)

rapp said...

இன்னொன்னு இருக்கே, மறந்துட்டேன். ஆசை ஆசையாய் யாராச்சும் சாரி கேப்பாங்களான்னு காத்திட்டிருப்போம். கேட்டா ஒடனே,

I am not a Lorry, to carry your sorry

அப்டின்னு கத்திட்டு ஓடிடனும், ஏன்னா யாருக்கிட்ட சொல்லிருப்போம் மாட்றோம்னு தெரியாதுல்ல.

கைப்புள்ள said...

//இன்னொன்னு இருக்கே, மறந்துட்டேன். ஆசை ஆசையாய் யாராச்சும் சாரி கேப்பாங்களான்னு காத்திட்டிருப்போம். கேட்டா ஒடனே,

I am not a Lorry, to carry your sorry//

சாரி...பூரி...குப்பைத் தொட்டி லாரி ன்னு கூட ஒரு வெர்ஷன் இருக்கு.

I like this post a lot :)

rapp said...

இன்னொரு பாட்டு, ஆரம்பம் நியாபகமில்ல, நடுவுல இப்டி வரும்.

மத்தளம் மத்தளம் நாங்கதான்,
கிராமத்து மக்களும் நாங்கதான்
கோழி முட்டயக் குப்புறப் போட்டு
கூட்டிப் பாப்பதும் நாங்கதான்.

இன்னும் நெறைய வரும். பெரிய பாட்டு இப்போ நினைவுக்கு வர மாட்டேங்குது.

Anonymous said...

தாஹா: பட்வாரி தமிழக கவர்னராக இருந்தவர்.

தாரணி பிரியா said...

அவ்வ் பழச எல்லாம் ஞாபகபடுத்திட்டிங்களே முல்லை.

குத்த‌டி குத்த‌டி சைன‌க்கா
குனிஞ்சு குத்த‌டி சைன‌க்கா
ப‌ந்த‌லிலே பாவ‌க்கா
தொங்குத‌டி டோலாக்கு
அண்ண‌ன் வாராம் பாத்துக்கோ
ப‌ண‌ங்குடுப்பான் வாங்கிக்கோ
சில்ல‌றைய‌ மாத்திக்கோ
சுருக்குப் பையில‌ போட்டுக்கோ
சிலுக்கு சிலுக்குண்ணு ஆட்டிக்கோ

தாரணி பிரியா said...

ஈச்சி எலுமிச்சி பால குடுத்துப் பால‌ச்சி
நாலுக‌ர‌ண்டி நல்லெண்ணெய்
நாப்பத்தாறு தீப்பெட்டி
வாராரய்யா சுப்பய்யா
வழிவிடுங்க மீனாட்சி
மீனாட்சியம்மன் கோயில்ல‌
மில்லல் வாங்கிப் போட்டு
காமாட்சியம்மன் கோயில்ல‌
கம்மல் வாங்கிப் போட்டு
தும்பி, துளசி, தூக்கிப்போட்ட நம்பட்டி!

தாரணி பிரியா said...

இதெல்லாம் இப்ப எங்க பாப்பாவுக்கு டிரைனிங்க குடுக்கறதால நல்லா ஞாபகம் இருக்கு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குழந்தைகளா இருந்த மகிழ்ச்சியை நினைச்சுப்பாத்தா இப்ப ஆசையாத்தான் இருக்கு.

இந்த ஹோட்டல் விளையாட்டு இங்கயும் நடக்கும்..தோசையெல்லாம் ஆமைதோசையா ,ஏணி தோசையா ஆர்டர் செய்யப்படும்.. பெரியவளானதும் மகள் அதுக்குன்னு தனி மெனுக்கார்ட் , பில் புத்தகம் செய்து விளையாண்டதா ஞாபகம்.

இந்த பாட்டை நாங்க ..
அதோ பாரு ரோடு
ரோட்டு மேல காரு
காருக்குள்ள யாருன்னு
ஆரம்பிச்சதா நினைவு..

உங்களெல்லாரும் அளவு எனக்கு ஞாபகசக்தி கிடையாதுஅதனால் இந்த மாதிரி எனன் பாட்டெல்லாம் பாடினேன்னு தெரியல..:(

இப்ப இங்கே குட்டீஸ் பாடுவதெல்லாம் ஹிந்தி தான்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நீங்க ஸ்டார்ட் மீசீக் சொல்லிட்டதால் ட்விங்கிள் ட்விங்கிளில் சபரிக்காக அவங்கக்கா தயாரிச்ச ஒரு தோசை மசாலா சாங்க் இருக்கு அதை அப்லோட் கிறேன்... :)

தியாவின் பேனா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பிரியமுடன்...வசந்த் said...

பதிவும் பின்னூட்டங்களும் என்னை சிறுபிள்ளையாக்கி விட்ட்ன...

காமராஜ் said...

குழந்தைகளுக்கும், குழந்தைகளாக இருந்தவர்களுக்கும், மனதளவில் இப்போதும் குழந்தைகளாக இருப்பவர்கள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்!! :-))

aamen

G3 said...

//மனதளவில் இப்போதும் குழந்தைகளாக இருப்பவர்கள் //

Simplea G3 maadirinu solli irukkalaamae aachi :P

தமிழன்-கறுப்பி... said...

:)

டம்பி மேவீ said...

நான் இன்னும் மனசுக்குள் குழந்தையை உயிருடன் வைத்திற்க ரொம்ப கஷ்ட படுகிறேன்.

எல்லோருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

mayil said...

எனக்கு பிடிச்ச பாட்டு:)

மழ வருது மழ வருது நெல்லு குத்துங்க,
மூணு படி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க,
தேடி வந்த மாப்பிளைக்கு எடுத்து வைங்க
சும்மா வந்த மாப்பிள்ளைக்கு சூடு வைங்க :)))))))))

mayil said...

டிக் டிக் யாரது
பேயது
என்ன வேணும்
கலர் வேணும்
என்ன கலர்
( யார வேணுமோ அந்த கலர் சொல்லி அவங்கள கூப்பிட்டு நம்ம செட்டில் சேர்த்து வெளையாட வேண்டியதுதான்)

mayil said...

பருப்பாம் பருப்பாம்
பன்னண்டு பருப்பாம்
சுக்க தட்டி சோத்தில போட்டு
உங்க அப்பன் பேர் என்ன?

முருங்கப்பூ ( எதிரில் இருப்பவர் சொல்லணும்)

முருங்கப்பூவும் தின்னவனே
முந்நாழி எண்ணெய் குடிச்சவனே
பாம்பு கைய மடக்கு

மாட்டேன் - (எ. இ. சொ)

மாட்டேன்னா மாட்டேன்
மாதுளங்காய் கோட்டை,
தார் தார் விளக்கு
தாராமல் விளக்கு
ஒ ரு கை யை எ டு த் து க கோ ( இது மட்டும் இழுத்து ராகம சொல்லணும் )

இதெல்லாம் நானும், வர்ஷா, பப்புவும் வார இறுதி நாட்களில் விளையாடுவோம். இன்னும் நெறைய இருக்கு, :))))))

நசரேயன் said...

//மனதளவில் இப்போதும் குழந்தைகளாக இருப்பவர்கள்//

ஒ.. எனக்கும் சேத்து தானா !!

சின்ன அம்மிணி said...

போச்சுடா, பாருங்க எத்தனை பாட்டு பின்னூட்டத்திலன்னு :)

TamilNenjam said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

கலையரசன் said...

சின்னவயசுல சொல்லவேண்டியது... இப்ப சொல்றேன்!
"குழந்தைகள் தின வாழ்த்துக்கள் முல்லை"!!

குடுகுடுப்பை said...

மொட்டையும் மொட்டையும் சேந்துச்சாம்
முருங்கை மரத்துல ஏறுச்சாம்
கட்டெறும்பு கடிச்சிச்சாம்
கால் கால்னு கத்திச்சாம்.

குடுகுடுப்பை said...

தொந்திக்கணபதி வந்தாராம்
தொன்னூறு தோசை தின்னாராம்
அம்மா மடியில உக்காந்தாராம்
அரை படி ..வை விட்டாராம்.


(..=பிரபல காமெடி பதிவரின் முதல் இரண்டு எழுத்து)

S.A. நவாஸுதீன் said...

இடுகையும், அனைத்து பின்னூட்டங்களும் பள்ளிக் காலங்களை நினைவூட்டுகின்றன

☀நான் ஆதவன்☀ said...

அவ்வ்வ்வ்வ்வ் நான் தான் லாஸ்டா.. லீவு நாளான வெள்ளிகிழமை இந்த பதிவை போட்டதுக்கு என் கண்டனங்கள்.

☀நான் ஆதவன்☀ said...

பாஸ் கலக்கல் போஸ்ட். சின்ன வயசு ஞாபகங்களை கிளறி விட்டீங்க.

ஜெயந்தி said...

வளையலோ வளையல் தெருவிலே கூவினால்
மணிப்பிள்ளை மக்களாய் மாடப்புறாக்களாய்
ஓடிஓடி வாருங்கள்
செல்லக்கையை நீட்டுங்கள்
சீராய் வளையல் மாட்டலாம்
என் பங்குக்கு.

பா.ராஜாராம் said...

raap...

//ஓ ஒண்ணர டுவர டக்கர
யரல கவல மஸ்கிடன், கள்ளன் குள்ளன் யவனவன்.(இது இன்னும் பெருசு, ஆனா ஞாபகமில்ல).//

ஒன்னரை டூவரை
டக்கரை டோய்
ஆவல் காவல்
மஸ்பின் டன்
கள்ளன் குள்ளன்
டொண்டிஒன்
ஆய் ஓய்
க்ளோஸ்!

இதுதான்னு நினைக்கிறேன் பாஸ்!

மலரும் நினைவுகளுக்கு நன்றி முல்லை பாஸ்!

கானா பிரபா said...

பாஸ்

இந்த பதிவை இப்போது தான் பார்த்தேன்.ஆக்சுவலி நமக்கு பாட்டு கேட்கத் தான் புடிக்கும் பாஸ், பாடிக் காட்டமாட்டோம். வெக்கமா இருக்கும் ;)

தீஷு said...

எத்தன பாட்டுப்பா பின்னூட்டத்தில???