Friday, November 27, 2009

எ ஃபார்...

..... எடுத்துக்காட்டு!!

இந்த '.கா' என்ற எடுத்துக்காட்டு படுத்தற பாடு இருக்கே!! யூகேஜி- லேர்ந்து இன்னைக்கு வரைக்கும் நம்மை துரத்திக்கிட்டே வர்ற விஷயம்! முதல்லே 'எ.கா' -ன்றது 'எடுத்துக்காட்டு' அப்படின்னு எனக்கு புரியறதுக்கே சில பல வகுப்புகள் தாண்டி வர வேண்டியிருந்தது.

பளளிக்கூட புத்தகத்துலே பாடம் முடிஞ்சதும் அடுத்ததா கேள்விகள்/பயிற்சிக்கேள்விகள் இருக்கும். அது எப்படின்னா எடுத்துக்காட்டு ஒன்னு கொடுத்துட்டு அதே மாதிரி மீதியெல்லாம் செய்ங்க எனும் ரீதியில் இருக்கும். அறிவியல், தமிழ், ஆங்கில பாடங்கள் கூட சமாளிச்சிடலாம். ஆனால், இந்த கணக்கு பாடத்துலே இருக்குமே...அது ஒன்னொன்னும் ஒரு மாதிரி இருக்கும். எ.கா-ஆக இருக்கறது மட்டும் ஈசியா இருக்கும். ஒருவேளை ஈசியா இருக்கறதை மட்டும் எ.கா -ஆ செஞ்சு கொடுத்திட்டாங்களோன்னு தோணும்!

அதுவும், இந்த மணி பார்க்க கத்துக்கற காலகட்டம் மறக்கமுடியாதது... பாடத்துக்கு பின்னாடி நெறைய கடிகாரங்கள் வெவ்வேற நேரம் காட்டிய படி வரைஞ்சு இருக்கும். அதுலேயும் எ.கா-இல் இருக்கறது ரொம்ப ஈசியா 1.30 மணி காட்டும். ஆனா, நாம் எழுத வேண்டியது மட்டும், 7.45, 2.15 12.45 இப்படி இருக்கும். ஹாஃப் பாஸ்ட் 2, ஃக்வார்டர் டூ 8 - னுதான் சொல்லணும். ஆனா எ.கா-ஆக இதையெல்லாம் போட்டிருக்க மாட்டாங்க. நாமே “யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக் கூட தெரியாதே” கேஸ்! நேராக சரியான மணி சொல்றதே பெருங்கஷ்டம், இந்த மாதிரி சுத்தி வளைச்சு சொல்லச் சொன்னா!!

எப்படியோ, மணியெல்லாம் (அட, கடிகாரத்திலேதான்!) பார்க்க கத்துக்கிட்டு பெரிய க்ளாஸ் வந்தா, கொஸ்டின் பேப்பரிலே, “கோலங்கைமா திசு, பாரங்கைமா திசு, மைட்டோகாண்ட்ரியா வை எ.கா டுடன் படம் வரைந்து விளக்கு” னு இருக்கும்! நமக்கு ஏதோ ஒரளவுக்கு ஒழுங்கா வரைய தெரிஞ்சது அமீபாதான். இதோட எங்க சயின்ஸ் டீச்சர் புண்ணியத்துலே மைட்டோகாண்ட்ரியா எப்படி இருக்கும்னு இப்போ வரைக்கும் ஞாபகம் இருக்கு! ஆனாலும் பத்தாவது பரீட்சையிலே கண் -னை (ஏன்னா அதுக்கு முன்னாடி வருஷம் கேள்வித்தாள்லே காது கேட்டிருந்தாங்க!) விழுந்து விழுந்து படிச்சுட்டுப் போக, கடைசிலே கொஸ்டின் பேப்பரில் 'காது வரைந்து விளக்கு'ன்னு வந்து இருந்தது. என்ன பண்ண, மனசை கல்லாக்கிட்டு, படிச்சிட்டு போன கண்ணை வேஸ்ட் பண்ணாம, 'இந்த மாதிரி இருக்கிற கண்ணுக்கு சற்றுத்தள்ளி காது இருக்கும்' என்ற மாதிரி ஒரு விடை எழுதி விட்டு வந்தது வரலாறு!

ஆனாலும், கழித்தல் கற்றுக்கொண்ட போது, 10-இலிருந்து 3 போனா மீதி எவ்வளவு கேள்விக்கு புரியாமல் விடும் லுக்-கை பார்த்து, “உன்கிட்டே பத்து மாம்பழம் இருக்கு, மூனு மாம்பழம் அனு-வுக்கு கொடுத்துட்டா மீதி உன்கிட்டே எவ்வளவு இருக்கும்” ன்னு எ.கா-டோடு கேட்க, ”ஏன் அனுவுக்குக் கொடுக்கணும் நானேதான் சாப்பிடுவேன்” என்ற கேள்வி மனதில் பசுமையாக இருக்கிறது! அதேபோல் அல்ஜீப்ராவில் மைனஸூம் மைனஸூம் ப்ளஸ் என்று கற்றுக்கொண்டதும்!

ஒவ்வொரு பேப்பருக்கும் செமினார் - அந்த செமினாருக்கு இண்டர்னல் மதிப்பெண்களும் உண்டு. ‘எந்த டவுட்-னாலும் தனியா கேளு, என் செமினார்லெ நீ கேக்காதே, உன் செமினார்லே நான் கேக்க மாட்டேன்' என்று சொல்லப்படாத டீலிங் வகுப்பில் நடைமுறையில் இருந்தது. இரண்டு செமினார்களை பார்த்த ஆசிரியர், டவுட்களை அவராக கேட்க ஆரம்பித்துவிட திருடனுக்குத் தேள். அதிலிருந்து தப்பிக்க, 'நான் அவனை கேப்பேன், அவன் என்னை கேப்பான்” என்று போட்டு வைத்த திட்டத்தில் “ இதனை ஒரு எ.கா-டோடு விளக்க முடியுமா” என்ற கேள்விக்கே முதலிடம்!

ஏழாம் வகுப்பிலிருந்து படித்து வந்த 'தொகை'களை, கல்லூரியில் விரிவாக நடத்திக்கொண்டிருந்தார் தமிழ் பேராசிரியர். ‘நமக்கெல்லாம் இந்த லேங்குவேஜா முக்கியம், சியும் சிபிபியும் தானே சோறு போட போகுது' என்ற மிதப்பில் கனவு கண்டுக்கொண்டிருந்தபோது, ப்ரியாவிடம் “வினைத்தொகைக்கு' எ.கா சொல்லுமா” என்றார் ஆசிரியர். ப்ரியா எதையுமே உணர்ச்சி பூர்வமாக விளக்குவாள். ஏதோ ஓர் அரவிந்தசாமி படக்கதையை மூன்று நாட்களாகச் சொன்னவள் அவள். சொல்வதோடு நில்லாமல் ஆக்‌ஷனும் உண்டு - ஒரு குழந்தையைப் போல!

சட்டென எழுந்த ப்ரியா,

”'பால்சோறு சாப்பிட்டான்'ங்க மேம்” என்று,
டெஸ்க்-லிருந்து எடுத்து சாப்பிடுவது போல ஆக்‌ஷ்னுடன் சொல்ல ஆசிரியருக்கே சிரிப்பு வந்துவிட்டது! ப்ரியா, அன்றிலிருந்து கொஞ்சநாளைக்கு 'பால்சோறு' ம் ஆனாள்! :-)

உங்கள் எ.கா நினைவுகளையும் பகிர்ந்துக்கொள்ளுங்களேன்!

20 comments:

சின்ன அம்மிணி said...

//தோ ஓர் அரவிந்தசாமி படக்கதையை மூன்று நாட்களாகச் சொன்னவள் அவள்.//

அது என்ன படம் ஆச்சி? அரவிந்தசாமி ஒரு ஐஞ்சு படம்தான் நடிச்சிருப்பார்னு நினைக்கறேன்.

நிஜமா நல்லவன் said...

/உங்கள் எ.கா நினைவுகளையும் பகிர்ந்துக்கொள்ளுங்களேன்!/

இப்ப இந்த இடுகை தான் எ.கா. ன்னு சொல்லுற மாதிரி இருக்கு:)

நிஜமா நல்லவன் said...

/“கோலங்கைமா திசு, பாரங்கைமா திசு, மைட்டோகாண்ட்ரியா வை எ.கா டுடன் படம் வரைந்து விளக்கு”/


அவ்வ்வ்வவ்வ்வ்வவ்.....இதெல்லாம் இன்னும் ஞாபகத்தில் இருக்கா:)

நிஜமா நல்லவன் said...

/ஒழுங்கா வரைய தெரிஞ்சது அமீபாதான்./

அமீபா ஒழுங்கா இல்லாததால நமக்கெல்லாம் ஒழுங்கா வரைய முடியுது:))

அமிர்தவர்ஷினி அம்மா said...

அகர வரிசைப்படி பொளந்து கட்டுறீங்க ஆச்சி!

என்ன பண்ண, மனசை கல்லாக்கிட்டு, படிச்சிட்டு போன கண்ணை வேஸ்ட் பண்ணாம, 'இந்த மாதிரி இருக்கிற கண்ணுக்கு சற்றுத்தள்ளி காது இருக்கும்' என்ற மாதிரி ஒரு விடை எழுதி விட்டு வந்தது வரலாறு!

:)))))))))))) சான்ஸே இல்ல,
பப்பு கிட்ட நீங்க ஏன் இப்படி பல்பு வாங்கிக்குவிக்கறீங்கன்னு இப்பதான் நல்லா புரியுது ;)

பாலாஜி said...

எதிரில் பேசுவது போல் உள்ளது

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\நிஜமா நல்லவன் said...
/ஒழுங்கா வரைய தெரிஞ்சது அமீபாதான்./

அமீபா ஒழுங்கா இல்லாததால நமக்கெல்லாம் ஒழுங்கா வரைய முடியுது:))//

என்ன ஒரு விளக்கமய்யா...
:)

கெமிஸ்ட்ரி வகுப்பில் எக்கசக்கமா எ.கா சொல்வாங்க.. ஆனா வழக்கப்படி நான் எல்லாம் மறந்து போயிட்டேன்.. :))

பிரியமுடன்...வசந்த் said...

// ஒழுங்கா வரைய தெரிஞ்சது அமீபாதான். //

ஆமாங்க ஈசியா வரைஞ்சிடலாம்...

எல்லாத்தையும் இன்னும் ஞாபகம் வச்சுருக்கிங்க எப்டி?

வல்லிசிம்ஹன் said...

வரிக்கு வரி சிரிச்சாச்சு.. ஓஹோ கண்ணு பக்கத்தில காதா. அப்போ மூக்கு வரையச் சொன்னா
என்ன பதில் எழுதி இருப்பீங்கன்னு நினைச்சு இன்னும் சிரிப்பு வருது. மிக மிக நன்றி முல்லை:))))

தமிழ் பிரியன் said...

இந்த இடுகையை எடுத்துக்காட்டுகளுடன் நீங்கள் விளக்கிய விதம் மிக அருமை! நன்று!

கையேடு said...

இப்போ நிறமும் நல்லா இருக்கு, வழக்கம் போல இடுகையும் நல்லா இருக்கு.

நசரேயன் said...

நான் எழுதுறது பூராம் எடுத்து காட்டு தான்

Deepa (#07420021555503028936) said...

// ”ஏன் அனுவுக்குக் கொடுக்கணும் நானேதான் சாப்பிடுவேன்” என்ற கேள்வி மனதில் பசுமையாக இருக்கிறது! //

:-))))

முற்பகல் செஞ்சதெல்லாம் தான் பிற்பகல்ல (பப்புவால) இப்போ விளையுதோ!!

பதிவு ரொம்ம்ம்ம்ம்பப் பிடித்திருக்கிறது! ஹைஸ்கூலுக்குப் போய்க் கொஞ்ச நேரம் உக்காந்துட்டு வந்த ஃபீலிங்! :-)

சிங்கக்குட்டி said...

//'எடுத்துக்காட்டு' அப்படின்னு எனக்கு புரியறதுக்கே சில பல வகுப்புகள் தாண்டி வர வேண்டியிருந்தது.//

கலக்கல் பதிவு போங்க..அருமை அருமை :-)

மங்களூர் சிவா said...

:)))))))

தீஷு said...

கலக்கல் பதிவு முல்லை. சிரிப்பை அடக்க முடியவில்லை.. பால்சோறு சூப்பர்!!!

Agila said...

உங்க archive எல்லாம் மதியம்னு இருக்கு பாருங்க
..Ag

பித்தனின் வாக்கு said...

நல்ல மலரும் நினைவுகள், நான் தங்களுக்கு ஒரு சிறு விருதினை அளித்துள்ளேன். அதை பெற்றுக் கொண்டு என்னை சிறப்பிக்கவும். நன்றி.

KVR said...

நல்லவேளை, வினைத்தொகைக்கு எல்லோரும் சொல்ற எடுத்துக்காட்டான “ஊறுகாய்” சொல்லலை, சொல்லிருந்தா அவங்க உங்க கிட்டே ஊறுகாய் ஆகிருப்பாங்க

பிரியமுடன் பிரபு said...

உங்கள் எ.கா நினைவுகளையும் பகிர்ந்துக்கொள்ளுங்களேன்!
/////

எ.கா - சந்தனமுல்லையின் பதிவு
http://sandanamullai.blogspot.com/2009/11/blog-post_27.html


ஹ ஹா