Sunday, November 08, 2009

ஜீன்

I almost see her daily. லிஃப்டில் செல்ல காத்திருக்கும் நேரத்தில், அதே லிஃப்டில் இறங்கி வருவார். அவர் யாரையும் பொருட்படுத்தாமல்தான் கடந்துச் செல்வார். ஆனால், அவர் கடந்து சென்றதும், லிஃப்டில் பயணிப்பவர்கள், லிஃப்ட் உதவியாளர் முதல் பிற அலுவலக ஊழியர்கள் வரை உள்ளாகும்/காண்பிக்கும் உணர்ச்சிகள் இருக்கிறதே....அவர்களுக்குள் பார்த்து கண்சிமிட்டிக்கொள்வதும், சிரித்துக்கொள்வதும், பேசிக்கொள்வதும்!!!

”அவளுக்கு ரெண்டு பசங்கடா”

“டேய், அந்தப் பொண்ணு ஸ்மோக் பண்ணும்டா, தெரியுமா!!”

இன்னும் அந்த பெண் எந்த ஏரியாவிலிருந்து வருகிறாள், பூர்வீகம் எல்லாம் ஆராயப்படும்! ஏன் அந்தப் பொண்ணு ஜீன்ஸ்லியேதான் வருது - இப்படியாக!! அதுவும் அந்தபெண் ஸ்லீவ்லெஸ்-ல் வந்துவிட்டாலோ கேட்கவே வேண்டாம்!

ஏன் இவங்களாலே ஒரு பொண்ணு ஸ்மோக் பண்ணறதை இயல்பா எடுத்துக்கமுடியலை, ஆண்கள் புகைப்பிடிப்பதைபோல?

அதே புகைபிடிக்கும் இடத்துக்கு ஒரு ஃபாரினர் லேடி போனா இவங்க யாரும் கண்டுக்கிறதேயில்லையே!

ஒரு அயல்நாட்டு பெண் (சல்வாரிலேதான்) தினமும் புகைபிடிக்க வருவார். ஆனால், யாரும் அவரை இந்தளவுக்குப் சட்டை செய்தது போல் தெரியவில்லை!! (ஒருவேளை சல்வார் போட்டுக்கிட்டு புகைத்தால் ஒன்னும் பேசிக்க மாட்டாங்களோ என்னவோ!?!)

புகைப்பதை ஆதரிப்பதாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன் - அதைப் பொதுவில் வைப்போம் என்றே சொல்ல வருகிறேன் - புகைப்பதையோ அல்லது புகைக்க வேண்டாமென்று சொல்வதையோ!!

ஆனால், ஒரு பெண் ஜீன்ஸ் அணிவதோ அல்லது ஸ்லீவ்லெஸ் அணிவதோ ஏன் ஒரு பொருட்டாக வேண்டும்? ஒரு பெண் அணியும் உடை, கலாச்சாரத்திற்கு, பாரம்பரியத்திற்கு, குடும்பத்திற்கு, குடும்பத்தின் மானமாக இன்னும் என்னவெல்லமோவாக பார்க்கப்படுகிறது - ஆனால் அது அணிபவருக்கு, உடுத்துபவரின் வசதியாக இருக்கவேண்டுமென்பதைத் தவிர!!
உண்மையில் ஜீன்ஸ் அணிந்துக்கொள்ள வசதியானது. பராமரிக்க எளிதானது.

ஆண்கள், வசதியாக பாண்ட்களுக்கும், அரைக்கால் சட்டைகளுக்கும் மாறிவிட பெண்கள் எந்த காலநிலையாக இருந்தாலும் புடவையை கட்டிக்கொண்டு அழ நேர்ந்த காலகட்டம் எதுவென்றுதான் தெரியவில்லை. எனது பல தோழிகள் திருமணத்திற்குபின் நிரந்தர புடவைவாசிகளாக மாறிவிட்டார்கள் - குடும்பத்தினரின் விருப்பத்திற்காக. ஒரு காலத்தில், அம்மாவின் புடவையை எடுத்து சல்வார் தைத்துக்கொண்டவர்கள், அதே புடவைக்குள் தன்னை கஷ்டப்படுத்தி திணித்துக்கொண்டவர்கள் இவர்கள்!

இந்தப்புடவையைக் குறித்துதான் எத்தனை கண்ணோட்டங்கள் - முழுதுமாக உடலை மறைக்கிறது என்றும், உணர்ச்சிகளை தூண்டக்கூடியதாக இருக்கிறதென்றும்!! எது எப்படியாயினும், புடவைதான் பெண்ணுக்கு அழகு - புடவை அணிந்தவளே இந்திய பெண் - தமிழ் பெண் - நமது கோலிவுட்,டோலிவுட், பாலிவுட் எல்லாம் சுற்றி வளைத்துச் சொல்வதும் இதையே!!

”பாவாடை அணிந்தவள் - ஃப்ரி உமன்”!

”ஜீன்ஸ் அணிபவள் - எதற்கும் துணிந்தவள்”!!

”ஜீன்ஸ் அணிந்தவர்கள் - ஸ்லீவ்லெஸ் அணிந்தவர்கள் நமது கலாசாரத்திற்கு பங்கம் உண்டாக்கக் கூடியவர்கள்”

பெண்களின் உடை குறித்துதான் எத்தனை கண்ணோட்டங்கள்!!

பெண்கள் நீங்கலாக, மற்ற இந்தியர்கள் அனைவரும் அவரவர் வசதிக்கேற்ப உடையுடுத்தும்போது கேடடையாத இந்த கலாச்சாரம் மிகுந்த வியப்பூட்டுகிறது!!

30 comments:

சுடுதண்ணி said...

ஊரே ஒட்டு மொத்தமா ஜீன்ஸுக்கும், ஸ்லீவ் லெஸ்க்கும் மாறும் போது தான் இந்த பார்வை மாறும். மனதுக்கு சகஜமாகத் தோன்றும். அதுவரைக்கும் காண்போர் மனது புதிதாகப் பார்க்கும் நோக்கத்தில் தவறான உணர்ச்சிகளேத் தோன்றும்.

Deepa (#07420021555503028936) said...

தீர்க்கமான பார்வையுடன் அவசியமான விஷயத்தை எழுதி இருக்கிறீர்கள் முல்லை.

//அதே புகைபிடிக்கும் இடத்துக்கு ஒரு ஃபாரினர் லேடி போனா இவங்க யாரும் கண்டுக்கிறதேயில்லையே! //

இது மில்லியன் டாலர் கேள்வி! :-)))

ஆம். ஆண்கள் (எல்லோரும் அல்ல -இந்த டிஸ்க்லெய்மர் எப்போதும் தேவைப்படுகிறது என்மது வியப்பளிக்கிறது!)
அவர்களின் பலகீனங்களுக்கும் மனோ வக்கிரங்களுக்கும் பெண்களையே காரணம் காட்டுகிறார்கள்.

”நீ ஒழுங்கா இருந்தா அவன் ஏண்டி உன்னைப் பாக்கறான்...” type dialogs இன்னும் ஒழிந்த பாடில்லை.

பெண்கள் தூண்டினாலொழிய இவர்கள் எல்லோரும் மகா யோக்கியர்களாம்.
சின்னஞ்சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுவது எவ்விதமான தூண்டுதலில்?

லெமூரியன் said...

ம்ம்ம்....பெண்களின் மனதிற் உள்ள பொதுவான ஆதங்கம் இந்த உடைக் கலாச்சாரத்தைப் பற்றியது....காலம்காலமாக ஆண்களின் ஜீன்களில் ஊறிப்போன விஷயம் இது...பெண்கள் இப்டித்தான் இருக்க வேண்டும் இன்று ஒரு வரையறை வைத்திருக்கிறது....வரையறையை மீறும் பெண்களை எதற்கும் துணிந்தவள் என்று யோசிக்காமல் சொல்லி விடுவார்கள்...என் அலுவலக புகைக்கும் பகுதயில் தனிமையில் புகைத்துக் கொண்டிருக்கும் போது ஒரு பெண் என்னிடம் லைட்டர் வாங்கி சிகரெட் பற்ற வைத்ததை தூரத்தில் நின்று புகைத்துக் கொண்டிருந்த என் ப்ராஜெக்ட் மேனேஜர் பார்த்து விட்டு என்னிடம் இப்படி சொன்னார்- அப்பிடியே அவள இந்த ப்ரைடே நைட்டு பப்புக்கு கூப்ற்றுக்கலாம்ல என்றார் கண்ணடித்து சிரித்து விட்டு .....அப்போது மனதில் தோன்றியது ஒன்றே ஒன்றுதான்....எவ்ளோ பெரிய ஆளாக இருந்தாலும் பெண்ணைப் பற்றிய கருத்தோட்டத்தில் அனைத்து ஆண்களும் சமமே...எனினும் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூகக் கட்டமைப்பில் ஏற்ப்படுகின்ற மாற்றங்களினால் பெண்களுக்கான வரையறை காலத்திற்க்கேற்ப தளர்த்தப் பட்டுக் கொண்டே வருகிறது...... நிற்க. சற்று வெளிப்படையாக சொல்வதென்றால் காரில் அலுவலகம் வந்து போகும் தோழி ஒருத்தியை ஒரு சின்ன ட்ரிட் கொடுக்க என்னுடைய பைக்கில் (பைக்கில் தான் வருவேன் என்று அடம் பிடித்தாள்.....பாவிமக) அருகில் உள்ள காபி ஷாப்பிற்கு அழைத்துச் சென்றேன்....அவள் எப்போதும் ஒரு ஜீன்சும் உட்க்காரும்போது இடுப்புப் பகுதி தெரியும் படி டி சட்டை அணிபவள்...அவளை அந்த காபி ஷாப்பிற்கு கொண்டு சேர்ப்பதற்குள் ரொம்பவும் அவதிப் பட்டேன்....காற்றில் கடந்து போன அசிங்கமான கமென்ட்டுகளும் பார்வைகளும் அப்படி....அவள் வட நாட்டு பெண் என்பதால் அவளுக்கு இந்த கிண்டல்கள் கேலிகள் புரியவில்லை....ஆனால் நான் வெறுத்துப் போனேன்.

லதானந்த் said...

மரியாதைக்குரிய திருமதி சந்தனமுல்லை அவர்களுக்கு!

ஜீன்ஸோ, சுரிதாரோ மகளிர்க்கு சௌகரியமாக இருக்கும் எவ்வித உடைகளைகளையும் அணிவதில் பிழையேதும் இல்லை என்பது எனது கருத்து.
ஆனால் வேண்டுமென்றே தங்களின் அங்கங்களைக் காட்சிப் பொருளாக்கி உலவுகின்ற ஒரு சிலர் செயல் வருத்தம் அளிக்கிறது.உண்மையிலேயே
சமூக அக்கறையுடன் தெரிவிக்கும் கருத்து இது.புரிந்து கொள்ளுவீர்கள் என நினைக்கிறேன்.

கதிர் - ஈரோடு said...

//அதே புகைபிடிக்கும் இடத்துக்கு ஒரு ஃபாரினர் லேடி போனா இவங்க யாரும் கண்டுக்கிறதேயில்லையே!//

இது பல இடங்களில், பல செயல்களுக்கு பொருந்தும் வரி..

தேவையான இடுகை...

ஆண் வர்க்கத்தின் (நான் உட்பட) மனதில் உள்ள கசடு கரைய வேண்டும்.....

பா.ராஜாராம் said...

உறுத்தாத உடை என்பது மன ஒழுக்கம் சம்பந்த பட்டதே முல்லை.ஆணுக்கும்,பெண்ணுக்கும்...ஜீன்ஸ் குறித்த ஆட்சேபனை இல்லை.வசதி,எளிது.சரி.ஸ்லீவ்லெஸ் எப்படியான வசதி?. புரியலை எனக்கு.அதாவது ஆணாக இருந்து பார்க்கிற "புரியலை" இது.

மற்றபடி புகைத்தல் பொதுவே.நெருப்பு கேட்க்க மற்றொரு வர்க்கம் தயாரானால் சரிதான்.நம் வீட்டு மனுஷிகள் இல்லாத வரையில் என்கிற சுயநலம் தவிர்த்து... :-))

சின்ன அம்மிணி said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் முல்லை. இதெல்லாம் பெண்ணை உடலாக,சதையாக மட்டுமே பார்ப்பவர்களின் கருத்து. சக மனுஷியாய் பார்ப்பவர்களுக்கு பெண்ணின் உடை ஒரு பெரிய விஷயமாக இருக்காது. பெண்ணின் உடையில்தான் சமூக நலன் இருக்கிறதாம். பாரதநாடு முன்னேறுவது இருக்கிறதாம். என்ன காமெடி இது.

கல்லூரியில் படிக்கும்போது பாவாடைதாவணிதான் போடணும். ஏன்னா சுடிதார் போட்டா சமூகநீதி கெட்டுரும் பாருங்க. அப்ப நான் பெண் ப்ரதிநிதிகளுள் ஒருத்தி. நாங்கள் போய் கல்லூரி முதல்வரிடம் சுடிதார் போட அனுமதி வாங்கினோம்.(சுடிதாருக்கே அப்ப அந்த நிலைமை).சுடிதார் போடும் பெண்கள் எல்லாம் குடும்பப்பெண்கள் அல்ல அப்போது :). அதற்கு ஆதரவாய் இருந்தவர்கள் பல ஆண் ப்ரதிநிதிகள்.பெண்கள் என்ன உடை அணியவேண்டும் என்று விவாதிப்பது பெருமாலும் ஆண்களே. :) இதில் பெண்கள் விருப்பத்துக்கோ சவுகரியத்துக்கோ ஏது இடம். இதை நான் சொன்னால் நான் வாழும் நாட்டில் இதெல்லாம் சகஜம் என்றும் அதை வைத்து பேசக்கூடாது என்றும் சொல்லப்படுகிறது.

ஒரு ஆண் அரைகுறையாய் என்முன் ஆடை உடுத்து வந்தால் என் உணர்ச்சிகளை என்னால் கட்டுப்படுத்திக்கொள்ளவோ, அவரை பார்ப்பதை தவிர்க்கவோ முடியும். இத்தனை நாள் அப்படித்தான் நானும் பெரும்பாலான பெண்களும் இருக்கிறோம். இவர்கள் எல்லாம் அவரவர் பலகீனங்களுக்கும், மன வக்கிரங்களுக்கும் பெண்களை குறை சொல்லியே பழக்கப்பட்டவர்கள். (பெண்ணியவாதி பட்டம் உங்களுக்கு கட்டப்படும் சீக்கிரமே. )


@ தீபா

//பெண்கள் தூண்டினாலொழிய இவர்கள் எல்லோரும் மகா யோக்கியர்களாம்.
சின்னஞ்சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுவது எவ்விதமான தூண்டுதலில்?//

தீபா, உங்களுக்குத்தெரியாதா, பெரியபெண்கள் அரைகுறையாய் ஆடை அணிவதால் சின்னஞ்சிறுமிகள் மீது காமம் வந்து பலாத்காரம் செய்யப்படுகிறார்களாம். இப்படியும் சொல்லியிருக்கிறார்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

-\\ஒரு அயல்நாட்டு பெண் (சல்வாரிலேதான்) தினமும் புகைபிடிக்க வருவார். ஆனால், யாரும் அவரை இந்தளவுக்குப் சட்டை செய்தது போல் தெரியவில்லை!//

அந்த சட்டையால சட்டை செய்யல என்பது சரிதான்..

சின்னம்மணி சொல்வது போல நான் படித்த கல்லூரியில் என் வகுப்பில் சுடிதார் தினமும் அணியும் பெண்கள் மிகமிகக் குறைவு.. தாவணிப் பெண்களை கிண்டல் செய்வதை விட சுடிதார் பெண்கள் அதிகம் கிண்டல் செய்யப்பட்டதாக உணர்ந்திருக்கிறேன்..

இங்க சில ஆண்கள் போட்டிருக்கும் பின்னூட்டம் படிச்சு..ஹ்ம்.. :(

மர தமிழன் said...

பலமுறை விவாதிக்கப்பட்ட ஒரு முடிவில்லாத விஷயம்தான் இது என்றபோதிலும், வக்கிரங்கள் பசுமரத்தாணியாய் பதிந்துவிட்ட இன்றைய மனித கூட்டத்தில் ஒரு சில கட்டுப்பாடுகள் நமக்கு நல்லதுதான் செய்யுமென்றால் அதனை பின்பற்ற ஏன் தயங்க வேண்டும்? இதுவும் கடந்து போகும் காலம் ஒன்று வரும். ஆண்களுக்கும் மேல் இப்போது பெண்கள் சுயமாய் சம்பாதிக்கும் காலத்தின் மாற்றம் மென்பொருள் துறைகளால் சாத்தியமாகாவிட்டால், இன்றைக்கு ஜீன்சும், சிகரட்டும் சுதந்திரமாய் பேச முடிந்திருக்குமா என்பது சந்தேகமே. சும்மா இரு எனக்கு எல்லாம் தெரியும் என்பதின் வெளிப்பாடகவே இந்த உடை தேர்ந்தெடுத்தலும், புகைபிடித்தலும் சிலரால் அணுகப்படும்போது அவை இப்படிப்பட்ட கிண்டல்களை சந்திக்கத்தான் நேரிடும். நான் பார்த்த பல பெண்கள் புகைக்கும்போது சும்மா ஒரு show க்காகவே அதை செய்வதை பார்த்திருக்கிறேன் (வாயில் இழுத்து உள்ளிழுக்காமல் அப்படியே விடுவது) ஏன் இந்த அவஸ்தை படிக்கிறார் இந்த பெண்மணி என்றுதான் எனக்கு தோன்றிஇருக்கிறது. ஆனால் பெண்களின் உயர் பதவிகளோ, கம்பெனி நிர்வாகமோ, அரசியலோ ஆண்களின் ஏளனத்தை சம்பாதிக்காதபோது இது போன்ற விஷயங்கள் பொதுவில் முதிர்ச்சி அடையாத மக்களின் மத்தியில் தேவையா என்பது எண்ணிப்பார்த்தல் நலம்.

ஸ்வர்ணரேக்கா said...

//ஆண்கள், வசதியாக பாண்ட்களுக்கும், அரைக்கால் சட்டைகளுக்கும் மாறிவிட //

உண்மைதாங்க... அதை யார் யோசிக்கிறார்கள்...

பிரியமுடன்...வசந்த் said...

//”ஜீன்ஸ் அணிபவள் - எதற்கும் துணிந்தவள்”!!//

ஜீன்ஸ் அணிந்தவர்கள்தாம் இப்போ என் கனவில் வரும் தேவதைகள்

ஹ ஹ ஹா..

ஜெயந்தி said...

\\சின்னம்மணி சொல்வது போல நான் படித்த கல்லூரியில் என் வகுப்பில் சுடிதார் தினமும் அணியும் பெண்கள் மிகமிகக் குறைவு.. தாவணிப் பெண்களை கிண்டல் செய்வதை விட சுடிதார் பெண்கள் அதிகம் கிண்டல் செய்யப்பட்டதாக உணர்ந்திருக்கிறேன்..\\
முத்துலட்சுமி சொல்வதுபோல் இப்போது சுடிதார் பெண்களைவிட ஜூன்ஸ் அணிந்த பெண்கள் மீதான பார்வை வேறுவிதமாகத்தான் இருக்கிறது. (அவர்கள் உறுத்தாத விதமான ஆடைகள் அணிந்திருந்தாலும்).

மங்களூர் சிவா said...

/

”பாவாடை அணிந்தவள் - ஃப்ரி உமன்”!

”ஜீன்ஸ் அணிபவள் - எதற்கும் துணிந்தவள்”!!

”ஜீன்ஸ் அணிந்தவர்கள் - ஸ்லீவ்லெஸ் அணிந்தவர்கள் நமது கலாசாரத்திற்கு பங்கம் உண்டாக்கக் கூடியவர்கள்”

பெண்களின் உடை குறித்துதான் எத்தனை கண்ணோட்டங்கள்!!
/

ஒரு பத்துவருசத்துக்கு முன்ன வந்திருக்க வேண்டிய பதிவு. சென்னைல இருந்துகிட்டு இப்ப இப்பிடி எழுதறீங்க ஆச்சரியமா இருக்கு
:)

☀நான் ஆதவன்☀ said...

என்று தன் வீட்டில் அக்கா,தங்கைகள் ஜீன்ஸ் இடுவதை எந்த வித எதிர்ப்பும் இன்றி ஒருவனால் இயல்பாக எடுத்துக்கொள்ள முடிகிறதோ அன்றே மற்ற பெண்களின் மீதான பார்வையும் மாறுபடும் என்று நினைக்கிறேன்.

☀நான் ஆதவன்☀ said...

அமிரகத்தில் கால் முட்டி தெரியுமாறு ஆண்கள் உடையணிந்து வெளியே வரக்கூடாது :)

(பெண்களுக்கு இந்த வரைமுறை இல்லையென்று நினைக்கிறேன்)

rapp said...

வழக்கம்போல அருமையானப் பதிவு முல்லை. யப்பா இன்னும் எவ்ளோ வருசத்துக்குத்தான் நம்மூர்ல இந்த உடை என் கண்ல ப்ளூவை ஊத்திடுச்சி, கஞ்சியக் காச்சிடுச்சின்னு அறுத்துத் தள்ளுவாங்களோ? நான் எங்க கொள்ளுப் பாட்டிக் கலாச்சாரத்த காப்பாத்த ஸ்லீவ்லெஸ் போடறேன்னு பதிலுக்கு இன்னொரு பிட்டை ரெடி பண்ணனும் போல.

rapp said...

இன்னும் உடை விஷயத்துலயே மாற்றம் வரலேன்னா,
//
”அவளுக்கு ரெண்டு பசங்கடா”

“டேய், அந்தப் பொண்ணு ஸ்மோக் பண்ணும்டா, தெரியுமா!!”

இன்னும் அந்த பெண் எந்த ஏரியாவிலிருந்து வருகிறாள், பூர்வீகம் எல்லாம் ஆராயப்படும்!//

இந்த ஆட்டிட்யூட் இருக்கறதில் என்ன ஆச்சர்யம்:(:(:(

rapp said...

excellent post

பித்தனின் வாக்கு said...

நன்றி. தங்களின் கருத்துக்களை நான் வரவேற்க்கின்றேன். பெண்களின் உடையை வைத்து காம வயப்படுவதும், கிண்டல் செய்வதும் அவர்களின் இயலாமையின் காரணமாக வரும் ஒன்று. இவர்கள் மனதால், மூளையால் குறைபாடு உடையவர்கள். அவர்கள் தான் கேலியும் கிண்டலும் செய்து தங்களின் அரிப்பைத் தீர்த்துக் கொள்வார்கள்.
பெண்கள் புகைப் பிடிப்பது மற்றும் மது அருந்துவது அவர்களின் தனிப்பட்ட செயல், ஆனால் அவர்களின் இரத்ததில் தங்கும் ஆல்ககால் மற்றும் நிகோடின் அவர்களை பாதிப்பது மட்டும் அல்லாமல் அவர்களின் குழந்தைகளயும் பாதிக்கும். ஒன்று மட்டும் சொல்ல ஆசைப் படுகின்றேன். ஒரு ஆண் கெட்டால் அது அவனையும் அவன் குடும்பத்தையும் பாதிக்கும், ஆனால் ஒரு பெண் கெட்டால் அது அவள் தலைமுறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

காமராஜ் said...

நம் மீது ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் மாய பிம்பங்கள் உடைபடவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது.
பாவம் அந்த தாடிக்காரக்கிழவன் சாகுமட்டும் இதுபற்றியே புலம்பிப்போனான்.
இப்படி சந்தனமுல்லை பேசுவைதைக் கேட்கமுடியாமல் ஏங்கிக்கிடக்கிறது பெண்கள் குறித்த அவரது வெடிக்கருத்துக்கள்.
ரொம்ப ஆழ்ந்து சிந்திக்க வைக்கிற இந்தப் பதிவில் சொல்லப்படாத ஏராள விஷயங்கள் குவிந்து கிடக்கிறது. ஊக்கமாகத் தொடர்வேண்டும் சந்தனமுல்லை. நீங்கள் தான் வெடிப்புறப்பேசமுடியும்.

குடுகுடுப்பை said...

பெண்ணுரிமையை நீங்கள் பேசுங்கள், நான் வேடிக்கை மட்டும் பார்க்கிறேன்.

Vidhoosh said...

சந்தனமுல்லை: அருமையான பதிவு.

என் சொந்தக் கருத்து இது.
ஆண் பெண் பாகுபாடுகள் ஓரளவு ஒழிந்தே விட்ட சென்னையில் இப்போதும் கூட என்னை கொஞ்சம் தர்ம சங்கடமாக உணர வைக்கும் விஷயம் நாங்கள் செல்லமாக அழைக்கும் "செந்தில் டிராயர்" என்ற பெர்முடாஸ் உடை.

இந்த உடைக்கு ஆண் பெண் பாகுபாடே இல்லாமல் எல்லோருமே இங்கு அணிகிறார்கள், கால் மேல் கால் வேறு போட்டுகொண்டு காபி ஷாப் போன்ற பொது இடங்களுக்கும் வருகிறார்கள். அவங்க இஷ்டம்தான். அதனால் யாரும் ஒன்றும் சொல்வதில்லை. நான் பழமைவாதி கிடையாது, அதே சமயம், உடலை காட்சிப் பொருளாக்கும் எந்த உடையும், ஆணோ பெண்ணோ அது நிச்சயம் அவர்கள் மீதான மதிப்பைக் குறைக்கிறது.

ஒரு முறை, மேல் சட்டை அணியக்கூடாது என்றிருந்த கோவிலில், என் கணவரின் பின்னால் நின்றிருந்த பெண் தர்மசங்கடமாய் உணர்ந்து கஷ்டப் பட்டுக் கொண்டு நின்றிருந்தார். என்னாலும் கூட்டத்தில் அவர் பின்னால் போய் நிற்க முடியவில்லை. அதிலிரிந்து அவர், மேல் சட்டை அணியக்கூடாது என்ற சட்டம் இருக்கும் எந்தக் கோவிலுக்கும் வாசலில் நின்றே வணக்கம் போட்டு வந்து விடுவார். இது அவர் மற்ற பெண்களின் உணர்வுக்குத் தரும் மரியாதையாகவே நான் பார்க்கிறேன்.

வெந்து தணியும் வெயில் காலத்தில் கூட ஒரு CUSTOMER மீட்டிங், மார்க்கெட்டிங் மீட்டிங் போன்ற CLOSED ROOM MEETINGகில் கூட, ஆண்களோ பெண்களோ, இருவருமே சுலபமான உடையணிவதை விட்டு, நம் மக்கள் டை, கோட் போன்ற உடை அணிகிறார்கள். இந்த முரணை மட்டும் என்னால் புரியவே முடியலை.

--வித்யா

அமிர்தவர்ஷினி அம்மா said...

rapp said...
இன்னும் உடை விஷயத்துலயே மாற்றம் வரலேன்னா,
//
”அவளுக்கு ரெண்டு பசங்கடா”

“டேய், அந்தப் பொண்ணு ஸ்மோக் பண்ணும்டா, தெரியுமா!!”

இன்னும் அந்த பெண் எந்த ஏரியாவிலிருந்து வருகிறாள், பூர்வீகம் எல்லாம் ஆராயப்படும்!//

இந்த ஆட்டிட்யூட் இருக்கறதில் என்ன ஆச்சர்யம்:(:(:(

வழிமொழிகிறேன்.

SanjaiGandhi™ said...

//”பாவாடை அணிந்தவள் - ஃப்ரி உமன்”!

”ஜீன்ஸ் அணிபவள் - எதற்கும் துணிந்தவள்”!!

”ஜீன்ஸ் அணிந்தவர்கள் - ஸ்லீவ்லெஸ் அணிந்தவர்கள் நமது கலாசாரத்திற்கு பங்கம் உண்டாக்கக் கூடியவர்கள்” //

ஹிஹி.. ஒரே சிரிப்பு சிரிப்பா வருது போங்க.. இதுலக் கொடுமை என்னன்னா இப்டி நெனைக்கிற பல பேர் வீட்டு பொண்ணுங்க ஜீன்ஸ் - ஸ்லீவ்லெஸ் போடுவாங்க... உடையை நம் வாழ்க்கை முறை தான் தீமாணிக்கிறது. குணாதிசயம் இல்லை.

இந்த மாதிரி பொண்ணுங்களுக்கும் பார்வைகள் உண்டா?
பொது இடங்களுக்கு வரும் போது வேஷ்டி கட்றவங்க, லுங்கி கட்றவங்க, ஜீன்ஸ் போடறவங்க இவங்கள பத்தி..

காமராஜ் said...

கேட்டுப்பெறுவது யாசகம். மற்றவர் வாங்கித்தரவேண்டும் என ஏங்குவது கூட அடிமைத்தனத்தின் இன்னொரு வடிவம். அவரவர் உரிமைகளை அவரவர் எடுத்துக் கொள்வதே சுதந்திரம்.

Padhu said...

Hi Mullai,
I am a regular reader of your blog. Your writings are too good.. Keep up the spirit.
I very much agree with your point. Though we are in ‘so called’ westernized culture, men are still the same.
I have heard from my colleague (men) that homely (i donno wot it means) girls wont keep account in orkut.
Our society is still the same no matter how much we grow in technology and other stuffs.. Thanks for your good post

டம்பி மேவீ said...

எனக்கும் அதே டவுட் தானுங்க.......

இன்னொரு விஷயம் எனக்கு புரியல... ஏன் இன்னும் பெண்களின் உடை ஒரு விவாத பொருளாகவே இருக்கிறது. விவாதம் செய்றவங்களுக்கு வேற வேலையே இல்லையா......


body showroom parkkaathinga... brain godown yai parunga.... app than nadu munnerum

நசரேயன் said...

//உண்மையில் ஜீன்ஸ் அணிந்துக்கொள்ள வசதியானது. பராமரிக்க எளிதானது. //

துவைத்து ரெண்டு வருஷம் ஆச்சு

Divyapriya said...

nice post mullai...இதெல்லாம் மாற இன்னும் ஒரு நூற்றாண்டு ஆகும்!

ஆகாய நதி said...

Good one mullai...