Thursday, November 26, 2009

தத்துவ முத்துக்களும் கருத்து குத்துக்களும்..

எப்போவும் பாய்ஸ் பக்கத்துலே பாய்ஸ்தான் உட்காரணும்..கேர்ல்ஸ் பக்கத்துலே கேர்லே வரணும்.

சின்னவங்க daappu, பெரியவங்க டூப்பு!

பாய்ஸ் எல்லாம் daappu, கேர்ல்ஸ் எல்லாம் டூப்பு!

கேர்ல்ஸ் தான் daappu, பாய்ஸ் எல்லாம் டூப்பு!

இதெல்லாம் பப்பு அப்போப்போ உதிர்த்த தத்துவங்கள். வேனிலே இப்படித்தான் கத்திக்கிட்டு வருவாங்களாம்!!

மறுபடியும் டெம்ப்ளேட் மாத்திட்டேன். அந்த டெம்ப்ளேட் கொஞ்சநாள்லேயே போரடிச்சுடுச்சு. அதைப் பார்த்து எனக்கே தூக்கம் வந்து தூங்கிட்டேன்னா பார்த்துக்கோங்களேன்! அந்த டெம்ப்ளேட் மாத்திட்டு கருத்து கேட்போமேன்னு நானும் நாலு பேர்கிட்டே கேட்டேன்.

கருத்து 1 : டெம்ப்ளேட்-ல்லாம் ஓக்கே! Where is the girl on right side?

கருத்து 2 : இதுவும் நல்லாத்தான் இருக்கு. அந்த பொண்ணை மட்டும் இதிலே சேர்த்திடுங்க..சூப்பரா இருக்கும்.

கருத்து 3 : இது நல்லாருக்கு..ஆனா, அந்த டெம்ப்ளேட் பிடிச்சிருந்தது! (எ.கொ.ச.இ!!)

கருத்து 4 : ஹப்பாடா..ரொம்ப நாளா அந்த பொண்ணு நின்னுக்கிட்டே இருந்தாங்க, இப்போ உட்கார வைச்சுட்டீங்களா..வெரி குட்!

ம்ஹூம்! அப்புறம் நான் கருத்து கேக்கறதையே நிறுத்திட்டேன்!

எனக்கு பழைய டெம்ப்ளேட் மிகவும் பிடிக்கும். ஸ்கீரின்ஷாட் எடுத்து வைத்திருக்கிறேன். (எந்த பிரச்சினைக்காக மாற்றினேனோ அதே பிரச்சினை இப்போதைய டெம்ப்ளேட்டிலும் இருப்பது போலத்தான் தெரிகிறது!) மேலும், கைவசம் சில டெம்ப்ளேட்-கள் இருக்கின்றன.
இந்த டெம்ப்ளேட் கொஞ்சம் போரடித்தால்...:-)

19 comments:

வல்லிசிம்ஹன் said...

முல்லை,
ரெண்டாவது பொண்ணோ பையனொ போடுங்க.
உள்குத்து ஒண்ணும் இல்லன்னு சொல்லிக்கறேன்:)

பப்பு கருத்துகளும், குத்துகளும் முத்திரைச் சொற்கள்.
இதைப் பாடிட்ட வர பஸ்ஸை எங்க பார்க்கிறது. ஆசையா இருக்கே.!!

பைத்தியக்காரன் said...

அன்பின் ஆச்சி,

பப்பு உதிர்த்த தத்துவங்களுக்கு பின்னால், இந்த சமூகத்தின் உள்குத்து இருப்பதை வருத்தத்துடன் உணர முடிந்தது. ஆண் - பெண் வளர்ப்பு சார்ந்த ஆளுமை சிக்கல்களை பயத்துடனேயே கையாள வேண்டியிருக்கிறது...

இந்த டெம்ப்ளேட்டிலும் எனக்கு உடன்பாடில்லை. பழைய முதல் டெம்ப்ளேட்டில் சட்டென ஈர்த்த உங்கள் இன்னர் பர்சனாலிட்டி, வேறு எதிலும் எதிரொலிக்கவில்லை. இது எனது தனிப்பட்ட பார்வை மட்டுமே.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

அமுதா said...

:-))

ரோஸ்விக் said...

தலைப்பு மிக டரியலாக இருக்கிறது...:-)

சின்ன அம்மிணி said...

இந்த டெம்ப்ளேட் எல்லாம் டூப்பு, அடுத்து புதுசா வர்ற டெம்ப்ளேட்தான் டாப்பு.

ஆச்சி நீங்க பாட்டுக்கு மாத்துங்க டெம்ப்ளேட்டை. எல்லாத்துக்கும் மேலே இருக்க மாதிரி நாங்க சொல்லுவேமே!!!!

ஆயில்யன் said...

// ஹப்பாடா..ரொம்ப நாளா அந்த பொண்ணு நின்னுக்கிட்டே இருந்தாங்க, இப்போ உட்கார வைச்சுட்டீங்களா..வெரி குட்!///


ஏதோ நல்லது செஞ்சீங்க!

அமிர்தவர்ஷினி அம்மா said...

பழைய டெம்ப்ளேட் தான் பிடிச்சிருந்தது, மாற்றிய எந்த டெம்ப்ளேட்டும் ஈர்க்கவில்லை :)

ஹுஸைனம்மா said...

புதுசா பார்க்கும்போது, முதல்ல நல்லா இல்லாததுபோலத்தான் தோணும். பழகியபிறகு பழகிவிடும்... ;-))

அகல்விளக்கு said...

ஆகா.. அந்த பொண்ணு திரும்பி நின்னுட்டு இருந்தாலும் சின்னதா ஒரு சிரிப்பு சிரிப்பாங்களே...
அத இனிமே பாக்க முடியாதா??

:-(

கையேடு said...

இந்தெ டெம்ப்ளெட்டும் பழகிடும்.. :)

ஆனா, இடுகையோட எழுத்து நிறத்தை மட்டும் இன்னும் கொஞ்சம் செறிவான நிறத்துக்கு மாத்த முடிஞ்சா நல்லா இருக்கும்..


பப்பு rocks.. :)

பீர் | Peer said...

:)

rapp said...

ஹி ஹி ஹி:):):)

//அப்புறம் நான் கருத்து கேக்கறதையே நிறுத்திட்டேன்!//

இதுக்கெல்லாம் தளர்ந்திடக் கூடாது. இன்னும் இன்னும் முயற்சி செய்யணும்:):):) அவ்வ்வ்வவ்வ்வ்வ்...............

rapp said...

அய்யகோ //வேனிலே இப்படித்தான் கத்திக்கிட்டு வருவாங்களாம்!!
//
கத்திட்டா, அதுக்கு கோஷம் எழுப்பிக்கொண்டுன்னு சொல்லணும்.

rapp said...

//எந்த பிரச்சினைக்காக மாற்றினேனோ அதே பிரச்சினை இப்போதைய டெம்ப்ளேட்டிலும் இருப்பது போலத்தான் தெரிகிறது!//

அப்டியா? இதுப் பத்தி யாருமே சொல்லலையே:(:(:(

எனக்கு பழைய டெம்ப்ளேட்டும் பிடிச்சிருந்தது, இதுவும் பிடிச்சிருக்கு. எல்லாத்தையும் விட உள்ள இருக்க விஷயம் பிடிச்சிருக்கு. நான் ஆரம்பத்தில் உங்க டெம்ப்ளேட்ல கவனம் கூட செலுத்தினதில்லை. உங்க நாஸ்டால்ஜியா போஸ்ட்ஸ் தான் ஈர்த்துது. அதால இதுல நான் வாய் மூடிக்கிறேன்:):):)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நாங்கள்ளாம் கருத்து கேக்கலன்னாலே சொல்லுவோம் கேட்டா பின்ன அடுக்கிடமாட்டமா?

பைத்தியக்காரன் சொன்ன இந்த வரி .. என் கருத்தும் கூட.. \\பழைய முதல் டெம்ப்ளேட்டில் சட்டென ஈர்த்த உங்கள் இன்னர் பர்சனாலிட்டி, வேறு எதிலும் எதிரொலிக்கவில்லை. //

ஆனா சின்னம்மணி சொல்ற \\ இந்த டெம்ப்ளேட் எல்லாம் டூப்பு, அடுத்து புதுசா வர்ற டெம்ப்ளேட்தான் டாப்பு.
// இதுவும் டாப்பு தான்.. :)


@ வல்லி .. :)) கலக்கிறீங்களே வல்லி..

Dr.எம்.கே.முருகானந்தன் said...

"கேர்ல்ஸ் தான் daappu, பாய்ஸ் எல்லாம் டூப்பு!" பப்புவின் நல்ல தத்துவ முத்து

ராமலக்ஷ்மி said...

புதுசு நைஸ். ஆனாலும் அந்த பழசு தனி ஈர்ப்பு என்பது உண்மைதான்.

பப்பு வேன் பாடல்தான் daappu, அதுக்கு முன்னே இந்த டெம்ப்ளேட் பிரச்சனையெல்லாம் டூப்பு!

லெமூரியன்... said...

ஒ...! இப்போ புள்ளைங்க பக்கத்துல பசங்க உக்காரலாமா???? :-( எங்க காலத்துல அதுதான் எங்களுக்கு அதிகபட்ச பள்ளிக் கால தண்டனை...! :-(

நசரேயன் said...

//எப்போவும் பாய்ஸ் பக்கத்துலே பாய்ஸ்தான் உட்காரணும்..கேர்ல்ஸ் பக்கத்துலே கேர்லே வரணும்//

ஆமா.. ஆமா