Sunday, November 01, 2009

பிடித்தவர்; பிடிக்காதவர் - தொடர் விளையாட்டு

தொடர்பதிவுக்கு அழைத்த மாதவராஜ் அவர்களுக்கு நன்றி!

1.அரசியல் தலைவர்
பிடித்தவர் :கக்கன்
பிடிக்காதவர்: ஜெயலலிதா

2.எழுத்தாளர்
பிடித்தவர் : அம்பை
பிடிக்காதவர் : ரமணிச்சந்திரன்

3.கவிஞர்
குறிப்பிட்ட கவிஞரென்று தேடிப்பிடித்து படிப்பதில்லை..கண்ணில் பட்ட கவிதைகளை வாசிப்பதோடு சரி!

4.இயக்குனர்
பிடித்தவர் : தங்கர் பச்சான்,
பிடிக்காதவர்: பாக்யராஜ்

5.நடிகர்
பிடித்தவர் : லொள்ளு சபா மனோகர்
பிடிக்காதவர் : எம்ஜிஆர்

6.நடிகை
பிடித்தவர் : சுவலஷ்மி
பிடிக்காதவர் : நமீதா

7 . இசையமைப்பாளர்
பிடித்தவர் : ஏ.ஆர்.ரஹ்மான்
பிடிக்காதவர் : அப்படி யாரும் இல்லை..மற்றவர் இசையமைப்பில் ஏதாவது ஒரு பாடலாவது பிடித்துதானே இருக்கிறது!

இந்த தொடரை தொடர அழைப்பது,

க.பாலாசி
சஞ்சய்
தீஷூ
பா.ராஜாராம்

42 comments:

க.பாலாசி said...

அழைப்பிற்கு மிக்க நன்றி...ஏற்கிறேன்.

//4.இயக்குனர்
பிடித்தவர் : தங்கர் பச்சான்,
பிடிக்காதவர்: பாக்யராஜ் //

பாக்யராஜ்யை பிடிக்காதா? சரி ரைட்டு....

rapp said...

//
பிடிக்காதவர் : ரமணிச்சந்திரன்

3.கவிஞர்
குறிப்பிட்ட கவிஞரென்று தேடிப்பிடித்து படிப்பதில்லை..கண்ணில் பட்ட கவிதைகளை வாசிப்பதோடு சரி! //

கிர்ர்ர்ர்.............இங்க நீங்க ஒரு மிகப்பெரிய கவிதாயினியப் பகைச்சுக்கிட்டீங்க:):):) அடுத்த ஏப்ரல் மாசம் இதோட விளைவ அனுபவிக்கப் போறீங்க:):):)

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//5.நடிகர்
பிடித்தவர் : லொள்ளு சபா மனோகர்
பிடிக்காதவர் : எம்ஜிஆர்
//

கேள்வியே பிடிக்காதது போல தோன்றுகிறது

rapp said...

//
5.நடிகர்
பிடித்தவர் : லொள்ளு சபா மனோகர்
பிடிக்காதவர் : எம்ஜிஆர்//
என்னோட பேவரிட் கூட. அதெப்படி மனோகரப் புடிக்குற உங்க நகைச்சுவை உள்ளத்துக்கு வாத்தியாரை புடிக்கல?
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........

பா.ராஜாராம் said...

பிடித்த அரசியல் தலைவர்,கக்கன்!

great!

நன்றி,பப்பு ஆச்சி!

☀நான் ஆதவன்☀ said...

செல்லாது செல்லாது....எங்க பாதி கேள்விய காணோம்?

☀நான் ஆதவன்☀ said...

பிடிக்காத பதிவர்ல ‘ராப்’ பேரு வரும்னு நினைச்சேன். ஜஸ்ட் மிஸ். அந்த கேள்வியவே விட்டுடீங்களே :)

ஹுஸைனம்மா said...

சந்தனமுல்லை,

இந்தப் பக்கத்தில் இருக்கும் "மகளிர் சக்தி"யில் எப்படி என் பதிவைச் சேர்ப்பது என்ற விவரம் தருவீர்களா? நன்றி.

☀நான் ஆதவன்☀ said...

//5.நடிகர்
பிடித்தவர் : லொள்ளு சபா மனோகர்
பிடிக்காதவர் : எம்ஜிஆர்
//

அவ்வ்வ்வ்வ் உங்களுக்கு ரெண்டு கைய நல்லா மேலயும் கீழயும், 360 டிகிரியிலும் அசைச்சு அசைச்சு பேசினா தான் பிடிக்கும் போல

☀நான் ஆதவன்☀ said...

//6.நடிகை
பிடித்தவர் : சுவலஷ்மி
பிடிக்காதவர் : நமீதா//

கடும் கண்டனங்களுடன் நான் வெளிநடப்பு செய்கிறேன்

நமீதா பேரவை
சார்ஜா கிளை

rapp said...

//பிடிக்காத பதிவர்ல ‘ராப்’ பேரு வரும்னு நினைச்சேன்.//

பொறந்தநாளும் அதுவுமா உங்கள வாழ்த்தி கவிதைப் பாட வெச்சிடாதீங்க சொல்லிட்டேன்:):):) இல்லாத கேள்விய வெச்சு இன்னா கேம் இது?:):):)

ஜீவன் said...

பிடிக்காதவர் : நமீதா

;;;(((((((

☀நான் ஆதவன்☀ said...

//பொறந்தநாளும் அதுவுமா உங்கள வாழ்த்தி கவிதைப் பாட வெச்சிடாதீங்க சொல்லிட்டேன்:):):)//

அவ்வ்வ்வ்வ்... கவிதையா? இதுக்கு என்னைய ரெண்டு அடி அடிச்சிரலாமே..

S.A. நவாஸுதீன் said...

பிடிக்காதவர்கள் பட்டியலில் எல்லாரும் சரி. நமீதாவுமா? ரொம்ப தைரியம்ங்க உங்களுக்கு. உங்க அப்ரோச் ரொம்ப பிடிச்சிருக்கு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

இப்பத்தான் முதல் பிடித்தவர் பிடிக்காதவர் விளையாட்டு படிக்கிறேன். ஆதவன் சொல்றது பாத்தா எதோ கேள்வி எல்லாம் மிஸ் ஆகி இருக்காப்ப்ல இருக்கு..

☀நான் ஆதவன்☀ said...

இப்ப தான் மாதவராஜ் பதிவை படிச்சுட்டு வரேன். அதுக்கு முன்னே ஆதி பதிவை படிச்சதால வந்த குழப்பம் ஹி ஹி ஹி :)

எனிவே எக்ஸ்ட்ராவா ரெண்டு மூனு பிட்டு சேர்த்தே போட்டிருக்கலாம் பாஸ் :)

ப்ரியமானவள் said...

பெண்களே.. இதுவும் சரிதானே


பெண்களின் முன்னேற்றம் உண்மையா
http://priyamanavai.blogspot.com/2009/11/blog-post.html

ஆயில்யன் said...

ம்ம் சட்டுபுட்டுன்னு பதில் சொல்லிட்டீங்க குட்!

பதிவுல கும்மியடிக்க முடியாத காரணத்தால் பின்னூட்டம் பக்கம் வந்து குந்திக்கிறேன் :)

ஆயில்யன் said...

// rapp said...

//
பிடிக்காதவர் : ரமணிச்சந்திரன்

3.கவிஞர்
குறிப்பிட்ட கவிஞரென்று தேடிப்பிடித்து படிப்பதில்லை..கண்ணில் பட்ட கவிதைகளை வாசிப்பதோடு சரி! //

கிர்ர்ர்ர்.............இங்க நீங்க ஒரு மிகப்பெரிய கவிதாயினியப் பகைச்சுக்கிட்டீங்க:):):) அடுத்த ஏப்ரல் மாசம் இதோட விளைவ அனுபவிக்கப் போறீங்க:):):)//

அதுக்குள்ள இன்னொரு பதிவுல உங்களை புகழ்ந்துடுவோம்ல ! :)))))

ஆயில்யன் said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//5.நடிகர்
பிடித்தவர் : லொள்ளு சபா மனோகர்
பிடிக்காதவர் : எம்ஜிஆர்
//

கேள்வியே பிடிக்காதது போல தோன்றுகிறது//


அதே !

அதே!!

SanjaiGandhi™ said...

ஏனுங்கம்ணி இப்டி கொடுமை படுத்தறிங்க? என்னைப் பிடிக்காதவர்கள் ஏராளமாக இருக்கலாம். எனக்குப் பிடிக்காதவர் என்று யாருமே இல்லை. 100% பிடிக்காதவர் என்று யாருமே இல்லீங்க.. சில காரணங்களுக்காக மட்டுமே பிடிக்காதவங்க சிலர் இருக்காங்க. அதை சொல்ல முயற்சிக்கிறேன்.

ஏற்கனவே ஏகப் பட்ட அழைப்புகள் பெண்டிங்க்ல இருக்கு. :(

SanjaiGandhi™ said...

//6.நடிகை
பிடிக்காதவர் : நமீதா//

என்ன தைரியம் இருந்தா என் தலைவியைப் பிடிக்காதுன்னு சொல்லி இருப்பிங்க? :((((((((

Deepa (#07420021555503028936) said...

அசத்திட்டீங்க.
//பிடிக்காதவர் : அப்படி யாரும் இல்லை..மற்றவர் இசையமைப்பில் ஏதாவது ஒரு பாடலாவது பிடித்துதானே இருக்கிறது!
//

அருமை!

டம்பி மேவீ said...

"5.நடிகர்
பிடித்தவர் : லொள்ளு சபா மனோகர்"


amanga enakkum romba pidikkum...
mgr padangalai pidikkum ana mgr yai pidikkathu


"எழுத்தாளர்
பிடித்தவர் : அம்பை"

avangalai naan padithathu illainga.. ethavathu avangaloda book suggest pannunga


"நடிகை
பிடிக்காதவர் : நமீதா"

grrrrrrrrrrrrrr........


japan nattu kavithai thogupai vasithu parunga... konjam nalla irukkum

பீர் | Peer said...

பகுதி பதில்கள் ஒத்துப்போகிறது. :)

சந்தனமுல்லை said...

நன்றி க.பாலாசி!

ராப், நன்றி..;)))) மன்னிச்சுடுங்க..எனக்கு பிடிக்கும்..பிடிக்கும்..அந்த உலக மாக கவிஞரை பிடிக்கு..ம்!!


நன்றி சுரேஷ்! நிஜமாவே எனக்கு லொள்ளு சபா மனோகரை பிடிக்குங்க...அவரு கையை வளைச்சு, கண்ணை உருட்டி பேசறதை மறக்க முடியுமா!! அஞ்சு ரூபா தாளை அஞ்சு ரூபான்னானாம், பத்து ரூபா தாளை பத்து ரூபான்ன்னாம்ம்..அந்த கதையால்ல இருக்கு!! :-))

ராப், ஒரு வேளை தத்தி மாதிரி பேசுவதால் இருக்கலாம்..அல்லது அந்த மேக்கப்...!!

சந்தனமுல்லை said...

நன்றி ராஜாராம்!

நன்றி ஆதவன்...தப்பான லிஸ்ட்லே வந்து தேடுறீங்கன்னு நினைக்கறேன்..;-))

ஹுசைனம்மா, பொன்ஸ் என்னும் பதிவருக்கு தெரியப்படுத்த வேண்டும்!

ஆதவன்..;-))

ஜீவன், நன்றி!


நன்றி நவாஸூதீன்!

சந்தனமுல்லை said...

நன்றி முத்து...இப்போ க்ளியர் ஆகியிருக்குமே!!

நன்றி ப்ரியமானவள்..!! தங்கள் இடுகையை வாசிக்கிறேன்.

நன்றி ஆயில்ஸ், எனக்கு நிஜமாவே லொள்ளு சபா பிடிக்கும்..அதுலே மனோகர் தான் ஃபேவரிட்!! நம்புங்கப்பா!! பத்து மணி பஸ்ஸு பத்து மணிக்கு வந்துதான்...எட்டு மணி பஸ்ஸூம் எட்டு மணிக்கும் வந்துதாம்...அது மாதிரி இல்லே இருக்கு...:)))


நன்றி சஞ்சய், :)) கண்டிப்பா எழுதுங்க..!

சந்தனமுல்லை said...

நன்றி டம்பி மேவீ - ஹை ஃபை!! அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, காட்டில் ஒரு மான், வற்றும் ஏரியின் மீன்கள்...

கானா பிரபா said...

ஆகா இன்னொரு சங்கிலித் தொடரா, ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்யப்பா இப்பவே கண்ணக் கட்டுதே

நிஜமா நல்லவன் said...

:)

பித்தனின் வாக்கு said...

பிடிக்காதவர் : நமீதா


பிடிக்காதவர் : எம்ஜிஆர்


????????????....

கோவி.கண்ணன் said...

//1.அரசியல் தலைவர்
பிடித்தவர் :கக்கன்
பிடிக்காதவர்: ஜெயலலிதா
//

சமூக நீதி காத்த வீரங்கனையை பிடிக்கலையா ?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:)

மாதவராஜ் said...

அழைப்பினை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.

//1.அரசியல் தலைவர்
பிடித்தவர் :கக்கன்//
சந்தோஷமாக இருந்தது. இப்படிப்பட்ட தலைவர்கள் பேசப்படுவதற்கோ, நினைக்கப்படுவதற்கோ இந்த தொடர் விளையாட்டு பயன்பட்டதே போதுமுங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லா எழுதியிருக்கீங்க

கலையரசன் said...

படார் படார் ன்னு மண்டையில் போட்ட மாதிரி சொல்லிட்டீங்க!
உங்க தைரியம் எனக்கு பிடிச்சிருக்கு!!

டம்பி மேவீ said...

என்னங்க... இன்று higginbothams ல அம்பை ஓட புக்ஸ் தேடி பார்த்தேன்.. கிடைக்கவில்லை. எந்த பதிப்பாளர் ன்னு சொன்ன நல்ல இருக்கும்

சந்தனமுல்லை said...

ஒன்று க்ரியா...மற்றவை காலச்சுவடு என்ற நினைவு..anyindian.com-ல் தேடி பாருங்களேன்.ஆன்லைனில் கிடைக்கலாம்!

டம்பி மேவீ said...

@ சந்தனமுல்லை
"ஒன்று க்ரியா...மற்றவை காலச்சுவடு என்ற நினைவு..anyindian.com-ல் தேடி பாருங்களேன்."

அப்படியா... ரொம்ப நன்றிங்க.

"ஆன்லைனில் கிடைக்கலாம்!"

ஸ்கேல், பென்சில் வைத்து கோடு போட்டு தேடி பார்க்கிறேன்.

சின்ன அம்மிணி said...

பாக்யராஜைப்பிடிக்காதா, அவர் ஒகேன்னு தான் நினைக்கிறேன்.

மத்தபடி ரமணி சந்திரன் இரண்டு கதை படிச்சேன். ஒரே மாதிரி இருந்தது. அதுக்கப்பறம் படிக்கறதில்லை.

Divyapriya said...

நமீதா சங்கத்து ஆளுங்க கிட்ட ஜாக்கரதையா இருங்க :))

ஸ்வர்ணரேக்கா said...

//பிடிக்காதவர் : ரமணிச்சந்திரன்//
எனக்கும்...

//சின்ன அம்மிணி said
ரமணி சந்திரன் இரண்டு கதை படிச்சேன். ஒரே மாதிரி இருந்தது. //

டக்குன்னு உண்மையை சொல்லிட்டீங்க