Tuesday, November 10, 2009

கொஞ்சம் இஷ்டம் : கொஞ்சம் கஷ்டம்


”ஒருநாளைக்கு ஒரு சாக்லேட்தான் சாப்பிடனும்,
நிறைய சாக்லேட் சாப்பிட்டா காலையிலே
எழுந்திருக்கும்போது
பல் கொட்டிடும்” என்றதை நம்பி
நீ
கடையிலேயே விட்டுவந்த
அந்த ஒற்றை சாக்லேட்
என் நினைவில்
உறுத்திக்கொண்டிருக்கிறது
இன்னமும்!


41 comments:

G3 said...

Aachi.. this is too bad.. Ungalukku nenachaalae pall ellam kottidum.. poi thoongunga ponga :P

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

"//கொஞ்சம் இஷ்டம் : கொஞ்சம் கஷ்டம்.//" நான் கூட தலைப்ப பார்த்து தெலுங்கு பட விமர்ச்சனமோன்னு நினைச்சேன்.

இது கூட நல்லா தான் இருக்கு

தாரணி பிரியா said...

அடுத்த ரவுண்டு and now ஆரம்பிச்சுடும் பாருங்க முல்லை.


பப்புவை ரொம்ப ஏமாத்தறீங்க :)

ஆயில்யன் said...

வாங்கி கொடுக்கமாட்டேன்னுசொல்லிட்டு ஃபீலிங்கா !

பப்பு எடுத்துக்கமாட்டாங்க ரொம்ப சீரியா கவலைப்படவேண்டாம் அதுக்காக நீங்க :) (ஜூனூன் ட்மில் பேசி காலம் பல ஆச்சு!)

தியாவின் பேனா said...

என் பொண்ணு இப்ப சாக்லேட் சாப்பிடுவதில்லை .

நல்ல பதிவு.

நசரேயன் said...

சாக்லேட் மில்க் ட்ரை பண்ணுங்க

சின்ன அம்மிணி said...

"ஒருநாளைக்கு ஒரு பதிவுதான் படிக்கணும்,
நிறைய இடுகைகள் படிச்சா காலையிலே
எழுந்திருக்கும்போது
தலைய பிச்சுகிட்டு முடி கொட்டிடும்” என்றதை நம்பி
நீ
தமிழ்மணத்தில் படிக்காமல் விட்டுவந்த
அந்த கற்றை இடுகைகள்
என் நினைவில்
உறுத்திக்கொண்டிருக்கிறது
இன்னமும்!


ஆச்சி புடிங்க, எதிர் கவுஜ

rapp said...

இருங்க இருங்க, இனி ஒரு நாளைக்கு அர பிளேட் பிரியாணிதான் சாப்டலாம்னு சட்டம் கொண்டுவரவெச்சிடுறோம். அப்போ தெரியும் பப்புவோட கஷ்டம்.

பா.ராஜாராம் said...

இப்பதான் உங்கள் முதல் கவிதை வாசிக்கிறேன் முல்லை."கவிதையுமா?"என கேட்க தோன்றி பல்லை கடித்து கொண்டேன்.(ஹி..ஹி..அமித்தம்மா,ஏற்கனவே என்னை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்!)மிச்ச எட்டு கவிதைகளையும் வாசிக்க வைத்தது,இந்த முதல் கவிதை!பப்புஆச்சியும்,அமித்தம்மாவும் எந்த பால் போட்டாலும் அடிச்சு ஆடுறாங்க பங்காளி...சூதானம்!

காமராஜ் said...

நினைவை நெருடும் கவிதை.
நல்லாருக்கு சந்தன முல்லை

நசரேயன் said...

அலுவலத்திலே ஒரு இடுகை தான் படிக்கணும்,
நிறைய இடுகைகள் படிச்சா வேலை
போய்டும் என்றதை நம்பி
நீ
தமிழ்மணத்தில் படிக்காமல் விட்டுவந்த
அந்த கற்றை இடுகைகள்
என் நினைவில்
உறுத்திக்கொண்டிருக்கிறது
இன்னமும்!

எதிர் கவுஜ ரெண்டு

டம்பி மேவீ said...

semaiya irukkunga.....

ella parent kkum vara feeling ithu..

பித்தனின் வாக்கு said...

என்ன பண்ணலாம் உங்களை. அண்டப் புளுகி என்று விருது தரலாமா?. பரவாயில்லை குழந்தையின் உடல் நலம் கருதித்தான் சொன்னீர்கள். நல்லது.
பப்புவிற்க்கு கேக்கே கலக்காத மில்க் சாக்லேட்கள் அதிகம் தரலாம், தப்பில்லை. லோ ஃபேட் மற்றும் கலோரி கம்மியான சாக்லேட்களை வாங்கிக் கொடுக்கவும். நன்றி.

நிஜமா நல்லவன் said...

:)

Rajasurian said...

ஏன் சாக்லேட் மீதான ஆசை இன்னமும் உங்களை விடலியா :)

எதிர் கவிஜகளும் சூப்பர்

பிரியமுடன்...வசந்த் said...

//சின்ன அம்மிணி said...
"ஒருநாளைக்கு ஒரு பதிவுதான் படிக்கணும்,
நிறைய இடுகைகள் படிச்சா காலையிலே
எழுந்திருக்கும்போது
தலைய பிச்சுகிட்டு முடி கொட்டிடும்” என்றதை நம்பி
நீ
தமிழ்மணத்தில் படிக்காமல் விட்டுவந்த
அந்த கற்றை இடுகைகள்
என் நினைவில்
உறுத்திக்கொண்டிருக்கிறது
இன்னமும்!//

அதுக்குள்ளயேவா?
ச்சூப்பரு எதிர் கவிதை...

கலையரசன் said...

விடுங்க.. விடுங்க.. பக்கத்து கடையில வாங்கிக்கலாம்!!
:-)

☀நான் ஆதவன்☀ said...

பாஸ் ஒன்னுங்கீழ ஒன்னு போட்டிருக்கருதால இது கவிதை லிஸ்ட்ல வருமா?

☀நான் ஆதவன்☀ said...

இதெல்லாம் அராஜகம் பாஸ். உங்களையெல்லாம் மூனு நாள் முன்னால உட்கார வச்சு மூக்கு பிடிக்க நாங்க பிரியாணி சாப்பிட்டா தெரியும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

”ஒருநாளைக்கு அரை ப்ளேட் ஆம்பூர் பிரியாணிதான் சாப்பிடனும்,
நிறைய ப்ளேட் சாப்பிட்டா
இரவிலே வயிற்றுக்குள்
ஆடு கத்தும்” என்றதை நம்பி
நான்
சாப்பிடாமலே மிச்சம் வைத்த
ஒரு ப்ளேட் பிரியாணியின் ஓரம்
ஒட்டிக்கொண்டிருந்த
ஒரு பருக்கையும், மிச்ச எலும்புகளும்
என் நினைவில்
உறுத்திக்கொண்டிருக்கிறது
இன்னமும்!

எதிர் கவுஜ மூணு பாஸ் ;))))))

பப்பு இங்க வந்து கொஞ்சம் பாரு ;)

எறும்பு said...

கவிதைனா புரியகூடாதுனு சொல்லுவாங்க... இது எனக்கு புரியுது.... அப்ப இது கவிதை இல்லையா???

;-))))

SanjaiGandhi™ said...

:))

அமுதா said...

ம்... இப்ப அடுத்த "And now..." ஆரம்பிச்சுடுச்சு போல இருக்கே!!!

ராமலக்ஷ்மி said...

பாவம் இல்லையா பப்பு:(?

இஷ்டமாய் கஷடத்தை ஆயில்யன் ஆரம்பிச்சு வச்சுட்டாரே இங்கே:))) :
http://kadagam.blogspot.com/2009/11/blog-post_11.html

S.A. நவாஸுதீன் said...

வாங்கி கொடுக்கமாட்டேன்னுசொல்லிட்டு ஃபீலிங்கா !

அதானே!

Jayashree said...

What a good food for thought !!
Early Suppression may Rebound when children gain independance

Education is a must indeed.But it sh'd bring awareness than to inculcate fear. Chocolate is not that bad after all if eaten in moderation. Dental hygeine could be reminded:))
A child should be allowed to live as a child without being robbed of her/his small legitimate pleasures. Anything in moderation !!( either informations or incentives ).
If this guilt is from a real life experience Ms Mullai , what a beautiful insight it might have given you!! Well done !!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஒ இன்னுமா நம்பறா பப்பு? :(

பல் கொட்டினா பல்செட் வச்சாவது மிட்டாய் சாப்பிடலாம்ன்னு சொல்லிக்குடுத்துடலாமா அவளுக்கு..

க.பாலாசி said...

//கடையிலேயே விட்டுவந்த
அந்த ஒற்றை சாக்லேட்
என் நினைவில்
உறுத்திக்கொண்டிருக்கிறது//

:((

லெமூரியன் said...

ஆத்தாடி FLASH BACK'laam கெளப்பி உடுறீங்களே :-( மறுபடியும் சின்னப் பையனா மாறி அம்மாவோட சேலையைப் பிடித்துக் கொண்டலைந்த அந்த நாட்க்களுக்குள் போயிடலாமானு ஆச வருது :-)

கானா பிரபா said...

அட விடுங்க பாஸ் பப்புவே பீல் பண்ணலையாம், சொல்லச் சொன்னாங்க

பாட்டி பேரவை
சிட்னி

கானா பிரபா said...

ஆச்சி
உங்க கையால பட்சணம் செஞ்சு பப்புவுக்கு பரிமாறணும்னு பாட்டி கட்டளை அல்லது பணிஷ்மெண்ட்

பாட்டி பேரவை
சிட்னி

கும்க்கி said...

:-))

அன்புடன் அருணா said...

அடிச்சு ஆடுங்க!

மணிநரேன் said...

ஆஹா....இத்தனை எதிர்கவிதைகள் வருமென்று முதலில் படித்தபோது நான் எதிர்பார்க்கவில்லை...

கவிதை...:)
எதிர்கவிதைகள்...:) :)

Divyapriya said...

பின்னாடி சொத்தை பல் வந்து அவஸ்த்தை படறதை விட இது எவ்வளவோ பரவாயில்லை முல்லை...நீங்க நடத்துங்க :)

மாதவராஜ் said...

அழகான சொற்சித்திரம். இப்படி உங்களால் நிறைய எழுதமுடியும் என நினைக்கிறேன். தொடருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா அழகு கவிதை!! பப்பு மாதிரியே.
உங்க தீர்மானம் நல்லதே.
அதே மாதிரி உங்களுக்குப் பிடிச்ச ஒரு விஷயத்தையும் பாதியா சாப்பிடுங்க:))))
may be one coffee a day???

திகழ் said...

:-))

Deepa (#07420021555503028936) said...

சின்ன விஷயத்தை வைத்துச் சட்டென நெகிழ வைத்து விட்டீர்கள். அழகான கவிதை.

//பப்பு எடுத்துக்கமாட்டாங்க ரொம்ப சீரியா கவலைப்படவேண்டாம் அதுக்காக நீங்க :)//

இதுவும் சரிதான்! சீக்கிரமே இதுக்கெல்லாம் ஏதாச்சும் பதில் (பல்பு?!) ரெடி பண்ணிடுவா பாருங்க.

தீஷு said...

//"ஒருநாளைக்கு ஒரு பதிவுதான் படிக்கணும்,
நிறைய இடுகைகள் படிச்சா காலையிலே
எழுந்திருக்கும்போது
தலைய பிச்சுகிட்டு முடி கொட்டிடும்” என்றதை நம்பி
நீ
தமிழ்மணத்தில் படிக்காமல் விட்டுவந்த
அந்த கற்றை இடுகைகள்
என் நினைவில்
உறுத்திக்கொண்டிருக்கிறது
இன்னமும்!

//

கவுஜ சூப்பர்.. எதிர் கவுஜ சூப்பரோ சூப்பர்..

துபாய் ராஜா said...

இப்படியெல்லாம் எழுதறது தெரிஞ்சா பப்பு சாக்லேட் சாப்பிடறதையே விட்டுட்டுவாங்க...... :))