Friday, October 16, 2009

ஜங்கிள் ஜங்கிள்...

‘இன்னைக்கு ஆக்டோபர் 28தா' என்பதுதான், கடந்த இரண்டு மாதங்களாக காலையில் எழுந்ததும் எங்கள் காதுகளில் விழும் முதல்வாக்கியம். இம்முறை, 28ஆன் தேதி வாரநாட்களில் வருவதால் பிறந்தநாளைக் கொண்டாடுவது கொஞ்சம் சிரமம் என்று தோன்றியது. மேலும், அலுவலக நண்பர்களின் குழந்தைகளை பப்பு அறிந்திருக்கிறாளே தவிர அவர்களுடன் நேரம் செலவழித்ததில்லை. விளையாடியதில்லை. இதையெல்லாம் மனதில் கொண்டு கடந்த வாரயிறுதியில் ஒரு சிறிய கெட்-டூ-கெதரை(மினி பர்த் டே கொண்டாட்டம்) வைத்தாயிற்று - எனது அலுவலக நண்பர்கள் + குழந்தைகள். அதுவும்,'அனிமல்ஸ்லாம் வரணும் என் பர்த்டே'வுக்கு என்ற பப்புவின் கட்டளை என் ஆர்வத்தைத் தூண்ட ‘ஜங்கிள் பர்த்டே பார்ட்டி” யாக உருமாறியது.

அலங்காரங்கள் :

காட்டு மிருகங்கள் என்னவெல்லாம் வரவேண்டுமென்று பப்புவிடம் கேட்டு பட்டியலை தயாரித்தாயிற்று. யானை, புலி, சிங்கம், ஏப், ஹிப்போ, ரைனோ, ஜிராஃப், ஜீப்ரா, மான், ராபிட். இதற்கான பிரிண்ட் அவுட்களை இங்கே எடுத்துத் தர, பப்பு வண்ணம் தீட்டினாள். மஞ்சள் முயல், பிங்க் ஹிப்போ, ஆரஞ்சு ஒட்டகசிவிங்கி என்று உருமாறின. அவற்றை வெட்டி அறை முழுதும் ஒட்டினோம்.

சிறுத்தைகளின் கால் தடங்களையும், கரடியின் கால் தடங்களையும் சார்ட்டில் வரைந்து வெட்டி அவற்றையும் அறைக்கு செல்லும் வழியில் ஒட்டினோம்.பப்புவின் விலங்கு பொம்மைகளை அங்குமிங்கும் வைத்தோம். ஒரு குகையைச் சார்ட் பேப்பரால் செய்து புலியை அதன் வாயிலில் அமர வைத்தோம்.

இலைச்சரங்களை தி.நகர் பாண்டி பஜாரில் ரோட்டோரக்கடைகளில் வாங்கியிருந்தேன் (Thanks to Gowri!!).அதனை அறையில் தொங்க விட்டு, மூலைக்கொன்றாக பலூன்களை கட்டினோம். நிறைய ஸ்டிக்கர்களும் கிடைக்கிறது. நாங்கள் ஏற்கெனவே பிரிண்ட் எடுத்திருந்ததால் வாங்கவில்லை.

விளையாட்டுகள் / ஆக்டிவிட்டி

ஃபேஸ் பெயிண்டிங் : கோடுகள் அல்லது ஸ்பாட்கள் இருந்தால் விலங்குகளின் அடையாளம்தானே. சிறுத்தைதோல் போல வட்டங்கள் கொண்ட உடையணிந்த பப்புவிற்கு புலி மீசையும் , கறுப்பு- வெள்ளையுமாக உடையுடுத்திருந்த யாழினிக்கு முகத்தில் வரிக்குதிரை,திவ்யாவிற்கு சிங்கக்கோடுகளும் போடப்பட்டது.

பேஸ் பெயிண்டிங் செய்ய விரும்பாதவர்களுக்கு word search (5 வயதினருக்கு மேல்), maze போன்றவைகளை பிரிண்ட் எடுத்து வைத்திருந்தேன். எல்லோருமே விருப்பமுடன் செய்தார்கள்.

வண்ணம் தீட்டப்பட்ட சிங்கத்திற்கு வால் ஒட்டும் விளையாட்டு: ஒவ்வொருவரின் கண்களையும் கட்டிவிட்டு வாலை சரியாக ஒட்டவேண்டும். streamers ஐ வெட்டி செய்த வாலை எல்லா குட்டீஸுமே ஒட்டினார்கள் - மிகுந்த வரவேற்பை பெற்றது இது!

நான் யார்/Who am I ; மிருகங்களின் ஸ்டிக்கர்களை வாங்கியிருந்தேன். ஒவ்வொரு குழந்தையின் முதுகில் ஒட்டி விட வேண்டும். என்ன மிருகம் ஒட்டப்பட்டதென்று அந்த குழந்தையைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியும். ஆனால் சொல்லக் கூடாது. ஸ்டிக்கர் ஒட்ட்ப்பட்டிருப்பவர் தான் என்ன மிருகமென்று கேள்விகள் கேட்டு கண்டுபிடிக்கவேண்டும். ஆம்/இல்லையென்று பதில் வருவது போன்ற கேள்விகள்தான் கேட்க வேண்டும். உ.தா ; எனக்கு நீண்ட கழுத்து இருக்குமா ? எனக்குக் கொம்புகள் இருக்குமா? எனக்கு தும்பிக்கை இருக்குமா? என்பது போல!

இது பப்பு வயதினருக்கு இல்லையென்றாலும் வளர்ந்த குழந்தைகளுக்கு ஏற்ற விளையாட்டாக இருந்தது இது. வித்தியாசமான க்ளுவெல்லாம் கொடுத்தார்கள் குழந்தைகள்!! குழந்தைகளுக்குப் பிறகு நாங்களும் மீதி இருந்த ஸ்டிக்கரைக் கொண்டு விளையாடினோம்!!

உணவு : முதலில் பொம்மை பிஸ்கெட்(animal shapes) பரிமாறப்பட்டது. கேக், மசாலா கடலை, நேந்திரம் சிப்ஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ், மாசா மற்றும் ஆரஞ்சு ஜூஸ்.

இசை : வண்டின் ரீங்காரங்கள்,ஓடை சலசலப்புகள், மைனாவின் கூவல்கள் கொண்ட யூ ட்யூப் வீடியோவை டவுன்லோடு செய்து சத்தத்தை மட்டும் ஒலிப்பரப்பினோம். ஸ்பீக்கர்கள் இல்லாததாலும், குழந்தைகளின் இசை அதனை விட இனிமையாக இருந்ததாலும் காட்டின் இசை அவ்வளவாக கவனம் பெறவில்லை.

இசை - 1

இசை -2மிருக முகமூடியையும் அணிந்துக்கொண்டு அவற்றைப்போல போஸும் கொடுத்தார்கள்!!
வந்திருந்த எல்லாக் குழந்தைகளும் காட்டுமிருகமொன்றை தம்மோடு அழைத்துச் சென்றார்கள், அதனோடு நல்ல நினைவுகளையும் சுமந்து சென்றிருப்பார்களென நம்புகிறேன்!!

நீங்கள் எங்களோடு செலவழித்த நல்ல நேரங்களுக்காகவும், பப்புவிற்கு நல்ல நினைவுகளை பரிசளித்த குட்டீஸ்களுக்கும் அவர்களது அம்மாக்களுக்கும் நன்றிகள். குட்டீஸோடு குட்டீஸாக இணைந்து சூழலை கலகலப்பாக்கிய கவிதா விருந்தினர்களையும் நன்றாக கவனித்துக்கொண்டார். கவிதாவிற்கு ஸ்பெஷல் நன்றிகள். பப்புவிற்கு கவிதா ஆண்ட்டியை வீட்டுக்கு அனுப்ப மனமேயில்லை! உங்களனைவரையும் இந்தவாரமும் எதிர்பார்க்கிறாள்..:-))

பெரும்பாலான ஐடியாக்களை இணையத்திலிருந்தே பெற்றேன். பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு அருமையான ஐடியாக்களை அள்ளித்தந்த இணையத்திற்கு நன்றி! உதவிய தளங்கள் -
இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே

16 comments:

துபாய் ராஜா said...

வித்தியாசமான விழா.

அழகான பகிர்வு.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பப்புவிற்கும் வாழ்த்துக்கள்.

சிங்கக்குட்டி said...

//முகமூடியையும் அணிந்துக்கொண்டு அவற்றைப்போல போஸும் கொடுத்தார்கள்!!//

சூப்பர் மற்றும் அருமையான படம்.

செல்வநாயகி said...

good job mullai.

SanjaiGandhi said...

பப்புவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

ஆக, எங்களுக்கு பெரிய ட்ரீட் இருக்கு எங்க ஊர்ல.. :)

குடுகுடுப்பை said...

பிறந்த நாள், தீபாவளி வாழ்த்துகள்.

மங்களூர் சிவா said...

wow nice!

பப்புவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

நசரேயன் said...

பப்புவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

தமிழன்-கறுப்பி... said...

எனக்கு பழைய ஞாபகங்கள் வருது... கூடவே ஒரு பள்ளிக்கூட காலத்து நாடகமும்...

பா.ராஜாராம் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா,பப்பும்மா!

அருமையான அம்மா!

மாதேவி said...

ஜங்கிள் சூட்டிகள் சூப்பர்.

பப்புவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

ஆயில்யன் said...

//பொம்மை பிஸ்கெட்//


ஹைய்ய்ய்ய் பொம்ம பிஸ்கெட்டு எனக்கு நொம்ப்ப்ப்ப்ப்ப் புடிக்குமே!!! :))

பித்தனின் வாக்கு said...

பப்புவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இப்பதான் பப்புவின் படத்தை அருகாமையில் பார்க்கின்றேன். எனது ஆசி மற்றும் வாழ்த்துக்கள். பப்புவின் முக லட்சனப்படி அவள் கலைகளில் சிறந்து விளங்குவாள். பாட்டு அல்லது நடனம்(எது அவளுக்கு பிடிக்குதோ)அதை கற்றுக் கொடுத்தால். நல்ல பெயரும் புகழும் பெறுவாள். என் சாய்ஸ் பாட்டுதான்.

ஒரு டிப்ஸ்.: பப்புவிற்கு இட்டிலிப் பூ என்று சொல்லும் செண்டுப்பூவை உலர்த்திக் காயவைத்து, நல்லா காய்ந்தவுடன் அதனுடன் கஸ்தூரி மஞ்சள், பயத்தம் பருப்பு,(பாசிப்பருப்பு) மற்றும் இலுப்பை பொடி சேர்த்து அரைத்துக் குளிக்க வைத்தால் நல்ல பொழிவான நிறத்தையும் சாப்ட்டான தோலையும் பெறுவாள். (இது குழந்தைகளுக்கு மட்டும்). முயற்ச்சிக்கவும். நன்றி. எங்க அண்ணா பெண்ணு பப்பு மாதிரிதான் இருக்க ஆதலால் சொன்னேன், சொன்னதில் தவறு இருப்பின் மன்னிக்கவும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரொம்பவும் அழகா வித்தியாசமா யோசிச்சு செஞ்சிருக்கீங்க முல்லை

வாழ்த்துக்கள்

Deepa (#07420021555503028936) said...

veLacheri kaattu vaasigaLukku kkNagar piRaNigaLin anbu vaazththukkaL.

aduthha thiruvizhaavukku avasiyam varugiRome.

GROOOOWWWL!!!

Great theme Mullai. I am sure the kids and their moms would have enjoyed it very much. Congrats!

SanjaiGandhi said...

நான் கேட்ட ட்ரீட் குடுக்காம சொல்லாமக் கூட எஸ்கேப் அகிட்டிங்க இல்ல?. உடனடியாக உங்க கையெழுத்து போட்ட ப்ளாங் செக் அனுப்பலைனா பல ரகசியங்கள் அம்பலப் படுத்தப்படும் என்பதை கோவை பதிவர்கள் சங்கம் சார்பில் எச்சரிக்கிறேன். :)

கோமதி அரசு said...

முல்லை,
நேற்றுத்தான் ஊரிலிருந்து வந்தேன்,
பப்புவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வாழ்வில் எல்லா வளங்களும்,நலங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.