Thursday, October 15, 2009

நீங்க யாரோட அம்மா?

நீங்க யாரோட அம்மா?

குறிஞ்சி மலரோட அம்மா.


நீங்க அர்ஷித் மம்மி இல்லையா? ஏன்?

பே!!

வெண்மதி அம்மா இல்லையா? அவங்க வீட்டிலே இருக்காங்களா?!

ஆமா..

whose mother aunty?

குறிஞ்சிஸ் மதர்.


“ஹாய் ஆண்ட்டி' - மஷ்ரூம் கட்டடித்த குட்டிப்பெண்.

ஆமாம். பப்புவின் பள்ளியில் கடந்த செவ்வாயன்று அப்சர்வேஷன். காலை 9.30 - 10.30.

சரியாக அப்போதுதான் பிரேயர் முடிந்து அவரவரது பாயை எடுத்து விரித்துக்கொண்டிருந்தனர்.
பரபரப்பாக இருந்தது போல இருந்தது. அறைவாயிலில் நின்றுக்கொண்டிருந்தேன். பப்பு என்னை கவனிக்கவில்லை. பாயை எடுத்துக்கொண்டு அவளது இடத்திற்கு வந்தாள். என்னை பார்த்துவிட்டு ஒரு ப்ளாங்க் லுக். காலையில் அவளுக்குச் சொல்லியிருந்தேன்,அவளது பள்ளிக்கு வரப்போவதாக. என்னைக் கடந்துச்சென்ற வெண்மதி ஒரு மூலையில் அமர்ந்து மணிகளை கோர்க்க ஆரம்பித்தாள். வர்ஷினி கொஞ்சம் தள்ளி கட்டைகளை அடுக்கிக் கொண்டிருந்தாள். ஆண்ட்டி காட்டிய பாயில் அமர்வதற்குள், மேலிருக்கும் கேள்விகளில் முதல் மூன்றைக் கேட்டு முடித்திருந்தான் எனக்கெதிரில் இருந்த சிறுவன்.

பப்பு போரிங்கை செய்ய ஆரம்பித்தாள். அதிகமாக வேடிக்கை, கொஞ்சம் வேலை - என்னைப் போலவே!! பிங்க டவர். கட்டைகள் அடுக்கினாள். அவற்றில் கடைசியிலிருக்கும் மூன்று சிறிய துண்டுகளை ஒன்றாக எடுத்துச் செல்ல தலைப்பட்டாள். ‘ஒன் பை ஒன்' என்று ஆண்ட்டி சொன்னதும் ஒவ்வொன்றாக வைத்துவிட்டு வந்தாள். அதன்பின் ஆல்ஃபபெட் பிக்சர்ஸ். பாயை சுருட்டி எடுத்துக்கொண்டு என்னருகில் வந்து, ‘வழி' என்றாள். அங்கே வழி தாராளமாகத்தான் இருந்தது. கொஞ்சம் நகர்ந்து வழி விட்டதும் வைத்துவிட்டு திரும்ப வந்து ‘காலை எடு, வழி' என்றாள். ராகிங்?!!

டெஸ்க் (சோக்கி?!) கொண்டு வந்து வைத்து சிறிய பாயை விரித்துவிட்டு உப்புத்தாள் எழுத்துகளை செய்தாள். ஆண்ட்டி பப்புவிடம் வந்துவிட அடுத்தது பிங்க் லெட்டர்ஸ் ஆரம்பமாகியது. பின் க்ளோப். அவளாக செய்வது எதையுமே என்னிடம் காட்டியபடி “ஓகேவா” என்றுச் சொல்லிக்கொண்டிருந்தாள், எனக்குச் செய்துகாட்டுபவள் போல. நாப்கின் ஃபோல்டிங், அதுவும் எனக்குச் சொல்லிக்கொடுத்தபடியே!! வர்ஷினி என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே இருந்தாள். அவ்வப்போது பப்புவும் அவளும் ரகசியம் பேசிக்கொண்டார்கள்.

திடீரென வகுப்பறைக்குள் ஒரு தும்பியோ வண்டோ வந்துவிட எல்லோரும் அதை துரத்திக்கொண்டு ஓடினர். வண்டு பயத்தில் பறந்தேவிட்டது!! யாரும் எதற்கும் பயந்த மாதிரியே தெரியவில்லை. அதாவது அதைத் துரத்திக்கொண்டு ஓடுவதற்கோ அல்லது வண்டு வந்த செய்தியை பகிர்ந்துக்கொள்வதற்கோ! எட்டாம் வகுப்பில், ஜன்னல் வழியே மரக்கிளையைப் பார்த்துக்கொண்டிருந்த சசிப்பிரியாவை, பாரங்கைமா, கோலன்கைமா நடத்திய அறிவியல் ஆசிரியர் திட்டியது நினைவுக்கு வந்தது.

அதற்குள், எனக்கெதிரில் இருந்த அதே சிறுவன் ஃப்லோடிங் ஆக்டிவிட்டியை கொண்டு வர நான்கைந்து பேர் அவனைச் சுற்றிக்கொண்டனர். அவனுக்காக மேட்டை விரித்து வைக்க உதவினர்.அவன் மிக பெருமிததுடன், ஒவ்வொன்றாக ஃப்லோட்டிங் என்று சொல்லிக்கொண்டு தண்ணீர் இருந்த கிண்ணத்தில் போட்டான். எல்லோரும் “ஹே ஃப்லோட்டிங்'ப்பா என்று சொல்லிக்கொண்டனர். முடிந்ததும் திரும்ப எடுத்து வைத்துவிட்டு தண்ணீருக்குள் கைவிட்டு கைகளை சுழற்றினான். பின் கைகளை உதறி சிரித்துக்கொண்டு விளையாட்டாக மற்றவர் மேல் நீர்த்திவலைகளைத் தெளிக்க எல்லோருக்கும் சிரிப்பு. தெரியாமல் தண்ணீர் கைகளிலிருந்து பட்டுவிட்டால் திட்டும் பப்புவும் அங்கே சிரித்துக்கொண்டிருந்தாள். 'என்ன சத்தம், அவரவர் பாயில் வேலை செய்யுங்கள்' என்ற ஆண்ட்டியின் குரல் கேட்டதும் அமைதி.

பப்பு பக்கத்தில் யாருடன் சேலஞ்ச் விடலாமென்று கட்டைவிரலை நீட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தாள். பக்கத்தில் வந்த இன்னொரு சிறுமி பப்புவை நோக்கி சேலஞ்ச் விட அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள் பப்பு. எங்கிருந்தோ வந்த இன்னொரு சிறுவன், தண்ணீரில் விளையாடிய சிறுவனுக்கு வந்து சேலஞ்ச் விட இருவரும் சிரித்தார்கள். சம்பந்தமேயில்லாமல் திடீரென்று வேறு யாருக்காவது 'கா' விட்டுக்கொள்கிறார்கள். உதடு மட்டும் அசைகிறது, கை 'கா' விடுகிறது. ஒன்றுமட்டும் புரிகிறது...அவளது பள்ளியில் எந்தநேரமும் யாராவது யாருடனாவது சேலஞ்ச் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்கள், அதேவேகத்தில் 'கா'வும்!! என்னால் மட்டும் அவ்வளவு எளிதாக 'கா'வும், சேலஞ்சும் விட முடியுமென்றால்....!!!

33 comments:

கதிர் - ஈரோடு said...

நல்லாத்தான் கவனிச்சிருக்கீங்க

சின்ன அம்மிணி said...

//என்னால் மட்டும் அவ்வளவு எளிதாக 'கா'வும், சேலஞ்சும் விட முடியுமென்றால்....!!!//

இந்த பஞ்ச் லைன் சூப்பர்.

கடைசி வரைக்கும் நீங்க யாரோட அம்மான்னு அந்தக்குட்டிபையன் கிட்ட சொல்லவே இல்லை போலிருக்கு.:)

காமராஜ் said...

அருமை, வாழ்த்துக்கள் பப்புவுக்கு.

கோமதி அரசு said...

//அவளது பள்ளியில் எந்த நேரமும் யாராவது யாருடனாவது சேலஞ்ச

கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்கள்,
அதே வேகத்தில்’ கா’வும் என்னால் மட்டும் அவ்வள்வு எளிதாக ‘கா’வும் சேலஞ்சும் விட முடியுமென்றால்..//

முல்லை, அரசியல்வாதிகளால் தான் முடியும். அவர்கள் தான் குழந்தைகள் மாதிரி நாள் தோறும் யாராவது யாருடனாவது சேலஞ்சும் காவும் பழமும் விட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

rapp said...

//எட்டாம் வகுப்பில், ஜன்னல் வழியே மரக்கிளையைப் பார்த்துக்கொண்டிருந்த சசிப்பிரியாவை, பாரங்கைமா, கோலன்கைமா நடத்திய அறிவியல் ஆசிரியர் திட்டியது நினைவுக்கு வந்தது//

இது உங்களுக்கே ஓவரா தெர்ல?:):):)
எட்டாங்கிளாஸ் பொண்ணும், நாலு வயசுகூட ஆகாத கொழந்தைங்களும் ஒண்ணா? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...................

rapp said...

//என்னை பார்த்துவிட்டு ஒரு ப்ளாங்க் லுக். காலையில் அவளுக்குச் சொல்லியிருந்தேன்,அவளது பள்ளிக்கு வரப்போவதாக. என்னைக் கடந்துச்சென்ற வெண்மதி ஒரு மூலையில் அமர்ந்து மணிகளை கோர்க்க ஆரம்பித்தாள். வர்ஷினி கொஞ்சம் தள்ளி கட்டைகளை அடுக்கிக் கொண்டிருந்தாள். ஆண்ட்டி காட்டிய பாயில் அமர்வதற்குள், மேலிருக்கும் கேள்விகளில் முதல் மூன்றைக் கேட்டு முடித்திருந்தான் எனக்கெதிரில் இருந்த சிறுவன்.//

அதே அதே. போன மாசம் எங்கக்கா வீட்டுக்கு போனப்போ, நாங்க ரெண்டு பேரும் இதுக்கு போனோம்.
மத்த பசங்க எல்லாம் வந்து பாசமா 'ஹாய் மிசஸ் வில்கின்சன்' அப்டின்னா, இவன் மட்டும் போய் கெத்தா கண்டுக்காத மாதிரி ஒக்காந்துட்டான். கடைசி வரை அப்பப்போ எங்க மனுஷனா மதிச்சதே மத்த பசங்கதான்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........

rapp said...

//அங்கே வழி தாராளமாகத்தான் இருந்தது. கொஞ்சம் நகர்ந்து வழி விட்டதும் வைத்துவிட்டு திரும்ப வந்து ‘காலை எடு, வழி' என்றாள். ராகிங்?!//

நீங்க மட்டும், யாரு பெத்த புள்ளயோ, தனியா நின்னு இந்த கத்து கத்துதேன்னு ஒரு மானசாட்சயில்லாம, உங்க பிரெண்டை வேடிக்கப் பாக்கவிடலன்னு கரம் வெச்சு இப்போ வரை சொல்லிக் காட்டுறீங்க இல்லையா, அதான் இப்டில்லாம் ராகிங் நடக்குது. இதுவும் வேணும் இன்னமும் வேணும்:):):)

rapp said...

//எந்தநேரமும் யாராவது யாருடனாவது சேலஞ்ச் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்கள், அதேவேகத்தில் 'கா'வும்!! என்னால் மட்டும் அவ்வளவு எளிதாக 'கா'வும், சேலஞ்சும் விட முடியுமென்றால்//

கிர்ர்ர்ர்ர்ர்..............நைசா நீங்க பொறுமையின் சிகரம்னு சொல்றீங்களா? என்னா டெக்னிக்கா சொல்றீங்க:):):)

rapp said...

//
குறிஞ்சி மலரோட அம்மா.//

பாருங்க இங்கயும் ஒரு சூப்பர் பன்ச் வெச்சிருக்கீங்க:):):) அதாவது நீங்க ஒரு அபூர்வமான தாய்ன்னு பீத்திக்கறீங்க தானே?:):):) ஹி ஹி ஹி:):):)

சென்ஷி said...

சூப்பர்!

பித்தனின் வாக்கு said...

அது என்னங்க விட முடியும் என்றால், அதுதான் கா விடறதுக்குனே இரங்கமணி இருக்காரே. சாலஞ் வேணா பக்கத்துவீட்டு அம்மா கிட்ட கோலங்கள் சீரியலை முதல் எபிஸேட்ல இருந்து கதை சொல்ல முடியுமானு கேளுங்க. பப்புவின் பள்ளி வாழ்க்கை அருமை. ஆமா அங்கன நீங்க ஏன் போய் எட்டிப் பார்க்கின்றிங்க. இது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது.

சென்ஷி said...

//rapp said...

//எட்டாம் வகுப்பில், ஜன்னல் வழியே மரக்கிளையைப் பார்த்துக்கொண்டிருந்த சசிப்பிரியாவை, பாரங்கைமா, கோலன்கைமா நடத்திய அறிவியல் ஆசிரியர் திட்டியது நினைவுக்கு வந்தது//

இது உங்களுக்கே ஓவரா தெர்ல?:):):)
எட்டாங்கிளாஸ் பொண்ணும், நாலு வயசுகூட ஆகாத கொழந்தைங்களும் ஒண்ணா? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...................//

அட ஆமாமுல்ல... நான் இதை யோசிக்கவே இல்லை. ராப் அக்கா நலமா இருக்கீங்களா?!

Anonymous said...

தொடர்பற்ற பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். நான் ஒரு பிரியாணி வெறியன்(இப்ப மன்னிசுருப்பீங்களே :)).I will be passing by Ambur next week. Where is the best Biryani available in Ambur these days? I have heard about a Salaam Hotel near Railway Station. But, that appears to be closed down permanently(See I have done my research :)).

சந்தனமுல்லை said...

கதிர், சின்ன அம்மிணி, காமராஜ், கோமதி அரசு, ராப், சென்ஷி,பித்தனின் வாக்கு - அனைவருக்கும் நன்றிகள்!!

பிரியாணி பற்றிக் கேட்ட அனானி நண்பருக்கு : ஆம்பூரில் ரயில்வெ ஸ்டேஷன் செல்லும் ரோடிலேயே 'ஸ்டார் பிரியாணி' என்று கடை இருக்கும். அங்கே காலை 11.30 மணி முதல் மதியம் 1.00 மணிக்குள் சென்றால் கிடைக்கும். மாலை 3.00 மணிக்குப் பிறகு திரும்பவும் கடை திறக்கும். ஸ்டார் பிரியாணி கடையிலேயே உணவருந்த இடம் இருக்குமாவென்று தெரியாது. பொதுவாக டேக் அவேதான்!

இன்னொரு ரெஸ்டாரென்ட் - ஹோட்டல் காஜா. இங்கும் அருமையாக இருக்கும். ஸ்டாரில் கிடைக்கவில்லையென்றால் இங்கே வாங்கலாம்.

Anonymous said...

Thanks for the Biryani Tip. Will try Star.

ambi said...

@கதிர், சின்ன அம்மிணி, காமராஜ், கோமதி அரசு, ராப், சென்ஷி,பித்தனின் வாக்கு

- பேசாம நீங்களும் பிரியாணி பத்தியே சந்தேகம் கேட்டு இருக்கலாம். :))


@ச.மு, வெஜிடபிள் பிரியாணியில் போட காளிபிளஃவர் சிறந்ததா? ரொட்டி துண்டுகள் சிறந்ததா? :p

சரி கடுப்பாகாதீங்க, ஒரு பின் நவீனத்துவமா குழந்தைகள் உலகத்தை நல்லா அப்சர்வ் பண்ணி எழுதி இருக்கீங்க. :))

(எப்படியும் என் பிரியாணி கேள்விக்கு தான் பதில் சொல்லப் போறிங்க)

☀நான் ஆதவன்☀ said...

நல்லா தான் கவனிச்சிருக்கீங்க :)

பாலராஜன்கீதா said...

//..அவளது பள்ளியில் எந்தநேரமும் யாராவது யாருடனாவது சேலஞ்ச் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்கள், அதேவேகத்தில் 'கா'வும்!!//
http://www.online-literature.com/tolstoy/2894/

சிங்கக்குட்டி said...

//என்னால் மட்டும் அவ்வளவு எளிதாக 'கா'வும், சேலஞ்சும் விட முடியுமென்றால்//

நல்ல பதிவு, அருமையான ஆசை :-)

ஆயில்யன் said...

/அதிகமாக வேடிக்கை, கொஞ்சம் வேலை - என்னைப் போலவே!!/

ரசித்தேன் பாஸ் ! மம்மியை போலவே மீ அப்படின்னு க்யூட் சிரிப்பு ஒண்ணு கொடுத்திருப்பாங்களே பப்பு! :)))

ஆயில்யன் said...

//பள்ளியில் எந்தநேரமும் யாராவது யாருடனாவது சேலஞ்ச் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்கள், அதேவேகத்தில் 'கா'வும்!!//

அட நான் கூட பள்ளிக்கூடத்தில படிக்கும்போது டெய்லி ஒரு க்ரூப் ஃபார்ம் பண்ணுவோமே பாஸ் ! :))))

ஆயில்யன் said...

//என்னால் மட்டும் அவ்வளவு எளிதாக 'கா'வும், சேலஞ்சும் விட முடியுமென்றால்....!!!//

முதல்ல பெரிய பாண்டிக்கு பின்னே எனக்கா பாஸ்? (ஆவலுடன்/வருத்ததுடன்)

கானா பிரபா said...

ஆம்பூர் பிரியாணி குறித்து விரிவான விளக்கம் அளித்து சிறப்பித்த ஆச்சியை பாராட்டுகிறோம் - பாட்டி பேரவை சிட்னி

கானா பிரபா said...

ன்னருகில் வந்து, ‘வழி' என்றாள். அங்கே வழி தாராளமாகத்தான் இருந்தது. கொஞ்சம் நகர்ந்து வழி விட்டதும் வைத்துவிட்டு திரும்ப வந்து ‘காலை எடு, வழி' என்றாள். ராகிங்?!! //

வாழ்க வளமுடன்

கானா பிரபா said...

ஆயில்யன் said...

//பள்ளியில் எந்தநேரமும் யாராவது யாருடனாவது சேலஞ்ச் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்கள், அதேவேகத்தில் 'கா'வும்!!//

அட நான் கூட பள்ளிக்கூடத்தில படிக்கும்போது டெய்லி ஒரு க்ரூப் ஃபார்ம் பண்ணுவோமே பாஸ் ! :))))//

றிப்பீட்டேஏஏஏஎ

ஆயில்யன் said...

/கடையிலேயே உணவருந்த இடம் இருக்குமாவென்று தெரியாது. பொதுவாக டேக் அவேதான்!
//

பாஸ் ஆச்சி, ஜோதிகா ஸ்டைல்ல பிர்யாணி பார்சல் வாங்கிட்டுவந்து மொட்டை மாடியில் திங்கிற குரூப்பா?
:)))

விக்னேஷ்வரி said...

என்னை பார்த்துவிட்டு ஒரு ப்ளாங்க் லுக். //

ஹாஹாஹா...

அதிகமாக வேடிக்கை, கொஞ்சம் வேலை - என்னைப் போலவே!! //

ஆச்சி கிட்ட இருந்து கத்துக்க வேண்டியதெல்லாம் சரியா கத்துக்கிட்டா பப்பு.

ராகிங்?!! //

Sweet Pappu.

உங்களுக்கு நல்லா பொழுது போயிருக்கு அங்க.

மாதவராஜ் said...

//என்னை பார்த்துவிட்டு ஒரு ப்ளாங்க் லுக். //

//அதிகமாக வேடிக்கை, கொஞ்சம் வேலை - என்னைப் போலவே!!//

// ‘வழி' என்றாள். அங்கே வழி தாராளமாகத்தான் இருந்தது. கொஞ்சம் நகர்ந்து வழி விட்டதும் வைத்துவிட்டு திரும்ப வந்து ‘காலை எடு, வழி' என்றாள். ராகிங்?!! //

// வண்டு பயத்தில் பறந்தேவிட்டது!!//

பிர்மாதமாக, இயல்பாக நகைச்சுவை வெடிக்கிறது....

//தெரியாமல் தண்ணீர் கைகளிலிருந்து பட்டுவிட்டால் திட்டும் பப்புவும் அங்கே சிரித்துக்கொண்டிருந்தாள்.//

கிளாஸிக்!!!!

நசரேயன் said...

//என்னால் மட்டும் அவ்வளவு எளிதாக 'கா'வும், சேலஞ்சும் விட முடியுமென்றால்....!!!//
முகில் என்ன பாடு பாடுவாருன்னு தெரியுமான்னு சொல்லுறீங்களா?

மங்களூர் சிவா said...

/
நசரேயன் said...

//என்னால் மட்டும் அவ்வளவு எளிதாக 'கா'வும், சேலஞ்சும் விட முடியுமென்றால்....!!!//
முகில் என்ன பாடு பாடுவாருன்னு தெரியுமான்னு சொல்லுறீங்களா?
/

ஹா ஹா


குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

//பப்பு போரிங்கை செய்ய ஆரம்பித்தாள். அதிகமாக வேடிக்கை, கொஞ்சம் வேலை - என்னைப் போலவே!! பிங்க டவர். கட்டைகள் அடுக்கினாள். அவற்றில் கடைசியிலிருக்கும் மூன்று சிறிய துண்டுகளை ஒன்றாக எடுத்துச் செல்ல தலைப்பட்டாள். ‘ஒன் பை ஒன்' என்று ஆண்ட்டி சொன்னதும் ஒவ்வொன்றாக வைத்துவிட்டு வந்தாள். அதன்பின் ஆல்ஃபபெட் பிக்சர்ஸ். பாயை சுருட்டி எடுத்துக்கொண்டு என்னருகில் வந்து, ‘வழி' என்றாள். அங்கே வழி தாராளமாகத்தான் இருந்தது. கொஞ்சம் நகர்ந்து வழி விட்டதும் வைத்துவிட்டு திரும்ப வந்து ‘காலை எடு, வழி' என்றாள். ராகிங்?!!//

நல்ல sense of humour முல்லை!பிரியாணி,குசும்பு வேற...

கலக்கல்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அழகான பகிர்வு முல்லை

தீஷு said...

சூப்பர் முல்லை.. நல்லா கவனிச்சிருக்கீங்க.. தீஷு ஸ்கூலில வெறும் feedback மட்டும் சொல்லியிருக்காங்க.. தீஷு ரொம்ப சேட்டைப் பண்ணுறானு :-)))