The Big Splash - ஒரு முதலை/அலிகேட்டர் தானாக குளிப்பதற்கு என்னென்ன பொருட்களை எடுத்துக்கொண்டு தயாராகிறது என்பது தான் கதை. இது முதல் லெவலில் நான்கு புத்தகங்களில் ஒன்று. மூன்று வயதுக்கு மேல் உபயோகப்படுத்தலாம். இந்த லெவல் பொதுவாக படம் பார்த்து பெயரை சொல்வது, அடுத்த என்ன பொருளை எடுத்துக்கொள்ளும் என்று கதையை தொடர உதவும். கதை முடிந்ததும் செயல்பாடுகள். எளிதான் maze, நிறைய படங்கள் (டெலிபோன், பிரஷ், டவல், காலணி முதலியன) கொடுத்து குளிக்க நாம் எதையெல்லாம் பயன்படுத்துவோம் என்று குழந்தைகள் கண்டறிவது முதலிய விளையாட்டுகள் உள்ளன.
The Little egg - இதுவும் எளிதாக கதைதான். ஆனால் லெவல் இரண்டு. இது சற்றே பெரிய கதை, அதிக வார்த்தைகள் + ரைமிங் வார்த்தைகள், பல விலங்குகளின் வசிப்பிடங்கள் முதலானவற்றை கதையினூடாக சொல்லிச் செல்கிறது. ஒரு சிறிய முட்டை அதன் கூட்டிலிருந்து பல இடங்களைக் கடந்து, பல விலங்குகளை சந்தித்து தனது கூட்டுக்கே திரும்ப வருவதுதான் கதை. இதிலும் கதைக்குப்பின் பல செயல்பாடுகள் உண்டு. கதையில் நிகழும் பல சம்பங்களை கொடுத்து வரிசைக்கிரமமாக சொல்லுதல் போன்ற செயல்பாடுகள் - இது 4 வயதினருக்கு மேல் ஏற்றது.
மற்ற இரண்டு புத்தகங்கள் மேல் பப்புவிற்கு இப்போது விருப்பம் இல்லை. சற்றே கடினமானதாக இருக்கலாம். அதனால் இந்த இரண்டு புத்தகங்கள்தான் இப்போது வாசிக்கிறோம். அந்த புத்தகங்களை வாசிக்கும்போது அவற்றை பற்றி பதிவிடுகிறேன்.
Dr.Seuss-இன் புத்தகங்கள் சிலவற்றை வாங்கினேன். இது 5 அல்லது 6 வயதுக்கு மேல் வாசிக்க பழக்குவதற்கு மிகுந்த உபயோகமாக இருக்கும். ஃபன்-க்கு நான் கியாரண்டி!! tongue twister மாதிரியான வாக்கியங்களில் அமைந்த புத்தகம். இப்போது நாங்கள் நாலு பக்கங்கள் வரைதான் வாசிக்கிறோம்....வாசித்துக்காட்டும் போதே பப்புவுக்கு ஜாலியாக இருக்கிறது. அவளும் கூடவே சொல்ல முற்படும்போது இன்னும் ஜாலியாக இருக்கிறது.
மொத்தத்தில் பயனுள்ள செலவு!! :-)
வாங்குவதற்கு இங்கே செல்லவும்.
5 comments:
பப்புவுக்கு நல்ல டைம் பாஸ் :)
நன்று ஒரு சிறந்த தாயாரக பப்புக்கு வழி நடத்துகின்றீர்கள். அப்படியே நம்ம பீர்பால், தெனாலிராமன் கதைகளும் சொல்லிக் கொடுங்கள்.
நன்றி.
நல்ல பகிர்வு ரொம்ப நல்ல அன்னை
:-)வாழ்த்துக்கள்.
Dr.Suess புக்கெல்லாம் ரிமைங்காகவே படிக்கலாம் முல்லை... இந்தியா எடிசன் வெப்சைட் புது தகவல்.. நன்றி
//5 அல்லது 6 வயதுக்கு மேல் வாசிக்க பழக்குவதற்கு மிகுந்த உபயோகமாக இருக்கும்.
//
அப்ப கண்டிப்பா எனக்கு உபயோகமா இருக்கும் நான் படிக்க
Post a Comment