Sunday, October 25, 2009

டோராவை யார் கண்டுபிடிப்பது?

முன்பெல்லாம், வாங்குகிற எல்லாவற்றிலும் - பள்ளிக்கு கொண்டு செல்லும் பையிலிருந்து அணிந்துக்கொள்கிற உள்ளாடை முதல் எல்லாவற்றிலும் டோரா வேண்டும் பப்புவிற்கு. இப்போது டோரா க்ரேஸ் அவ்வளவாக இல்லை. சுட்டி டீவியில் இப்போது டோராவிற்கு பதிலாக ஹெய்டி என்ற தொடர் ஒளிபரப்பப்படுகிறது. பப்புவிற்கு அவ்வளவாக இஷ்டம் இல்லை. அதுவும் இல்லாமல் ”உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா?”, “ஒரு தடவை சொன்ன புரியாதா” என்று (அனிமேஷன்) குட்டீஸ் பேசுவதை சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனாலேயே சுட்டி டீவியை தாண்டி சென்றுவிடுகிறோம். எப்படியானாலும் இது போன்றவற்றை கற்றுக்கொள்ளத்தான் போகிறார்கள்...ஆனால் அது தானாக நடக்கும்போது நடக்கட்டுமே..எதற்கு நாமே படம் போட்டு காட்டவேண்டும்?!!

”போடா லூசு, நீ என்ன லூசா” என்று பேசுவது போல வருவது செட்ரிக் என்று நினைக்கிறேன். பப்புவும் அதை ஓரிரு முறைகள் சொல்லி என்னிடம் நன்றாக அடி வாங்கினாள். அதிலிருந்து, அவளுகு கோபம் வந்தால் அல்லது நாங்கள் அவளை வேனுக்கு அவசரப்படுத்தினால் “லூசு சொல்லிடுவேன், சொல்லட்டா” என்று கேட்கிறாள். ஜீபூம்பா என்ற தொடரை பார்த்து “ஆக்கு பாக்கு வெத்தலை பாக்கு” கற்றுக்கொண்டு ”ஒன் பேரு கொய்யா” என்கிறாள். உண்மையில் அதில் ”ஆக்கு பாக்கு வெத்தலை பாக்கு, டைகர் செய்யப்போறான் மேஜிக்' என்று வரும். பள்ளியில் இப்படித்தான் விளையாடுவார்களாம். நாங்கள் ‘ஒன் பேரு கொய்யா” என்று திருப்பிச் சொன்னால் கோபித்துக்கொள்கிறாள். ”அவங்கவங்களே அவங்கவங்களுக்கு சொல்லிக்கணும்” என்று அழுகை வேறு!!

இவற்றையெல்லாம் பார்க்கும்போது டோராவே பரவாயில்லையென்று தோன்றுகிறது. அட்லீஸ்ட் ஹார்ம்லெஸ். புயல்மேகம், பாலம், சாக்லேட் ஏரி, ஐஸ்கிரீம் மலை, எனக்கொரு ஐடியா இருக்கு - இவையே தேவலை என்று தோன்றுகிறது!! பெஞ்சமின் தி எலிஃபெண்ட், கைப்புள்ள - பப்புவிற்கு இஷ்டம். ஆனால் ஒளிப்பரப்படும் நேரம் சாதகமாக இல்லை. பப்புவை சாப்பிடவைப்பதற்கு கதைப்புத்தகங்களே இப்போது பெரிதும் உதவுகின்றன. டோரா ஐ மிஸ் யூ!! :-)

20 comments:

Deepa (#07420021555503028936) said...

//லூசு சொல்லிடுவேன், சொல்லட்டா”//

:-))) ஹா ஹா ஹா! பப்பு குடுத்த எத்தனாவது பல்புன்னு கணக்கு வெச்சிருக்கீங்களா ஆச்சி? விழா எடுக்கணும்!


/பப்புவை சாப்பிடவைப்பதற்கு கதைப்புத்தகங்களே இப்போது பெரிதும் உதவுகின்றன.//

இது சூப்பர்!

ஹுஸைனம்மா said...

சுட்டி டி.வி.யின் இந்த மாதிரி அலம்பல்கள் தாங்க முடியாமல்தான் அதை கட் பண்ணி விட்டோம். டோரா - என் மகனின் தமிழ் ஆசிரியர். ஆனால், செட்ரிக்கினால் டோராவையும் இழக்க நேரிட்டது.

பீர் | Peer said...

அட ஆமாங்க.. அதிலும் டோரா கேள்வி கேட்கும் போது, வீட்டிலிருக்கும் குழந்தைகள் பதில் சொல்கிறார்கள்.. பேக் பேக், அங்க இருக்கு அங்க இருக்கு என்பதாக.

இது நல்ல பழக்கமான்னு தெரியல ;(

சின்ன அம்மிணி said...

:) சுட்டி டீவி கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்குத்தானோ என்னவோ.

மணிநரேன் said...

//...“லூசு சொல்லிடுவேன், சொல்லட்டா” ../

ஹா ஹா ஹா...செல்லமான மிரட்டலோ???

//”அவங்கவங்களே அவங்கவங்களுக்கு சொல்லிக்கணும்” //

ம்...

பித்தனின் வாக்கு said...

என்னங்க நீங்க குழந்தையை அடிக்கின்றிர்களா. இதுமிகவும் தவறான பழக்கம். அடிக்கும் வழக்கத்தை கைவிடவும். இது தவறு என்றும், பெரியவர்களை அவ்விதம் கூறக்கூடாது எனவும் நயமாக கூறித்திருத்தவும். குழந்தையை நீங்கள் அடித்தால் அது கண்டிப்பு இல்லை. உங்களுடைய இயலாமையின் காரணமாக வரும் கோபம், என்பதை உணருங்கள். ( ஆமா அவ உங்களை சரியாதான சொல்லிருக்கா, ஹாஹா)

வல்லிசிம்ஹன் said...

அன்பு முல்லை,
லிட்டில் பேர், இது மாதிரி( little bear)
சிடி வாங்கிப் போடுங்களேன். எங்க கிஷா இப்போ அதைப் பார்த்துட்டு நிறைய நல்ல விஷயங்களைக் கத்துக்கிறான். முக்கியமா சாப்பாடு உள்ள போகிறது. பப்புக்கு என் அன்பு முத்தங்கள்.

கதிர் - ஈரோடு said...

//சுட்டி டீவியை தாண்டி சென்றுவிடுகிறோம்.//

இன்னும் நாங்க தாண்டவேயில்லை

Manchari said...

Dora is one of the best show for kids. No harmful words or actions are not there in Dora. Instead teaches some good manners like saying thank you, hello etc. I don't know why chutti tv stopped this. My daughter is also big fan of Dora. Now we don't want chutti tv. Nothing else is good. Nick channel still broadcast Dora. But in the day time. School kids cannot watch on that time.

velji said...

டோரா கதைகள் நன்றாகவே இருந்தன.என் தம்பி மகள் எழுத்துக்களையும்,எண்ணுவதற்கும் அதைப்பார்த்தே கற்றாள்.ஒருமுறை தூங்கி எழுந்த அவளிடம் உன் அப்பா,அம்மாவை காணவில்லை என்று சொன்னபோது உடனே டோரா அக்காவிடம் சொல்லனும் என்று சொன்னாள்.

குழந்தைகள் பற்றிய சிறு கவிதைக்கு

http://jeyaperikai.blogspot.com/2009/10/blog-post_26.html

அமிர்தவர்ஷினி அம்மா said...

We too miss Dora

கோமதி அரசு said...

முல்லை,
பஞ்சதந்திர கதைகள் சொல்லுங்கள் அதில் புத்திமான் பலவான் கதையை நீங்கள் நடித்துக் காட்டி குரலில் ஏற்ற இறக்கங்களுடன் சொன்னால் தன்னை மறந்து சாப்பிடுவாள்.

தெனாலி ராமன் கதை,அக்பர் பீர்பால் கதை எல்லாம் சொல்லலாம்.

☀நான் ஆதவன்☀ said...

கோமதி அம்மா பின்னூட்டத்தை வழிமொழிகிறேன். நடித்து காட்டி கதை சொல்வது நல்லா தான் இருக்கும் :)

டோராவுக்கு சின்னவங்க மட்டுமல்ல பெரியவர்களும் ரசிகர்களா இருக்காங்காங்க போல..

கபிலன் said...

ஹ்டி, பல வருடங்களுக்கு முன்பு ஆங்கிலத் தொடராக தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். நல்லா தான் இருக்கும். மொழிபெயர்ப்பு செய்ததில் சொதப்பி இருக்க வேண்டும் : (

SanjaiGandhi said...

அன்னைக்கு விஜி வீட்ல பப்பு சொன்னதும் இந்த ஹெய்டி கதை தானா?. கொஞ்சம் பொறுப்பான அம்மாவா இருப்பிங்க போல.. :)

டோரா புஜ்ஜி படபங்கள் இணையத்திலோ , டிவிடியாகவோ கிடைத்தால் காண்பிக்கலாமே.

SanjaiGandhi said...

//பித்தனின் வாக்கு said...

என்னங்க நீங்க குழந்தையை அடிக்கின்றிர்களா. இதுமிகவும் தவறான பழக்கம். அடிக்கும் வழக்கத்தை கைவிடவும். இது தவறு என்றும், பெரியவர்களை அவ்விதம் கூறக்கூடாது எனவும் நயமாக கூறித்திருத்தவும். குழந்தையை நீங்கள் அடித்தால் அது கண்டிப்பு இல்லை. உங்களுடைய இயலாமையின் காரணமாக வரும் கோபம், என்பதை உணருங்கள். ( ஆமா அவ உங்களை சரியாதான சொல்லிருக்கா, ஹாஹா)//

தவ்சண்ட் ஹண்ட்ரட் டைம்ஸ்( எதிர் வீட்டு பூஜா பாப்பா இப்டி தான் சொல்வா) ரிப்பீட்டு.. :))

நசரேயன் said...

//. டோரா ஐ மிஸ் யூ!! :-)//

டோரா திரும்பி வார புது பொலிவோடு இன்னும் கொஞ்ச நாளிலே

sreeja said...

டோரா ஓகே தான் - ஆனா மத்த நிகழ்ச்சிகள் ?

அதனால மொத்தமா சுட்டியோட சேர்த்து அனிமேஷன் சேனல் எல்லாம் பிளாக் பண்ண வேண்டிய நிலை.

" உழவன் " " Uzhavan " said...

//“லூசு சொல்லிடுவேன், சொல்லட்டா”//
 
:-)) வீட்டில் ஒரே மிரட்டல்தானோ

பா.ராஜாராம் said...

வாசிப்பு நல்ல விஷயம் முல்லை.கூடுமான வரையில் t.v. யை தூர படுத்தி வாசிக்க பழக்குங்கள் பப்புவை.