Thursday, October 29, 2009

பப்புவின் ஸ்ட்ரைக்!

காலை ஆறரை. ஆறேகாலுக்கு பப்புவை எழுப்பியும் எழவில்லை. இன்னும் கொஞ்சம் தூங்கட்டும் என்று அதிகப்படியாக 10 நிமிடங்கள் கழித்து எழுப்பியும் சலனமேயில்லை.ஆழ்ந்த உறக்கம். ஒரு ஐந்து நிமிடங்கள் தாமதமானாலும், அதைத்தொடர்ந்து எல்லாக் காரியங்களுமே சடசடவென சரியக்கூடிய அபாயம் இருக்கும் காலை நேரம்! வேறு வழியில்லை...அரைக்குறை தூக்கத்திலிருந்த பப்புவை, முகில் தூக்கிக்கொண்டு வந்து குளியலறையில் விட ஒருவழியாக குளித்து முடித்தாயிற்று.

அடுத்து சாப்பிட வைக்கவும், பாலை குடிக்க வைக்கவும் ஒரு மெகா போராட்டம் காத்திருக்கிறது. பொதுவாக கொஞ்சம் விளையாட்டு அல்லது புத்தகங்கள் இருந்தால் சமாளித்துவிடலாம். ஆனால், இன்று எல்லாவற்றிலும் ஒரே ஒத்துழையாமை இயக்கம். குளித்துவிட்டு வந்தவுடன் சோபாவில் மறுபடியும் படுத்துக்கொண்டாள். முட்டையையும், தம்ளரில் தண்ணீரையும் எடுத்துக்கொண்டு சாப்பிட அழைக்கிறேன். விளையாடலாமா, புத்தகத்தை எடுத்து கதை சொல்லி என்று...ஒரு வாய் வாங்கியதை உள்ளே அடக்கிக்கொண்டிருந்தாள். 'மென்னு முழுங்கு' என்று கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி சொன்னதும் இரண்டாவது வாய் உள்ளே இறங்கியது. சிறிதுநேரத்திற்கு பின், 'நான் இன்னைக்கு ஸ்கூலுக்கு போகல' என்றாள். 'ஸ்கூலுல்ல ஆன்ட்டி பப்புவை தேடுவாங்க', 'அப்புறம் வர்ஷினி வெண்மதி எல்லாம் ஜாலியா விளையாடுவாங்க..நீயும் போய் விளையாட வேணாமா' என்று வழக்கமாகச் சொல்வதையெல்லாம் சொன்னேன். அவள்பாட்டுக்கு புத்தகத்தின் பக்கங்களையே திருப்பிக்கொண்டிருந்தாள்.

போகக்கூடாதென்று அவள் மனதிற்குள்ளாக முடிவு செய்துக்கொண்டிருப்பாளாயின், நான் என்ன செய்துவிட முடியும்? அழ அழ அவளை வேனுக்குள் திணிக்கலாம். அல்லது வண்டியில் கொண்டு போய் விடலாம். கடைசியில் ‘நாங்க இப்போ ஆபிஸ் கிளம்பி போய்டுவோம். நீ மட்டும் வீட்டிலே ஆயாக்கு துணையா இரு. ' என்று சொல்லிவிட்டு ‘ நான் ஆபிஸ் கிளம்பறேன்' என்று அவளை விட்டு வந்துவிட்டேன். அடுத்து முகில் களத்தில் இறங்க அப்போதும் ஒத்துழையாமை இயக்கமே! சிறிது நேரத்தில் என்னைத் தேடி வந்த பப்புவிடம் மெதுவாக குரலை எவ்வளவு மென்மையாக்க முடியுமோ அவ்வளவு மென்மையாக கேட்டுப்பார்க்கிறேன். 'நான் ஸ்கூலுக்குப் போகல' - திடமான நேரடியான பதில். அவளையே நான் பார்த்துக்கொண்டிருந்ததை அறிந்து, ‘ ஸ்கூல்லே ஆன்ட்டி அடிக்கறாங்க' பின்னர் ‘எல்லோரும் கா கா விடறாங்க' பின்னர் ‘ எல்லோரும் என்னை அடிக்கறாங்க'!

இதற்குமேல் நானும் ஒன்றும் சொல்லாமல் கிளம்புவதற்கான வேலைகளில் மூழ்கினேன். ஹாலுக்கு ஓடினாள்.முகிலிடமும் அதையே சொல்லியிருக்கிறாள். யாரும் அவளைக் கண்டுக்கொள்ளவில்லை. வேனும் கடந்துச் சென்றது. அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தாள். அணிந்திருந்த சீருடைகளெல்லாம் தரையில் கிடந்தன. வீட்டில் அவளை மட்டும் விட்டுச் செல்ல வேண்டும். பின்னர் இதுவே பழக்கமாகி விடுமா? ஒரு நாள் இருந்து பார்க்கட்டுமே! அவள் அவ்வளவு தீர்மானமாக இருப்பாளாயின் அதன் பலனை அனுபவித்துப் பார்க்கட்டுமே..ஆயாவால் சமாளிக்க முடியவில்லையெனில் பார்த்துக்கொள்ளலாம்.இந்த எண்ணங்களோடே நான் கிளம்பி வெளிவரும் சமயம் அவளாகவே பாலைக் குடித்திருந்தாள்.பள்ளிச்சீருடையை அணிந்துக்கொண்டு சாக்ஸ்/ஷூ வேண்டாமென்றுச் சொல்லிவிட்டு செருப்புகளை அணிந்துக்கொண்டிருக்கிறாள். முகில் பைக்கில் போகலாமாவென்றதும் சரியென்று எட்டேமுக்காலுக்கு கிளம்பிச் சென்றுவிட்டாள்.

சிலசமயங்களில், செல்லம் கொஞ்சி சமாளிப்பதையோ அல்லது மிரட்டுவதையோ விட ஒன்றும் செய்யாமல் அவரவர்போக்கில் விட்டுவிடுவதும் நல்ல பலன்களைத் தருகிறது!

25 comments:

☀நான் ஆதவன்☀ said...

//செல்லம் கொஞ்சி சமாளிப்பதையோ அல்லது மிரட்டுவதையோ விட ஒன்றும் செய்யாமல் அவரவர்போக்கில் விட்டுவிடுவதும் நல்ல பலன்களைத் தருகிறது! //

ம்ம்ம்ம் ரொம்ப சரி!

பிரபாகர் said...

//சிலசமயங்களில், செல்லம் கொஞ்சி சமாளிப்பதையோ அல்லது மிரட்டுவதையோ விட ஒன்றும் செய்யாமல் அவரவர்போக்கில் விட்டுவிடுவதும் நல்ல பலன்களைத் தருகிறது!
//

மிகச்சரி. நானும் இதைப்போல் உணர்ந்திருக்கிறேன்....

பிரபாகர்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இப்படி சொன்னா என்ன செய்வாங்கன்னு பாத்திருப்பாளோ? :))

கதிர் - ஈரோடு said...

சரிதான்

rapp said...

ஓய், நேத்தைக்கு பெரிய பிள்ளயாகிட்டளேன்னு பீலிங்க்ஸ் ஆப் டுவிட்டர் ஆனீங்க இல்லையா? பாருங்க அதோட பாசிடிவ் பக்கத்தை:):):)

rapp said...

இதுக்கு சரிவரலைன்னா மட்டும் நேத்தைக்கு நான் சொன்னதை செய்ங்க:):):)

நாமக்கல் சிபி said...

//இப்படி சொன்னா என்ன செய்வாங்கன்னு பாத்திருப்பாளோ? :))//

இருக்கும் இருக்கும்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

Troublesom three போய் Fearless Four ஆகியாச்சு இல்ல, இனிமே இப்படியும் இருப்பாங்களோ என்னவோ

:))))))))))

கோமதி அரசு said...

ஆம் முல்லை,நீங்கள் சொன்ன மாதிரி
சில நேரங்களில் அவரவர் போக்கில் விட்டு விடுவதும் நல்ல பலனை தரும் .

ஆயில்யன் said...

வன்மையான கண்டனங்கள்

அது என்ன போகலைன்னு முடிவு எடுத்த பெறவு யாரும் பேசாம இருந்திட்டா எல்லாம் சரியாயிடுமா?


பப்பு பேரவை
தோஹா கத்தார்

ராமலக்ஷ்மி said...

// ஒன்றும் செய்யாமல் அவரவர்போக்கில் விட்டுவிடுவதும் நல்ல பலன்களைத் தருகிறது!//

இதுதான் சரி முல்லை.

r.selvakkumar said...

என்ன ஆச்சரியம்? கிட்டத்தட்ட இதே டாபிக்கை இன்று மாலை 3 மணிக்கு என் நண்பரிடம் டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தேன்.

ஜக்கிவாசுதேவ் குழந்தை வளர்ப்பை பற்றி கூறியதை எனது நண்பர் நினைவு கூர்ந்தார்.

//செல்லம் கொஞ்சி சமாளிப்பதையோ அல்லது மிரட்டுவதையோ விட ஒன்றும் செய்யாமல் அவரவர்போக்கில் விட்டுவிடுவதும் நல்ல பலன்களைத் தருகிறது! //

அனுபவம்தான் பெரிய ஆசான். நான், நீங்கள், உங்கள் பப்பு, எங்கள் பப்பு என எல்லோருமே மாணவர்கள்.

SanjaiGandhi said...

உங்கள நெனைச்சா கொஞ்சம் பாவமாவும் இருக்கு முல்லை.. :))

Rajalakshmi Pakkirisamy said...

//செல்லம் கொஞ்சி சமாளிப்பதையோ அல்லது மிரட்டுவதையோ விட ஒன்றும் செய்யாமல் அவரவர்போக்கில் விட்டுவிடுவதும் நல்ல பலன்களைத் தருகிறது! //

hmmmmmmmm

சின்ன அம்மிணி said...

சஞ்சய்க்கு ரிப்பீட்டேய் :)

பா.ராஜாராம் said...

ஸ்கூலில் போய் விசாரிச்சீங்களா முல்லை..குழந்தை,என்னவோ சொல்கிறாளே,ஆண்ட்டி அடித்தது,நண்பர்கள் முரண் பற்றி...அம்மா,அப்பா,முகம் தூக்குகிறார்கள் என பெரிய மனுஷி மாதிரி ஸ்கூல் போக முடிவெடுத்தது என்னவோ பப்புமேல் பாவமாக இருக்கு.குழந்தைகளுக்கான மொக்கு கோபம் நுண்ணியமானது முல்லை...உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை...அவள் போக்கிலேயே அதையும் கவனம் கொள்ளுங்கள்.

கானா பிரபா said...

சிலசமயங்களில், செல்லம் கொஞ்சி சமாளிப்பதையோ அல்லது மிரட்டுவதையோ விட ஒன்றும் செய்யாமல் அவரவர்போக்கில் விட்டுவிடுவதும் நல்ல பலன்களைத் தருகிறது! //

வரவேற்கிறோம்

பாட்டி பேரவை - சிட்னி

பித்தனின் வாக்கு said...

// ஸ்கூல்லே ஆன்ட்டி அடிக்கறாங்க' பின்னர் ‘எல்லோரும் கா கா விடறாங்க' பின்னர் ‘ எல்லோரும் என்னை அடிக்கறாங்க'! //
பள்ளியில் என்ன நடந்தது என்று விசாரியுங்கள், அவள் மனதளவில் காயப் பட்டுருக்கலாம், ஆரம்பத்தில் அன்பாக விசாரித்து சரி செய்யவும். டீச்சரை அடிக்கக்கூடாது என்று கூறுங்கள். குழந்தைகளின் மன நலன் மிக முக்கியம்.

லெமூரியன் said...

// ஸ்கூல்லே ஆன்ட்டி அடிக்கறாங்க' பின்னர் ‘எல்லோரும் கா கா விடறாங்க' பின்னர் ‘ எல்லோரும் என்னை அடிக்கறாங்க'! //
பள்ளியில் லேசாக விசாரித்து விட்டு வாருங்கள்.....சிறு வயதில் (ukg) நிறைய சேட்டைகள் செய்வது மற்றும் சக மாணவர்களை அடிப்பது என்றிருந்த என்னை ,அதிரடியாக வகுப்பில் பெண்கள் அமரும் பகுதியில் அமர்த்தி வைத்து விட்டார்கள் ....இப்போது அது சிரிப்பாக சுவாரசியமாக இருப்பினும் அந்த நிமிடம் நான் பட்ட கஷ்டம் இன்றும் மறக்க இயலாது......அன்று முழுவதும் ,என்னால் காயம்பட்ட மற்றும் துன்புற்ற அத்தனை மாணவர்களும் ஒன்று சேர்ந்து என்னை படுத்தி எடுத்து விட்டார்கள்..(பொம்பளைங்க கூட உக்காந்துருக்கான்...அப்போ நீயும் பொம்பளை..) இந்த பள்ளிக்கூடத்திர்க்கே வரக்கூடாது என்ற முடிவோடு வீட்டுக்கு சென்றேன்....அம்மா அடிக்கவில்லை...ஆனால் நான் பலமாக மறுப்பதற்கு காரணம் கேட்டார்....அடக்கி வைத்த குமுறல்களை கொட்டி அழுதேன் அம்மாவிடம்...சிரித்த அம்மா என்னுடன் பள்ளிக்கு வந்து எனக்கு தண்டனை கொடுத்த ஆசிரியரிடம் பேசி பழைய மாதிரியே பையன்கள் பகுதியில் அமர்த்தி வைக்கப் பட்டேன்.....குழந்தைகளின் மனநிலையைப் பொருத்து ஒரு சில விஷயங்கள் அவர்களை உளவியல் ரீதியாக கூட புரட்டிப் போட்டு விடும்....அதனால்தான் இவ்ளோ பெர்ர்ரிய பின்னூட்டம்.

சந்தனமுல்லை said...

பின்னூட்டமிட்ட அனைவரின் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றிகள்! ராஜாராம், பித்தனின் வாக்கு மற்றும் லெமூரியன் - மிகவும் நெகிழ வைக்கிறீர்கள்! அன்றே விசாரித்தேன் பள்ளியில், ஆன்ட்டிகள் அடிக்கமாட்டார்கள் என்று அறிந்திருக்கிறேன். அவர்களும் அதையே உறுதிபடுத்தினார்கள். உண்மையில், அவளது தோழி வர்ஷினி இப்போது வேறு ஒரு ப்ரெண்ட் பிடித்திருக்கிறாளாம். அதனால், இவளோடு முன்பு போல ஒன்றாக இருப்பதில்லையா. மேடம் அதனால் அப்செட்! ஹ்ம்ம்..இதுவும் கடந்து போகும்!! தங்களன்பிற்கும், அக்கறைக்கும் நன்றிகள்! :-)

விக்னேஷ்வரி said...

இப்படிக் கூடவா சமாளிக்கலாம்...

மாதவராஜ் said...

முல்லை!

சின்னதாய் ஒரு நெருடல் நேற்று படிக்கும்போது இருந்தது. இன்று உங்கள் பின்னூட்டம் படித்த பிறகு தெளிவானது.

தீஷு said...

நான் கூட சொல்லனுமினு நினைச்சேன் முல்லை - ஸ்கூலில போய் விசாரிங்கனு.. உங்க பின்னூட்டம் பாத்துத் தெரிஞ்சிக்கிட்டேன்.

Deepa (#07420021555503028936) said...

//சிலசமயங்களில், செல்லம் கொஞ்சி சமாளிப்பதையோ அல்லது மிரட்டுவதையோ விட ஒன்றும் செய்யாமல் அவரவர்போக்கில் விட்டுவிடுவதும் நல்ல பலன்களைத் தருகிறது//

உங்களிடமிருந்து கற்க நிறைய இருக்கிறது முல்லை!

Sakthi said...

I had a same experience with my kid; one day she doesnt want to go whereas she used to be eager to go to school;when we listened to her, she had a feeling that the teacher make her sit in a new place next to a boy becoz she is been talkative..That somehow upset her..Then we told her that we would talk to her teacher and that gave her confidence to go to school..

So, they really would hav some reason, whether it might be silly or serious.