“என்னை ஏன் டிஸ்டர்ப் பண்றே?” - பப்பு
”சரி, சாரி, டிஸ்டர்ப் பண்ணல” என்று சொல்லிவிட்டு துணிகளை மடித்துக்கொண்டிருந்தேன்.
”என்னைப் பார்த்து சிரிக்கறதுக்கு கூப்பிட்டியா” என்று சிரித்தாள்.
கோபம் அழகாக மாறிக்கொண்டிருந்தது!!

ஆங்கிலத்தில் பேச பப்புவுக்கு மிகவும் இஷ்டம். ஏதேதோ அவளாகவே சொல்லிக்கொண்டிருப்பாள். ஆங்கிலத்தில் பேசும்போது மட்டும் என்னை “மம்மி” என்றோ “மம்மா” என்றோ அழைப்பாள். மற்றநேரங்களில் ஆச்சிதான்! அன்றைக்கு ஒரு ஃபேன்சி மோதிரம் போட்டிருந்தாள். என் விரல்களை பார்த்து கேட்டாள்,
” you no ring? “

பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டிருந்த போது, “goose பையா. போடா” என்றாள். எனது பார்வையின் தெரிந்த மாறுபாட்டைப் பார்த்ததும்,
”goose ன்னா என்ன தெரியுமா?, மங்கூஸ் இருக்குல்ல...அதுதான்! அதுக்குத்தான் தமிழ்ல கூஸ்..சரியா?!!”
என்ன ஒரு சமாளிஃபிகேஷன்!!

எக்ஸ்க்யூஸ் மீ பாட்டை பாடிக்கொண்டிருந்தாள். இன்னும் ரெக்கார்ட் செய்யவில்லை. அவளுக்குத் தெரியாமல் செய்யவேண்டும்.
”போடா போடி” என்றுச் சொல்லிக்கொண்டு வந்தவள், எனது பார்வையைப் பார்த்ததும்,
போங்க..வாங்க...போங்க என்று மாற்றி பாடிவிட்டு, ”போடா போடி சொல்லக்கூடாதுல்ல...போங்க..வாங்கதானே சொல்லனும், வர்ஷினிதான் போடா போடி சொல்லுது, ஏன் சொல்லுது!!” என்றாள்.
அவ்வ்வ்வ்வ்வ்!!!

பஸிலின் ஒரு ஓரத்திலிருந்த ஓட்டையைக் கொண்டு என்னை படமெடுப்பதாகச் சொல்லிவிட்டு “ஸ்மைல்” என்றாள். கொஞ்சம் அதிகமாகவே ஸ்மைல் செய்துவிட்டேன் போல.
”நோ நோ..நார்மல்..நோ ஈஈ!!” - பப்பு!
42 comments:
//”நோ நோ..நார்மல்..நோ ஈஈ!!” - பப்பு!/
இதுக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் போடுவீங்களா பவ்வ்வ்வ்வ் போடுவீங்களா! :-)
வழக்கம்போல பப்புவின் சுட்டித்தனங்களை மிகவும் ரசித்தேன்.
//போங்க..வாங்க...போங்க //
//”நோ நோ..நார்மல்..நோ ஈஈ!!”//
ஹய்யய்யோ! உங்கள தூக்கி முழிங்கிடுவாங்க போலையே!!
ரசித்தேன்.. சிரித்தேன்..
//”போடா போடி” என்றுச் சொல்லிக்கொண்டு வந்தவள், எனது பார்வையைப் பார்த்ததும்,
போங்க..வாங்க...போங்க என்று மாற்றி பாடிவிட்டு, ”போடா போடி சொல்லக்கூடாதுல்ல...போங்க..வாங்கதானே சொல்லனும், வர்ஷினிதான் போடா போடி சொல்லுது, ஏன் சொல்லுது!!” என்றாள்.//
LOL :)) பப்பு எப்பவும் சமத்து :))))
//”நோ நோ..நார்மல்..நோ ஈஈ!!” - பப்பு!//
இது டாப்பு :))))))))))))))))))
//நோ நோ..நார்மல்..நோ ஈஈ!!” - பப்பு!//
ஹஹஹா, அகெய்ன் அண்ட் அகெய்ன் பல்ப் ஃபிரம் பப்பு. :)
/
”நோ நோ..நார்மல்..நோ ஈஈ!!”
/
haa haa
:)
//”நோ நோ..நார்மல்..நோ ஈஈ!!” - பப்பு!//
ஹா ஹா தொப்பி! தொப்பி! :))
//போங்க..வாங்கதானே சொல்லனும்,//
ஆமாமுங்
”நோ நோ..நார்மல்..நோ ஈஈ!!” - பப்பு!/
haiyoooooo
சிரிச்சு சிரிச்சு முடியலப்பா
போடா போடி சொல்லக்கூடாதுல்ல...போங்க..வாங்கதானே சொல்லனும், வர்ஷினிதான் போடா போடி சொல்லுது, ஏன் சொல்லுது!!” என்றாள் //
பப்புவுக்கு தெரியுது, பாட்டு எழுதறவங்களுக்குத் தெரியல :)))))))
//”போடா போடி” என்றுச் சொல்லிக்கொண்டு வந்தவள், எனது பார்வையைப் பார்த்ததும்,
நல்ல பழக்கம் எங்க வீட்டில் கூட இதுபோல சொன்னால் மண்டையில் அடி விழுகும்.
// நோ நோ..நார்மல்..நோ ஈஈ!!” //
ஹலோ ரங்க மணி சார் மாதிரி பப்புவையும் பயப்படுத்தக் கூடாது. பப்பு ரொம்ப தைரியமான சுட்டி. சின்ன சின்ன ஆங்கில வார்த்தைகளை தமிழ் அர்த்ததுடன் சொல்லிக் கொடுங்கள். நன்றி.
//நோ நோ..நார்மல்..நோ ஈஈ!!-பப்பு!!”//
குழந்தைகள் நம்மை எவ்வளவு கூர்மையாக கவனிக்கிறார்கள்.
பப்புவிற்கு வாழ்த்து.
//”போடா போடி” என்றுச் சொல்லிக்கொண்டு வந்தவள், எனது பார்வையைப் பார்த்ததும்,
போங்க..வாங்க...போங்க என்று மாற்றி பாடிவிட்டு, ”போடா போடி சொல்லக்கூடாதுல்ல...போங்க..வாங்கதானே சொல்லனும், வர்ஷினிதான் போடா போடி சொல்லுது, ஏன் சொல்லுது!!” என்றாள்.//
பப்பு ரொம்ப சமத்து.....
கோபம் அழகாக மாறிக்கொண்டிருந்தது!! //
அழகு.
நீங்களும் பப்பு கிட்ட இருந்து ஆங்கிலம் கத்துக்கோங்க ஆச்சி.
என்ன ஒரு சமாளிஃபிகேஷன்!! //
யாரோட பொண்ணு...
போங்க..வாங்க...போங்க என்று மாற்றி பாடிவிட்டு //
ச்சே பப்புவா இது..... So cute...
"நோ நோ..நார்மல்..நோ ஈஈ!!” - பப்பு!
Top of the post.
போட்டோ கார்னரில் ஹெல்மட் பப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
ஓய், பேசாம இதுக்கு பல்பு டைம்ஸ்னு பேர் வெச்சிடுங்க:):):)
என்னைப் பொறுத்தவரை நீங்க வாங்குன பெரிய பல்பை மறைப்பதற்காகவே மத்த பிட்டைப் போடுறீங்கன்னு தோனுது:):):)
//
”goose ன்னா என்ன தெரியுமா?, மங்கூஸ் இருக்குல்ல...அதுதான்! அதுக்குத்தான் தமிழ்ல கூஸ்..சரியா?!!”
என்ன ஒரு சமாளிஃபிகேஷன்!!//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்................
//
”நோ நோ..நார்மல்..நோ ஈஈ!!” - பப்பு!//
:)) so nice!
//போங்க..வாங்க...போங்க என்று மாற்றி பாடிவிட்டு,//
நைஸ்.
//நோ ஈஈ!!” - பப்பு!//
ஹி...! - முல்லை!
:)!
இனிய தருணங்கள்
புதிய பார்வைகள்
அன்பு நெஞ்சங்கள்
அருமை நடை
வாழ்த்துக்கள்
தரிசனங்களின்
வரிகளுக்கு
பப்பு டைம்ஸ், ஜாலி டைம்ஸ்.
டெய்லி பல்பு வாங்குவீங்க போல...
ஹி.. ஹி.. ஹி..
//பஸிலின் ஒரு ஓரத்திலிருந்த ஓட்டையைக் கொண்டு என்னை படமெடுப்பதாகச் சொல்லிவிட்டு “ஸ்மைல்” என்றாள். கொஞ்சம் அதிகமாகவே ஸ்மைல் செய்துவிட்டேன் போல.
”நோ நோ..நார்மல்..நோ ஈஈ!!” - பப்பு!//
sweet.. :))
//பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டிருந்த போது, “goose பையா. போடா” என்றாள். எனது பார்வையின் தெரிந்த மாறுபாட்டைப் பார்த்ததும்,
”goose ன்னா என்ன தெரியுமா?, மங்கூஸ் இருக்குல்ல...அதுதான்! அதுக்குத்தான் தமிழ்ல கூஸ்..சரியா?!!”
என்ன ஒரு சமாளிஃபிகேஷன்!!//
அந்த ச்மாளிபிகேஷன் இருக்கட்டும் பப்புவை பார்த்து முறைக்கற அளவுக்கு வந்தாச்சா !!! ம்ஹும் இது சரிப்பட்டு வராது! பெரிம்மாக்கிட்ட கம்ப்ளைண்ட் செய்யவேண்டியதுதான் போல...
பப்பு பேரவை
தோஹா கத்தார்
//சென்ஷி said...
//”நோ நோ..நார்மல்..நோ ஈஈ!!” - பப்பு!/
இதுக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் போடுவீங்களா பவ்வ்வ்வ்வ் போடுவீங்களா! :-)
வழக்கம்போல பப்புவின் சுட்டித்தனங்களை மிகவும் ரசித்தேன்.///
அதே! :)
//G3 said...
//”போடா போடி” என்றுச் சொல்லிக்கொண்டு வந்தவள், எனது பார்வையைப் பார்த்ததும்,
போங்க..வாங்க...போங்க என்று மாற்றி பாடிவிட்டு, ”போடா போடி சொல்லக்கூடாதுல்ல...போங்க..வாங்கதானே சொல்லனும், வர்ஷினிதான் போடா போடி சொல்லுது, ஏன் சொல்லுது!!” என்றாள்.//
LOL :)) பப்பு எப்பவும் சமத்து :))))///
ம்ம்ம்ம்ம்ம்!!
//போங்க..வாங்க...போங்க என்று மாற்றி பாடிவிட்டு, ”போடா போடி சொல்லக்கூடாதுல்ல...போங்க..வாங்கதானே சொல்லனும், வர்ஷினிதான் போடா போடி சொல்லுது, ஏன் சொல்லுது!!” என்றாள்.
அவ்வ்வ்வ்வ்வ்!!!//
ஆமா நீங்க அவ்வ்வ்வ் ன்னா சொன்னீங்க...
குட்டி பாப்பாவின் சேட்டைகள் அழகு...
//”நோ நோ..நார்மல்..நோ ஈஈ!!” - பப்பு!
சூப்பர்.
”போடா போடி” சூப்பர் ஸென்கமன்ட்...
//”நோ நோ..நார்மல்..நோ ஈஈ!!” - பப்பு!
//
புன்னகையுடன் பதிவை படித்து கொண்ட வந்த நான் இதற்கு குபீரென்று சிரித்து விட்டேன் :-)
”போடா போடி” சூப்பர் ஸெக்மண்ட்.. :)
குழந்தைக்கு கூட புரிஞ்சிருக்கு... இதப்போயி குழந்தைகள் படம்னு சொல்லினாங்கலே... :(
பப்பு டைம்ஸ் சூப்பர்.
\\\பஸிலின் ஒரு ஓரத்திலிருந்த ஓட்டையைக் கொண்டு என்னை படமெடுப்பதாகச் சொல்லிவிட்டு “ஸ்மைல்” என்றாள். கொஞ்சம் அதிகமாகவே ஸ்மைல் செய்துவிட்டேன் போல.
”நோ நோ..நார்மல்..நோ ஈஈ!!” - பப்பு!\\
;) ;) ;) ;) கலக்கல் ;)
//நோ நோ..நார்மல்..நோ ஈஈ!!” - பப்பு!//
ha ha ha
துவக்கம் முதல் இறுதி வரை செம சுட்டீ
ம்ம்ம்ம் முல்லை. பப்பு கிட்ட நல்லா வாங்கறீங்க.:)
பப்புச் செல்லமே சமத்துடா நீ.
எதைக் காப்பி செய்து கோட் செய்வது முல்லை???
எல்லாமே அழகு!
ரசித்துச் சிரித்தேன்.
// ”நோ நோ..நார்மல்..நோ ஈஈ!!” - பப்பு!//
இது சான்ஸே இல்ல! :))))))
பப்புவின் புத்திசாலித்தனத்தைக் கண்டு பெருமையடைகிறோம்
பப்புவா கொக்கா
பாட்டி பேரவை
சிட்னி
//நோ நோ..நார்மல்..நோ ஈஈ//
சூப்பர்
கலக்கல் முல்லை. சமத்து பப்பு!!!
//”நோ நோ..நார்மல்..நோ ஈஈ!!” //
இது சூப்பரோ சூப்பரு... :-))))
//பப்பு எதற்கோ கோபமாக இருந்தாள். கோபமாக இருந்தால் முகத்தை கைகளால் மறைத்துக்கொள்வது வழக்கம். நானும் அவளை சமாதானப்படுத்த முயன்றேன்.
“என்னை ஏன் டிஸ்டர்ப் பண்றே?” - பப்பு
”சரி, சாரி, டிஸ்டர்ப் பண்ணல” என்று சொல்லிவிட்டு துணிகளை மடித்துக்கொண்டிருந்தேன்.
”என்னைப் பார்த்து சிரிக்கறதுக்கு கூப்பிட்டியா” என்று சிரித்தாள்.
கோபம் அழகாக மாறிக்கொண்டிருந்தது!!//
எல்லாம்,வாய் விட்டு சிரித்தாலும்,இதன் உள்முக சித்தரிப்பு அவ்வளவு அழகாய் இருக்கு,முல்லை.
nice...
//” you no ring? “//
அடகுகடை ?
Post a Comment