Thursday, October 22, 2009

The mad ad

"நீயும் ஆபிஸூக்கு போகாதே" என்று ஒரு சிறுமி வேலைக்குச் செல்லும் அம்மாவிடம் சொல்லுவதாக வரும் விளம்பரமொன்றை பார்க்க நேரிட்டது. எதற்காக...நீளமான பளபளக்கும் கூந்தலுக்காக!! அவளது தாய் சிறுமியாக இருக்கும்போது நீண்ட கூந்தலுடன் இருந்ததாகவும், தனக்கு அவ்வாறு இல்லையென்றும் குறைப்பட்டுக்கொள்வாள். தனது அம்மா ஓட்டிக்கொண்டு வந்த காரிலிருந்து இறங்கிய அச்சிறுமி பள்ளிக்கூடத்திற்குள் போகும்முன் மேற்கண்ட வசனத்தைச் சொல்லிவிட்டுச் செல்வாள். அவளது அம்மாவும் வேலைக்குப் போகும்வழியில் இதனை யோசித்துக்கொண்டு கவலைப்பட்டுக்கொண்டு காரை ஓட்டிச்செல்வாள். கடைசியில் ஒரு ஷாம்பூ பாட்டிலை வாங்குவாள்.

இந்த விளம்பரம் என்ன சொல்ல வருகிறது? இந்த விளம்பரம் சொல்லவரும் செய்தி சரியானதுதானா?

ஒரு பெண் தனது கேரியரைவிட, தனது குழந்தையின் நீளமான முடிக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மறைமுகமாக சொல்லப்படுவதாகவே தோன்றுகிறது!


பப்பு கார்னர் :


அவ்வப்போது ஆன்லைனில் கேம்ஸ் விளையாட பப்புவை அனுமதிப்பதுண்டு. அப்படி ஒருநாள் விளையாடிக்கொண்டிருந்தவள், "ஆச்சி, நான் பாயா கேர்லா" என்றாள்! அவ்விளையாட்டின் இடையில் 'oh boy' என்று வரும், விளையாட்டை பற்றி விளக்கும்போதோ அல்லது ஊக்குவிக்கும் போதோ அப்படிச் சொல்வதை கேட்டபின் அவளுக்கு வந்த சந்தேகமே அது!!

'நீ கேர்ல்'தான் - என்று சொன்னதும், 'ஏன் என்னை ஓ பாய் ன்னு சொல்லுது" என்றுக் கேட்டாள்.

Its time to change!!

31 comments:

rapp said...

இந்த விளம்பரத்துரைக்காரங்க இம்ச தாங்க முடில. அடுத்து 'மீசை டிரிம் பண்ணனும் அப்பா, அதால நீங்க வேலைய விட்டிருங்கன்னு', டீனேஜ் பையன் அப்பாக்கிட்ட கேக்குறாப்டி வெப்பாங்க போல.

rapp said...

//ஒரு பெண் தனது கேரியரைவிட, தனது குழந்தையின் நீளமான முடிக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மறைமுகமாக சொல்லப்படுவதாகவே தோன்றுகிறது!
//

:):):) இதை இப்டி டீசண்டாவும் சொல்லலாமா:):):) ஹி ஹி ஹி

rapp said...

இது முக்காவாசி என்னைய மாதிரி, கேரியர் ஓரியண்டட் விமனை பாத்து வயிறு எரியுற கேசோட வேலையா இருக்கும்:):):)

Shakthiprabha said...

Awesome article. I second ur opinion!

:clap: எரிச்சலூட்டும் விளம்பரம், அதற்கு சென்டிமெண்ட் சாயம் !

மாதவராஜ் said...

பல விளம்பரங்கள் படு முட்டாள்தனமாகவும், பிற்போக்குத்தனமாகவும்தான் இருக்கின்றன. பொருட்களை விற்க மட்டுமில்லாமல், அதற்கேற்ப மூளைகளை தகவமைப்பதற்கு அவை செய்யும் காரியங்கள் ஆபத்தானவையாகவும், எரிச்சலூட்டுபவையாகவும் இருக்கின்றன.
தேவையான பகிர்வு.

ஆயில்யன் said...

ம்ம் சரிதான் சில விளம்பரங்கள் ஆச்சர்யப்படுத்தும் சில விளம்பரங்கள் அடச்சேசொல்ல வைக்கும் !

பை தி பை நன்றி பார் ஆன்லைன் கேம் லிங்க் கொடுத்ததுக்கு என்னை மாதிரி குட்டீஸ்க்கு ரொம்ப யூஸ்ஃபுல் :)))

விக்னேஷ்வரி said...

ஒரு பெண் தனது கேரியரைவிட, தனது குழந்தையின் நீளமான முடிக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மறைமுகமாக சொல்லப்படுவதாகவே தோன்றுகிறது! //

எப்படி முல்லை இப்படியெல்லாம் யோசிக்குறீங்க. அது ஒரு குழந்தையின் immaturity ஐ அழகாக சொல்லும் விளம்பரம். நீங்கள் சொல்லும் மறைமுக அர்த்தம் அதில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

Happy to see Pappu growing.

க.பாலாசி said...

//ஒரு பெண் தனது கேரியரைவிட, தனது குழந்தையின் நீளமான முடிக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மறைமுகமாக சொல்லப்படுவதாகவே தோன்றுகிறது! //

நிறைய நல்ல விளம்பரங்கள் வந்தாலும்...ஒரு சில இதைபோன்று அர்த்தமற்றதாகத்தான் இருக்கிறது. வியாபார நோக்கத்தின் உச்சமிது.

//'ஏன் என்னை ஓ பாய் ன்னு சொல்லுது" என்றுக் கேட்டாள்.//

அடுத்த தடவை ‘ஓ கேர்ள்’ன்னு சொல்லும் கேமை விளையாடவிடுங்கள்.. சரியாகிவிடும்.

ராமலக்ஷ்மி said...

இப்பதான் இந்த சிகப்பழகு க்ரீம்காரங்க, எல்லோரும் திட்டித் தீர்த்த பின்னர், முகத்திலே ‘ஏதோ ஒண்ணு குறையற மாதிரி இருக்கே’ன்னு அடக்கி வாசிக்க ஆரம்பிச்சிருக்காங்க. அது போல இப்படி வரும் எல்லா ad-ம் தட்டிக் கேட்கப் படணும். நல்ல பதிவு முல்லை.

பப்பு, நீ கேர்ல்தான்:))!

☀நான் ஆதவன்☀ said...

சில நல்ல விளம்பரங்களுக்கிடையே இது போல மொக்கை விளம்பரமும் நிறைய வருது பாஸ்...

ஆமா பப்புடைம்ஸ் வந்து ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கே?

மணிகண்டன் said...

நீங்க சொல்லியிருக்கற பாயின்ட் யோசிக்கவேண்டியது. அதே போல இன்னொரு கொடுமை - பொண்ணுங்கன்னா நீளமா முடி இருந்தே ஆகனும்ன்னு சொல்றது :)- இந்த விஷயத்துல நம்ப ஊரு பொண்ணுங்களும் / விளம்பரங்களும் பண்ணும் அநியாயம் ரொம்பவே ஓவரு :)

சென்ஷி said...

//
Its time to change!!//

ம்ம்!

காமராஜ் said...

விளம்பரத்தின், சடுதி மாற்றக் காட்சி உத்தியில் குழந்தைகலை ஈர்க்கும் இந்த விளம்பரங்கள் மிகத்தவறான் மோசமான முன்னுதாரனங்களை பசுமரத்தாணியாய் அறைகிறது. அருமையான அவதானிப்பும் பதிவும் வாழ்த்துக்கள் சந்தனமுல்லை.

நிஜமா நல்லவன் said...

:)

G3 said...

//Its time to change!!//

Rightu :))) Seekiram maatha sollidalaam :D

கதிர் - ஈரோடு said...

விளம்பரங்கள்
மோசமான முன்னுதாரணங்களையே பெரிதும் முன்வைக்கின்றன...

பீர் | Peer said...

//இந்த விளம்பரம் என்ன சொல்ல வருகிறது? //

விளம்பரப்படுத்தப்படும் 'அந்த' ஷாம்பு வாங்க வேண்டும் என்று. :-) (பல முறை அந்த விளம்பரம் பார்த்திருந்தும் எந்த ஷாம்பு என்று நினைவில்லை)

குழந்தையுடைய பார்வையில்; பாட்டி வேலைக்கு செல்லவில்லை, எனவே அம்மாவை நன்றாக கவனித்தாள். அம்மா வேலைக்கு செல்கிறாள், எனவே தன்னை கவனிப்பதில்லை. ஆனாலும் கவலையில்லை, அந்த ஷாம்பு இருக்கிறது.

புரியவில்லை, இதில் என்ன தவறு இருக்கிறது.

பெரும்பாலான விளம்பரங்கள் பெண்களை குறிவைத்தே எடுக்கப்படுகிறது. அது ஆண்களுக்கான ட்யோடரண்டாக இருந்தாலும் சரியே...

பல விளம்பரங்கள் முட்டாள்தனமானவை என்பதும் மறுப்பதற்கில்லை.

மங்களூர் சிவா said...

ஓ விளம்பரம்லாம் பாக்கணுமா ??
:)))

பப்பு க்யூட் :))

சகாதேவன் said...

ரொம்ப நாட்களுக்கு முன்னெ எங்க அத்தை ஒருவருக்கு கால் முட்டி வரை (நிற்கும் போது தாங்க) கூந்தல் உண்டு. அவங்க அம்மா எப்படி கவனிக்சிருப்பாங்க? அந்நாளில் 1940 களில் அவங்க வேலைக்கு போகலை.

அது போல நீண்ட சடை (அசல் முடியில்) இப்போ யாரிடமும் இல்லை. அம்மா போல தனக்கும் நீண்ட கூந்தல் வேண்டும் என குழந்தைகள் ஆசைப்படுவதுதான் மெஸேஜ்

பித்தனின் வாக்கு said...

:)

Sasikumar said...

அப்படியே...ஆட்டோல குழந்தைகள் கூட ஒட்டிகிட்டு போனா தோல் அலர்ஹி வரும் என்று கண்டுபிடித்தவர்களையும் பற்றியும் சொல்லலாம்.

Eswari said...

நான் சொல்ல நினைச்சதை விக்னேஷ்வரி
பீர் | Peer
சகாதேவன்
சொல்லிட்டாங்க

தீஷு said...

நான் இன்னும் அந்த விளம்பரத்தைப் பார்க்கல முல்லை.. ரொம்ப லூசுத்தனமா இருக்கும் போல இருக்கே...

துபாய் ராஜா said...

எப்படித்தான் இந்த விளம்பர கம்பெனிக்காரங்க இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ... :((

அமுதா said...

andha vilambaram paarthu enakkum irritating-aaha irundhadhu.

நசரேயன் said...

//Its time to change!!//
'ஒ' ன்னு முடிச்சிடுடலாம்

குடுகுடுப்பை said...

இந்தப்பதிவின் கடைசிப்பகுதியை உங்களின் அனுமதி இன்றி என்னுடைய பதிவில் உபயோகித்திருக்கிறேன். அப்படியே நானும் அதை வெச்சு பப்பு மாதிரி கேள்வி கேட்டிருக்கேன்.

SanjaiGandhi said...

அய்ய.. இப்போ வர விளம்பரங்களை எல்லாமா சீரியசா எடுத்துக்கிறிங்க?

இதுல சொல்ல வர விஷயம் வேற.. உங்க அம்மா வீட்டுல இருந்து கவனிச்சிக்கிட்ட மாதிரி என்னையும் கவனிச்சிக்கோங்கன்னு சொல்றது தான் கான்செப்ட்.

இதுக்கே இப்டி டென்ஷன் ஆனா எப்டி? அவர்களின் தயாரிப்பைப் பயன்படுத்தினால் அழகான பெண்கள் இவர்கள் பின்னால் அலைவார்கள் என்பது போல் வரும் அபத்த விளம்பரங்கள் தானே 90 % வருது.. அதை பாக்கறதில்லையா? :)

Deepa (#07420021555503028936) said...

மிக அவசியமான பதிவு.

வீட்டுக்குள் எந்நேரமும் நாம் கண்டும் காணாமல் மூலைக்குள் ஏறுபவை இந்த விளம்பரங்கள்.
அவற்றை விமர்சித்து இப்படியான பார்வைகள் கண்டிப்பாக வேண்டும். இல்லையென்றால் இவர்கள் இஷ்டத்துக்கு யோசிக்கும்படி நமது மூளையையே மழுக்கி விடுவார்கள்.

இன்னும் சில...

“மிஸஸ் கிட்ட சொல்லுங்க பிரஷ் பண்ண சொல்லி...”
”டாய்லெட் வாசனையா இருக்கு” என்று கணவன் சொன்னவுடன் வெட்கப்படும் பெண்..அய்யோ!
ஓங்கி அறையலாமா என்று வரும்!

ராஜா | KVR said...

எரிச்சலைத் தரும் மற்றுமொரு விளம்பரம். தொடக்கத்தில் சில விளம்பரங்களை எதிர்த்து எழுதினேன், அப்படி எழுத ஆரம்பித்தால் வாரம் ஒரு விளம்பரம் குறித்தாவது எழுத வேண்டிய அளவுக்கு இருந்ததால் பின்னர் விட்டுவிட்டேன். இப்பொழுதெல்லாம் எரிச்சல் தரும் விளம்பரங்கள் வந்தால் சேனல் மாற்றிவிடுவதோடு சரி.

இரசிகை said...

//இந்த விளம்பரம் என்ன சொல்ல வருகிறது? இந்த விளம்பரம் சொல்லவரும் செய்தி சரியானதுதானா?

ஒரு பெண் தனது கேரியரைவிட, தனது குழந்தையின் நீளமான முடிக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மறைமுகமாக சொல்லப்படுவதாகவே தோன்றுகிறது!
//
ITHIL UDANPAADILLAI MULLAI...

antha vayathil pen kuzhanthaikalukku uriya niyaamanaa aasai:)
xplain koduthum pappu pola arivaana keliyaal thotru pona amma:))

so,antha siriya unarvaiyum porutpaduththa amma yedukkum nadavadikkai..

intha base-il avunga product-i vilambarap paduthiyirukkaanga.

avvalavuthane!

yerichchal paduthum vilambarangalum nichchayamaaga ullana...