Saturday, October 24, 2009

தமன்னாவின் அத்தையும், வர்ஷாவின் சபதமும்..

கடந்த புதனன்று லதாவின் திருமணத்திற்காக கோவை சென்றிருந்தேன். லதாவின் ஊர் உடுமலைபேட்டை. அங்கேதான் முதலில் என்னை வரச்சொல்லியிருந்தாள். நம்ம மயிலை சந்திக்கப் போகிற குஷியில், நான் நேராக கோவை வருவதாக சொல்லிவிட லதாவுக்கு ஒரே குழப்பம்..லதாவுக்கு தெரிந்து எனக்குக் கோவையில் தெரிந்தவர்கள் லதாவின் அக்கா குடும்பத்தினர், இன்னும் சிலர் மட்டுமே. ஆனாலும் மயிலைப் பற்றிச் எடுத்துச் சொல்லி 'மயிலிருக்க பயமேன்' என்று சமாதானபடுத்தியாயிற்று.

மயிலுக்கு மேனேஜராகக் கூடிய அத்தனை தகுதியும் இருக்கு!! ஆம்பூரில் ரயிலேறியதிலிருந்து கோவை நார்த் வரும்வரை, 'இப்போ எங்கே இருக்கீங்க' என்றும் 'திருப்பூர் வந்ததும் எனக்கு மெசேஜ் பண்ணிடுங்க' என்றும் 'இருகூர் வந்தாச்சா', 'இப்போ கோவை நார்த் வந்திருக்கணுமே' என்றும் டிராக் செய்துக்கொண்டிருந்தார். ரயில் நிலையத்திற்கு எதிரில் காத்துக்கொண்டிருந்தவர் என்னை கண்டுக்கொண்டதும் ஆட்டோ, பஸ் என்று எதையும் மதிக்காமல் க்ராஸ் செய்துவந்தார். அது என்னைப் பார்த்த குஷி என்று நினைத்தேன்...பிறகுதான் தெரிந்தது...மயிலுக்கு கிராஸ் செய்வது என்றால் ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்று!! அவ்வ்வ்!! :)

மயில் வீட்டில் 'வீட்டுப்புறா' சக்தி காத்திருந்தார். அவ்ரது பெயரை பதிவுகளில் பார்த்திருக்கிறேனே தவிர அவ்வளவாக அறிமுகம் இல்லை. பழகுவதற்கு இனியவர். ஆனால், சிறிது நேரத்தில் ‘வீட்டுக்கு போகணும், ஆத்தா வையும்' (நன்றி : சஞ்சய்) என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார். :-) சிறிது நேரத்தில், சஞ்சய் வந்துவிட, திருப்பூரிலிருந்து வெயிலானும், பள்ளியிலிருந்து பப்புவும் வர்ஷாவும், பின்னர் வடகரை வேலனும் வந்துவிட வீடு களை கட்டியது. செம சுட்டிகள்!! வர்ஷாவின் அரங்கேற்றத்திற்காக அடுத்த கோவை பயணம் நிச்சயம்!! நடுவே செல்வேந்திரனையும் சந்திக்க முடிந்தது.

மறுநாள் காலை லதாவின் திருமணம் முடிந்து மயில் வீட்டிற்கே வந்துவிட 'வீட்டுப்புறா' சக்தியும், ‘ஊஞ்சல்' தாரணிபிரியாவும் வந்தனர். மிகவும் கலகலப்பான சந்திப்பாக இருந்தது.நட்டுவும், அபி அம்மாவும், அபி அப்பாவும் வந்தனர். நட்டு க்யூட் + செம வாலு! நட்டு தனது அட்டகாசங்களால் சூழலை ரசிக்க வைத்தான். 'சீசன்ஸ்' என்ற ரெஸ்டாரண்ட்டிற்கு சென்றோம் தாரணி,சக்தி, மயில் மற்றும் நான். அரட்டையில் ஆரம்பித்து தொலைபேசி நம்பர்களை பரிமாறியபடி சந்திப்பு முடிந்தது - ரயிலுக்கு நான் செல்ல வேண்டிய நேரமும் வந்தது. ரொம்ப காலத்திற்கு முன் செல்வேந்திரன் வைத்த ஒரு போட்டியில் காலங்கடந்து கலந்துக்கொண்ட போது தருவதாக சொன்ன புத்தகத்தின் நினைவு வந்தது. புத்தகத்திற்காக செல்வேந்திரனுக்கு நன்றி! வழியிலேயே சஞ்சயிடம் ஃபோனில் விடைபெற்றுக்கொண்டேன். (தமன்னாவின் அத்தை...வ்ர்ஷாவின் திட்டம்...:)))

ரயிலேறி அமர்ந்ததும் வெயிலானிடம் தொலைபேசியில் விடைபெற்று நினைவுகளை அசைப்போட்டபடி ஆம்பூர் வந்து சேர்ந்தேன். கடந்த ஒன்றரை வருடங்களுக்குப் பின் இப்போதுதான் பப்பு தனியாக (நானும் முகிலும் இல்லாமல்) ஊரில் தங்குகிறாள். பப்பு சமாளித்துக்கொள்வாள் என்று நம்பினேன். 'நீ போனதிலேருந்து உன்னை ஒரு தடவைக் கூட கேக்கவேயில்ல' என்று ஆயா சொன்னதற்கு அழுவதா சிரிப்பதாவென்று தெரியவில்லை!! :)
பப்புவிற்கு வெயிலான் பரிசளித்த goodies மிகவும் பிடித்திருக்கிறது. நன்றி வெயிலான்!!

ஒவ்வொரு முறை கோவை செல்லும் போதும் இப்படித்தான் ஆகிவிடுகிறது. கண்டிப்பாக இன்னொரு முறை வரவேண்டும் என்று நினைக்கும்படி! இந்தமுறையும் அந்த நினைப்பையே தந்த கோவை, திருப்பூர் பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகளும், வாழ்த்துகளும், நட்பும்!! பப்புவிற்கும் வர்ஷாவிற்கும் அன்பு முத்தங்கள்!!லதாவிற்கு திருமண வாழ்த்துகள்!!

27 comments:

ஆயில்யன் said...

//வ்வொரு முறை கோவை செல்லும் போதும் இப்படித்தான் ஆகிவிடுகிறது. கண்டிப்பாக இன்னொரு முறை வரவேண்டும் என்று நினைக்கும்படி! இந்தமுறையும் அந்த நினைப்பையே தந்த கோவை, திருப்பூர் பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகளும்,//

ஆமாம் பாஸ் எனக்கும் கோவை ரொம்ப்ப்ப்ப்ப் புடிக்கும் அதுவும் வெய்யிலானும் சஞ்சயும் வாங்க வாங்கன்னு சொல்றதை கேக்கும்போதே ஒரு ஒரு மாசம் போய் அங்க தங்கிடலாமோன்னு டெரரா நினைப்பு வரும் !

வருவேன் :))

ஆயில்யன் said...

தமன்னாவின் அத்தை ??

இந்த வரிகளுக்குள் ஓடி ஒளிஞ்சுக்கிட்டிருக்கிற அம்புட்டும் வெசயமும் அடுத்த பதிவுல வெளிவருமா????

ஆயில்யன் said...

//மயிலுக்கு மேனேஜராகக் கூடிய அத்தனை தகுதியும் இருக்கு!! ஆம்பூரில் ரயிலேறியதிலிருந்து கோவை நார்த் வரும்வரை, 'இப்போ எங்கே இருக்கீங்க' என்றும் 'திருப்பூர் வந்ததும் எனக்கு மெசேஜ் பண்ணிடுங்க' என்றும் 'இருகூர் வந்தாச்சா', 'இப்போ கோவை நார்த் வந்திருக்கணுமே' என்றும் டிராக் செய்துக்கொண்டிருந்தார்.//

இது மாதிரி ஆக்டிவிட்டீஸ் எனக்கும் 2 ரொம்ப புடிக்கும் பாஸ்!


இப்ப ஸ்டேஷனை விட்டு இறங்கி அப்படியே நடந்து வாங்க - பேப்பர் கடை தெரியுதா அதே அது பக்கத்துல வாங்க கையில பேப்பரோட காதுல போன் வைச்சுக்கிட்டு ஒரு ஆள் பேசிக்கிட்டிருக்கேனே அது நாந்தான் உங்ககிட்டத்தான் பேசிக்கிட்டிருக்கேன் - ரேஞ்சுக்கு எல்லாம் நாங்க ரூட் காமிச்சிருக்கோம் பாஸ் :))))))

ஆயில்யன் said...

//பழகுவதற்கு இனியவர். ஆனால், சிறிது நேரத்தில் ‘வீட்டுக்கு போகணும், ஆத்தா வையும்//

பாவம் அவுங்க பொறுமையை ரொம்பவே சோதிச்சுட்டீங்க போல :)

ஆயில்யன் said...

//வர்ஷாவின் அரங்கேற்றத்திற்காக அடுத்த கோவை பயணம் நிச்சயம்!!//

அட டிரிப்பெல்லாம் அட்வான்ஸ் புக்கிங்க்ல போய்க்கிட்டிருக்கா?
அசத்துங்க :)

ஆயில்யன் said...

//பப்பு சமாளித்துக்கொள்வாள் என்று நம்பினேன். 'நீ போனதிலேருந்து உன்னை ஒரு தடவைக் கூட கேக்கவேயில்ல' என்று ஆயா சொன்னதற்கு அழுவதா சிரிப்பதாவென்று தெரியவில்லை!! :)//

ஆச்சி டச் !

டோன்ட் ஒர்ரி பாஸ்! B ஹாப்பி :))

ஆயில்யன் said...

//அசைப்போட்டபடி ஆம்பூர் வந்து சேர்ந்தேன்//

அட! பிரியாணி தின்னு அசை போடத்தானே ஆம்பூர் ரூட்ல போனீங்கோ? :))))

ஆயில்யன் said...

//லதாவிற்கு திருமண வாழ்த்துகள்!!//

நாங்களும் திருமண வாழ்த்துக்கள் சொல்லிக்கிறோம் !

பாஸ் பயணக்கட்டுரை இன்னும் நிறைய விசயங்கள் அடுத்தடுத்து வரும்தானே ?

ஆம்பூர் வரப்ப அசைபோட்ட கதையெல்லாம் கண்டினியூ....:)

பீர் | Peer said...

//தமன்னாவின் அத்தை ??

இந்த வரிகளுக்குள் ஓடி ஒளிஞ்சுக்கிட்டிருக்கிற அம்புட்டும் வெசயமும் அடுத்த பதிவுல வெளிவருமா????//

SanjaiGandhi said...

ட்விட்டரில் தலைப்பைப் பார்த்ததும் டரியல் ஆய்ட்டேன்.. நல்ல வேளை டெமேஜ் இல்ல.. “ தொடரும் “ இருந்துடுமோன்னு இன்னும் பயந்தேன்.. ஹிஹி.. ஆனாலும் நீங்க பாசக்காரங்க முல்லை.. :))

( கல்யாண மண்டபம், லதா தம்பி, ஹாஸ்டல், ப்ராஜக்ட்.... ஹ்ம்ம்ம்ம்.. பீ கேர்ஃபுல்.. :)) )

SanjaiGandhi said...

// ஆயில்யன் said...

//வ்வொரு முறை கோவை செல்லும் போதும் இப்படித்தான் ஆகிவிடுகிறது. கண்டிப்பாக இன்னொரு முறை வரவேண்டும் என்று நினைக்கும்படி! இந்தமுறையும் அந்த நினைப்பையே தந்த கோவை, திருப்பூர் பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகளும்,//

ஆமாம் பாஸ் எனக்கும் கோவை ரொம்ப்ப்ப்ப்ப் புடிக்கும் அதுவும் வெய்யிலானும் சஞ்சயும் வாங்க வாங்கன்னு சொல்றதை கேக்கும்போதே ஒரு ஒரு மாசம் போய் அங்க தங்கிடலாமோன்னு டெரரா நினைப்பு வரும் !

வருவேன் :))//

பேச்ச கொறச்சிட்டு வர வழிய பாரும் ஓய்..

Deepa (#07420021555503028936) said...

சுவாரசியமான பகிர்வு! நன்றி.
இன்னும் விரிவாக உங்களுடன் பேசும்போது அறிந்து கொள்ளலாம்!
:-)

☀நான் ஆதவன்☀ said...

பாஸ் பதிவர் கோவை பதிவர் சந்திப்பா... கலக்கல் தான் போங்க :)

☀நான் ஆதவன்☀ said...

//சஞ்சய் வந்துவிட, //

காங்கிரஸ் ஜெயிச்சதுக்கு ட்ரீட் கொடுத்தாரா பாஸ்?

☀நான் ஆதவன்☀ said...

//மயிலுக்கு மேனேஜராகக் கூடிய அத்தனை தகுதியும் இருக்கு!!//

பாஸ் எனக்கு தெரிஞ்சு டேமேஜர் ஆகனும்னா ஒன்னுமே தெரிய கூடாதே? இவங்களுக்கு நிறைய தெரிஞ்சிருக்கும் போலயே..... அதுனால மேனேஜர் போஸ்ட் ரிஜக்டட்

☀நான் ஆதவன்☀ said...

//'சீசன்ஸ்' என்ற ரெஸ்டாரண்ட்டிற்கு சென்றோம் தாரணி,சக்தி, மயில் மற்றும் நான். //

கோவையே கதிகலங்கிருக்கும் போலயே பாஸ்????

சின்ன அம்மிணி said...

//மயிலுக்கு கிராஸ் செய்வது என்றால் ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்று!! அவ்வ்வ்!! ://

மயிலக்கா தைரியம் நமக்கு தெரியாதா.

சின்ன அம்மிணி said...

//ஒவ்வொரு முறை கோவை செல்லும் போதும் இப்படித்தான் ஆகிவிடுகிறது. கண்டிப்பாக இன்னொரு முறை வரவேண்டும் என்று நினைக்கும்படி! //

நான் வரும்போது சொல்றேன். சந்திப்போம். :)

காமராஜ் said...

அன்பு கொண்டு எழுதப்பட்ட இந்த பதிவு மனதை இலகுவக்குகிறது.

தீஷு said...

நிறைய பேரை சந்திச்சிட்டு வந்திருக்கீங்க முல்லை... வாழ்த்துகள்!!!

//பப்பு சமாளித்துக்கொள்வாள் என்று நம்பினேன். 'நீ போனதிலேருந்து உன்னை ஒரு தடவைக் கூட கேக்கவேயில்ல' என்று ஆயா சொன்னதற்கு அழுவதா சிரிப்பதாவென்று தெரியவில்லை!! :)//

ஆமாம் முல்லை.. அழுதாலும் நமக்கு கஷ்டம்.. கேக்காட்டியும் கஷ்டம்!!.. :-))

மணிநரேன் said...

இனிமையான அனுபவ பகிர்வு...:)

செல்வேந்திரன் said...

கடைசி வரை என்னை ஆட்டையில் சேர்க்காமல் க்ளைமாக்ஸ் போலீஸாக்கிய அனைவரையும் கண்டிக்கிறேன்.

பித்தனின் வாக்கு said...

பப்பு சமாளித்துக்கொள்வாள் என்று நம்பினேன். 'நீ போனதிலேருந்து உன்னை ஒரு தடவைக் கூட கேக்கவேயில்ல' என்று ஆயா சொன்னதற்கு அழுவதா சிரிப்பதாவென்று தெரியவில்லை!! :)//


நல்லவேளை பப்பு நான் வளர்கிறேனே மம்மி அப்படினு சொல்லைவில்லை. குழந்தைகள் இரவு தங்கினால் மட்டும் தூக்கத்திற்காக கவலைப்படும். மற்றபடி பகலில் விளையாடும் போது தெரியாது. அதுவும் எங்க பப்பு சமர்த்து, அவ ஒன்னும் ஆச்சி மாதிரி இல்லை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)

☼ வெயிலான் said...

// மரியாதையோட பழகுவாங்க-ன்ன்னு கேள்விப்பட்டதோட இல்லாம நேரில் உணர்ந்துமிருக்கிறேன்! என்னோட பெஸ்ட் பிரண்ட் இருக்கிறது கோவையில் தான்! ரொம்ப நல்ல ஊர்!//

:)

sakthi said...

சீசன்ஸ்' என்ற ரெஸ்டாரண்ட்டிற்கு சென்றோம் தாரணி,சக்தி, மயில் மற்றும் நான். அரட்டையில் ஆரம்பித்து தொலைபேசி நம்பர்களை பரிமாறியபடி சந்திப்பு முடிந்தது

நம்பர் வாங்கினீங்களே போன் ஏதாவது செய்தீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

sakthi said...

மயில் வீட்டில் 'வீட்டுப்புறா' சக்தி காத்திருந்தார். அவ்ரது பெயரை பதிவுகளில் பார்த்திருக்கிறேனே தவிர அவ்வளவாக அறிமுகம் இல்லை. பழகுவதற்கு இனியவர். ஆனால், சிறிது நேரத்தில் ‘வீட்டுக்கு போகணும், ஆத்தா வையும்' (நன்றி : சஞ்சய்)


அடப்பாவிகளா இப்படியுமா மானத்தை வாங்குவீங்க!!!!