Wednesday, October 28, 2009

From Troublesome Threes to Fearless Fours!!பப்பு,

இந்த ஒரு கடிதம் உன்னைப் பற்றிய எல்லாவற்றையும் சொல்லிவிடுமாவென்றுத் தெரியவில்லை. ஆனால், கடந்த வருடங்களில் நான் எழுதியிருக்கும் இடுகைகள் உன்னைப்பற்றியும், உனது குழந்தைப்பருவத்தையும், ஒரு பெண்ணை தாயாக..மகிழ்ச்சியான தாயாக நீ உருமாற்றியதையும் கூறும்!

மேலிருக்கும் படம், நீ இப்போது கடந்துக்கொண்டிருக்கும் காலகட்டத்தை உணர்த்துவதற்காக - ஓடுவதற்கு ஆயத்தமாக - நம்பிக்கையுடன், துடிப்புடன் - அறிந்துக் கொள்ளும் ஆர்வத்துடன் - எளிதில் மன்னித்து, மறந்தும் விடக்கூடிய இதயத்துடன்! பப்பு, நீ வாழ்க்கையில் எல்லாவற்றையும் பெற வேண்டுமாய் வாழ்த்துகிறேன்..அதைவிட பெரிதாக வாழ்த்த வேண்டுமானால், பப்பு, நீ இப்படியே இருக்க வேண்டுமாய் வாழ்த்துவேன்! மாறாமல் இதே துடிப்புடன் - இதே நேசத்துடன் - இதே உன்னத்ததுடன் - உள்ளத்தூய்மையுடன்!!

அதற்காக, நீ ஒரு தேவதை என்று படம் காட்டவில்லை. உனது மறுபக்கத்தையும் எங்களுக்கு காட்டாமலில்லை! சமயங்களில் எங்களை நோக்கி பற்கடிக்கிறாய். எதையாவது மறுத்தால் எங்களுக்கு அடிகளைத் தருகிறாய்.உனது உணர்ச்சிகளும் எண்ணவோட்டங்களும் மிக ஆழமானவை - அதற்கேற்றவாறு நடந்துக்கொள்ள நானும் உந்தப்படுகிறேன்! எதை மறுக்கிறேனோ அதைச் செய்யவே நீயும் உந்தப்படுகிறாய்! நீயும் நானும் இப்படியே சுற்றி வருகிறோம்!!


குறும்பும், குழந்தையின் அறியாமையும், உனக்கேயுரித்தான ஞானத்துடனும் நிறைந்திருக்கிறாய் நீ! கடந்த நான்கு வருடங்களும், மிகவும் இனிமையானதாக, நல்லதொரு அனுபவமாகவே இருந்து வந்திருக்கிறது, பப்பு! நீ மிக அருமையானவள் பப்பு! நான் பொதுவாக உன்னெதிரில் அழுவதில்லை. ஓரிரு முறைகள் அப்படி நேர்ந்திருக்கிறது. அந்த இருமுறைகளும் நீ என்ன செய்தாய் தெரியுமா பப்பு, ஆச்சி, ஏன் உன் கண்லே தண்ணி வருது என்று கேட்கும்போதே உன்னையறியாமலேயே உனது கண்களும் குளமாகின! அதைவிட,உன் சின்னஞ்சிறு கரங்களால், என் கண்களை துடைக்க முற்பட்டாய். நான் இதை உனக்குச் செய்ததில்லை, பப்பு! நிறைய நேரங்களில் உன் அழுகைக்குக் காரணம் நாந்தான் என்றாலும் நீ அழும்போது என் கண்கள் கலங்கியதில்லை! என்னை மன்னித்துவிடு! நீ உன்னதமானவள், பரிவு மிக்கவள், பப்பு!

புதியவர்களைக் கண்டால் எங்கள் பின்னால் ஒளிந்துக்கொள்ளும் நீ, உறவினர்களை, தூரத்து உறவினர்களை அதுவும் முதல்முறைதான் பார்க்கிறாய் என்றாலும் எப்படிக் கண்டுக்கொள்கிறாய் என்பது எனக்கு இன்னமும் விளங்காத ஆச்சரியம். குடும்பத்தின் தலைமுறைகளை நன்றாக அறிந்து வைத்திருக்கிறாய். பக்கத்துவீட்டுச் சிறுவன் தீபாவளியன்று பொம்மைத் துப்பாக்கியில் உன்னை நோக்கிச் சுட்டான். நீயும் சுடு என்று உன் அப்பா கூற, ‘சுட்டா அவன் செத்துடுவான், பாவம்' என்று சொல்லி எங்களை ஆச்சர்யத்திலாழ்த்தினாய்!

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம், பப்பு! வாழ்க்கை உனக்கு முன் விரிந்துக்கிடக்கிறது, நீ அதை இன்னும் சுவாரசியமாக்குவாய் என்பதையும் அறிந்திருக்கிறேன் பப்பு!
கடந்த வருடம் உனக்கு நிறைய நண்பர்களும்,ஆரோக்கியமும், எல்லாச் செல்வங்களும் கிடைக்க வாழ்த்தினேன்..இந்த வருடமும் உனக்கு இவையெல்லாவற்றோடும் மிகுந்த தைரியத்தையும் வாழ்த்துகிறேன்!! இந்த வருடத்தையும் ஒன்றாகவே கடப்போம், கற்றுக்கொள்வோம், உன்னை நானும் என்னை நீயும் உற்றுக்கேட்டுக்கொள்வோம்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், பப்பு!!

ஆச்சி!

பி.கு :பப்பு, இதை நேற்று இரவு எழுதி முடிக்கும்போது கடந்த வருடம் எழுதிய பப்பு 0..1..2.. நினைவுக்கு வந்தது. உன் மழைத்தோழி இந்த வருடம் வரவே இல்லையே என்ற நினைப்பும் எட்டிப் பார்த்தது. இன்று காலையில் தூறலிட்டு வாழ்த்த வந்துவிட்டாள் உன் தோழி!! :-)

58 comments:

சின்ன அம்மிணி said...

பப்புவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பப்பு பேரவை

ஆஸிக்கிளை

ஆயில்யன் said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பப்பு!

மாதவராஜ் said...

பப்புவுக்கு எங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
உங்கள் கடிதம் அருமை.

Rajalakshmi Pakkirisamy said...

Happy Birthday Pappu

JayanthiShathish said...

உனக்கு நிறைய நண்பர்களும்,ஆரோக்கியமும், எல்லாச் செல்வங்களும் கிடைக்க வாழ்த்தினேன்..இந்த வருடமும் உனக்கு இவையெல்லாவற்றோடும் மிகுந்த தைரியத்தையும் வாழ்த்துகிறேன்!! இந்த வருடத்தையும் ஒன்றாகவே கடப்போம், கற்றுக்கொள்வோம், உன்னை நானும் என்னை நீயும் உற்றுக்கேட்டுக்கொள்வோம்

Akka We too wish her the same on her B`day.

Happy Many More Returns of this day pappukutti

இய‌ற்கை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், பப்பு:-)

rajasurian said...

பப்புக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் நெகிழ வைக்கும் எழுத்து தொடரவும் என் வாழ்த்துக்கள்

JayanthiShathish said...

உனக்கு நிறைய நண்பர்களும்,ஆரோக்கியமும், எல்லாச் செல்வங்களும் கிடைக்க வாழ்த்தினேன்..இந்த வருடமும் உனக்கு இவையெல்லாவற்றோடும் மிகுந்த தைரியத்தையும் வாழ்த்துகிறேன்!! இந்த வருடத்தையும் ஒன்றாகவே கடப்போம், கற்றுக்கொள்வோம், உன்னை நானும் என்னை நீயும் உற்றுக்கேட்டுக்கொள்வோம்

Akka we too wish her the same on her B`Day

Wish you Many More Happy Returns of this Day Pappukutti

mayil said...

happy birthday dear pappu kutti :))

புலவன் புலிகேசி said...

பிறந்தநாள் வாழ்த்துகள் பப்பு....

வல்லிசிம்ஹன் said...

பப்புமா ஹாப்பி பர்த் டே
உன் அம்மாவுக்கும் ஹாப்பி பர்த்டே உன்னைப் பெற்று மறுபிறவி எடுத்திருக்கிறாள் இல்லையா.
அன்பு முல்லை உங்களைப் போலவே உங்கள் மகளும் அமிர்தம் போல் வளர்வாள். இனிமையாக இருப்பாள்.நீங்கள் இருவரும் என்னைப் போன்ற பாட்டிகளுக்கு ஆனந்தம் கொடுப்பீர்கள். பல்லான் பல்லாண்டு மனம் நிறைய சந்தோஷத்துடன் வாழ ஆசிகள்.

க.பாலாசி said...

//சமயங்களில் எங்களை நோக்கி பற்கடிக்கிறாய். எதையாவது மறுத்தால் எங்களுக்கு அடிகளைத் தருகிறாய்//

குழந்தைக்கே உரிய குறும்பு...

//இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம், பப்பு! வாழ்க்கை உனக்கு முன் விரிந்துக்கிடக்கிறது, நீ அதை இன்னும் சுவாரசியமாக்குவாய் என்பதையும் அறிந்திருக்கிறேன் பப்பு!//

அதற்கு நாமும் புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும்.

மழையுடன் சேர்ந்து நானும் பப்புவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

தாய்மை பொங்கும் இடுகை.

உங்களுக்கும் பப்புவுக்கும் வாழ்த்துக்கள்!

செல்வநாயகி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், பப்பு!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

பப்பு, நீ வாழ்க்கையில் எல்லாவற்றையும் பெற வேண்டுமாய் வாழ்த்துகிறேன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், பப்பு!!

பித்தனின் வாக்கு said...

எங்களின் செல்லம் பப்புவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல என்றும் மன நிறைவுடனும், சந்தோசங்களுடன், நீடுழி வாழ வாழ்த்துக்கள்.

ஸ்ரீமதி said...

பப்புவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் முத்தங்கள். :))
அருமையான கடிதம் அக்கா. வியக்கிறேன் உங்களைப்பார்த்து...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) பாதி தேவதை பாதி பல்கடிக்கும் பப்புவிற்கு வாழ்த்துக்கள்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பப்புவுக்கு முல்லையின் கடிதங்கள்ன்னு புத்தகம் போட்டுட்டலாம் பாஸ் .. :)சூப்பர்

SanjaiGandhi said...

ஏகப் பட்ட உணர்வுகளைக் கலந்துக் கட்டி எழுதி இருக்கிங்க. குறிஞ்சிமலருக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்..பப்பு வாழ்க வளமுடன்.

Padhu said...

Happy Birthday Pappu...

rapp said...

//உனது மறுபக்கத்தையும் எங்களுக்கு காட்டாமலில்லை! சமயங்களில் எங்களை நோக்கி பற்கடிக்கிறாய். எதையாவது மறுத்தால் எங்களுக்கு அடிகளைத் தருகிறாய்.உனது உணர்ச்சிகளும் எண்ணவோட்டங்களும் மிக ஆழமானவை - அதற்கேற்றவாறு நடந்துக்கொள்ள நானும் உந்தப்படுகிறேன்! எதை மறுக்கிறேனோ அதைச் செய்யவே நீயும் உந்தப்படுகிறாய்! நீயும் நானும் இப்படியே சுற்றி வருகிறோம்//

அப்பாடி, எங்க பப்பு இதுல எல்லாம் பின்தங்கிடுவாங்களோன்னு கவலைப்பட்டேன்.இப்போ நிம்மதியாக இருக்கு:):):)

rapp said...

பப்புவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்:):):)

விக்னேஷ்வரி said...

பப்புவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பிற்காலத்தில் பப்புவுக்கு பொக்கிஷமாகப் போகும் அம்மாவின் கடிதங்கள். அருமை.

☀நான் ஆதவன்☀ said...

பப்புவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :-)

// முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) பாதி தேவதை பாதி பல்கடிக்கும் பப்புவிற்கு வாழ்த்துக்கள்..//

ரிப்பீட்டே :)

மணிகண்டன் said...

பப்புவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Raj said...

Happy Birthday pappu!

அம்பிகா said...

உங்கள் செல்ல மான்குட்டிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....!
பிறந்தநாள் பப்புவுக்கு,
பரிசு எங்களுக்கா?
மிக நெகிழ்வானதொரு இடுகை..

கதிர் - ஈரோடு said...

வாழ்க பப்பு

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

ஆம் முல்லை,
நீங்கள் பப்புக்கு வாழ்த்தியது போல் மிகுந்த தைரியம்,நிறைய நண்பர்கள், நல்ல ஆரோக்கியம்,வாழ்வில் எல்லா வளங்களும்,எல்லா நலங்களும்,வந்து சேர நானும் வாழ்த்துகிறேன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பப்புவுக்கு.

எங்கள் ஊர் பக்கம் என்னை பெத்த அம்மா என்று குழந்தையை கொஞ்சுவார்கள்.

உங்களை பெத்த அம்மாதான் பப்பு.

வாழ்த்துக்கள் இருவருக்கும்.

மணிநரேன் said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பப்பு...:)

Rithu`s Dad said...

பப்புவிற்க்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்...

ஜீவன் said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பப்பு...:)

Mrs.Menagasathia said...

பப்புவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அபி அப்பா said...

குழந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

ஆமா இதிலே மான் யாரு? பப்பு யாரு:-))

நட்புடன் ஜமால் said...

அன்பு பப்புவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

--- ஜமால்,திருமதி, ஹாஜர்


பப்பு பேரவை
சிங்கை.

--------------------------

(பதிவை கூட படிக்கலை - வேலை பளு)

ஆயில்யன் said...

// நட்புடன் ஜமால் said...

(பதிவை கூட படிக்கலை - வேலை பளு)//

என்ன கொடுமை ஜமால் இது!

கம்பெனிக்கு எதிரா ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட தீர்மானிக்கப்போறோம்!

சிங்கை ஜமால் பேரவை
தோஹா

KVR said...

பப்புவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

பாண்டியன் புதல்வி said...

Happy Birthday Pappu.

நசரேயன் said...

பப்புவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

குடுகுடுப்பை said...

பிறந்தநாள் வாழ்த்துகள் பப்பு.

அன்புடன் அருணா said...

பப்புவுக்கு பூங்கொததுக்களுடன் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Deepa (#07420021555503028936) said...

செல்லக் குட்டி பப்புவுக்கு அன்பு முத்தங்கள் ஓராயிரம்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பப்பு.

முல்லை!
அற்புதமான கடிதம். பப்பு இதைப் படித்து ரசிக்கும் நாளை இப்போதே எண்ணிப் பார்க்கிறேன்!

gulf-tamilan said...

பப்புவிற்க்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!!!

தீஷு said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பப்பு!!!
முல்லை.. மிகவும் நெகிழ்வான கடிதம்..

கோபிநாத் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பப்பு ;)

தாரணி பிரியா said...

பப்புவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிடுங்க. உங்க இந்த கடிதங்கள்தான் பப்புவிற்கு விவரம் தெரிந்தவுடன் கிடைக்கும் மிக சிறப்பானதொரு பரிசா இருக்க போகுது முல்லை.

மங்களூர் சிவா said...

பப்புவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மிக்க அன்புடன்

மங்களூர் சிவா

நசரேயன் said...

//நான் பொதுவாக உன்னெதிரில் அழுவதில்லை. ஓரிரு முறைகள் அப்படி நேர்ந்திருக்கிறது. //

வெங்காயம் வெட்டுநீங்களா??

பீர் | Peer said...

பப்பு! பிறந்தநாள் வாழ்த்துக்கள் பப்பு!

கடிதம் கட்டிப்போடுகிறது.

சந்தனமுல்லை said...

தங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கு நன்றிகளும் அன்பும்! என்றாவது ஒருநாள், பப்பு தங்கள் வாழ்த்துகளை வாசிக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியடைவாள்! பப்புவின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்! :-)

பாரதிதமிழன் said...

அன்பு பப்பு செல்லத்துக்கு , அன்பான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

பூஜாவின் சார்பிலும் ஸ்பெசல் வாழ்த்துக்கள்

கடிதம் நிறைய உணர்வுகளை கிளறிப் போடுகிறது.பப்பு அம்மாவுக்கு நன்றி

அன்பு
பாரதிதமிழன்

காமராஜ் said...

அன்பிற்கினிய சந்தன முல்லை இந்த சந்தோச கணங்களை நான் பாராமல் கடந்துவந்த குற்ற உணர்வு மேலிடுகிறது. ஆனாலும் பப்புவுக்கு எங்கள் இனிய பிறந்த நாள் வழ்த்துக்கள்

Anonymous said...

// ‘சுட்டா அவன் செத்துடுவான்//

..aaha, nalla vasanam. romba tamil cinema parpaangalo??

:))

Tamilparks said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

முல்லை,பொங்கு பொங்கு என அழுகிறேன்.இப்பல்லாம் இது வாய்த்து விடுகிறது.இந்த தருணம்,நான் பப்புவாய் பிறக்க ஆசையாகிறது!இவ்வளவு அடர்த்தியான கடிதம் பார்த்து நாளாச்சு,முல்லை.

அப்பா,உனக்கு பிறகு உன்னை மாதிரியே கடிதம் எழுதும் ஒரு மனுஷியை இன்று பார்த்தேன்.பெயர் முல்லை.சந்தன முல்லை!
அம்மாவும்,மகளும்,யாவரும் நல்லா இருக்கணும்ப்பா!நீதான் பொறுப்பு.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா பப்பு!

Swaram said...

Here from G3's blog. A very very happy bday to Pappu :) God bless her :)

Gr8 to know u hd a lovely party :)

இரசிகை said...

inga varaikkum vaasichenga.........
iniyum vaasikkanum:)