Thursday, January 15, 2009

கெமிஸ்ட்ரி பத்தி உங்களுக்கு என்னத் தெரியும்?

ரொம்ப நாளாச்சு ஏதாவது கிறுக்குத்தனமா கேள்வி/புதிர் போட்டு..இந்தக் கேள்வி பத்தாவதுப் படிக்கும்போது எங்க கிளாஸிலே செம ஹாட்டா இருந்துச்சு. என்னக் கேள்வியா..

ஒரு மாலிக்கிள் ஆஃப் பொட்டாசியம் அயோடைடு, ரெண்டு மாலிக்கிள்ஸ் ஆஃப் சல்பர் சேர்ந்தா என்ன கிடைக்கும்? (கேட்டலிஸ்ட் இருக்கு, அதை மறந்துட்டேனே..மூன்லைட் கேட்டலிஸ்ட்!)

என்னோட பெஞ்ச்மேட் ஹேமாதான் இந்தமாதிரி கிறுக்குத்தனங்களிலே எனக்கு வலதுகை மாதிரி!ம்ம்..அவ ஒருபடி மேலே போய், இந்த வினையோட பை-ப்ராடக்ட் கூட கண்டுபிடிச்சா, பாவம், இப்போ சிங்கப்பூர்லே குப்பைக்கொட்டிக்கிட்டிருக்கா!!!

26 comments:

ஆயில்யன் said...

மீ த எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்!

நட்புடன் ஜமால் said...

நானும் வேற கெமிஸ்ட்ரின்னு ஓடோடி வந்தேன் ...

கானா பிரபா said...

ஐயோ அம்மா என்றவாறே கால்கள் பரபரக்க இந்த இடத்தை விட்டு ஓடுகிறேன்.

கெமிஸ்ட்ரியாம் கெமிஸ்ட்ரி

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்தக் கெமிஸ்ட்ரிக்குள்ள ஒரு கெமிஸ்ட்ரி இருக்குன்னு எனக்கு தெரியும் சொல்லிடவா

KiSs

www.narsim.in said...

k i s s

Anonymous said...

ki+2s = kiss

நையாண்டி நைனா said...

சத்தியமா, குப்பை தான் கிடைக்கும்.

அதனையும் சிங்கப்பூரிலே கொட்டி சம்பாதிக்கிறாரே.. அவரு ரொம்ப நல்லவருங்க.

Anonymous said...

இதுக்குத்தான் நான் தலை தெறிக்க ஆஸி ஓடி வந்திட்டேன். எஸ்ஸாகிக்கறேன். :)

சந்தனமுல்லை said...

சேட்டில் வந்து முதலில் விடை சொல்லிவிட்டார் சிங்கை நாதன். HHSS-Ambur -னு நிரூபித்துவிட்டார்....ஆம்பூர் மானம் காத்த சிங்கை நாதன் வாழ்க!! :))

நையாண்டி நைனா said...

நீங்கள்லாம் ரொம்ப நல்லா படிச்சவங்க....

நான் ஈக்குவேசன் எழுதி, எழுதி பார்த்தேனா... சத்தியமா... ஒரு கூடை நிறைய குப்பை தான் கிடைச்சது.

குடுகுடுப்பை said...

நான் ஒரு எதிர்கேள்வி பதிவா போடறேன்.
ஆனா இதுக்கும் பதில் தெரியாது.
நான் கேக்கப்போற கேள்விக்கும் பதில் தெரியாது

சிங்கை நாதன்/SingaiNathan said...

:)

Anuptan
Singai Nathan

Poornima Saravana kumar said...

கெமிஸ்ட்ரி எனக்குப் பிடிக்காத சப்ஜெக்ட்..

நசரேயன் said...

என்னை ஆளை விட்டுங்க, நான் இந்த விளாட்டுக்கு வரலை

அமுதா said...

:-))

Karthik said...

//மூன்லைட் கேட்டலிஸ்ட்!

இதை சொல்லியிருக்க வேண்டாமோ?
:)

மங்களூர் சிவா said...

எங்க வீட்டம்மணிக்கு தெரிஞ்சாலும் தெரியலாம் !! கேட்டு சொல்றேன்.

இராம்/Raam said...

CH2OH + H2O reaction i know very well... :)

Unknown said...

மூன்லைட் சொல்லி கொஞ்சம் உளறிட்டிங்க...

சரி ஒரிஜினல் கெமிஸ்ட்ரியிலேர்ந்து ஒரு கேள்வி.

எந்த ரெண்டு வேதியியல் மூலக்கூறுகளைச் சேர்த்தால் நாய் கிடைக்கும்? (நாங்க தமிழ் மீடியம், தமிழ்ல தான் கேப்போம்)

சிங்கை நாதன்/SingaiNathan said...

Sodium + Iodine

NA+I= NAI

:)
anputan
Singai Nathan

Unknown said...

//Sodium + Iodine

NA+I= NAI

:) //

தம்பி சிங்கைநாதா, சொன்ன பதிலெல்லாம் கரீட்டு தான், ஆனா அதை அப்படி சொல்லக்கூடாது.

சோடியம் ஹைட்ராக்ஸைடும் ஹைட்ரஜன் அயோடைடும் சேர்ந்தால் நாயும் நீரும் கிடைக்கும்

NaOH + HI -> NaI + H2O

சந்தனமுல்லை said...

அண்ணே நீங்க சொன்னது 'எந்த ரெண்டு வேதியியல் மூலக்கூறுகளை' 'எந்த ரெண்டு வேதியியல் மூலக்ப்பொருள்களை' என்று அல்ல ;)

நாங்களும் தான் தமிழ் மீடியம் ;)

அன்புடன்
சிங்கை நாதன்

Unknown said...

//அண்ணே நீங்க சொன்னது 'எந்த ரெண்டு வேதியியல் மூலக்கூறுகளை' 'எந்த ரெண்டு வேதியியல் மூலக்ப்பொருள்களை' என்று அல்ல ;)//

சரி தம்பி (இப்படி வெளில கூப்பிட்டாலும் சிங்கைநாதர் வயசுல பெரியவரு), இப்போ அடுத்தக் கேள்வி...

வேதியியல்ல எந்த ரெண்டு மூலப்பொருள்களைச் சேர்த்தால் நாட்டுக்கத்திரி உருவாக்க முடியும்?

சந்தனமுல்லை said...

ஆகா..ரெண்டு சீனியர்சும் செமையா கலாட்டா பண்றாங்களே!! இப்போவே இப்படின்னா, காலேஜ்-ல எப்படி இருந்திருக்கும்!!

Unknown said...

//இப்போவே இப்படின்னா, காலேஜ்-ல எப்படி இருந்திருக்கும்!!//

காலேஜ்ல அவன் படிப்ஸ் பார்ட்டி, நான் கோகுல கண்ணன். ரெண்டு பேரும் வெவ்வேற ரூட்....

rapp said...

சிஷ்யக்கோடிகள் ஏற்கனவே சொல்லிட்டாங்க போல:):):)