குறிப்பு : காப்பி போ(பே)ஸ்ட்தான்!
ப்லாக் காணாம போனப்போ இங்கே எழுதினது. இங்கேயும் ஒரு தடவை போஸ்டறேன்.
என் பெயர் கடுகு.
பெரும்பாலும் சீ.கடுகு என்றும் சில நேரங்களில் மிஸ்.கடுகு சீரகம் என்றும் அறியப்பெற்றிருந்தேன்.
(கல்யாணம் முடிந்த சில மாதங்களில்)காப்பீட்டிற்காக ஃபார்ம் நிரப்ப வேண்டியிருந்தது.
பெயரை, முழு பெயரையும், கல்யாணமான விபரத்தையும் பூர்த்தி செய்து அனுப்பியிருந்தேன்.
ஒருவாரம் கழித்து கடிதம் வந்தது. அது இப்படி ஆரம்பித்திருந்தது.
மிஸஸ். கடுகு சீரகம் அவர்களுக்கு,
அதிர்ந்து போன நான், விளக்கிக் கூறினேன்.
Ms.கடுகு சீரகம் பேசுகிறேன். மிஸஸ்.கடுகு சீரகம் என்று தவறாக குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
Ms என்று மாற்றி விடுங்கள்.
அப்படியானால், மணமானவர் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது?
உண்மைதான். ஆனால் எனது சான்றிதழ்களின்படி நான் கடுகு சீ மட்டுமே.
பி. எஃப், பான் கார்டு, காப்பீடுகள் எல்லாவற்றிலும் என் பெயர் கடுகு சீரகமாக இருந்தாலும், கல்யாணமான தகுதியின் நிமித்தம், மிஸஸ். கடுகு சீரகமாக்கப்பட்ட அவதியிலும், நீங்க்ள் உளுத்தம்பருப்புடன் வாழவில்லையா என்ற கேள்விகளாலும், Ms. கடுகு சீ -
மிஸஸ்.கடுகு உளுத்தம்பருப்பு என்று மாறியது!
இருந்தாலும், இன்று வரை சான்றிதழ்களில் கடுகு சீ மட்டுமே.
ஆனாலும், கடுகின் குழப்பம் அளப்பரியது!
Ms.சீ.கடுகு உளுத்தம்பருப்பா அல்லது Ms.கடுகு உளுத்தம்பருப்பா அல்லது மிஸஸ்.சீ.கடுகு உளுத்தம்பருப்பா என்பதுதான் அது!? !
3 comments:
மிக நுணுக்கமாக கிண்டல். நல்லாயிருக்கு
சூப்பரான போஸ்ட் இதுன்னு மறுக்கா சொல்லிக்கிறேன்ப்பா.. :)
//முத்துலெட்சுமி/muthuletchumi said...
சூப்பரான போஸ்ட் இதுன்னு மறுக்கா சொல்லிக்கிறேன்ப்பா.. :)//
நானும்பா :)
Post a Comment