நண்பரின் நண்பர் நமக்கும் நண்பர்தானே! தயை கூர்ந்து உதவுங்கள்!!
அந்த நண்பர் விரைவில் உடல்நலம் பெறட்டும்!!
மேலும் விபரங்களுக்கு....
உதவுங்கள்
நண்பர்களே,
கிழக்கு பதிப்பகத்தில் என்னுடன் பணியாற்றிய முத்துராமன் என்கிற என் நண்பர் (வயது 33) இப்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் டயாலிஸிஸ் சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். டயாலிஸி்ஸுக்கான மருத்துவச் செலவே மாதம் ரூ. 16,000 ஆகிறது. கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு ஆறு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.
பலபேர் உதவினால் மட்டுமே சீக்கிரத்தில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியும் என்கிற நிலைமை. எனவே உங்களால் முடிந்த தொகையை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். சிறு உதவியாக இருந்தாலும் அது நிச்சயம் நண்பரின் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
மேலும் இதுதொடர்பாக உதவக்கூடிய டிரஸ்டுகளில் உங்களுக்குப் பரிச்சயம் இருந்தாலும் சொல்லவும்.
முத்துராமன் அக்கவுண்ட் எண் -
Name - Muthuraman
State Bank of India (Mogappair) a/c no - 30963258849
IFS code no - 5090
MICR code : 600002118
முத்துராமன் முகவரி :
Muthuraman,
7/551, JJ Nagar West,
Near ERI Scheme Velammal School,
Mugappair West,
Chennai - 600037
Tamil Nadu. India.
12 comments:
பதிவிற்கு நன்றி!
நண்பர் நலம் பெற பிரார்த்தனைகள்....தெரிந்தவர்களிடம் கூறுகிறேன்.
உங்கள் நல்ல நோக்கம் புரிகிறது...
ஆனால்.....
இதைப்பற்றி வலைப்பதிவில் வெளியிடவேண்டாம் என்று முத்துராமன் சொன்னதாக கேள்வி.
நீங்கள் பதிவை போடுமுன் சம்பந்தப்பட்டவரிடம் கேட்டுக்கொண்டீர்களா ?
நண்பர் விரைவில் நலம் பெற பிரார்த்தனையுடன்
அவரவரால் இயன்றதை செய்வோம் முல்லை. முத்துராமன் அவர்கள் விரைவில் நலம் பெறவும் பிரார்த்திப்போம்.
முத்துராமன் அவர்கள் பூரண நலமடைய பிரார்த்தனைகள்...
நன்றி வெயிலான், அருணா!
நன்றி ரவி, ச.ந. கண்ணனிடம் உறுதிபடுத்திக்கொண்ட பிறகே இடுகையிட்டேன். அவரது இடுகைக்கும் சுட்டி கொடுத்திருக்கிறேன்!
நன்றி S.A.நவாஸூதீன், ராமலஷ்மி மேடம்!
நிச்சயம் இயன்றதை செய்வோம்.
முயற்சி திருவினையாக்கும்
விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள்
தோழமை முத்துராமன் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதோடு நில்லாமல், உதவவும் செய்வேன்...
ஏற்கனவே நண்பர் ஒருவர் மூலம் அறிந்தாலும், இப்போது நீங்களும் தெரியப்படுத்தியதற்கு நன்றி....
அன்பின் சந்தன முல்லை
பகிர்வினிற்கு நன்றி - ஏற்கனவே தகவல் அறிந்தேன் - இயன்றதை அனைவரும் செய்வோம் - நண்பர் முத்துராமன் விரைவினில் பூரண நலம் பெற பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்
Post a Comment