என்னா பிஸ்கெட்
ஜம் பிஸ்கெட்
என்னா ஜம்
ராஜம்!!
- இது ஆயாவோட வெர்ஷன்!

பிஸ்கெட் பிஸ்கெட்
என்னா பிஸ்கெட்
ஜாம் பிஸ்கெட்
என்னா ஜாம்
கோ ஜாம்
என்ன கோ
டீ கோ
என்ன டீ
(உண்மையில் ஆட்டம் இதோடு முடிந்துவிடும்
'பொண்டாட்டி' என்றுச் சொன்னால்)
'பொண்டாட்டி' என்றுச் சொல்வதற்கு தடை இருந்ததால், ஒரு கஸ்டமைஸ்ட் வெர்ஷன் வைத்திருந்தோம்.
டீ கோ
என்ன டீ
பன் டீ
என்ன பன்
.....
.....
.....
'எக்காலத்திலும் மறந்துபோகவே மாட்டேன் இந்தப்பாடலை' என்று நினைத்துக்கொண்டது பொய்த்துப்போனது!! :-( பெரும்பாலும் ஆயாவுடன் தான் இதை விளையாடியிருக்கிறேன். பஸ்ஸில் போகும்போது இதுதான் பொழுதுபோக்கு.

பப்பு இந்தவிளையாட்டை விளையாட ஆரம்பித்திருக்கிறாளென்றுக் கண்டுபிடித்திருந்தீர்களானால், 'சித்திரக்கூட'த்தை நீங்கள் தொடர்ந்து வாசிக்கிறீர்களென்று அர்த்தம். :-)
பிஸ்கெட் பிஸ்கெட்
என்னா பிஸ்கெட்
ஒரு பிஸ்கெட்
ரெண்டு பிஸ்கெட்
என்னா பிஸ்கெட்
ஒன்னுமில்ல பிஸ்கெட்
- பள்ளியிலிருந்து கற்றுக்கொண்டு வந்தது இது!!! இதே போல 'அப்பா விளையாட்டு', ‘அம்மா விளையாட்டு' கூட இருக்கிறது. 'பிஸ்கெட்' வருமிடத்தில் ‘அம்மா' அல்லது 'அப்பா' போட்டுக்கொள்ளுங்கள்!! :-)
33 comments:
இது மாதிரி விளையாடி கடைசீல மொக்கையா ஏதாவது சொல்லி சண்டைப்போட்டு - ஏன்னா கடைசீல யாரு சொல்லறாங்களோ அவங்க தான் வின்னர்.
பிஸ்கெட் பிஸ்கெட்
என்னா பிஸ்கெட்
ஜாம் பிஸ்கெட்
என்னா ஜாம்
கோ ஜாம்
என்ன கோ
டீ கோ
என்ன டீ
பன் டீ
என்ன பன்
ரிப்பன்
என்ன ரிப்பன்
பச்சை ரிப்பன்
என்ன பச்சை
இலை பச்சை
என்ன இலை
மாஇலை
என்ன மா
அம்மா..!!
என்னாது இது ஜம் பிஸ்கெட்??
நானெல்லாம் ஜாம் ஜாம்ன்னுல்ல பாடி துன்னுருக்கேன்
:)
பப்புவிடம் நீங்க கத்துக்குவீங்க நிறைய!
//இலை பச்சை
என்ன இலை
மாஇலை
என்ன மா
அம்மா..!!//
ADMK...!?
//அம்மா..!!//
கவிதா அப்படியே முடிக்காமா தொடர்ந்துக்கிட்டே இருக்கலாம்.
என்ன அம்மா
தயிர்க்காரம்மா
என்ன தயிர்
//கவிதா அப்படியே முடிக்காமா தொடர்ந்துக்கிட்டே இருக்கலாம்.
என்ன அம்மா
தயிர்க்காரம்மா
என்ன தயிர்//
ம்ம்...தொடருங்க... :)
எங்க கைப்பூ.... எங்க கைப்பூ..? அவருக்கு நினைவு இருக்கும்னு நினைக்கிறேன்.. :)
////இலை பச்சை
என்ன இலை
மாஇலை
என்ன மா
அம்மா..!!//
ADMK...!?//
இலை , அம்மா ன்னா அதிமுக வா?
இருங்க அப்பன்னா மாத்தி எழுதறேன்..
என்ன பன்
ரிப்பன்
என்ன ரிப்பன்
சிகப்பு ரிப்பன்
என்ன சிகப்பு
சூரியன் சிகப்பு
என்ன சூரியன்
உதய சூரியன்..!!
:))))))))))
என்னது இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு. எல்லாரும் போய் வேலையப் பாருங்க..ஜம் பிஸ்கெட்டாம்..வாட் நான்சென்ஸ்.
அம்மா
தயிர் அம்மா
என்ன தயிர் ?
அதுக்கு அப்புறம் என்ன..ம்..ம்ம்..விளையாடிக்கிட்டு இருந்த புள்ளைங்கள தொரத்திவிட்டுட்டோமே..
புள்ளைங்களா..ஸ்டார்ட் த சாங்க்..
இதே மாதிரி
கேன் கேன்
என்ன கேன்
பால் கேன்
என்ன பால்..
எருமப் பால்
என்ன எரும
காட்டு எரும
என்ன காடு
பூங்காடு
என்ன பூ...
என நீண்டு
கும்மாங்குத்து என்று முடியும்
எங்க வீட்டு பாப்பாவிடனம் தினம் குத்து வாங்குகிறேன்
என்னங்க நீங்க ...கும்மாங்குத்துல முடியாம என்ன பிஸ்கெட் பிஸ்கெட் விளையாண்டுருக்கீங்க...சின்னப்பில்லத்தனமா :)
பிஸ்கட் பிஸ்கட்
ஜாம் பிஸ்கட்
என்ன ஜாம்
கோ ஜாம்
என்ன கோ
டீ கோ
என்ன டீ
பன் டீ
என்ன பன்
ரிப்பன்
என்ன ரிப்பன்
பச்சை ரிப்பன்
என்ன பச்சை
மா பச்சை
என்ன மா
அம்மா
என்ன அம்மா
டீச்சர் அம்மா
என்ன டீச்சர்
கணக்கு டீச்சர்
என்ன கணக்கு
வீட்டு கணக்கு
என்ன வீடு
மாடி வீடு
என்ன மாடி
மொட்டை மாடி
என்ன மொட்டை
பழனி மொட்டை
என்ன பழனி
வட பழனி
என்ன வடை
ஆமை வடை
என்ன ஆமை
குளத்து ஆமை
என்ன குளம்
திரி குளம்
என்ன திரி
விளக்கு திரி
என்ன விளக்கு
குத்து விளக்கு
என்ன குத்து
கும்மாங் குத்து
பிஸ்கட்...பிஸ்கட்லேயே இன்னும் சில வெர்ஷன்ஸ் வேணும்னா இங்கே போய் பாருங்க...
http://kappiguys.blogspot.com/2006/11/blog-post_15.html
ஆயில்யன் said...
என்னாது இது ஜம் பிஸ்கெட்??
நானெல்லாம் ஜாம் ஜாம்ன்னுல்ல பாடி துன்னுருக்கேன்
ரிப்பீட்டே...
என்ன ஜாம்?
குலோப் ஜாம்...
ஆஹா..:) கைப்புள்ளக்கும் சேத்து..
//பிஸ்கட்...பிஸ்கட்லேயே இன்னும் சில வெர்ஷன்ஸ் வேணும்னா இங்கே போய் பாருங்க...//
ம்ம்ம்...அது!! இப்பவும்..என்னம்மா பாட்டை பாடறாரு பாத்தீங்களா..?
அடிக்கடி எனக்கு அண்ணன்..(முல்ஸ்.. நோ..பீலிங்ஸ்.. இது வேற அண்ணன்) ன்னு நிரூபிக்கிறாரு.. :)))
//என்னங்க நீங்க ...கும்மாங்குத்துல முடியாம என்ன பிஸ்கெட் பிஸ்கெட் விளையாண்டுருக்கீங்க...சின்னப்பில்லத்தனமா :)//
அதனால தான் உங்களை வேக வேகமா கூப்பிட்டேன்.. :))))
ஆஹா! கைப்புள்ள முந்திக்கிட்டாரே!
ஆனா நாங்க கடைசில இப்படி சொல்வோம்!
என்ன வடை
தயிர் வடை
என்ன தயிர்
கடடித் தயிர்
என்ன கட்டி
ஐஸ் கட்டி
:-))
கைப்புள்ளக்கு ஜே!! :-)))))))))))))))))))
கவிதா முதலில் சொல்லியிருக்கும் வெர்ஷன்தான் நாங்கள் பாடியது:))!
:) ஆச்சிக்கும் ஒரு ஜே
கைப்ஸ் அண்ணே கலக்கிட்டீங்க :)
பப்புக்கு பிஸ்கட் க்ளாஸ் எடுக்க கைபுள்ளய வரச்சொல்லுங்க...
கைப்புள்ள இன்று முதல் "கும்மாங் குத்து கைப்புள்ள" என்ற அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவார்... :)))
இந்த பிஸ்கெட் எல்லோரையும் குழந்தைகளாக்கி விட்டிருக்கே....!
கைப்புள்ள வேர்ஸன் படு டெரர்
நாங்களும் என்ன டீயோட நிறுத்திடுவோம் முல்லை.
:)
அடடா பின்னூட்டத்துல ஏகப்பட்ட பேர் கலக்குறாங்களே.
நான் பிஸ்கட்லாம் தின்னுருக்கேன் அவ்ளோதான்
:)))))))
அதெல்லாம் ஒரு காலம்..
nice..
வாவ்!பிஸ்கட் குழந்தைகள்!..தள்ளி உக்காருங்கப்பா நானும் உக்கார்ந்துக்கிறேன்!
ஹாஹாஹா....
என்னாதிது தப்பு தப்பா பாடிட்டு
எனக்கெல்லாம் இப்படித்தான் சொல்லித்தருவாங்க
தம்பி தம்பி
என்ன வேண்டும்
பழம் வேண்டும்
என்ன பழம்
பனம் பழம்
என்ன பனை
தாளி பனை
என்ன தாளி
விருந்தாளீ
என்ன விருந்து
மாவிருந்து
என்ன மா
அம்மா!!
( பனை மரத்தின் ஒருவகையை தாளி பனை என்று சொல்லுவார்கள். அப்படியே தாள ஓலை என்று பனை ஓலைக்குப் பெயர் உண்டு என்று கேள்விப் பட்டிருக்கிறேன் )
ஆஹா ஏகப்பட்ட வெரைட்டி ரைம்ஸ் கிடைக்கும் போலயே!
அருமை வாழ்த்துக்கள்
Post a Comment