Thursday, September 25, 2008

நினைவுகளின் பிரதிபலிப்புகள்

மளிகை வாங்கிக்கொண்டு பில் போடுவதற்காக கார்டோடு நின்றுக்கொண்டிருந்தேன்.
ஏதோ இடித்த மாதிரி இருந்தது..இன்னொரு கார்ட்!! அதில், லாக்டோஜன் II ,
செரிலாக் மற்றும் பாம்பர்ஸ் என்று நிரம்பியிருந்தது!! புரிகிறது பெண்ணே...
இரண்டு மணி நேரங்களுக்குள் போக வேண்டும் என்ற உன் அவசரம்!!
இரண்டு வருடங்களுக்குமுன் நானும் இருந்திருக்கிறேன் அந்நிலையில்!!
இரவு நேர விழிப்புகள், நான்கு மணிக்கொருமுறை பால் கலந்து, அதிகாலை ஹக்கீஸ் மாற்றி,
weight management..எல்லாம் கண்முன் வந்துப்போயின ஒருமுறை!!

4 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாம்ப்பா.. அப்படி எல்லாம் ராத்திரி முழிச்சிருந்து தூக்கிட்டு நடந்தா தான் தூங்குவேன்னு அடம்பிடிச்ச பையன் இன்னைக்கு அட்மிசனுக்கு நிக்கவச்சிட்டானேன்னு நினைச்சுப்பார்க்கறேன் நானும்.. ஹஹஹா....

Thamira said...

கவிதைத்தனமான பதிவு. வரிசையில் விட்டுக்கொடுத்தீர்களா?

ராமலக்ஷ்மி said...

//இரண்டு வருடங்களுக்குமுன் நானும் இருந்திருக்கிறேன் அந்நிலையில்//

பலவருடங்களுக்கு முன் நாங்களும் அனுபவித்திருக்கிறோம் இந்த அற்புதங்களை எனத் தோன்றும் விதமாக இருக்கிறதே..'பப்பு டைம்ஸ்' அதுக்கு இங்கே இப்போ ஒரு நன்றி.

சந்தனமுல்லை said...

நன்றி முத்துலெட்சுமி, :-) அவ்ளோ சீக்கிரம் விட்டுடுவோமா என்ன?!
கிடைச்சிடுச்சி இல்ல..ஜாலிதானே!! வாழ்த்துக்கள் உங்களனைவருக்கும்!!

நன்றி அப்துல்லா!!

நன்றி தாமிரா, நான் பே செய்யும் சமயம்தான் இது நிகழ்ந்தது!!அதனால் விட்டுக் கொடுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை!! :-)

நன்றி ராமலஷ்மி..தங்கள் நன்றிக்கொரு நன்றி!! :-)