Friday, September 05, 2008

வாழ்க்கை எனும் பள்ளி!!

பத்தாவது முடித்து மார்க் ஷீட் வாங்கியதும் எல்லோரும் எதிர்கொள்ளும் கேள்வி "என்ன க்ரூப் எடுக்க போறே?!" எல்லாருக்கும் (பொதுவாக எல்லா பெண்களுக்கும்) இருக்கும் அதே ஆசைதன்..வேறென்ன..கோட்டெல்லாம் போட்டுகிட்டு, பாக்கெட்டுல கை விட்டுக்கிட்டு, கழுத்துல ஸ்டெத் போட்டுட்டு, காசை வாங்கி டேபிள் ட்ராவில் போடணும் என்றுதான்!!

யாரோ என்கிட்ட சொல்லிட்டாங்க..B (pure Science!!) க்ரூப் எடுத்தாதான் டாக்டருக்குன்னு!!
வீட்டுல சொன்னப்போல்லாம் கேட்காம, அப்ளிகேஷனில் அந்த க்ருப்புக்கே நிரப்பி ஃக்யூவில் நின்றுக் கொண்டிருக்கும் போது வந்தார் நந்தகுமார் சார், +1/+2 வின் பிசிக்ஸ் மாஸ்டர்!அதுவரை அவரிடம் பேசியது கூட இல்லை!!

என்னிடம் வந்தவர், "என்ன? A க்ரூப் தானே?" என்றார்!
கொஞ்சம் நன்றாக படிக்கும் பெண் என்பதாலாயோ, எனது பெரிம்மாவும் அதே பள்ளியில் வேலை செய்வதாலேயோ நான் அறியாமலேயே நிறைய பேருக்கு என்னைத் தெரிந்திருந்தது! (அந்த ஒரு காரணத்தினால் நன்றாக படிப்பது போல நடிக்க வேண்டியிருந்தது..ம்ம்ம்!! சமயங்களில் அதுவே வினையாகவே இருக்கும், நான் என்ன செய்துக் கொண்டிருக்கிறேன்
எனது நான் வீட்டிற்கு வருமுன்னரே செய்தி வந்துவிடும்!! )

"இல்லை, B" என்றேன்!

"என்ன செஞ்சிக்கிட்டிருக்க?" என்று சொன்னவர், என் அப்ளிகேஷனை வாங்கி, அவரது பாப்கெட்டிலிருந்த பேனாவால், க்ரூப் நிரப்பியிருந்த காலத்தை அடித்து விட்டு, A க்ருப்பிற்கானவற்றை நிரப்பினார்!

அந்த ஒரு நொடி எனது முழு வாழ்க்கையையே மாற்றியது!!

+2 வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காததால்,
கணினித் துறைக்குள் நுழைந்தேன்..இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கிறேன்!!
ஒருவேளை, கணக்கு இல்லாத முழு அறிவியல் குரூப்பினை படித்து, இந்த மார்க் எடுத்திருந்தால் நான் இப்போது என்ன செய்துக் கொண்டிருப்பேன் என்று என்னால் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியவில்லை!!

நன்றி சார்!!

என் தாத்தா-பாட்டியிலிருந்து, அம்மா, பெரிம்மா, மாமா வரை அனைவருமே ஆசிரியர்கள் தான்!! ஏதாவது ஒருவிதத்தில் என்னை வழிநடத்திக் கொண்டிருப்பவர்கள் தான்..இப்போது பப்புவையும்!!

இவர்கள் மட்டுமல்ல, ஆரம்ப பள்ளியிலிருந்து எனது கல்லூரி வாழ்க்கை வரை வாழ்க்கை எனும் பாடத்தை கற்றுக் கொடுத்த உங்களனைவருக்கும் நன்றிகளுடன் வாழ்த்துக்கள்!!

9 comments:

singainathan said...

//என்னிடம் வந்தவர், "என்ன? A க்ரூப் தானே?" என்றார்! //

//"என்ன செஞ்சிக்கிட்டிருக்க?" என்று சொன்னவர், என் அப்ளிகேஷனை வாங்கி, அவரது பாப்கெட்டிலிருந்த பேனாவால், க்ரூப் நிரப்பியிருந்த காலத்தை அடித்து விட்டு, A க்ருப்பிற்கானவற்றை நிரப்பினார்!//

I can imagine how he would have said it :)

Because of him only i took BSc Physics initially.

Now heard recently had byepass surgery . unable to meet him last month.


//அந்த ஒரு காரணத்தினால் நன்றாக படிப்பது போல நடிக்க வேண்டியிருந்தது..//

Same here :)

அன்புடன்
சிங்கை நாதன்

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அந்த ஒரு நொடி எனது முழு வாழ்க்கையையே மாற்றியது!!
//

நாம் மறந்தாலும் இறைவன் ஓருபோதும் நம்மை மறப்பதில்லை.

rapp said...

ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள் :):):)

ஆயில்யன் said...

//இவர்கள் மட்டுமல்ல, ஆரம்ப பள்ளியிலிருந்து எனது கல்லூரி வாழ்க்கை வரை வாழ்க்கை எனும் பாடத்தை கற்றுக் கொடுத்த உங்களனைவருக்கும் நன்றிகளுடன் வாழ்த்துக்கள்!///

நானும் இங்கு ரிப்பிட்டீக்கிறேன் :)

சந்தனமுல்லை said...

சிங்கைநாதன்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

4/5 yrs back he had surgery it seems!

But still he is the same, I heard!!


//Same here :) //

I knw :-))

சந்தனமுல்லை said...

நன்றி ராப், ஆயில்யன்!

அப்துல்லா : உண்மைதான்!! நிறைய
தடவைகள் உணர்ந்திருக்கிறேன்!!

தாமிரா said...

ஆசிரியர் தினத்திற்காக‌ அழகான ஒரு கொசுவத்தி.!

ராமலக்ஷ்மி said...

ஆசிரியர் தினத்துக்கு மரியாதை சேர்க்கும் அருமையான பதிவு.

சந்தனமுல்லை said...

நன்றி தாமிரா, ராமலஷ்மி!!