Tuesday, September 23, 2008

பப்பு டைம் பாஸ்

Activity புத்தகங்கள்

3D புத்தகங்களை பப்புவுக்கு அறிமுகப்படுத்தினோம்.
(சிங்கப்பூரிலிருந்து வரும் சித்தப்பாக்களும், குடும்ப நண்பர்களும் மறக்காம்ல் வாங்கி வரும் ஸ்கேல்..அதை நேராகவும், சாய்வாகவும் மாற்றினால் படங்கள் அசைவதுபோல் தெரியுமே!!)
வழக்கமான புத்தகங்களைவிட இது சுவாரசியமாய் இருந்தது.

ஸ்டிக்கர் புத்தகங்கள்

இதுவும் கதைப் புத்தகந்தான். ஆனால், கதையின் வாக்கியங்களில் வீடு/பூக்கள் என்று வரும் வார்த்தைகளுக்குப் பதிலாக, அவற்றின் உருவப்படங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதறகான ஸ்டிக்கர் புத்தகத்தின் கடைசி/முதல் பக்கங்களில் இருக்கும். குழந்தைகள் சரியான ஸ்டிக்கரை எடுத்து ஒட்ட வைக்க வேண்டும். கதை கேட்பதோடு இல்லாமல்,கற்பனையையும்
தூண்டுவதாக இருந்தது. குழந்தைகளின் ஈடுபாடும் இருப்பதால், மிகுந்த உற்சாகத்தோடும் பொழுதும் போகும். இந்த ஸ்டிக்கர் புத்தககங்கள், பப்புவை நன்றாக என்கேஜ் செய்கின்றன்!
நன்றி, இப்படி ஒன்றை கண்டுப்பிடித்தவருக்கு!!

வண்ணம் தீட்டுதல்

மாதிரிப் படங்கள் வண்ணங்கள் தீட்டப்பட்டு இருக்கும். அடுத்த பக்கத்தில் இருக்கும் அதே போன்ற படத்தில் வண்ணங்கள் தீட்டவேண்டும். But this was an utter flop for us.
Not so happy as with free hand!!

7 comments:

அமுதா said...

ஸ்டிக்கர் புத்தகங்கள் , குழந்தைகளின் விருப்பத்திற்கு கிழித்து ஒட்ட வசதியாக் இருப்பதால் அவர்கள் மிகவும் விரும்புகிறார்கள். "pop-up" புத்தகங்கள் உள்ளன. படங்கள் "pop-up" செய்து அவர்களைக் கவர்கின்றன. வண்ணம் தீட்டாது, வெறும் நீரைக் கொண்டு "brush" செய்தால் வண்ணம் மாறும் படங்கள் உள்ள "magic color" புத்தகங்கள் கூட கொஞ்ச நேரம் அவர்களைக் கவர்கின்றன.

சந்தனமுல்லை said...

வருகைக்கு நன்றி!!
பாப்-அப் புத்தகங்கள், ஆர்வக்கோளாறால் கிழிக்கப்பட்டுவிட்டன! இன்னும் கொஞ்ச நாள் செல்ல வேண்டும்போல...!! பதிவில் சொல்லபட்டிருப்பவை..2-3 வயதினருக்கான ஒரு ரெப்ஃபரன்ஸ்!!

ஆயில்யன் said...

//சிங்கப்பூரிலிருந்து வரும் சித்தப்பாக்களும், குடும்ப நண்பர்களும் மறக்காம்ல் வாங்கி வரும் ஸ்கேல்..அதை நேராகவும், சாய்வாகவும் மாற்றினால் படங்கள் அசைவதுபோல் தெரியுமே!!)///


:))

எனக்கும் இது மாதிரியே நிறையா எங்க பெரிய அண்ணன் நிசமா நல்லவரு வாங்கிட்டு வரேன்னு சொல்லியிருக்காரே!!!!!

நான் அதெல்லாம் வைச்சுக்கிட்டு வெளையாடுவேனே :))))

ஆயில்யன் said...

//அடுத்த பக்கத்தில் இருக்கும் அதே போன்ற படத்தில் வண்ணங்கள் தீட்டவேண்டும்//

ஒரு காலத்தில் நானெல்லாம் கரியை வைச்சுக்கிட்டு கரிக்கட்டை மாதிரி நின்னுக்கிட்டு பக்கத்து வீட்டு காம்பவுண்ட் சுவருல்ல வரைச்சிருக்கேனாக்கும்:)) (எங்களுக்கும் உரிமை உண்டுல்ல!)

சந்தனமுல்லை said...

ஆயில்யன்,

நன்றி!!

நிசமா நல்லவன் அவ்ளோஓஓஓ நல்லவராஆஆ?? :-)

பெரிய பாண்டிக்கு கொடுப்பீங்களா?

சந்தனமுல்லை said...

//ஒரு காலத்தில் நானெல்லாம் கரியை வைச்சுக்கிட்டு கரிக்கட்டை மாதிரி நின்னுக்கிட்டு பக்கத்து வீட்டு காம்பவுண்ட் சுவருல்ல வரைச்சிருக்கேனாக்கும்:)) //

பக்கத்து விட்டுக்காரர் சும்மா விட்டாரா ?? ;-))

புதுகை.அப்துல்லா said...

எனக்கும் இது மாதிரியே நிறையா எங்க பெரிய அண்ணன் நிசமா நல்லவரு வாங்கிட்டு வரேன்னு சொல்லியிருக்காரே!!!!!

நான் அதெல்லாம் வைச்சுக்கிட்டு வெளையாடுவேனே :))))
//

போ...உனக்கு குதுக்க மாத்தேன் போ :)