Friday, September 26, 2008

பப்பு பேச்சு கேட்க வா(ங்க)!!

1. Fan மாய்ஞ்சு மாய்ஞ்சு சுத்துது, பாருங்க!!

2. சிறிது நேரம் தூக்கியபின், "போது பப்பு கீழே இறங்கு" என்றபோது மாட்டேன் என்றாள்.
" கை வலிக்குது பப்பு, போதும் இறங்கு" என்றபோது, "உனக்கு கை வலிக்குதுன்னா எனக்கு கால் வலிக்குது, தூக்கு!"!

3.பிறிதொரு நேரத்தில் தூக்கச்சொன்னபோது, "நீதான் பெரிய பொண்ணு ஆகிட்டல்ல, பப்பு! குட்டி பாப்பா இருக்கறவங்களைத்தான் தூக்குவாங்க!" என்றபோது,
"நான் ஹைட்டாயிட்டதும் நீ பப்புவாயிடு. அப்போ நான் உன்னை தூக்கிக்கறேன்! இப்போ நீ என்னை தூக்கு!"


4. பப்பு. ஸ்கூல்ல என்ன சொல்லிகொடுத்தாங்க இன்னைக்கு?

"அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்" என்று இரண்டு வரிகளை பாடுகிறாள்!

5. ஸ்கூல்ல என்ன பண்ணே இன்னைக்கு?

நீட்டுப் பொட்டு பையன் என்கிட்ட தண்ணி கேட்டான். நான் அடிச்சிட்டேன்..அவன் கையைக் கிள்ளீஈஈஈஈ சாப்பிட்டுட்டேன்!!

(நீட்டுப் பொட்டு பையன் : விபூதி இட்டுக் கொண்டு வரும் பையன் என்று பின்னர் தெரிந்துக் கொண்டேன்!!)

பிறிதொரு நேரத்தில் அதே கேள்விக்கு

ஆன்ட்டியை அடிச்சேன்..அவங்க அழுதாங்க..கஷ்டப்பட்டு அழுதாங்க..ஹூ ஹூன்னு!!

எங்கள் வீட்டில் நாந்தான் இந்தமாதிரி கதை சொல்வதெற்க்கெல்லாம் பெயர்ப்போனவள். பப்பு என்னை விஞ்சிவிடுவாள் போலிருக்கிறது!!

நியூஸ் :


வனிலா பிளேஸில் 3-6 வயதினருக்கான ஒர்க் ஷாப் இந்த தசரா விடுமுறையை ஒட்டி நடத்தப்படுகின்றது!!

3ஆம் வகுப்பு - 12ஆம் வகுப்பினருக்கான கடிதம் எழுதும் போட்டி Tamilnadu Postal circle நடத்துகிறது!!

18 comments:

ஜோசப் பால்ராஜ் said...

என் அண்ணண் பையன், 2 வயசு 4 மாதம் ப்ளே ஸ்கூல் போறாரு அவரு. அவருக்கு நரி திராட்சை பறிக்க வந்து எட்டி எட்டிக் குதிச்சு பார்த்துட்டு பறிக்க முடியல்லன்னதும் ச்சீ, ச்சீ இந்த பழம் புளிக்கும்னு சொல்லிட்டு போற கதைய சொல்லிக்குடுத்துருக்காங்க.
வீட்ல இந்த கதைய சொல்லச் சொன்னதுக்கு அவரு தாவி தாவி குதிச்சு அந்த கதைய சொல்லிட்டு கடைசி வரியில நரிக்கு உயரம் பத்தாததுனால பறிக்க முடியலங்கிற விசயத்த அவரால ஒத்துக்க முடியல. உடனே வேகமா பக்கத்துல இருந்த ஸ்டூல் மேல ஏறி பறிச்சுக் காட்டுறாரு.

இப்ப இருக்க புள்ளைங்க கிட்ட எல்லாம் ரொம்ப உசாரா இருக்கனும் போல இருக்கு.

Amudha said...

/* உனக்கு கை வலிக்குதுன்னா எனக்கு கால் வலிக்குது, தூக்கு */
ஹா..ஹா...


நியூசுக்கு நன்றி...நந்துவுக்கு இப்ப தான் கடிதம் எழுத சொல்லிக் கொடுக்கிறார்கள். எழுதுகிறாளா என்று கேட்கிறேன்...

rapp said...

me the second

rapp said...

:):):) so cute

rapp said...

ஜோசப் சார், உங்க அண்ணன் குழந்தையும் செமச் சுட்டி :):):)

ராமலக்ஷ்மி said...

//"நான் ஹைட்டாயிட்டதும் நீ பப்புவாயிடு. அப்போ நான் உன்னை தூக்கிக்கறேன்! இப்போ நீ என்னை தூக்கு!"//

அப்படிப் போடு பப்பு:))!

ராமலக்ஷ்மி said...

ஜோசப் பால்ராஜ் said...
// உடனே வேகமா பக்கத்துல இருந்த ஸ்டூல் மேல ஏறி பறிச்சுக் காட்டுறாரு.//

:))!

சந்தனமுல்லை said...

நன்றி ஜோசப்!!
ஆச்சரியமா இருக்கு உங்க அண்ணன் மகன் செய்யறதைக் கேட்டு!! குழந்தைகள்தான் எவ்வளவு ஆச்சரியமானவர்கள்!! சூப்பர்!!
வாழ்த்துக்கள் குட்ட்டிப் பையனுக்கு!! :-))

சந்தனமுல்லை said...

நன்றி, நன்றிக்கு நன்றி..அமுதா!!
ம்ம்..வாழ்த்துக்கள் நந்துவுக்கு!!

நன்றி ராப்,ம்ம்ம்..thirduppa !!

நன்றி ராமலஷ்மி, :-))

புதுகை.அப்துல்லா said...

4. பப்பு. ஸ்கூல்ல என்ன சொல்லிகொடுத்தாங்க இன்னைக்கு?

"அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்" என்று இரண்டு வரிகளை பாடுகிறாள்!
//

அடடா உங்க புள்ளன்னு ஃபுரூப் பண்ணுறாளே :))

புதுகை.அப்துல்லா said...

ஜோசப் பால்ராஜ் said...
//

இப்ப இருக்க புள்ளைங்க கிட்ட எல்லாம் ரொம்ப உசாரா இருக்கனும் போல இருக்கு.
//


அதான் எங்கிட்ட எப்பவுமே உசாரா இருக்கீங்களாண்ணே

சந்தனமுல்லை said...

வாங்க அப்துல்லா அண்ணா..

//அடடா உங்க புள்ளன்னு ஃபுரூப் பண்ணுறாளே :))//

:-)..இப்படி சரியா புரிஞ்சு வைச்சிருக்கீங்களே!!

SK said...

சூப்பர் அப்பு சாரி பப்பு :-)

ஜோசப், இது ரொம்ப அருமையா இருக்கு :-)

SK said...

http://www.saromama.com/

Check this out. If its useful for any of the kids.

குடுகுடுப்பை said...

இது என்னா பெரிய புள்ள தனமா இருக்கு.

மங்களூர் சிவா said...

//
"உனக்கு கை வலிக்குதுன்னா எனக்கு கால் வலிக்குது, தூக்கு!"!
//
//

"நான் ஹைட்டாயிட்டதும் நீ பப்புவாயிடு. அப்போ நான் உன்னை தூக்கிக்கறேன்! இப்போ நீ என்னை தூக்கு!"
//

ROTFL
:))))))))))))))

cheena (சீனா) said...

செல்லக் குட்டி பப்பு - நிலாவோட ப்ரெண்டா - தூள் கிளப்புறா - மழலைகளோட ஐக்யூ ரொம்வ ஜாஸ்தி இப்ப

என் அன்பு - பப்புவிற்கு

Thooya said...

so cute :)