Wednesday, September 10, 2008

என்ன சொல்ல வருகிறாய்??




பப்புவுக்கு மேஜிக் பால்சை (காலைவேளைகளில்/ வெளிச்சம் உள்ளே வரும் நேரத்தில்) பார்த்து ரசிப்பது மிகவும் விருப்பம். இது ஒரு வாரத்திற்கு ஓடியது!! (பப்புவுக்கு பரிசளித்தத் தோழிக்கு நன்றிகள்!!)

அந்த bowl-ஐ அவள் முன் வைத்து விட்டு, வாயில் எடுத்துப் போட்டுக்கொள்வாளோ என்ற பயத்தில் பொதுவாக எல்லோரிடமும் சொல்வதுபோல், " யாராவது பால்ஸை கையில எடுத்தா, எடுத்து மேல வைச்சிடுவேன்" என்றேன்.

(ஆனால், உண்மையில் அவள் என் வார்த்தைக்ளை மீற வேண்டுமென்றே நினைத்தேன்!! நான் சொல்வதை அப்படியே கேட்டு நடப்பதை விட, அவளது க்யூராசிட்டி ஜெயிக்க வேண்டுமென விரும்பினேன்! எல்லாவற்றுக்கும் இது பொருந்துமென்று சொல்லிவிட முடியாது. உதாரணத்துக்கு, ஸ்விட்சை டாகிள் செய்யும்போது/கண்ணாடியை எடுக்கும்போதோ அதை செய்யக்கூடாதென்று அவர்கள் உணருமளவிற்கு கண்டிப்பாய் இருத்தல் அவசியம்!!)


சிறிது நேரத்திற்குப் பிறகு,
'தொடாம கையில எடுத்து பார்க்கிறேன்!" என்றாள்.

என்ன நினைத்தாளோ, திடீரென்று என்னைத் பால்ஸைத் தொட சொன்னாள்.
தொட்டதும், "ஏன் தொட்டே? தொட்டா மேலே வச்சிடுவேன்!" என்று என்னிடமிருந்து வாங்கி மேலே வைத்துவிட்டாள்!!

ரூல்ஸோடு வாழ்வது எவ்வளவு கடினமென்று உண்ர்த்த விரும்பினாளோ?
அல்லது Does she want to rule??

5 comments:

ராமலக்ஷ்மி said...

//'தொடாம கையில எடுத்து பார்க்கிறேன்!" என்றாள்.//

லவ்லி:))!

//என்ன நினைத்தாளோ, திடீரென்று என்னைத் பால்ஸைத் தொட சொன்னாள்.
தொட்டதும், "ஏன் தொட்டே? தொட்டா மேலே வச்சிடுவேன்!" என்று என்னிடமிருந்து வாங்கி மேலே வைத்துவிட்டாள்!!//

சூப்பர்:))!

//ரூல்ஸோடு வாழ்வது எவ்வளவு கடினமென்று உண்ர்த்த விரும்பினாளோ?
அல்லது Does she want to rule??//

எப்படியானாலும் இருக்கட்டும். பப்புவுக்கு என் அன்பு முத்தங்கள்.

புதுகை.அப்துல்லா said...

chooo sweet :))

rapp said...

ஐயயோ, அது ரொம்ப ஆபத்தானதுன்னு சொல்றாங்களே?

சந்தனமுல்லை said...

:-) நன்றி ராமலஷ்மி,அப்துல்லா!!

ராப் : ஓ தெரியாதேப்பா..இன்னும் விபரங்கள் தர முடியுமா?

ஜோசப் பால்ராஜ் said...

அக்கா, அந்த மேஜிக் பால்ஸ் ஒரு சீனத் தயாரிப்பு, அதுல இருக்க கெமிக்கல்ஸ் எல்லாம் குழந்தைகளுக்கு ஒத்துக்காது. தண்ணீர்ல போட்டா அது உப்பி பெருசாகும். சில குழந்தைகள் இத வாயில போட்டு பெரிய பிரச்சனையாயிருக்கு. குழந்தைங்க கிட்ட இத விளையாட குடுக்காதீங்க.

சீனத் தயாரிப்பு பொம்மைகளையே குழந்தை வைச்சு விளையாடுனா, விளையாடி முடிச்சதும், நல்ல சோப் போட்டு கையெல்லாம் கழுவி விட்ருங்க. பொம்மைய குழந்தைங்க வாயில வைக்க விட்றாதீங்க. அவங்க நிறத்துக்காக உபயோகிக்கிற இரசாயனங்கள் எல்லாம் மிக மோசமானது.