அரசியல்
"ராஸ்கல்" சொல்லு - பப்பு என்னிடம்.
"ராஸ்கல்"
ஆயா, இங்க பாருங்க அம்மா ராஸ்கல் சொல்றாங்க!!
ம்ம்ம்...!
(aaya is tour moral police @ home. Pappu is aaya's lil helper now!!)
Lateral thinking
பப்புவின் புத்தகங்களைப் பார்த்து கதைசொல்லும்போது, புத்தகத்தை
வைத்துக் கொள்வது அவளது பொறுப்பு. ஒவ்வொரு பக்கமும் முடிந்த பின்
அவள்தான் திருப்புவாள்.
அந்த பக்கத்திற்கான கதை முடிந்தபின்,
பப்பு, திருப்பு..
புத்தகத்தை திருப்பினாள், தலைகீழாக!
கேள்வி கார்னர்:
இது என்னா? - பப்பு
இது புருவம். சொல்லு..புருவம்.
ப(பு)ருவம்....இது ஏன் இங்க இல்ல? (என் மூக்குக்குக் கீழ் காட்டி)
ஏன் இங்க இல்ல..(என் முழங்கையைக் காட்டியபடி)
புருவம் அங்கல்லாம் இருக்காது. கண்ணுக்கு மேலதான் இருக்கும்.
blah...blah..
முடி ஏன் கருப்பா இருக்கு?
முடி கருப்பாதான் இருக்கும், பப்பு.
இந்தியால இருக்கறவங்களுக்கு கருப்பாதான் இருக்கும்.
ஏன் தலைல கருப்பா இருக்கு?
கூகுளிட்டு, முடி கருப்பாயிருக்கக் காரணம் எமெலானின் என்ற பொருள்தான் காரணம் என்றறிந்து சொன்னபோது எழுந்ததுதான் மேலிருக்கும் கேள்வி!!
Wednesday, September 17, 2008
பப்பு டைம்ஸ்
Subscribe to:
Post Comments (Atom)
.jpg)


9 comments:
/* ஏன் தலைல கருப்பா இருக்கு? */
கேள்வி கேட்பது ஈசி... கூகிள் பண்ணி பதில் சொல்லி வர்ற கேள்விக்கு பதில் சொல்றது இன்னும் கஷ்டம் :-)
பொறுமையா
சொல்றீங்களேப்பா. பப்பு லக்கி கேர்ள்:)
;-) பப்பு இந்த முறையும் உங்களுக்கு ஆப்பா
நா கேள்வி கேட்டப்ப சும்மா தொணதொனங்குது பாரு! அப்படின்னு பாராட்டு கிடைச்சது. :)
//புத்தகத்தை திருப்பினாள், தலைகீழாக!//
:))!
ஆயா, இங்க பாருங்க அம்மா ராஸ்கல் சொல்றாங்க!!
//
ஆமாம்..நீங்க சொன்னதை தானே அவ சொன்னா. உன்மையச் சொன்னா அரசியல்ங்குறாங்க...என்னடா உலகம் இது :)))
அமுதா..நன்றி :-)!!
நன்றி வல்லியம்மா!!
நன்றி கானாஸ்!! என்ன..சந்தோஷம் பொங்குது..நான் ஆப்பு வாங்குறதுல அவ்வளவு சந்தோஷமா?!! :-)
அப்துல்லா : நன்றி!!
அவ்வளவு கேள்வி கேட்டீங்களா? :-)
நன்றி ராமலஷ்மி!! :-)
அப்துல்லா..நன்றி!!
// ஆமாம்..நீங்க சொன்னதை தானே அவ சொன்னா. உன்மையச் சொன்னா அரசியல்ங்குறாங்க...என்னடா உலகம் இது :)))
ம்ம் சப்போர்ட்டா?!
Post a Comment