Tuesday, September 09, 2008

பப்பு 1 2 3....

ஒரு புதிய விளையாட்டு

சோப்பு தண்ணீரில் காற்றுக் குமிழ்கள் விடுவது!! குமிழ்களை விடுவதை விட, அவற்றை கையில் பிடித்து உடைப்பதுதான் மிகவும் விருப்பம்!

இரண்டு சேட்டைகள்

1. கண்கள் இரண்டால் பாடலில் சுவாதி அழகு காட்டுவது போல், வாயை ஒருப்பக்கம் முறுக்கிக் காட்டுகிறாள். கீழ் தாடையை மட்டும் வேகமாக அசைத்து அழகு காட்டுவது!!

2. நாக்கைத் துருத்திக் கொண்டு, “டாய், ராஸ்கல்” என்கிறாள்.

(சமீபத்தில் கற்றுக் கொண்டது இது!! )


மூன்று காரணங்கள் -பள்ளி போகாததற்கு

1. வயிறு வலிக்குது, நான் ஸ்கூலுக்குப் போகல!!

2. ஸ்கூல்ல பாம்பு இருக்கு! (நம்பாத மாதிரி ஒரு லுக் கொடுத்தவுடன்,) பாம்பு.... ரூம்ல இருக்கு, ஆகாஷை கடிக்குது!

3. ஸ்கூல் போகல, சிங்கம் வந்து கடிக்குது என்னை! (with all the actions!)

நான்கு ரைம்ஸ்

1. Rolly polly - பள்ளியில் கற்றுக் கொண்ட முதல் பாடல்!
2. chappathi chappathi - முதல் மற்றும் கடைசி வரிகள் மட்டும்
3. Incy-Wincy Spider
4. சின்ன சின்ன சிலந்தி

ஐந்து ஆச்சர்யங்கள்

1. Play-Doh-வில் கொஞ்சம் எடுத்து மருதாணி போல் விரலில் குப்பியிட்டு கழட்டி, அதனுள் கொஞ்சம் வேறு கலர் Doh இட்டு, அவளது பாட்டியை மடியில் படுக்கச் சொல்லி, “மருந்து குடி, இல்லனா ஊசிதான்!” என்கிறாள்!!

2. தூங்குவதற்கு முன் கன்னத்தில் முத்தமிட்டு, “ஐ லவ் யூ ம்மா” என்கிறாள் !!

3. நிலாவை நாந்தான் பிச்சிட்டேன்! - தேய்பிறையைப் பார்த்து!! (இதைச் சொன்னபோது, அவளது வயது 2 வயது, 3 மாதங்கள். ஒரு ரெக்கார்டுக்காக!!)

4. நான் எக்ச-ச்சைஸ் பண்றேன், என்னைப் பாரு - (இடது காலை தோள் உயரத்துக்குத் தூக்கி, கையால் கட்டைவிரலை பிடித்தபடி!!..ஐந்தில் வளையும்..ம்ம்ம்!!

5. “என் கையை புடுச்சிக்கோ..இல்லன்னா விழுந்துடுவே!! - மாடிப்படி ஏறும் போது அவளது பாட்டியிடம் !!(இதைச் சொன்னபோது, அவளது வயது 2 வயது, 5 மாதங்கள். ஒரு ரெக்கார்டுக்காக!!)

13 comments:

ஆயில்யன் said...

//நிலாவை நாந்தான் பிச்சிட்டேன்! - தேய்பிறையைப் பார்த்து!! (இதைச் சொன்னபோது, அவளது வயது 2 வயது, 3 மாதங்கள். ஒரு ரெக்கார்டுக்காக!!)///

இது ஒ.கே!

பப்பு பீச் பக்கம் போறதில்லையா?

நானெல்லாம் பீச்சுக்கு போய் அதையும் தாண்டி போய் சூரியனை பார்த்துட்டு வந்தவன் அதான் கேட்டேன்! :))

கானா பிரபா said...

பப்பு "நான் வளர்கிறேனே மம்மி"னு சொல்லுவது போல் இருக்கு அவ செயல்கள் ;)

KVR said...

பப்பு label சுட்டி பப்பு பற்றிய எல்லா பதிவுகளும் ஒரே மூச்சில் படித்தேன். Simply superb (பப்பு, உங்க எழுத்து ரெண்டுமே)

அனுஜன்யா said...

பப்புவின் அனைத்து லீலைகளும் மிகவும் ரசிக்கும்படி உள்ளன. செய்யும் பப்புவுக்கும், அவற்றை சிரத்தையுடன் விவரிக்கும் உங்களுக்கும் நன்றி. Nothing like watching your kid grow. And while growing they teach us a lot.

அனுஜன்யா

புதுகை.அப்துல்லா said...

சோப்பு தண்ணீரில் காற்றுக் குமிழ்கள் விடுவது!! குமிழ்களை விடுவதை விட, அவற்றை கையில் பிடித்து உடைப்பதுதான் மிகவும் விருப்பம்!
//

சொல்றதுக்கு கொஞ்சம் கூச்சமா கூட இருக்கு சகோதரி....அவ்வாறு செய்ய எனக்கு இப்ப கூட பிடிக்கும் :)


//2. ஸ்கூல்ல பாம்பு இருக்கு! (நம்பாத மாதிரி ஒரு லுக் கொடுத்தவுடன்,) பாம்பு.... ரூம்ல இருக்கு, ஆகாஷை கடிக்குது!

3. ஸ்கூல் போகல, சிங்கம் வந்து கடிக்குது என்னை! (with all the actions!)
//

இரசித்துச் சிரித்தேன் :))))))

Amudha said...

/*ஐந்து ஆச்சர்யங்கள்
*/
குழந்தைகளின் ஒவ்வொரு கற்றலும் ஆச்சரியம் மற்றும் அதிசயம் :-)

தாமிரா said...

ஒரே வார்த்தை.. ரசனை.!

சந்தனமுல்லை said...

நன்றி ஆயில்யன்..ம்ம்..ஆஹா..அவரா நீங்க?? பீச்சுக்கு போனால், கடலுக்கு உள்ளே ஓடி போக முற்படுவாள்!! அது உள்ளே என்ன இருக்குன்னு பார்க்கப் போறேன்னு!!

கானாஸ், நன்றி!

KVR, நன்றி!! நிலா எப்படி இருக்கா?

அனுஜன்யா, நன்றி! ஆமாம்!! அதைப் பற்றியே ஒரு பதிவு போடலாம்..எவ்வளவு கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது என்று!

சந்தனமுல்லை said...

அப்துல்லா, நன்றி!!
ஆஹா..எல்லாருக்குள்ளும் ஒரு குழந்தை ஒளிந்த்திருக்கிறதல்லவா!!

அமுதா, நன்றி! உண்மைதான்...

rapp said...

:):):)

சந்தனமுல்லை said...

நன்றி தாமிரா, ராப்!!

ஜோசப் பால்ராஜ் said...

நானும் தினமும் காலையில எழுந்துருச்சு இன்னைக்கு ஆபிஸ் போகாம இருக்க என்ன சாக்கு சொல்லலாம்னுதான் யோசிக்கிறேன்.

நீர் குமிழி முட்டை விடுறது, உடைக்கிறது எல்லாம் இன்னமும் நான் செய்யிறதுதான். எங்க வீட்ல என் 2 அண்ணண் குழந்தைங்க, என் கஸின் சிஸ்டர்ஸ் குழந்தைங்க, என் அக்கா பையன் என 5 சின்னப் குழந்தைங்க இருக்கும். எல்லாரும் ஒன்னா சேர்ந்து இருக்கப்ப நானும் அங்க இருந்தா, எல்லாத்தையும் சமாளிச்சுடலாம் இவனத்தான் ஒன்னும் செய்ய முடியலன்னு திட்டுவாங்கிக்கிட்டு இருப்பேன். அவ்ளோ ஜாலியா குழந்தைங்க கூட கலந்துருவேன் நானு.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

:) நல்லா ரெக்கார்ட் செய்யறீங்க!!!