3 வயதுக் குழந்தைகளுக்கான தமிழ் புத்தகங்கள் மிகவும் குறைவு. அல்லது நான் தேடுமிடம் தவறாக இருக்கலாம். given a choice, நான் தமிழ் புத்தகங்களையே விரும்புவேன்.
தாய்மொழியில் கதை புத்தகங்கள் படிப்பது ஒரு அலாதியான சுகம். பப்புவுக்கும் அப்படியான ஒரு reading pleasure-ஐ அறிமுகப்படுத்தவே விருப்பம். ஆனால் ஏனோ ஆங்கில புத்தகங்கள் அளவுக்கு வெரைட்டி எனக்குக் கிட்டவில்லை.ஆனால் 5 வயதுக்கு மேற்பட்டவருக்கு ஏராளமான புத்தகங்கள் தமிழில் உண்டு.
நியூ ஹாரிஜன் மீடியாவின் ப்ராடிஜி புத்தகங்கள் என்னுடைய ஆதங்கத்தை தணித்தது. பப்புவுக்கு வாங்கியது இந்தப் புத்தகம்.புத்தகங்கள் 5 வயதினருக்குரியது போலிருந்தாலும் பப்பு வயதினரையும் ஈர்க்கும் வகையில் இருக்கிறது.தெளிவான பெரிய படங்களுடன் ஒன்றிரண்டு வாக்கியங்களில் கேரக்டர்கள் பேசுவதுபோல் அமைந்திருப்பது சிறப்பு. புத்தகத்திலிருப்பதைப் படித்துக் காட்டினாலே சிறு குழந்தைகள் புரிந்துக் கொள்ளும் வகையில் இருக்கிறது.
விலையும் குறைவுதான். மற்ற சில டாபிக்குக்ளையும் டிரை செய்யலாமென்றிருக்கிறோம்.
Wednesday, September 17, 2008
குழந்தைகளுக்கானத் தமிழ் புத்தகங்கள்
Labels:
பப்பு,
பப்பு நூலகம்,
புத்தகங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
.jpg)


4 comments:
ஆமாம் சகோதரி எனக்கும் இந்த ஆதங்கம் உண்டு. எங்க பாப்பாவிற்கு பெரும்பாலும் சி.டி தான் போட்டு கதை சொன்னேன்.
உங்க வருத்தம் நியாயமானதே. இந்த நல்ல சுட்டியையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி
நன்றி அப்துல்லா! சிலசமயங்களில் அதுவும் நடக்கிறது..கரடி டேல்ஸ் தமிழ் கதைகள்!!
நன்றி பிரேம்குமார்..வருகைக்கும் கருத்துக்கும்!!
டிஸ்னியோட எந்த புத்த்கம் தமிழில் வந்தாலும் படிக்காதீங்க. சிண்ற்றெல்லா வில என்ன சொல்ல வராங்க,ஏதோ தமிழ் தொலைக்காட்சி சீரியல் மாதிரி பொறாமை மட்டும் தான் எனக்குத்தெரியுது.
Post a Comment