Thursday, September 04, 2008

அட்டைப் பட அம்மாக்கள் - Anybody with me?இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தினைக் என் பாட்டியிடம் காட்டி "இது யாரு" என்று வினவினாள் பப்பு!!

அம்மா!அம்மா பாப்பாவை தூக்கி வச்சிருக்காங்க!!

இல்ல..இது ஆயா!!

பப்புவால் அம்மா என்பவர் இப்படி இருப்பார் என்று கோரிலேட் செய்யவே முடியவில்லை!!
இந்த அம்மா அவதாரத்தை இனியாவது மாற்றுவார்களா?
அம்மாக்கள் சல்வாருக்கும் ஜீன்ஸுக்கும் மாறி வெகுகாலமாகிவிட்டது!!
(எனக்குத் தெரிந்து, அம்மாக்கள் பாதி பேரின் தலைமுடி தோள் வரைதான்!! )
பதிப்பகத்தார் இந்த கன்வென்ஷனல் அம்மா அவதாரத்தை மாற்றினால் தேவலை!!

பி.கு:
இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல. ஸ்டெப் கட்டோடு, மாடர்ன் உடையில்
இருக்கும் என்னை மாதிரி அம்மாக்கள் என்ன ஆவது, படத்திலிருப்பது தான் ஸ்டாண்டர்டு அம்மா என்று குழந்தைகள் புரிந்துக் கொள்வார்களோ என்ற எண்ணத்தில் விளைந்ததே இந்தப் பதிவு!!

12 comments:

முத்துலெட்சுமி-கயல்விழி said...

hahaha... :) உண்மையில் நீங்க ரொம்ப வே நல்லா யோசிக்கிறீங்க..முல்லை.. எப்படி இப்படி எல்லாம்? ஆனா உண்மைதான்.. நான் சேலைகட்டினால் என் பிள்ளைங்க .. ஒருமாதிரி அதிசயமாத்தான் பார்க்கறாங்க..புடவை எல்லாம் ஆச்சியோட ட்ரெஸ்ன்னு தான் ரொம்ப நாள் நினைச்சுட்டிருந்தாங்க பசங்க..

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப ச்சரி..

எங்க பாடத்தில அம்மாவும் அடூப்பும் இருக்கும்::0))

மங்களூர் சிவா said...

/
ஸ்டெப் கட்டோடு, மாடர்ன் உடையில்
இருக்கும் என்னை மாதிரி அம்மாக்கள் என்ன ஆவது
/

ஹா ஹா

பிரேம்குமார் said...

மாடர்ன் அம்மாக்கள் சார்பா ஒரு போராட்டம் நடத்துங்க முல்லை. பகடிக்காக தான் சொன்னேன். நீங்கள் சொல்வது உண்மையிலேயே சிந்திக்க வேண்டியது தான்

அப்பா வேலைக்கு போகிறார்
அம்மா சமைக்கிறார்
அண்ணன் விளையாடுகிறான்
அக்கா அம்மாவுக்கு உதவுகிறாள்

என்பது போன்ற பாடங்களிலேயே சில சமயம் பாரபட்சம் புகுந்துவிடுகிறது :(

தாமிரா said...

இது கொஞ்சம் ஓவருங்க.. (கயலுக்கும் சேத்துதான்..) அந்த அடையாளங்கள் குறைந்த பட்சம் அந்த அட்டைப்படங்களிலாவது இருக்கட்டும், விட்டுவிடுங்கள்.!

சந்தனமுல்லை said...

//hahaha... :) உண்மையில் நீங்க ரொம்ப வே நல்லா யோசிக்கிறீங்க..முல்லை.. எப்படி இப்படி எல்லாம்?//
வருகைக்கு நன்றி முத்துலெட்சுமி!! அது..அப்படி தானா வருது..:-))!
// ஆனா உண்மைதான்.. நான் சேலைகட்டினால் என் பிள்ளைங்க .. ஒருமாதிரி அதிசயமாத்தான் பார்க்கறாங்க..புடவை எல்லாம் ஆச்சியோட ட்ரெஸ்ன்னு தான் ரொம்ப நாள் நினைச்சுட்டிருந்தாங்க பசங்க..//

கரெக்ட்..இதுதான் நடக்குது எங்க வீட்டுலயும்!! ஒரு கடைக்குப் போனப்போ புடவையிலிருந்த சேல்ஸ்கேர்ளை
ஆயான்னு பப்பு சொல்லிவைக்க, அவளை கூட இருந்த பொண்ணுங்கள்ளாம் ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க!!
தர்மசங்கடமாகிப் போச்சு!! :-))

சந்தனமுல்லை said...

//ரொம்ப ச்சரி..

எங்க பாடத்தில அம்மாவும் அடூப்பும் இருக்கும்::0))//

வருகைக்கு நன்றி வல்லியம்மா!!
ஆமா..தினமணி தலையங்கத்துல எப்போவோ இதைப் பத்தி போட்டிருந்தாங்க!!
அம்மா சமையல் செய்வார்!
அப்பா செய்தித்தாள் படிப்பார்!!

சந்தனமுல்லை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரேம்குமார்!
போராட்டம்தானே...பண்ணிட்டா போச்சு!! :-)

சந்தனமுல்லை said...

தாமிரா : அப்படி விட்டுட முடியுமா என்ன?? :-))

சந்தனமுல்லை said...

சிவா : என்ன சிரிப்பு??

Anonymous said...

இதான், இதாங்க பிரச்சனையே! சட்டைக்கு ஏத்த மாதிரி ஒடம்ப வளைக்கச் சொல்லுறது!

யூ.எஸ். ரிட்டர்ன் சிலரு இப்படித் தான், "என்ன இந்த ஊருல வண்டிய எல்லாரும் ராங் சைட்லயே ஓட்டறாங்க"-ன்னு நக்கலடிப்பாங்க! அப்புடி இருக்குது இது!

சில விஷயங்களுக்கு காலங்காலமா சில "மாதிரி வடிவங்கள்" இருந்து வருது. நீங்க தான் அதுலேந்து மாறியிருக்கீங்கங்கிறதே புரிஞ்சிக்காமே, "அத்த மாத்து"ன்னு சொல்ல வேண்டியது.

ஏன், நாட்டுல புடவை கட்டுற அம்மாக்களே இல்லையா என்ன? இன்றளவும், அவங்க தான் எண்ணிக்கையில மிகுதி. இந்த பதிப்பகத்தார், உங்கள மாதிரி சிலர் சொல்றாங்கன்னு சொக்கா பேண்ட்டு போட்ட அம்மா படத்த போட்டா, அப்போ புடவை கட்டுற அம்மாக்களோட குழந்தைங்க அத எப்படி புரிஞ்சிக்கும்ன்னு யோசிச்சீங்களா? சொன்னா வருத்தப் படுவீங்க, வேண்டாம்!

நீங்க சொக்கா பேண்ட்டு போடுறதோ, ஸ்டெப் கட் செய்யிறதோ, உங்க தனிப்பட்ட சவுகரியத்துக்காக நீங்க எடுத்த முடிவு; அதன் விளைவாத் தான் உங்க குழந்தையால அந்தப் படத்தோட relate பண்ண முடியல; அத்த ஒத்துக்கிடுங்க; மற்றபடி, உங்க தனிப்பட்ட முடிவோட விளைவ சரி பண்ற பொறுப்ப சமுதாயத்து மேல தள்ளப் பாக்காதீங்க. உங்க குழந்தைக்கு இது போன்ற விஷயங்களைத் தெளிவு பண்றது உங்க வேலையும் பொறுப்புமே தவிர பதிப்பகத்தாருடையதோ அல்லது சமுதாயத்துடையதோ இல்ல.

-வேட்டியும் கட்டத் தெரிந்த ஒரு தமிழன்.

aadhirai said...

hello anonymous,
inga yaarum ella amma photovaiyum stepcut modern dressoda podungannu sollavarla. ippadiyum sila ammakkal vandhaachu, athaiyum podungannu solrom. en eppothum ammanna selai, aduppu, dosai suduvathu ithu mattumthaan kuzhanthai ninaivil irukkavendumaa? puthu roleslayum ammaakkal vanthaachu nnu antha kuzhanthaikku theriyattumey. saalai vithingrathu maraathathu. humanoda roles appidi kidaiyathu. innikku vegamaa naanga maarinatha sutti kaattunreenga. santhosam. nalaikku en ponno unga ponno selai kattiya ammakkalaaga irukka porathillai. tranformation keeps happening. antha maatrangalum kuzhanthai manathil pathiyattum engirom avvalavuthaan. enga ooru pattikkaadunga. post office kooda illa. aana ella ponnungalum chudithaar poduvaanga even padikkalannaa kooda. thanni edukka veettukku veliya varumpothu nighty potta managaikaley athigam. (cityla nighty pottu veliya illa, veettu hallku guest vanthaakkooda vara yosippom) so innum pazhaya kathai pesaatheenga. realityaiyum accept pannunga, neengalum pathippagathaarum.