பப்புவுக்கு இன்றோடு 35 மாதங்கள் நிறைவடைகின்றன. இனி மாதாந்திர பிறந்தநாளை கவுண்ட் செய்வதை நிறுத்திக்கொள்ள எண்ணியிருக்கிறேன். :-)...
பப்புவின் முதல் (அஃபிஷியலி )ஹேர்கட்
நேற்று!! இதுவரைமுடி வெட்ட அவசியமேற்படவில்லை. ஏனெனில், மூன்று மொட்டைகளையும் 2 வயது 4 மாதங்களுக்குள்ளாகவே முடித்துவிட்டோம். இப்போதைய ஸ்டைல், டோரா கட் போல இருக்கிறது கொஞ்சம்!!
கதைப்புத்தகங்கள் - சில டிப்ஸ்
புத்தகங்கள் படிப்பது பப்புவுக்கு ரொம்ப இஷ்டம்...அதாவது, நான் அவளுக்காக, கதைப்புத்தகங்கள் படித்துக் காட்டுவது!! ஒரு நாளில் ஒரு தடவையாவது அவளுடைய எல்லாக் கதைப்புத்தகங்களை (அட்லீஸ்ட் ஒரு புத்தகத்திலிருந்து ஒரு கதையாவது அவளுக்குப் படித்துக் காட்டுவது..) வழக்கமாக வைத்திருந்தேன் முதலில். இப்போது, அவளாகவே, எல்லா புத்தகங்களையும் எடுத்து வந்து படிக்கச் சொல்கிறாள்.
இதை எதற்கு சொல்கிறேனென்றால், தானாகவே ஏதோ விளையாடிக்கொண்டிருந்த போது, நான் படித்த அந்த கதை வாக்கியங்களை அதே மாடுலேஷனோடு சொல்லிக்கொண்டிருந்தாள். :-)..எனக்கு ஆச்சரியம்!!
உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால்,
புத்தகங்களை படித்துக்காட்டுங்கள், தினமும் ஒரு பதினைந்து நிமிடங்களாவது.
சத்தமாக(பக்கத்து வீட்டுக்கு கேட்கிற மாதிரி இல்லை!!), உணர்ச்சிகளோடு, பாவனைகளோடு, மற்றும் குரல் ஏற்ற இறக்கங்களோடு!
கதைக் கேட்கும் குழந்தைகளையும் இன்வால்வ் செய்யுங்கள்! ஒருமுறை நீங்கள் சொன்னால், திரும்ப சொல்ல சொல்லும்போது, சில இடங்களில் அவர்களை சொல்ல சொல்லலாம், அதில் இருக்கும் ஒரு கேரக்டராக கற்பனை மாற்றி சொல்ல சொல்வது!!
இதன்பின், அவள் வார்த்தைகளைக் கற்றுக் கொள்வது//நீண்ட வாக்கியங்களை சொல்வது மிக வேகமாக இருப்பதுப்போல் எனக்கு ஃபீலிங்!!
6 comments:
பப்புவுக்கு இன்றோடு 35 மாதங்கள் நிறைவடைகின்றன. இனி மாதாந்திர பிறந்தநாளை கவுண்ட் செய்வதை நிறுத்திக்கொள்ள எண்ணியிருக்கிறேன். :-)...
ஹை
நீங்களுமா.
Thanks for the tips. useful and will follow.
கதைக் கேட்கும் குழந்தைகளையும் இன்வால்வ் செய்யுங்கள்! ஒருமுறை நீங்கள் சொன்னால், திரும்ப சொல்ல சொல்லும்போது, சில இடங்களில் அவர்களை சொல்ல சொல்லலாம், அதில் இருக்கும் ஒரு கேரக்டராக கற்பனை மாற்றி சொல்ல சொல்வது!!
//
அப்படி செய்யும் போது அவர்களது கற்பனைத்திறன் விரிந்து கற்கும் ஆர்வமும் பலப்படும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
//பப்புவுக்கு இன்றோடு 35 மாதங்கள் நிறைவடைகின்றன. இனி மாதாந்திர பிறந்தநாளை கவுண்ட் செய்வதை நிறுத்திக்கொள்ள எண்ணியிருக்கிறேன்//
:):):)
ரொம்ப பயனுள்ள டிப்ஸ் முல்லை.
/*இதன்பின், அவள் வார்த்தைகளைக் கற்றுக் கொள்வது//நீண்ட வாக்கியங்களை சொல்வது மிக வேகமாக இருப்பதுப்போல் எனக்கு ஃபீலிங்!!*/
நானும் உணர்ந்துள்ளேன்.
ம்ம்..அப்போ நீங்களுமா?
:-) அது டிப்பால்ட்-னு நினைக்கிறேன்..எல்லா அம்மாக்களுக்கும்! ;-)
நன்றி அப்துல்லா!
//அப்படி செய்யும் போது அவர்களது கற்பனைத்திறன் விரிந்து கற்கும் ஆர்வமும் பலப்படும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.//
மிக்க உண்மை!!
நன்றி ராப்!! ஏன் ஒண்ணுமே சொல்லல??
Post a Comment