Tuesday, September 02, 2008

"பூங்கா"வியம்!!
பப்புவோடு கிண்டி சிறுவர் பூங்காவிற்கு சென்றிருந்தோம். இதற்கு முன் பலதடவைகள் சென்றதை விட,(3/4 மாதங்களுக்கு முன்) தற்போது பல மாற்றங்கள் பப்புவிடம்! மான்களையும் நாரைகளையும் தொட்டு பார்க்கவும், "என்கிட்ட வா" என்று கூண்டுக்குள் கத்தவும் தலைப்பட்டாள்! தூக்கச் சொல்லாமல் அவளாகவே நடந்தும், ஓடியும் சென்றாள்!


கிண்டி சிறார் பூங்கா ஒரு நல்ல டைம் பாஸ். மரங்களுடனும், திறந்த வெளியில் குழந்தைகள் விளையாட ஏற்றது! ஆனால், சில மிருகங்கள் இருந்த கூண்டு அருகில செல்ல முடியாமல் துர்நாற்றம் வீசியது! குழந்தைகளுக்கான விளையாட்டு ஊஞ்சல்களில் 35-40 வயது மதிக்கத் தக்க குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர்!

24 comments:

ஆயில்யன் said...

அக்கா!நான் கூட சின்னபுள்ளையா இருக்கும்போது சமீபத்தில் ஒரு பத்து வருஷத்துக்கு முந்தி போனது கிண்டி பார்க்கு அப்புறம் நிறைய பாம்பு எல்லாம் இருக்குமே அங்கே!

:)

ராமலக்ஷ்மி said...

//தூக்கச் சொல்லாமல் அவளாகவே நடந்தும், ஓடியும் சென்றாள்!//

பின்னாடியே நாம் ஓடியும் நடந்தும் செல்வது ஒரு இன்பம்.

//சில மிருகங்கள் இருந்த கூண்டு அருகில செல்ல முடியாமல் துர்நாற்றம் வீசியது!//

இது அநேகமாக எல்லா மிருகக் காட்சி சாலைகளிலும் தவிர்க்க முடியாததாய் இருக்கிறது.

//குழந்தைகளுக்கான விளையாட்டு ஊஞ்சல்களில் 35-40 வயது மதிக்கத் தக்க குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர்!//

:)))!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அக்கா, தலைப்பு ரொம்ப நல்லாயிருக்கு, “பூங்காவியம்”...

அப்பு,

நான் கூட சின்னபுள்ளையா இருக்கும்போது சமீபத்தில் ஒரு பத்து வருஷத்துக்கு முந்தி!!!!

எம்மாடி, என்னாது?

அபி அப்பா said...

//அக்கா!நான் கூட சின்னபுள்ளையா இருக்கும்போது சமீபத்தில் ஒரு பத்து வருஷத்துக்கு முந்தி போனது கிண்டி பார்க்கு அப்புறம் நிறைய பாம்பு எல்லாம் இருக்குமே அங்கே!//

ரிப்பீட்டேய்!!!!

(எது எதுக்கெல்லாம் ரிப்பீட்டு போடுவது என்பதை கொஞ்சம் புளி போட்டு விளக்குங்கப்பா)

சந்தனமுல்லை said...

ஆயில்ஸ்...//நான் கூட சின்னபுள்ளையா இருக்கும்போது சமீபத்தில் ஒரு பத்து வருஷத்துக்கு//

ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா...”இரு பத்துக்கு”ன்னு போடறதுக்கு பதிலா ”ஒரு”-ன்னு போட்டுட்டீங்கன்னு நினைக்கிறேன்...:-)!


அதேதான்...இப்பவும் இருக்கு!!

சந்தனமுல்லை said...

ராமலஷ்மி..கரெக்டா சொன்னீங்க!!

அதுவும் நீர் வாழ் பிராணிகள் கூண்டுன்னா கேக்கவே வேண்டாம்!!

சந்தனமுல்லை said...

சுடர்மணி...நன்றி!!


//அப்பு,

நான் கூட சின்னபுள்ளையா இருக்கும்போது சமீபத்தில் ஒரு பத்து வருஷத்துக்கு முந்தி!!!!

எம்மாடி, என்னாது//

எனக்குமெ அதே..அதே..:-)!!

சந்தனமுல்லை said...

நன்றி அபி அப்பா..ஆயில்ஸ்-க்கு சொன்னதே ரிப்பீட்டு உங்களுக்கும்! :-)

naathaari said...

இந்த பப்புவ பாக்கனுமே
ஆனாலும் இன்னும் நீங்கள் எழுதியிருக்கலாம்தானே குறைவா எழுதினது
அவள கவனிக்கம் இருந்தீங்கன்னுதான் தெரியுது

naathaari said...

மிருகங்கள் என்ன பாடி டிடொரன் அடிக்கனுமா? அதுக அப்படித்தான் இருக்கும் சும்மா காட்டுல விட்டுப்பாருங்க ! இயற்கையிலேயே அதுகளின் கூந்தலுக்கு மணம் இருக்குதா இல்லையான்னு வெண்பாக்கள் கிளம்பும்
மனுசன இப்படி அட்ச்சுவெச்சால் அதவிட துர்நாற்றம் வீசும்

ஆயில்யன் said...

//சந்தனமுல்லை said...
ஆயில்ஸ்...//நான் கூட சின்னபுள்ளையா இருக்கும்போது சமீபத்தில் ஒரு பத்து வருஷத்துக்கு//

ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா...”இரு பத்துக்கு”ன்னு போடறதுக்கு பதிலா ”ஒரு”-ன்னு போட்டுட்டீங்கன்னு நினைக்கிறேன்...:-)! //

நீதி இங்கே நெரிக்கப்பட்டிருக்கிறது!
உண்மை இங்க மறுக்கப்பட்டிருக்கிறது!
அய்யகோ நான் என் செய்வேன்!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

தலைப்பு மிக அழகா இருக்கு..:)

சந்தனமுல்லை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நாதாரி!!
நிறைய இருக்கு..ஆனா சுவாரசியமானதாவும்,
கடந்த விசிட்டுக்கும் இப்போதைய விசிட்டுக்கும் என்ன மாற்றங்கள்
என்ற முறையில் எழுதியிருக்கேன்!! ஓக்கே!!

சந்தனமுல்லை said...

ரொம்ப உணர்ச்சி வசப்ப்பட்டீங்கன்னு நினைக்கிறேன் ..:-)!
மிருகங்கள் டியோடரண்ட் அடிக்கணும்னு சொல்ல வரல..
தண்ணீர் வாழ் பிராணிகளின் தண்ணீரை அடிக்கடி மாற்றலாம், கூண்டுகளை
சுத்தம் செய்வது பற்றி!!

சந்தனமுல்லை said...

முத்துலெட்சுமி..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

மங்களூர் சிவா said...

/


கிண்டி சிறார் பூங்கா ஒரு நல்ல டைம் பாஸ்.
/

வீட்டுல இருந்து ரொம்ப தூரமோ கிண்டி 3,4 மாசத்துக்கு ஒருதரம் போறீங்க!?!?

:))))))

லக்கிலுக் said...

கிண்டி தேசிய பூங்கா எனக்கும் மறக்கமுடியாத இடம். நான் போனது ஒரு 19 வயது குழந்தையோடு.

சந்தனமுல்லை said...

சிவா..ஆமாம் கொஞ்சம் தூரந்தான்..:-)!!
அடிக்கடி அங்கதான் போவோம்..அவளுக்கு போரடிச்சதால,
இந்த கேப்!!

சந்தனமுல்லை said...

லக்கி...
//கிண்டி தேசிய பூங்கா எனக்கும் மறக்கமுடியாத இடம். நான் போனது ஒரு 19 வயது குழந்தையோடு.//

LOL!! இந்த மாதிரி குழந்தைகளோட
ரவுசுதான் தாங்க முடியல..அங்க:-))!!

லக்கிலுக் said...

//LOL!! இந்த மாதிரி குழந்தைகளோட
ரவுசுதான் தாங்க முடியல..அங்க:-))!!//

நல்லவேளை நீங்க காந்திமண்டபத்துக்கு போகலை :-)

சந்தனமுல்லை said...

//நல்லவேளை நீங்க காந்திமண்டபத்துக்கு போகலை :-)//

ஐயையோ..ஒரு தடவை அங்கயும் போயிட்டு ஓடி வந்திட்டோம். பப்புவுக்காக, வெளிவாசல்லயே கொஞ்சம் நேரம் இருந்தோம். அதுக்கு அப்புறம் அங்க எட்டிக் கூட பார்க்கல!! மரத்தடியை விடுங்க..ஆனா அந்த ஸ்டேடியம் மாதிரி நாற்காலி போட்டிருக்கறதைக்கூட விட்டு வைக்கல..:-))

rapp said...

நீங்க வேற சந்தனமுல்லை, அது காதலர் பூங்காவாக மாறி ரொம்ப நாள் ஆகிடுச்சி :):):)

rapp said...

//ஆயில்ஸ்...//நான் கூட சின்னபுள்ளையா இருக்கும்போது சமீபத்தில் ஒரு பத்து வருஷத்துக்கு//

ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா...”இரு பத்துக்கு”ன்னு போடறதுக்கு பதிலா ”ஒரு”-ன்னு போட்டுட்டீங்கன்னு நினைக்கிறேன்...:-)!


அதேதான்...இப்பவும் இருக்கு!!
//

கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்

சந்தனமுல்லை said...

உண்மைதான் ராப்...சான்ஸே இல்லை!!


//கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்//


நன்றி ராப்..:-))