Wednesday, September 24, 2008

தமிழ் அகராதிக்கு ஒரு புது வரவு

தரையில பெயிண்டை சிந்தினா உனக்கு இனிமே பெயிண்ட் பாக்ஸ் கெடையாது, பப்பு!!

கெடையும்..எனக்குக் கெடையும்!!

15 comments:

ராமலக்ஷ்மி said...

அகராதிக்கு அழகழகா வார்த்தைகளைத் தருவதில் மழலைகளை அடித்துக் கொள்ள
ஆளேது? பப்புவுக்கு அண்ணன் என் வீட்டில்:))! வெள்ளியன்று "நாளை ஸ்கூல் கிடையும்" என்பான் மகன் வளர்ந்த பின்னும் கூட:)))! இப்போது சரியாகி விட்டது:)!

சந்தனமுல்லை said...

நன்றி ராமலஷ்மி!!

அந்த மழலை வார்த்தைகளைக் கேட்கும்போது நமக்கு வரும் பூரிப்புக்குத்தான் அளவேது?!! :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த வார்த்தை எங்க வீட்டுலயும் கிடையுமே.. :)

அப்பறம் எப்ப வந்தேன்னு கேட்பவங்களுக்கு நாளைக்குன்னு புது க்ராமர் வேற சொல்லுவாங்களே குட்டீஸ்.. ஹஹஹா..

Thamira said...

ஆச்ச‌ரிய‌ம். சுமார் 23 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால் என் குட்டித்த‌ம்பியால் (இப்போ அந்த தடிமாடு போலீஸ் உத்தியோகம் பார்க்குது) அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு நகைச்சுவைக்காக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு இப்போதும் எங்கள் குடும்பத்தில் தொடர்ந்து பயன்பாட்டிலிருக்கிறது.

SK said...

ஒரே வார்த்தை அருமையான பதிவுகள்.

நான் என் அம்மாகிட்டே போய் இப்படி எல்லாம் ஏன் செய்யலைன்னு சண்டை போட போறேன்.

ஆயில்யன் said...

//எப்ப வந்தேன்னு கேட்பவங்களுக்கு நாளைக்குன்னு புது க்ராமர் வேற சொல்லுவாங்களே //

ரிப்பிட்ட்டேய்ய்ய்ய்ய்!

(நான் கேள்விப்பட்டிருக்கேனே!)

கானா பிரபா said...

;-) kalakkal

pudugaithendral said...

சூப்பர்.

சந்தனமுல்லை said...

நன்றி முத்துலெட்சுமி..ஹஹா..அதுவும் உண்டு!!

நன்றி தாமிரா !! உங்க குடும்பத்திலயும் சுவாரசியத்துக்கு பஞ்சமேயில்லன்னு சொல்லுங்க!! :-)

சந்தனமுல்லை said...

//ஒரே வார்த்தை அருமையான பதிவுகள். //

நன்றி SK!! மகிழ்ச்சியாக உணர்கிறேன்!!

இந்தமாதிரி ப்ளாக் வசதி முன்பே இருந்திருந்தால் எல்லா அம்மாக்களுமே எழுதியிருப்பார்கள்..இல்லையா?

நன்றி கானாஸ்!
நன்றி புதுகை!!

சந்தனமுல்லை said...

//ஆயில்யன் said...
//எப்ப வந்தேன்னு கேட்பவங்களுக்கு நாளைக்குன்னு புது க்ராமர் வேற சொல்லுவாங்களே //

ரிப்பிட்ட்டேய்ய்ய்ய்ய்!

(நான் கேள்விப்பட்டிருக்கேனே!)//

இப்பல்லாம் சொல்றதை விட்டுட்டீங்களா? :-)

புதுகை.அப்துல்லா said...

கெடையும்..எனக்குக் கெடையும்!!

//

பப்பூ தி கிரேட் :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ராகேஷ்

கொஞ்சம் ஃபேன் ஸ்விட்சை ஆஃப் பண்ணு-ப்பா

ஆஃபிட்டேன் ஆன்ட்டீ

இது எப்படி இருக்கு.

யாழினிது குழலினிது என்பர்.
தம் மக்கள் மழலை சொல் கேளாதவர்.

நாமெல்லாம் கேட்பவர் category

சந்தனமுல்லை said...

அப்துல்லா..நன்றி!!

அமிர்தவர்ஷினி அம்மா :நன்றி!!

//ஆஃபிட்டேன் ஆன்ட்டீ//

ஹஹ்ஹா..செமையா இருக்கே!!

ஏன் அமிர்தவர்ஷினி பத்தி எதுவும் எழுதல..?

ஜோசப் பால்ராஜ் said...

நானும் சின்னப்புள்ளைல நாளைக்கு ஒரு வீட்டுக்கு போனோம்லங்கிற சூப்பர் க்ராமர்லத் தான் பேசுனேன். அப்றம் எனக்கு சிவப்பு கலர் புடிக்கும்கிறதால் எந்த கலர் கேட்டாலும் சிவப்புன்னுதான் சொல்லியிருக்கேன். உதாரணம், இட்லி என்ன கலர்னு கேட்டாக் கூட சிவப்பு தான்.