Sunday, August 09, 2009

க்ரபக்..க்ரபக்..

முன்பு விலங்குகளின் கால்தடங்களை பதிக்க முயற்சி செய்து, தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத பப்புவும் ஆச்சியும் செய்த அடுத்த கட்ட நடவடிக்கை!!
பேக்கிங் மெட்டிரியலாக வந்த ஃபோம். தவளையின் கால்களை வரைந்து வெட்டிக் கொடுத்தேன்.( ஃபோமை வெட்ட வரவில்லை பப்புவிற்கு. )
முன்னங்கால்களும் பின்னங்கால்களையும் வெவ்வேறு அளவுகளில் இரண்டு செட். வண்ணத்தைக் கொண்டு சார்ட் பேப்பரில் பதித்து எடுத்தாள்.பெரியத் தவளையின் பெரியக்கால்கள்.
பின்னர், தவளையைப் போல நடக்க..இல்லையில்லை.... தாவ முயற்சி செய்து அறையைச் சுற்றிச் சுற்றி வந்தாள். பார்க்க சிரிப்பாக இருந்தது!!:-)) பப்பு இரண்டரை வயதாயிருக்கையில் சரளா என்பவர் அவளைக் கவனித்துக்கொண்டார். அவர், பப்புவை சாப்பிட வைக்க இந்த யுக்தியை பயன்படுத்துவாராம், மதிய வேளைகளில்! பப்பு அவரை நினைவுக் கூர்ந்தாள்.

சிலசமயங்களில் பப்பு, ராணி ஆயா, சரளா ஆயா அல்லது ஷோபனா ஆன்ட்டியை நினைவுக்க்கூர்ந்து, ‘எப்போ வருவாங்க' என்று கேட்பாள். 'அவங்க ஊருக்குப் போய்ட்டாங்க' என்றாலும் 'ஊர்லேர்ந்து எப்போ வருவாங்க' என்றோ ‘வரச்சொல்லு' என்றோ துளைத்து எடுக்கும் பப்புவை சமாளிக்க, ‘நீதான் வளர்ந்துட்டே இல்ல...உன்னை மாதிரி வேற ஒரு குட்டிப்பாப்பாவை பாத்துக்க போயிய்ட்டாங்க' என்பேன். சமாதானமாகாமல், 'என்னா பண்ணிட்டேனானாம் நானு?' என்பாள். :-( .'நீ ஒன்னும் பண்ணலை பப்பு, அந்த பாப்பா ரொம்ப குட்டியா இருக்காம், நீ ஸ்கூல் போறே இல்ல..அந்தப்பாப்பா இன்னும் ஸ்கூல் போகலையாம், அதனால, குட்டிப்பாப்பாவை சாப்பிட வைக்க போயிருக்காங்க' என்று சொல்லிவைப்பேன்! பப்பு சாப்பிட படுத்தும்போது, அவர்கள், 'நீ சாப்பிடலைன்னா நான் ஊருக்குப் போய்டுவேன்' என்று சொன்னதன் விளைவுதான் இது!!

தலைப்பு : தவளை அப்படித்தான் கத்துமாம், பப்புவின் அகராதியில்!! :-)

15 comments:

குடுகுடுப்பை said...

சரியான தலைப்புதான்.

ஆகாய நதி said...

பப்பு இதையெல்லாம் கூட செய்வியா? குட் குட்! :)

ஆயில்யன் said...

பதிவு இனிதான் படிக்கபோறேன் பட் ஒன் ஆதங்கம் - சனி ஞாயிறு பப்புவை போட்டு இப்படி இம்சைபடுத்துறீங்களே ஏன் ஆச்சி ஏன்.....???? :(


பப்பு பேரவை
தலைமையகம்

ராமலக்ஷ்மி said...

க்ரபக் க்ரபக் கால்கள் நல்லாயிருக்கு.
பப்பு தாவிக் குதிப்பதை கறபனை செய்கையில் அதைவிட நல்லாயிருக்கு:)!

☀நான் ஆதவன்☀ said...

தலைப்புக்கான காரணத்த பார்த்தப்ப உடனே சிரிப்பு வந்திடுச்சு :)

சின்ன அம்மிணி said...

//தாவ முயற்சி செய்து அறையைச் சுற்றிச் சுற்றி வந்தாள். பார்க்க சிரிப்பாக இருந்தது!!://

:)

பப்புவை பார்த்துக்கொண்டவர்களை மிஸ் பண்ணுகிறாள் போல இருக்கு. முடிந்தால் ஒரு ரீயூனியனுக்கு முயற்சி செய்யுங்கள்.

நட்புடன் ஜமால் said...

சத்தங்களை கிரகிச்சு இருக்காங்க பப்பு.

:)

G3 said...

//சனி ஞாயிறு பப்புவை போட்டு இப்படி இம்சைபடுத்துறீங்களே ஏன் ஆச்சி ஏன்.....???? :(//

Pappu dhinamum kelvi kettu aacbiya terror aakkuraalae.. en aayils en ;)))))

Aachi peravai
thalaimaiyagam

G3 said...

//தவளை அப்படித்தான் கத்துமாம், பப்புவின் அகராதியில்!! :-)//

pappu dictionary :)))) hmm.. ungalukku postukku panjamae illama pappu help pandra :D

மாதவராஜ் said...

// 'என்னா பண்ணிட்டேனானாம் நானு?'//
குழந்தையின் மொழி இது. இறகின் தடவல் கொடுக்கிற சுகம் இந்த வார்த்தைகளிலும், உச்சரிக்கும் தொனியிலும் இருக்கும். கொள்ளை அழகான இடம் இது. வாழ்த்துக்கள் முல்லை!

ஆயில்யன் said...

//G3 said...

//சனி ஞாயிறு பப்புவை போட்டு இப்படி இம்சைபடுத்துறீங்களே ஏன் ஆச்சி ஏன்.....???? :(//

Pappu dhinamum kelvi kettu aacbiya terror aakkuraalae.. en aayils en ;)))))

Aachi peravai
thalaimaiyagam
//

ஜி3 இது நீங்க பேசலை! உங்களை பேசவைக்குது ஆச்சி செஞ்சு கொடுத்து நீங்க தின்ன அந்த சாக்லேட் :)))))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

’என்ன செய்திட்டனாம் நானு’ அய்யோ பாவம் குட்டி எப்படி ஃபீல் செய்து கேக்கறா.. :(

கோமதி அரசு said...

//என்ன செய்திட்டனாம் நானு//


//நீ சாப்பிடலைன்னா நான் ஊருக்குப்

போய்டுவேன் என்று சொன்னதன் விளைவு தான் இது.//

குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகம்,
அதிலும் பப்புவிற்கு மிக,மிக அதிகம்.

Deepa said...

art work super pappu!

//'என்னா பண்ணிட்டேனானாம் நானு//
:-((((
இனிமேல் தயவு செய்து அப்படியெல்லாம் மிரட்டாதீர்கள்.

தீஷு said...

//'என்னா பண்ணிட்டேனானாம் நானு//
:-(


//க்ரபக் க்ரபக்//
:-))