Saturday, August 22, 2009

ஐ லவ் யூ சென்னை!!

அது ஒரு மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனம். ஒரு சயிண்டிஸ்ட்-இன்-சார்ஜ் அலுவலகம்.

"இந்த நகரம் உனக்கு பரிச்சயமானதா?"

"ஓ..எங்கள் ஊரிலிருந்து இங்கேதான் நாங்கள் வருவோம்..பண்டிகைக்கு உடைகள் எடுக்க”

மெலிதாக புன்னகைத்துக்கொண்டார்.

“சரி, சிறிது நேரம் வெளியே காத்திருங்கள், கூப்பிடுகிறோம்!”

ச்சே..சின்னப்புள்ளத்தனமா சொல்லிட்டேனோ..ஆனா உண்மையதானே சொன்னேன்!!

CSIO. Central Scietific instrumenst Organidation-இல் தலைமை சயிண்டிஸ்ட் அறையில்தான் மேற்கூறிய உரையாடல் நடைபெற்றது, linked list programming, shortest path algorithm, heap sort, bubble sort, neural netwoking, expert systems கேள்விகளுக்குப்பிறகு!

CSIR MADARS COMPLEX, தரமணி. அடையார் CLRI, CEERI, CECRI, NEERI, CSIO, மெட்டாலர்ஜிக்கல் ஆராய்ச்சிக் கூடங்கள். இன்றைய அசெண்டாஸ் கட்டிடத்திற்கு எதிரில் இருக்கும் கேம்பஸ். ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த கேம்பஸ்தான் அங்கே பெரிய கட்டிடம். முன் இந்த கேம்பஸ்தான் அடையாளம்..

ரானே மெட்ராஸில் வேலை செய்த எனது பள்ளி நண்பனுக்கு csioவில் வேலை செய்துக்கொண்டிஒருந்த நண்பர் பரிச்சயம். அவர் மூலமாக எங்களது (எனதும் லதாவினதும்) ரெசியுமேவை அனுப்பி நேர்முகக்காணலுக்கு வந்திருந்தோம்.இப்போதைக்கு, 45 நாட்களுக்குக் மட்டும் கிடைத்தால் போதும்...இதைவைத்தே அடுத்த ஆறு மாதங்களுக்கு ஏதேனும் வாய்ப்புக் கிடைக்கிறதாவென பாக்கலாம் என்று பேசிக்கொண்டோம்.

MCA ஃபைனல் இயர். ஐந்தாம் செமஸ்டர். ஒன்றரை மாதங்களுக்கு ப்ராஜக்ட் வொர்க். கண்டிப்பாக ஏதேனும் நிறுவனத்தில் சேர்ந்து ரியல் டைம் ப்ராக்ஜட் செய்திருக்க வேண்டும். இல்லையெனில் பல்கலை. கைட் நிராகரித்துவிடுவார்கள். கிடைத்த அவகாசமோ கொஞ்சம்.எங்கள் செட் மாணவிகள் முக்கால்வாசி பேர் பெங்களூருக்கும் மீதிபேர் ஹைதராபாத்திற்கும் மூட்டைக் கட்டிக்கொண்டிருக்க நானும் என் தோழியும் வந்திறங்கிய இடமோ மெட்ராஸ். எல்லோருமே ஜாவா, ஜாவா ஸ்விங், ஆப்லெட்ஸ், கோர்பா, ஏபிஐ என்று பின்னி பெடலெடுத்துக் கொண்டிருந்தார்கள். மேலும், என் மூளையோ வெறும் 32KBதான் - SSI-இல் ஜாவா படிக்க 12K கொடுக்க வீட்டிலும் மறுத்து விட்டார்கள்!! ஆசை, காதல் எல்லாமே 'சி'! அதிலும் எம்பெடட் சிஸ்டம்ஸில்தான் வேலை செய்ய வேண்டுமென்றுக் கொள்கை வேறு!!

”செந்தாமரை மேடத்தை பர்க்கணும்” - உதவியாளர் அழைத்துச் சென்றார்.
மேல்தளம். R&D செக்‌ஷன்.
வழக்கம்போல கேள்விகள்....எவ்ளோ பர்செண்டெஜ், உங்கள் விருப்பங்கள், இத்யாதிகள்.

செந்தாமரை மேடம். சையிண்டிஸ்ட் சி. எம்படெட் நெட்வொர்க்கிங்க் ப்ராகஜட். கணினி மொழி சி. (ஹே!!!). அடுத்து அவர் சொன்னதுதான் ஹைலைட் - ”உங்களுக்கு 45 நாட்களுக்கு மட்டுமே ப்ராஜக்ட் தர முடியாது...இது ஆறு மாதப்ராஜக்ட். தொடர்ந்தும் நீங்கள் வருவதாக வாக்குக் கொடுத்தால் தொடரலாம்”. பழம் நழுவி ப்ராக்ஜடில் விழுந்தது. இனி அடுத்த மாதத்திலிருந்து எங்கள் முகவரி மெட்ராஸ் என்ற நினைப்பே உற்சாகத்தைக் கொடுத்தது!!

எல்லோரும் காசுக் கொடுத்து ப்ராஜச்ட் செய்துக்கொண்டிருக்க, ப்ராஜக்ட் செய்தால் காசும் கொடுக்கும் இடம் அது!! ஐடியா இதுதான் - புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் விரல்நுனியில் வைத்திருப்பார்கள், அவர்களைக்கொண்டு தேவையான வேலைகளை வாங்கிக்கொள்வார்கள் - சயிண்டிஸ்ட்கள் கான்செப்ட் லெவலில் கில்லியாக இருப்பார்கள் ! இருசாராருக்கும் பயன்- மாணவர்களுக்கு ப்ராஜக்ட் - இவர்களுக்கு வேலை! அண்ணா பல்கலை, பிட்ஸ், REC - மாணவர்களுக்கு கல்லூரி பெயரே கடவுச்சீட்டு. ஆனாலும் எங்களைப்போல சாதா பல்கலை.வாசிகளுக்கும் புகலிடம் அளித்தது...இந்தக் கேம்பஸ்!! இப்படி ஆரம்பித்ததுதான் - இங்கேயே வேலை,வீடு என்று சென்னை எனக்குத் தஞ்சமாகியது!!

புனே, பெங்களூர், ஹைதராபாத் வாய்ப்புகளையெல்லாம் நிராகரிக்குமளவிற்கு சென்னை என்னை ஈர்த்தது!! ப்ராஜச்ட் கொடுத்தது-படுத்துறங்கக் கூரை கொடுத்தது-வேலையும் கொடுத்தது-என் கனவுகளுக்கு உயிரும் கொடுத்தது!!

எனக்கு மட்டுமில்லை, சென்னையில் வசிக்கும் எல்லோருக்குமே இப்படிச் சொல்லிக்கொள்ள ஒரு சிறப்புமிக்க ஃப்ளாஷ்பேக் இருக்கும்தானே! :-)

ஐ லவ் யூ சென்னை!!

27 comments:

துபாய் ராஜா said...

மீ ட்டூ.

நட்புடன் ஜமால் said...

கடும் ‘டெக்கி’யா இருக்கே

நமக்கு இப்படி ஒரு கொசு வத்தியே இல்லை (ஒயிங்கா படிச்சாத்தானே ...)

சென்ஷி said...

சென்னைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

ஆகாய நதி said...

//
எனக்கு மட்டுமில்லை, சென்னையில் வசிக்கும் எல்லோருக்குமே இப்படிச் சொல்லிக்கொள்ள ஒரு சிறப்புமிக்க ஃப்ளாஷ்பேக் இருக்கும்தானே! :-)

ஐ லவ் யூ சென்னை!!

//

yeah exactly... we all have such good reasons to be in chennai... and loving the city :)

Once upon a time I hate Chennai... but now??!!!... I love Chennai :)

ஆயில்யன் said...

கலக்கல் ஃப்ளாஷ்பேக் பாஸ்!

ரியல் டைம் புராஜெக்ட்ல என்ன செஞ்சீங்க சக்சஸா அப்புறம் முக்கியமா வைவாவுல டெரரர் அட்டாக்கெல்லாம் நடந்துச்சான்னும் கூட சொல்லுங்க பாஸ் :)))

கோமதி அரசு said...

முல்லையின் கனவுகளுக்கு உயிர் கொடுத்த சென்னை வாழ்க!

மங்களூர் சிவா said...

ஒரு காலத்துல சென்னைவாசிதான் நான். இப்ப அங்க இருக்கிற ட்ராபிக், பொல்யூஷன்னால லவ் இல்லாம போயிடுச்சு :(

ஐ லவ் யு மங்களூர்.

தீஷு said...

சென்னைப்பத்தி அதிகமா தெரியாது முல்லை. ஆனா ஏனோ எப்போதுமே எல்லாரும் கோபமா இருக்கிற மாதிரியே இருக்கும்.. எனக்குத்தான் அப்படி தோணுதானு தெரியல..

அன்புடன் அருணா said...

நல்ல மலரும் நினைவுகள் முல்லை..!

☀நான் ஆதவன்☀ said...

ஆகா....கொசுவத்தி அழகா சுத்தியிருக்கீங்க.

//சென்னைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)//

ரிப்பீட்டே

குசும்பன் said...

//ஒரு சயிண்டிஸ்ட்-இன்-சார்ஜ் அலுவலகம்.//

அவ்வ்வ் நீங்க ஒரு சயிண்டிஸ்ட் என்று தெரியாம போச்சே:)

கானா பிரபா said...

பாஸ்! இப்பல்லாம் டெரரா தான் டைட்டில் வைக்கிறீங்க, பதிவு நன்று

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பிடிச்ச ஊருலயே செட்டில் ஆகறது ரொம்ப நல்ல விசயம்..

பின்னோக்கி said...

நானும் பிழைப்பதற்கு சென்னை வந்தவந்தான்.

Deepa said...

திறமையும் உழைப்பும் உள்ளவர்களுக்கு எந்த நகரமும் சொர்க்கமாகும் என்பதற்கு இலக்கணம் உங்கள் அனுபவம்!
சென்னை லவ்ஸ் யூ டூ முல்லை!
:-)

கோபிநாத் said...

என்டா நம்ம ஏரியாவை பத்தி சொல்லிக்கினிங்கன்னு வந்தேன்...ஓகே நல்லா தான் சுத்திக்கிறிங்க கொசுவத்தியை. ;))

\\ஐ லவ் யூ சென்னை!!\\

அது...சூப்பரு ;))

சின்ன அம்மிணி said...

சென்னை எனக்கு அவ்வளோ பழக்கமில்லை. படிப்பு வேலை எல்லாமே கோவையும் அதை சுற்றி ஈரோடு, பொள்ளாச்சியும் தான், ட்ரெய்னிங்குக்குதான் சென்னை வந்திருக்கிறேன். அவ்வளவு ஈர்ப்பு இல்லை சென்னை மேல் :)

பழூர் கார்த்தி said...

நானும் சென்னையை விரும்புகிறேன் (வேறு வழியில்லாமல்) ஹிஹிஹி..

தமிழன்-கறுப்பி... said...

சென்னை எனக்கும் புடிக்கும் ஆனாலும்...

அனுஜன்யா said...

அய்யனார் பதிவு படித்து விட்டு இங்கு வந்தேன் முல்லை. நல்லா எழுதி இருக்கீங்க. சென்னை பற்றி யார் புகழ்ந்தாலும் எனக்கும் ரொம்பப் பிடிக்கும் :)

அனுஜன்யா

அமிர்தவர்ஷினி அம்மா said...

தீஷு said...
சென்னைப்பத்தி அதிகமா தெரியாது முல்லை. ஆனா ஏனோ எப்போதுமே எல்லாரும் கோபமா இருக்கிற மாதிரியே இருக்கும்.. //

அது எங்க ஊரு வெய்யில்னால அப்படி உங்களுக்குத் தோணும்.

ஆனா பாசக்கார பயபுள்ள ஊரு இது :)

ஐ டூஊஊஊஊஊ லவ் சென்னை

Bee'morgan said...

ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.. :)
அருமை..!

இப்போதுதான் தனிமையின் இசையிலிருந்து வந்து பார்க்கிறேன்.. :)
அய்யனாருக்கும் நன்றிகள்..

ராம்ஜி.யாஹூ said...

wow lovely writing. I too came from ayyanar's blog

விக்னேஷ்வரி said...

அழகான பதிவு முல்லை.

மஞ்சூர் ராசா said...

சென்னையை பத்தி ஏதோ எழுதியிருப்பீங்கன்னு பாத்தா இது புதுசா இல்லே இருக்கு.

ஆனா நல்லாவும்.

தமிழ்நதி said...

சந்தனமுல்லை,

உங்கள் பதிவும் அய்யனாரதும் சென்னையைப் பற்றி என்னை எழுதத் தூண்டின. ஏற்கெனவே ‘சென்னை என்றொரு வேடந்தாங்கல்’என்றொரு பதிவு எழுதியிருக்கிறேன். இப்போது சென்னையைப் பற்றிய ஞாபகங்கள் மாறியிருக்கின்றன. இன்னும் கொஞ்ச நாள் இருந்தால் என்னை அங்கே இங்கே போகவிடாது போலிருக்கிறது. இது ஒரு தொடர் பதிவாகப் போகும் சாத்தியமிருக்கிறது. ஞாபகங்களைக் கிளறும் வேலை நல்லதுதானே….:)))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பதிவு நன்று!

நேரம் கிடைத்தால், இந்த தொடுப்பில் போய் பார்க்கவும் சந்தனமுல்லை மேடம்!

http://jothibharathi.blogspot.com/2008/02/blog-post_29.html