Wednesday, August 26, 2009

தன் வினை ..../முற்பகல் செயின் ....

...தன்னைச் சுடும்!!

"பப்பு, ரோட்லே போறவங்க நமக்குத் தெரியாதவங்க கூப்டா பேசக்கூடாது" -ன்னு சொல்லி நான் பட்டபாட்டை சொல்லியிருக்கேன்.

பக்கத்துவீட்டு ஆன்ட்டியை நாங்க அடிக்கடி பால்கனிலே பார்த்து பேசிக்குவோம். அவங்க வீட்டுக்கும் வருவாங்க சிலசமயம், இல்லன்னா, நானும் பப்புவும் போவோம். அங்கிளை ரோட்லே பாத்தா விஷ் பண்றதோட சரி,அதுவும் என்னைக்காவதுதான் பார்ப்போம். சோ நானோ, முகிலோ அங்கிள் கூட பேசி பப்பு பார்த்ததில்லை. இதுவரைக்கும் அங்கிள் எங்க வீட்டுக்கு வந்ததையும் விரல்விட்டு எண்ணிடலாம்னு வச்சிக்கங்களேன். இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா பப்புவை பொறுத்த வரை அங்கிள்கிட்டே நாங்க பேசி பார்த்ததில்லை. ஆண்ட்டிதான் நல்ல பழக்கம், எனக்கும் பப்புவுக்கும்.

சனிக்கிழமை சாயங்காலம் அங்கிள் வீட்டுக்கு வந்திருந்தார். கொஞ்ச நேரத்துலே மழை, இடி. எல்லோரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.


”அவங்கவங்க வீட்டுலேதான் அவங்கவங்க இருக்கனும்.. சொல்லு...எல்லோரும் அவங்கவங்க வீட்டுலேதான் இருக்கனும்!!”


பப்பு என்ன சொல்ல வர்றான்னு இந்நேரம் உங்களுக்கு புரிஞ்சிருக்குமே!!! அவ்வ்வ்வ்!
முகிலுக்கு ஒன்னும் புரியலை. அங்கிளுக்கு மழை சத்ததில தெளிவா கேக்கலை.

ஆனா, எனக்கு மட்டும் 'பக்'னு ஆகிடுச்சு. பெரிம்மா வேற பப்புவை டிஸ்ராக்ட் பண்ணி கூப்பிடறாங்க. விடாம இன்னொருவாட்டி அப்படியே ரிப்பீட்டு வேற!! எனக்கு அப்படியே நிலம் இரண்டா பிளந்து என்னை முழுங்கிடாதான்னு!! நானும் உள்ளே கூட்டிட்டுபோய் பாக்குறேன்..ம்ம் முடியல...அங்கிளும் முகிலும் பிசியா பேசிக்கிட்டு இருக்காங்க - ஐடி ஃபீல்ட்டுலே இருக்க பையனை நம்பி அவரோட பொண்ணைக் கொடுக்கலாமான்னு!!

“ரோட்லே போறவங்க கூடல்லாம் பேசக்கூடாது” - பப்பு!

அங்கிளுக்கு பப்பு சொல்றது தெளிவா கேட்டிருக்காதுன்னும், ”மூனு - அஞ்சு வயசுலேதான் பேசிக் கேரக்டர் பில்ட் ஆகும்”ன்னு அவர் சாதாரணமாத்தான் சொன்னார்ன்னும் நம்ப விரும்பறேன்!! :-)
....பிற்பகல் விளையும்!!

நீங்கல்லாம் பயந்த மாதிரி ஒன்னும் ஆகலை..அடியெல்லாம் இல்ல! தங்கள் அக்கறைக்கு நன்றி! :-) ஆனா,ஒரு புத்தகம் குழந்தைங்ககிட்டே எவ்வளவு பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும், நாம் சொல்ற ஒவ்வொன்னும், அவங்க மனசுக்குள்ளே போகற ஒவ்வொரு விஷயமும், என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்துதுன்னு எனக்குப் புரிய வைச்சது இது!!

பப்புவும் நானும் ஒரு புத்தகம் படிச்சிக்கிட்டிருந்தோம். விதவிதமான ஓடுகள் பத்தி. எப்படி சில விலங்குகளுக்கு வீடு அதனோட மேலேயே அமைஞ்சு இருக்குன்னு. நமக்கு வீடு எவ்வளவு பாதுகாப்பா இருக்கோ அது மாதிரி சில விலங்குகளுக்கு இயற்கையே எபப்டி பாதுகாப்பு கொடுக்குதுன்னு!அந்த புத்தகத்தை படிச்சுட்டு,அந்த வாரயிறுதியிலே கிண்டி பூங்காவுக்கும், பெசண்ட் நகர் பீச்சுக்கும் போயிருந்தோம். புத்தகத்துலே இருந்ததை நேராவும் பார்த்தோம்! கடற்கரையிலே கொஞ்சம் கிளிஞ்சல்கள் (கிளிஞ்சலுக்குள்ளே எப்படி ஒரு அனிமல் இருக்கும்னு இன்னும் அவளுக்கு ஒரே ஆச்சர்யம்!!), நத்தை, ஆமை, நண்டு இப்படி...கிண்டி பார்க்கில் ஆமையை 30 நிமிஷம் பார்த்த ஒரே குடும்பம் நாங்களாதான் இருப்போம்!

ஒருநாள், பப்பு, கிளிஞ்சலை முதுகிலே ஒட்டிக்கிட்டு படுக்கையிலே நகர்ந்து நகர்ந்து வந்தப்போ எனக்கு ஒன்னும் புரியலை. நான் டக்னு கிளிஞ்சலை எடுத்துட்டேன். ரொம்ப கோவம் வந்து, 'நான் ஆமைடி, ஷெல் வச்சிருக்கேன் பாரு'-ன்னு கத்தின பப்புவை சமாதானப்படுத்தி, ஃபோட்டோ எடுத்தேன்! அதுதான் முதல் படம்!!

இன்னொரு நாள், பப்பு இப்படி நாற்காலியை கவிழ்த்து அதுக்குள்ளே போய்ட்டதும் எங்க ஆயா பயந்துப் போய் என்னை கூப்பிட்டாங்க. ”நான் நத்தையோட ஷெல்-ல இருக்கேன்'ன்னு பேலன்ஸ் பண்ணி நகர முயற்சி செய்துக்கிட்டிருந்தா, ஹால்லே! நான் குடுகுடுன்னு ஓடிப்போய் கேமிராவை கொண்டுவந்து 'கிளிக்'ட்டேன்!! அது இரண்டாம் படம்!

இந்த விளக்கம் கொஞ்சம் பெரிசா இருக்கலாம், ஆனா, திரும்ப எப்போவாவது படிச்சுப் பார்க்கும்போது எங்களுக்கு ஒரு நல்ல ரீகாலிங்கா இருக்கும்!! அரவிந்த் சரியா சொல்லியிருக்கார். வாழ்த்துகள் அரவிந்த்! :-)

21 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா ஆகா ஒன்னும் சொல்லிக்க முடியலங்க. நேத்து ரொம்ப நேரம் இது என்னவா இருக்கும்ன்னு மண்டைய உடைச்சிக்கிட்டேன் ..அந்த சேர் ஒரு குகையா இருக்குமொன்னு யோசிச்சேன் அது ஓடா.. குட்

\\நான் ஆமைடி//:-)))நாங்களும் அதே மாதிரி ஆமையை மட்டும் எக்கச்சக்க நேரம் நின்னு பாத்திருக்கோம்...

சின்ன அம்மிணி said...

//அவங்கவங்க வீட்டுலேதான் அவங்கவங்க இருக்கனும்.. சொல்லு...எல்லோரும் அவங்கவங்க வீட்டுலேதான் இருக்கனும்!!//

பப்புவோட பஞ்ச் லைன் சூப்பர். உபயோகிக்கறவங்க கிட்ட ராயல்டி வாங்கிக்கோங்க.

பப்பு ஏதோ அனிமல்ஸ் ட்ரை பண்ணறான்னு நினைச்சேன். சரியாத்தான் இருக்கு.

அமுதா said...

:-))

நட்புடன் ஜமால் said...

முகிலுக்கு ஒன்னும் புரியலை. ]]


ஏன் ஏன் ஏன் - அவர் இதையெல்லாம் படிப்பதில்லையா :)

-------------

ஆமையை சரியா சொன்னவருக்கு நானும் வாழ்த்திக்கிறேன்.

-------------

குழந்தைகள் எப்படி எல்லாம் கற்றுகொள்கிறார்கள்

சந்தோஷத்துடன் வியப்பாகவும் உள்ளது.

☀நான் ஆதவன்☀ said...

அவ்வ்வ்வ் புரியலைன்னு அங்க கமெண்ட் போட்டுட்டு இப்ப தான் இங்க வந்தேன். இப்ப தானே புரியுது :)

இரண்டு படத்தையும் ஒன்னா போட்டதால நீங்க பப்புவை சித்திரவதை பண்றதா நினைச்சுட்டோம் :)

வல்லிசிம்ஹன் said...

ok. Thanks pa.:)

ஸ்ரீமதி said...

//”அவங்கவங்க வீட்டுலேதான் அவங்கவங்க இருக்கனும்.. சொல்லு...எல்லோரும் அவங்கவங்க வீட்டுலேதான் இருக்கனும்!!”//

ஹா ஹா ஹா :)))))))

கலையரசன் said...

//“ரோட்லே போறவங்க கூடல்லாம் பேசக்கூடாது”//

வீட்டுக்கு வர்றதுன்னா, ஜாக்கிரதையாதான் வரனும் போல?

ரைட்டு!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

இன்னொருவாட்டி அப்படியே ரிப்பீட்டு வேற!!

நீங்க பப்புவ ப்லாக்ஸ் படிக்க வெக்கறீங்களா என்ன :)))))))))

எனக்கு அப்படியே நிலம் இரண்டா பிளந்து என்னை முழுங்கிடாதான்னு!! //

ரொம்ப ஜாஸ்தியான ஃபீலிங்கு இது ஆச்சி

கிண்டி பார்க்கில் ஆமையை 30 நிமிஷம் பார்த்த ஒரே குடும்பம் நாங்களாதான் இருப்போம்!
:))))))))))))))))))))))))

தமிழ் பிரியன் said...

:) சரி சரி மன்னிச்சு விடுறோம்.

பப்பு பேரவை
சவுதி அரேபியா

mayil said...

:))))

மங்களூர் சிவா said...

/
”அவங்கவங்க வீட்டுலேதான் அவங்கவங்க இருக்கனும்.. சொல்லு...எல்லோரும் அவங்கவங்க வீட்டுலேதான் இருக்கனும்!!”
/
:)))))))

/
கிண்டி பார்க்கில் ஆமையை 30 நிமிஷம் பார்த்த ஒரே குடும்பம் நாங்களாதான் இருப்போம்!
/
nice :)

/
'நான் ஆமைடி, ஷெல் வச்சிருக்கேன் பாரு'-ன்னு கத்தின பப்புவை சமாதானப்படுத்தி
/

haa haa
:))

பைத்தியக்காரன் said...

ஆச்சி,

சங்கிலி கோக்கறாமாதிரி, பதிவை கோக்கறீங்களே... அது எப்படி?

தன்னைச் சுட்டதால் இனி அநிச்சையாக ஒரு எச்சரிக்கை இருக்கும் :-)

பிற்பகல் விளைந்தது நல்ல அறுவடைக்குத்தான்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

நாஞ்சில் நாதம் said...

:))

காமராஜ் said...

இனிது, இனிது,

Deepa said...

//”அவங்கவங்க வீட்டுலேதான் அவங்கவங்க இருக்கனும்.. சொல்லு...எல்லோரும் அவங்கவங்க வீட்டுலேதான் இருக்கனும்!!”
//

இதை நான் அபப்டியே பப்பு குரலில் imagine செய்து பார்க்கிறேன். LOL!!! :-)))
பாவம் முல்லை நீங்க. எப்படி சமாளித்தீர்களோ!

ஆமை நத்தை - super creativity பப்புக்கு.

குடுகுடுப்பை said...

அரவிந்த் சரியா சொல்லியிருக்கார். வாழ்த்துகள் அரவிந்த்! :-)//

நூறு சதவீதம் தவறா சொன்ன எனக்கு எதாவது ஆட்டுக்கறி,மீன் வருவலோட விருந்து உண்டா?

chidambararajan said...

kulanthaigalin ulakam thanithan nallvallthukal

விக்னேஷ்வரி said...

விடாம இன்னொருவாட்டி அப்படியே ரிப்பீட்டு வேற!! //

சோ ச்வீட் பப்பு.

”மூனு - அஞ்சு வயசுலேதான் பேசிக் கேரக்டர் பில்ட் ஆகும்”ன்னு அவர் சாதாரணமாத்தான் சொன்னார்ன்னும் நம்ப விரும்பறேன்!! :-) //

ஹாஹாஹா....

கிண்டி பார்க்கில் ஆமையை 30 நிமிஷம் பார்த்த ஒரே குடும்பம் நாங்களாதான் இருப்போம்! //

நல்ல குடும்பம். :)

சமத்துப் பொண்ணு பப்பு. நீங்க எல்லாத்தையும் சொல்லிக் குடுக்குறதோட நிறுத்திட்டீங்க, பப்பு பாருங்க ப்ராக்டிகல்ஸ்லேயும் கலக்கிட்டா. :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

puriyalaiyE.... photo engge?

தீஷு said...

//”மூனு - அஞ்சு வயசுலேதான் பேசிக் கேரக்டர் பில்ட் ஆகும்”ன்னு அவர் சாதாரணமாத்தான் சொன்னார்ன்னும் நம்ப விரும்பறேன்//

:-)))))