Saturday, August 08, 2009

‘அந்தக்காலத்துலே நாங்க'

எட்டாவது படிக்கும் போது - ஒருநாள் :

ஜரினா : ஆயா, ஆச்சி இருககாளா?
ஆயா : ஹிந்தி ட்யூஷன் போயிருக்கு, வந்துடும். உட்காரும்மா. உன் பேரு?
ஜரினா : ஜரினாங்க ஆயா!
ஆயா : ஓ...வீடு எங்கே?
ஜரினா : இங்கேதாங்க ஆயா, பக்கத்துலே!!

ஒரு 5 நிமிஷம் கழித்து...

ஆயா: என்ன விஷயம்மா?
ஜரினா : நான் நேத்து ஸ்கூலுக்கு போகலை...மேத்ஸ் நோட்டு வாங்கலாம்ன்னு வந்தேங்க ஆயா!
ஆயா : நல்லா படிப்பியாம்மா....ஏன் நேத்து ஸ்கூலுக்கு போகலை? என்ன ரேங்க்குள்ளே வருவே??

அதுதான் ஜரினா கடைசியா எங்க வீட்டுக்கு வந்தது! ஜரினா மூலமா இந்தஅதிர்ச்சி அலை என் மத்த ப்ரெண்ட்ஸ்கிட்டேயும் பரவி இருந்துச்சு!!


பதினொன்றாம் வகுப்பு - ஏதோ ஓர் சனிக்கிழமை மாலை:

நான் : பெரிம்மா, எனக்கு சன்னி வேணும், பெரிம்மா!
பெரிம்மா : சரி, பாக்கலாம்!
நான் : எப்போ வாங்கலாம்? மேரிக்கூட வாங்கபோறாளாம் பெரிம்மா!
பெரிம்மா : ......
(சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம்கொடுக்காத கதைதான்...நாமளே ஒரு பிட்டைப் போட்டு தேத்தி வச்சிருப்போம்...அதைக்கெடுக்கறதுக்குன்னே கரெக்டா எண்ட்ரி கொடுப்பாங்க...)
ஆயா : இப்போ எதுக்கு உனக்கு சன்னி? எப்படியும் அடுத்த வருஷம் ஹாஸ்டலுக்குத்தானே போகப்போறே!!
நான் : அது அப்போ பார்த்துக்கலாம்...எனக்கு சன்னிதான் வேணும்.
ஆயா : அந்தக்காலத்துலே, உங்க பெரிம்மால்லாம் ரெண்டு கிலோமிட்டர் ந்டந்தே போய் படிச்சாங்க...அதுல வேற மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்துட்டு போவாங்க!
நான் : ஆயா, அது அந்தக்காலம் ஆயா...சைக்கிள் வாங்கிக்கொடுக்காதது உங்க தப்பு!
ஆயா: அதுதான் உனக்கு வாங்ககிக்கொடுத்திருக்கு இல்லே...அதுவே போதும்!!

இதுக்குமேலே வேறே எதுவும் பேசமுடியுமா!அவ்வ்வ்வ்!! அப்புறம், ‘அந்தக்காலத்துலே நாங்க'ன்னு ஆரம்பிச்சுடுவாங்க!! (மீறிப் பேசினா, ‘நீ ஸ்டேட்ஃப்ர்ஸ்ட் எடு, அப்போ நானே வாங்கித்தரேன்'னு ஆரம்பிச்சுடுவாங்க. அதுக்கு, 'வாங்கித்தரமாட்டே'ன்னு நேராவே சொல்றதுன்னு நினைச்சுப்பேன்..ஆனாசொல்ல மாட்டேன்!! ;-))


காலேஜ் ஃப்ர்ஸ்ட் இயர் - செகண்ட் செமஸ்டர்

பெரிம்மா, எனக்கு டவ் சோப்தான் வேணும்!! அதுதான் புதுசா வந்திருக்கு! இந்ததடவை ஹாஸ்டலுக்கு போகும்போது அதுதான் வாங்கித்தரணும்!

(பில் பார்த்து எங்க ஆயாவுக்கு மயக்கம் வராத குறை..ஏன்னா,அப்போ அதனோட விலை : ரூ49.50 காசுகள்!! நான் வாங்கினது மூன்று சோப்புக்கட்டிகள்!!)

ஆயா : இவ்ளோ விலையா? சோப்புக்கா? இதெல்லாம் நீ சம்பாரிக்கும்போது வாங்கிக்கோ! இவ்ளோ செலவு பண்ணி உனக்கு சோப்பு வேணுமா? காசு என்ன மரத்துலே காய்க்குதுன்னு நினைப்பா?!!

டவ் திருப்பிக்கொடுத்துவிட்டு, எப்போதும்போல் எவிட்டா!!(ஆனால், வந்தக்கோவத்தில் ஆயாவை பழிவாங்குவதாக எண்ணி அவர்கள் குளியலுக்குஉபயோகிக்கும் பாசிபருப்பு மாவை
எல்லாம் எடுத்துக்கொண்டு ஹாஸ்டல்சென்றுவிட்டேன். பின்னர் அதன் மகிமையைப் பார்த்து, பப்பு பிறக்கும் வரைபாசிபருப்பு மாவுதான்..அது வேறு கதை..ஹிஹி!!)

காலேஜ் ஃபைனல் இயர் -ப்ராக்ஜட்க்காக வீட்டிலிருந்தபோது

நான் : ஆயா..நாள்பூரா நீங்கதானே பாக்கறீங்க....எப்பப்பார்த்தாலும் நியுஸ்..நியூஸ்...நியூஸ்!!!அதான் பேப்பர் படிக்கறீங்க இல்ல டெய்லி..அப்புறம் என்ன சன் நியூஸ்..அதை விட்டா ஜெயா நியூஸ்...ஏன் இப்படி கொல்றீங்க...நான் டீவி பாக்கணும் இப்போ!!

ஆயா : அப்போதான் ரெண்டு சைட் நியூஸ் தெரிஞ்சுக்க முடியும். இதைப்பாரு.. இல்லேன்னா போய் படி.....எப்போபார்த்தாலும் அந்த கூத்தாடிங்க ஆடறதைப் (ஓ மை..சோனி..ஜீ..சேனல் வீ!!) பாத்துகிட்டு இருப்பே...!!

நான் : இப்போதானே நானே எக்சாம் முடிச்சு வந்திருக்கேன்..என்னைக் கொஞ்ச நேரம் டீவி பாக்க விடறீங்களா?!

ஆயா : ஐஏஎஸ் க்கு படி ஆச்சி...நம்ம குடும்பத்திலேருந்து யாராவது ஐஏஎஸ் ஆகனும்னு எனக்கு ரொம்ப ஆசை..

நான் : ஏன்...நீங்க படிக்கறதுதானே..அந்தக்காலத்துலே காம்படிஷன் கம்மியாதானே இருந்திருக்கும்...அப்போ விட்டுட்டு, இப்போ வந்து என்கிட்டே சொல்றீங்க....

ஆயா: இப்படி விதண்டாவாதம் பண்றதுக்குதான் நீ லாயக்கு...உருப்படியா எதுவும் செஞ்சுடாதே! இந்தா புடி...இதையே பார்த்துக்கிட்டிரு...இதுதான் உனக்கு வந்து சோறு போடப்போகுது!! நீ சம்பாரிச்சா நீ நல்லாருக்கபோறே..எனக்காக் கொடுக்கப் போறே!!

ஆயா, நீங்க அப்போ பண்ணது, பேசினதெல்லாம் அராஜகமா தெரிஞ்சாலும் இப்போதான் அதன் உள்ளர்த்தம், நோக்கமெல்லாம் புரியுது!! நான் நிலாவைத் தொடனும்னு நீங்க ஆசைப்பட்டதாலேதான் என்னாலே அட்லீஸ்ட் நட்சத்திரத்தையாவதுத் தொட முடிஞ்சுருக்கு!!
தாங்ஸ் ஆயா, என்னோட வாழ்க்கையை சுவாரசியமாக்கினதுக்கு!! ஹாப்பி கிராண்ட் பேரண்ட்ஸ் டே!!

இதெல்லாம் எதுக்கு இப்போன்னா, பப்பு ஸ்கூல்லே நேத்து கிராண்ட் பேரண்ட்ஸ்டே கொண்டாடினாங்க! அதான்!! நம்ம ஊர்லே அஃபிஷியலா அடுத்த மாசம் ஏழாம்தேதிதான் கிராண்ட் பேரண்ட்ஸ் டெ!!

17 comments:

சென்ஷி said...

//நான் நிலாவைத் தொடனும்னு நீங்க ஆசைப்பட்டதாலேதான் என்னாலே அட்லீஸ்ட் நட்சத்திரத்தையாவதுத் தொட முடிஞ்சுருக்கு!!///

பஞ்ச் டயலாக் விடப்போறீங்கன்னு பயந்துட்டு இருந்தேன். பாச டயலாக் அடிச்சுட்டீங்க...

நினைவுகள் அழகு!

தலைப்புல ‘ மார்க்’ போடாதீங்க. தமிழ்மணத்துல தலைப்பு தெரியமாட்டேன்குது. இல்லைன்னா திரட்ட மாட்டேங்குது :-(

ஆயில்யன் said...

//இப்படி விதண்டாவாதம் பண்றதுக்குதான் நீ லாயக்கு...உருப்படியா எதுவும் செஞ்சுடாதே! இந்தா புடி...இதையே பார்த்துக்கிட்டிரு...இதுதான் உனக்கு வந்து சோறு போடப்போகுது!! நீ சம்பாரிச்சா நீ நல்லாருக்கபோறே..எனக்காக் கொடுக்கப் போறே!! //

அதே வரிகள் !!!!!

ஸேம் ஸேம் பாஸ் :)

சிங்கக்குட்டி said...

உங்கள் பசுமையான நினைவுகளுக்கு ஒரு ஒட்டு .....:-))

Deepa said...

:-))
// : ஐஏஎஸ் க்கு படி ஆச்சி...நம்ம குடும்பத்திலேருந்து யாராவது ஐஏஎஸ் ஆகனும்னு எனக்கு ரொம்ப ஆசை..

நான் : ஏன்...நீங்க படிக்கறதுதானே..அந்தக்காலத்துலே காம்படிஷன் கம்மியாதானே இருந்திருக்கும்...அப்போ விட்டுட்டு, இப்போ வந்து என்கிட்டே சொல்றீங்க....//

LOL!!!!

Grand parents da vaa? ungalukkum en wishes aachi! ;-))

தமிழ் பிரியன் said...

Achi, enakku oru thadavai unga Aayavai parkkanum. Rompa suvarasyamanavanga pola :) Happy GRAND PA DAY.

தீஷு said...

ரசிச்சி படிச்சேன் முல்லை.

//நீங்க அப்போ பண்ணது, பேசினதெல்லாம் அராஜகமா தெரிஞ்சாலும் இப்போதான் அதன் உள்ளர்த்தம், நோக்கமெல்லாம் புரியுது//

உண்மை முல்லை.

Rithu`s Dad said...

இந்த தாத்தா பாட்டி தொல்லை எல்லாம் இன்னும் இருக்கா..? நமக்கு அப்பா அம்மா தொல்லை மட்டும் தான் படிக்கும் பொழுது.. தாத்தா பாட்டி வேறு ஊரிலிருந்தார்கள்....அங்கு இருந்து எங்க ஊருக்கு வரும்பொழுது எல்லாவற்றிர்க்கும் சேர்த்து வைத்து எப்படி படிக்கிறே.. இது படிக்கனும் அது படிக்கனும்னு.. ஒரே அட்வைஸ் தான் போங்க.... எல்லாம் ஒரு தரம் தான்.. அடுத்த முறை.. அவங்க வர நேரம் நாம தான் கிரிக்கெட் பேட்டோட வெளியில் சுத்திட்டு இருப்போம்.. அவங்க போனப்பறம் தான் வீட்டுக்கு எண்ட்ரியே.. என்ன இருந்தாலும் கொண்சம் ஓவர் தான் இந்த கிராண்ட் பேரண்ட்ஸ் …

Rithu`s Dad said...

எனக்கு இந்த அப்பா அம்மா ”கவனிப்பு” மட்டும் தான்.. தாத்தா பாட்டி வேறு ஊரிலிருந்தார்கள்....அங்கு இருந்து எங்க ஊருக்கு வரும்பொழுது எல்லாவற்றிர்க்கும் சேர்த்து வைத்து எப்படி படிக்கிறே.. இது படிக்கனும் அது படிக்கனும்னு.. ஒரே அட்வைஸ் தான் போங்க.... எல்லாம் ஒரு தரம் தான்.. அடுத்த முறை.. அவங்க வர நேரம் நாம தான் கிரிக்கெட் பேட்டோட வெளியில் சுத்திட்டு இருப்போம்.. அவங்க போனப்பறம் தான் வீட்டுக்கு எண்ட்ரியே.. என்ன இருந்தாலும் கொண்சம் ஓவர் தான் எல்லா பேரண்ட்ஸ் & கிராண்ட் பேரண்ட்ஸ் …

கோமதி அரசு said...

//நான் நிலாவைத் தொடனும் என்று நீங்க ஆசைப்பட்டாதாலேதான் என்னாலே அட்லீஸ்ட் நட்சத்திரத்தையாவதுத் தொட முடிஞ்சுருக்கு//

ஆயாவின் நம்பிக்கை நட்சத்திரம்
ஆகிவிட்டீர்கள்.

மங்களூர் சிவா said...

// : ஐஏஎஸ் க்கு படி ஆச்சி...நம்ம குடும்பத்திலேருந்து யாராவது ஐஏஎஸ் ஆகனும்னு எனக்கு ரொம்ப ஆசை..

நான் : ஏன்...நீங்க படிக்கறதுதானே..அந்தக்காலத்துலே காம்படிஷன் கம்மியாதானே இருந்திருக்கும்...அப்போ விட்டுட்டு, இப்போ வந்து என்கிட்டே சொல்றீங்க....//

:)))))))))

very nice post.

மாதவராஜ் said...

ரசித்தேன்....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முல்லை டைம்ஸ் = நாங்க அந்த காலத்துலே :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ஏன்...நீங்க படிக்கறதுதானே..அந்தக்காலத்துலே காம்படிஷன் கம்மியாதானே இருந்திருக்கும்...அப்போ விட்டுட்டு, இப்போ வந்து என்கிட்டே சொல்றீங்க...//

என்னா ஒரு இடக்கு மடக்கு.. :)

G3 said...

Aachi times pappu timesa vida supera irukkum pola irukkae ;))))))

//ஏன்...நீங்க படிக்கறதுதானே..அந்தக்காலத்துலே காம்படிஷன் கம்மியாதானே இருந்திருக்கும்...அப்போ விட்டுட்டு, இப்போ வந்து என்கிட்டே சொல்றீங்க....//

aachiya pesaama BL padikka vittirukkalaamo ;))))

☀நான் ஆதவன்☀ said...

//\\ஏன்...நீங்க படிக்கறதுதானே..அந்தக்காலத்துலே காம்படிஷன் கம்மியாதானே இருந்திருக்கும்...அப்போ விட்டுட்டு, இப்போ வந்து என்கிட்டே சொல்றீங்க...//

என்னா ஒரு இடக்கு மடக்கு.. :)//

:))))

அமுதா said...

/*நான் நிலாவைத் தொடனும்னு நீங்க ஆசைப்பட்டதாலேதான் என்னாலே அட்லீஸ்ட் நட்சத்திரத்தையாவதுத் தொட முடிஞ்சுருக்கு!!
*/
உண்மை தான்

நாஞ்சில் நாதம் said...

:))