Tuesday, August 04, 2009

யாரு சொன்னா குழந்தை வளக்கறது ஈசின்னு!!

நேரம்-காலம் : கடந்த வாரத்தில் ஓர் நாள் - காலை 8 மணி
இடம் : தெருமுனை

பப்புவை வேனில் ஏற்றிவிடச்செல்லும்போது, முன்பு அவளைக் கவனித்துக்கொண்ட ஆயாவை பார்க்க நேர்ந்தது.அவரும் பப்புவிடம், வா, பாப்பா, என்ன படிக்கிறே, என்க்கூட வர்றியா என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அவர் என்னவோ அன்பாகத்தான் பேசிக்கொண்டிருந்தார். ஆனாலும், பப்புவிற்குசொல்லி வைப்போமே என்று நாந்தான் ஆரம்பித்தேன்.

பப்பு, ரோட்லே போறவங்க நமக்குத் தெரியாதவங்க கூப்டா பேசக்கூடாது.

பேசினா?

யாராவது, வா, நான் சாக்லேட் வாங்கி தரேன்..லாலிபாப் வாங்கிதரேன்.. என்கூட வா-ன்னு சொன்னா போகக்கூடாது.

போனா?

அப்புறம் அவங்க வீட்டுக்கு கூப்பிட்டு போய்டுவாங்க...

கூப்பிட்டு போய்?

அப்றம், நீ அம்மாக்கிட்டே வரணுமா இல்லையா? ஷோபனா ஆன்ட்டில்லாம் இப்போ நம்ம வீட்டுலே இல்ல. அவங்க வா என்கூட, நான் உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னால்லாம் போகக்கூடாது, சரியா..

ஏன் ஆச்சி? ஏன் கூப்பிடுவாங்க?

......(மனதுக்குள், இந்த வேனை என்ன இன்னும் காணோம்!!)

கூப்டுப் போய் என்னா பண்ணுவாங்க, ஆச்சி?

.....

சொல்லு ஆச்சி...என்னா பண்ணுவாங்க...

நீ எப்போவும் அம்மாக்கூட அப்பாக்கூடத்தான் போகணும். ( மனதுக்குள், இந்த வேன் இன்னும் வரவழியைக்காணுமே!!)

வடலூர் ஆயாக்கூட, காட்பாடி ஆயாக்கூட, முருகன், தாத்தாக்கூடல்லாம்?

அவங்க கூடல்லாம் போகலாம்! நமக்குத் தெரியாதவங்க...நம்ம வீட்டுக்கு வராதவங்க யாராவது கூப்டால்லாம் நீ பேசக்கூடாது!!

பேசினா?

......

அவங்க என்னை வீட்டுக்குக் கூப்பிட்டு போய்டுவாங்களா?

ம்.....

அவங்க வீட்டுக்குக் கூப்டுபோய் என்னா பண்ணுவங்க?

......(I give up!!!)

சொல்லு ஆச்சி...என்னா பண்ணுவாங்க? குள்ளநரி இருக்குமா அவங்க வீட்டுலே?

.....(டமால்..டமால்..பக்கத்துலே இருக்க சுவத்திலே முட்டிக்கிட்டிருக்கேன்!அவ்வ்வ்!!!)

The irony is killing me...திடீரென ஒருநாள் புதியவர்களிடம் அறிமுகப்படுத்தி பப்புவை பேசச்சொல்வதும், நானே புதியவர்களிடம் பேச வேண்டாமென்றுச் சொல்வதும்..Am I a hypocrite or what?!!

35 comments:

சென்ஷி said...

:-)

பதிலை சொல்ல வேண்டியது மிகவும் அவசியமானதுங்க சந்தனமுல்லை!

தாரணி பிரியா said...

பப்பு கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம இது என்ன சின்ன புள்ளைத்தனமா பதிவு எழுதிட்டு எங்ககிட்ட கேள்வி கேட்டுட்டு இருக்கிங்க‌ :)

தாரணி பிரியா said...

இதே போல எனக்கும் நடந்தது முல்லை. அதுக்கு எங்க கயலுக்கு நான் சொன்ன பதில் கூட்டிட்டு போய் அவங்க வீட்டு வேலை செய்ய சொல்லுவாங்க.

ஆனா இதுல ஒரு பெரிய ரிஸ்க் இருக்கு. பின்னாடி நீங்க எதுனா வேலை செய்ய சொன்ன நீ எங்காயாவது இருந்து என்னை கூட்டிட்டு வந்தயான்னு கேட்பாங்க :). எங்க கயல் கேட்டா :(

குசும்பன் said...

//டமால்..டமால்..பக்கத்துலே இருக்க சுவத்திலே முட்டிக்கிட்டிருக்கேன்!//

முருகா ஆண்டவா, அடுத்த முறை சுவருக்கு பதில் இரும்பு பில்லர் இருக்கட்டும்!

ஜீவன் said...

///யாரு சொன்னா குழந்தை வளக்கறது ஈசின்னு!!///

அமிர்தவர்ஷினி அம்மா said...

நீங்களும் பதிவையும் போட்டு, கடைசியில கமெண்ட்டும் போட்டு, படிக்கிறவஙக் நாங்க எதைதான் செய்யுறது ?

:)))))))))))))))

கையேடு said...

:)

வல்லிசிம்ஹன் said...

hee hee.
you are a mom!!!!
enjoy(janakaraj style la padikkavum.

SUMAZLA/சுமஜ்லா said...

Children are full of contradiction and we like that contradictions in them. குழந்தைகள் எப்போதுமே மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்டவர்கள். அவர்களின் உலகமும் கற்றுக் கொள்ளும் அறிவும், நம்மைவிட பல மடங்கு மேலானது.

நாஞ்சில் நாதம் said...

:))

மிஸஸ்.தேவ் said...

குழந்தைங்களை நாம வளர்க்கிறோமா? இல்லவே இல்லை ...யாரு சொன்னா?!!! பாப்பு ஒத்துக்கவே இல்லை முல்லை ...அவங்க தான் இப்போலாம் பேரன்ட்ஸ் ஐ வளர்க்கிறாங்கலாமே!!! எனக்கு பதில் தெரியலை ,அப்படியா? நிஜமாவா?!!!

:)

நட்புடன் ஜமால் said...

பப்பு தீ கிரேட்


[[
சொல்லு ஆச்சி...என்னா பண்ணுவாங்க...]]


அருமை ...

நட்புடன் ஜமால் said...

நம்பட அம்மாக்களே அம்பூட்டு கஷ்ட்டப்பட்டு இருப்பாங்க

இனி ஈசிங்கிர வார்த்தையே இருக்க வாய்ப்பே இல்லை

கோமதி அரசு said...

"யாரு சொன்னா குழந்தை வளக்கறது
ஈசின்னு!!”

குழந்தைகளிடம் இருந்து நாம் தினம்,
தினம் கற்றுக் கொள்கிறோம், முல்லை.

Deepa said...

:-)) காமெடியா சொல்லி இருந்தாலும் பப்புக்குட்டி கிட்ட வாயைக் குடுத்துட்டு நீங்க படற கஷ்டம் புரியுது!

//இந்த வேனை இன்னும் காணோமே//

:-))))))

G3 said...

ROTFL :)))))

//The irony is killing me...திடீரென ஒருநாள் புதியவர்களிடம் அறிமுகப்படுத்தி பப்புவை பேசச்சொல்வதும், நானே புதியவர்களிடம் பேச வேண்டாமென்றுச் சொல்வதும்..Am I a hypocrite or what?!!//

Idhukku thaan overa yosikkakoodaadhungaradhu :))))) Jammunu oru ice lemon tea vaangi kudichittu coola poi thoongunga :))))

☀நான் ஆதவன்☀ said...

கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலே சொல்லலைங்க :)

SK said...

:) :) :) :)

கோபிநாத் said...

\\.....(டமால்..டமால்..பக்கத்துலே இருக்க சுவத்திலே முட்டிக்கிட்டிருக்கேன்!அவ்வ்வ்!!!)\\

ம்ம்ம்...இது ஓகே தான்..பட் இருந்தாலும் உங்ககிட்ட இருந்து இன்னும் நான் எதிர்பார்க்கிறேன் ;))

சென்ஷி said...

//குசும்பன் said...

//டமால்..டமால்..பக்கத்துலே இருக்க சுவத்திலே முட்டிக்கிட்டிருக்கேன்!//

முருகா ஆண்டவா, அடுத்த முறை சுவருக்கு பதில் இரும்பு பில்லர் இருக்கட்டும்!//

இவ்ளோ நல்லவனா குசும்பா நீயி! :)

கலையரசன் said...

//வடலூர் ஆயாக்கூட//

ஹலலலோ.. மேடம்! எந்த ஆயா இருக்காங்க வடலூருல?
ஏன் கேட்குறன்னா... நானும் வடலூர்தான்!

அமுதா said...

:-)))))

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

உண்மைதாங்க சந்தனமுல்லை.
எங்கே,அப்பாகளிடம் ?
ஒரு வாய் சாதத்தை குழந்தைக்கு ஊட்டிவிட சொல்லுங்கள் பார்ப்போம்.

அவர்களுக்கு பிடிக்காத உடையை எப்போதும் அணியமாட்டார்கள்.
இல்லத்தரசிகள் பொறுமைசாலிகள் தாம்.

இந்த காலத்து பிள்ளைகள் நினைத்ததை அந்த நொடியில் அடையவேண்டும் என்கிறார்கள்.

சின்ன அம்மிணி said...

எங்கம்மாவாயிருந்தா என்ன சொல்லியிருப்பாங்க தெரியுமா,
'கூப்டுட்டுபோய் கண்ணை நோண்டீருவாங்கன்னு;' :)

மாதவராஜ் said...

புன்னகையோடு படித்து முடித்தேன். தர்மசங்கடமான பிரச்சினைதான். பப்புவின் கேள்விகளே, அவளிடம் இருக்கும் ஆயுதங்கள். நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

மோனிபுவன் அம்மா said...

பப்பு கேட்ட கேல்விக்கு நீங்க பதில் கடைசி வரை சொல்லவில்லை போலும் இருக்குது முல்லை

மோனிபுவன் அம்மா said...

சில கேள்விகள் பிள்ளைகள் கேட்கும் போது நம்ம பதில்??????? இப்படி தான் இருக்கும்

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்களுடன் விருதும் கொடுத்திருக்கேன் வாங்கிக்கோங்க!

ஆகாய நதி said...

பாவம் பப்பு இப்படியெல்லாம் ஏன் குழப்புறீங்க.... அவ்வ்வ்வ்னு பப்பு சொல்வது எனக்கு கேட்குதே! :)

ஹி ஹி ஹி நீங்களும் பாவம் தான்! பிள்ளைகள் கேட்கும் அளவிற்கு பரீட்சையில் கூட கேள்விகள் இருக்காது! :)

குடுகுடுப்பை said...

இன்னும் கொஞ்சம் நாளில் தெரியாதவர்களிடம் பேசக்கூடாது என்று தெரிந்துவிடும் அவளுக்கு. சொல்லும்போது புதியவர்கள் நல்லவர்களா /கெட்டவர்களான்னு தெரியாது அதனால்தான், அதற்கான விளக்கமும் தயாரித்துக்கொள்ளுங்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))

சூப்பர்

பழய காலத்து படம் ஒன்னுல ரெண்டு குட்டிப்பசங்களை ஒரு காரில் தூக்கிட்டுபோவாங்க.. பின்னாடியே அவங்கப்பா ஸ்கூட்டரில் துரத்திட்டு வருவார் அந்த காட்சிய காமிச்சி சபரிய சொல்லிவச்சிருக்கேன் .. இப்படித்தான் அழனும அவங்க தூக்கிட்டுப் போயிடுவாங்க.. அப்பறம் நீ அழுவன்னு... அந்த காட்சி பாத்தப்ப அவன் முகம் கொஞ்சம் திகிலா இருந்ததா அப்ப கபால்ல்ன்னு இந்த விசயத்தை கொஞ்சமா லோட் செய்து வச்சிட்டேன்..

ஸ்ஸ்.. என்ன ஒரு கஷ்டம்ப்பா..

ராமலக்ஷ்மி said...

யாரும் சொல்லலைங்க குழந்தை வளக்கறது ஈஸின்னு!

ஈஸி ஈஸி:)! எல்லாம் புரிஞ்சுப்பாங்க, ஆனா புரிய வைக்க முட்டிக்கத்தான் வேணும்:(!

பொன்ஸ்~~Poorna said...

ஏங்க முல்லை, அதான் பப்புவே உங்களுக்கு சொல்லிக் கொடுக்குதே.. குள்ளநரி இருக்கும், இல்லைன்னா, கூட்டிட்டு போனா திருப்பி அம்மா கிட்ட அனுப்பவே மாட்டாங்க, இப்படி ஏதாவது சொல்லிடுங்க..

பேசாதேன்னு சொல்ல வேணுமா என்ன? 'ஜாக்கிரதையா இருக்கணும். ஏதாவது கொடுத்தா சாப்பிட கூடாது,கூப்பிட்டா அவங்க கூட போகக் கூடாது.' இது போதாது?

anyway, இந்த மாதிரி கேள்வி எல்லாம் தனக்குன்னு வரும்போது தான் practical difficulties தெரியும்னு நினைக்கிறேன்..

rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............வாயக் கொடுத்து மாட்டிக்கிட்டு, அப்புறம் இப்போ பேச்சென்ன வேண்டிக்கிடக்கு:):):)

//
The irony is killing me...திடீரென ஒருநாள் புதியவர்களிடம் அறிமுகப்படுத்தி பப்புவை பேசச்சொல்வதும், நானே புதியவர்களிடம் பேச வேண்டாமென்றுச் சொல்வதும்..Am I a hypocrite or what?!!//

அது எல்லாம் இல்லைங்க. குறைந்தபட்சம் நமக்கு கொஞ்சமாவது தெரிஞ்சவங்கக்கிட்ட(அட்லீஸ்ட் பேராவது) மட்டுமே பேசனும்னு எதிர்பாக்குறது எல்லா பெற்றோரோட இயல்புதான.

மங்களூர் சிவா said...

/
சென்ஷி said...

:-)

பதிலை சொல்ல வேண்டியது மிகவும் அவசியமானதுங்க சந்தனமுல்லை!
/

கண்டிப்பா.