Friday, August 28, 2009

Long, Long Ago....

”நண்பனொருவன் வந்தபிறகு விண்ணைத்தொடலாம் உந்தன் சிறகு” - இப்படி எனக்குக் கிடைத்த ப்ரெண்ட்தான் லதா!

பொண்ணுங்களை தனியா வேற ஊருக்கு அனுப்பனும்னாலே கொஞ்சம் யோசிப்பாங்க! துணைக்கு யாராவது ஒரு ஆள் கண்டிப்பா வருவாங்க! அதுவும் எங்க ஆயாவுக்கு சொல்லவே வேணாம். கற்பனை பண்ணி பயந்துக்கறதுலே அவங்களை அடிச்சுக்கவே முடியாது! 'தொலைஞ்சு போய்டுவேன்' இல்லன்னா 'யாராவது கடத்திட்டு போய் கண்லே கரப்பான் பூச்சியை கட்டி பிச்சை எடுக்க விடுவாங்க' ரேஞ்சுலே மெட்ராஸூக்கு என்னை அனுப்பறதுலே பயந்துக்கிட்டிருந்தாங்க. அதுவும் இல்லாம, இது மெட்ராஸுக்கு போனா உருப்படாது(மெட்ராஸ் உருப்படாதுன்றது வேற விஷயம்!!), அப்புறம் மெட்ராஸிலே எல்லொருமே கெட்டவங்க'னு ஒரு நினைப்பு!! ப்ராஜக்ட்-க்கு கண்டிப்பா மெட்ராஸ்தான் போகணும்...'நீ வேலூர்லேயே ப்ராஜக்ட் பண்ணு'ன்னு சொல்லிட்டா என்ன பண்றதுன்னு ”லதாவும் என்கூடதான் வரா , நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாதான் ப்ராஜக்ட் பண்ணப் போறோம்”னு (இதே பிட்டு லதா வீட்டுலேயும் ஓடுச்சு!!) பில்டப் கொடுத்து சமாளிச்சாச்சு!

வழக்கமா ஊர்லேர்ந்து வர்றவங்க பண்றதை நாங்களும் தவறாம பண்ணோம்...ஒன்வேல எதிர்பக்கம் பார்த்துக்கிட்டு கிராஸ் பண்றது, ஒன்னுமே வாங்காம ஸ்பென்ஸர்ஸை சுத்தறது, அப்புறம், பெரிய பில்டிங்கைப் பார்த்தா அதுலே ஏதாவது சாஃப்ட்வேர் கம்பெனியோட பேர் தெரியுதான்னு பாக்கறது, பஸ்லே ஏறினா பர்ஸை கெட்டியா பிடிச்சுக்கறது, ஏரோப்ளேன் போனா அண்ணார்ந்து பார்க்கறதுன்னு!! இன்னும் ஒன்னு இருக்கு...ப்ராஜக்ட் பண்ண ஸ்டூடண்ஸ் சென்னை வந்தா, அதும் பெண்கள் வந்தா பண்றது, “மெட்டீரியல் கலெஷன்' என்னனு தெரியலையா...நீங்க ரொம்ப நல்லவஙகன்னு நம்பிட்டேன்! அது வந்து, தி நகர், அப்புறம் மைலாப்பூர், எக்மோர்லே பாந்தியன் சாலை(காட்டன் ஸ்ட்ரீட்)- புரிஞ்சுருக்குமே - யெஸ் - சல்வார் 'மெட்டீரியல்' வாங்கி டிரெஸ் தைச்சுக்கிறது!! காட்டன் ஸ்ட்ரீட்லே மீட்டர் 30 ரூ...மிக்ஸ் அன்ட் மாட்ச்! ப்ராஜக்ட்-காகக் கொடுக்கற காசுதான்!! மெட்டீரியல் கலெக்ஷ்ன் பண்ணனும்னு காசு கேட்டா - 'கம்ப்யூட்டர்லே என்ன மெட்டீரியல் கலெஷன்'னு திருப்பிக்கேட்டா இப்படிதான் ஆகும்!!(ஹிஹி...பெரிம்மா..மன்னிச்சுடுங்க!!) வேலை கிடைச்சதும், திநகர், காட்டன் ஸ்ட்ரீட் லாம் விட்டுட்டு க்லோபஸ், ஹாப்பர்ஸ் ஸ்டாப்ன்னு ஸ்விட்ச் ஆகிட்டோம்..இப்போ பேக் டூ த பெவிலியன் - காட்டன் ஸ்ட்ரீட்தான்! ஏனா? புரியலையா..அதான் கல்யாணம் ஆகிடுச்சே..அவ்வ்வ்வ்!

ஓக்கே, பழைய கதைக்கு வாங்க, ப்ராஜக்ட் பண்ணப்போ அடையார்லே ஹாஸ்டல்வாசம்! சென்ட்ரல் கவர்மெண்ட்னா, காலை 9.30 டு மாலை 5.30 வெலை செஞ்சா போதும்!! அதும் ஒரு சங்கு ஊதுவாங்க...நீங்க வேலை செஞ்சது போதுங்கற மாதிரி! அதுக்காக நாங்க அஞ்சு மணிக்கே மூட்டையைக் கட்டிட்டு உட்கார்ந்து இருப்போம்!! அதுக்கு அப்புறம் என்ன வேலை..அடையாரை காலாலே அளக்கறதுதான்! அடையாரிலே 'அடையார் பேக்கரி' இருக்கு..அதுதான் எல்லாருக்கும் தெரியுமே! ஆனா அங்கே போகக்கூடாது..அதுக்குப் பக்கத்துலே ஒரு குட்டி சந்து மாதிரி இருக்கும்.அங்கே, ஒரு கடை சாயங்காலத்துலே மட்டும் ஓபன் ஆகும்...ஒன்லி பஜ்ஜி,போண்டா, வடை பகோடா, கட்லெட் etc! 10 ரூபாலே நிறைய நொறுக்ஸ் சுடச்சுடக் கிடைக்கும்! அதை நடத்துறது, 'வேலையில்லா பட்டதாரிகள்'னு போர்டு போட்டிருப்பாங்க! நானும் லதாவும், சரி, வேலையெதுவும் கிடைக்கலன்னா, இதேமாதிரி நாமளும் தோசைக்கடையாவது வைக்கலாம்னு மனசைத்தேத்திக்கிட்டோம்! (Career is important!!) ஏன்னா அப்போ இருந்த நிலைமை அதுமாதிரி!

என்னோட வாஸ்து எப்படின்னா, அஞ்சாவது முடிக்கறேன்னா அந்த வருஷம்தான் ஆறாவது சிலபஸ் மாறும்! நான் எட்டாவது படிக்கறேன்னா அப்போதான் அதைப் பொதுத்தேர்வா மாத்துவாங்க.பத்தாவது படிக்கும்போதுதான் விடைத்தாள் மார்க் போடற பேட்டர்ன் மாத்துவாங்க..பன்னெண்டாவது வரேன்னு தெரிஞ்சதும் ப்ராக்டிகல்ஸ் மாத்துவாங்க!! இதே வாஸ்து நான் வேலைக்கு வரபோறேன்னு தெரிஞ்சதும் வொர்க் அவுட் ஆகலைன்னா எப்படி?
நாங்க, 'MCA முடிச்சதும் பாஸ்போர்ட் வாங்கிட்டு நேரா அமெரிக்கா'ன்னு கனவுல இல்ல இருந்தோம்...இதை எப்படியோ தெரிஞ்சுக்கிட்ட ஒசாமா டென்ஷனாகி ட்வின் டவரை உடைச்சுப் போட்டுட்டார்! என் சீனியர்ஸ் எல்லாம், 'உன் ரெசியும் அனுப்பு'ன்னு சொல்லிக்கிட்டுருந்தவங்க, உங்க ஊர்லே இருக்கற காலேஜ்லேயே லெக்சரராகிடுன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க! H1B கொடுக்கறேன்னு இண்டர்வியூலே சொன்னவங்களுக்கெல்லாம், ஆஃபரே கைக்கு வரலை!! அதனாலே நானும் லதாவும் சரி தோசைக்கடை ஓக்கேன்னு முடிவு பண்ணோம்..கேரியர் தான் முக்கியம்..எந்த கேரியரா இருந்தா என்ன..?!!டிபன்பாக்ஸ் கேரியர் கூட ஓக்கேதான்!!

அதும் இல்லாம, பொண்ணுங்க படிச்சுட்டு கொஞ்ச நாள் வீட்டுலே இருந்தா போதும்..நம்ம பேரண்ட்ஸ்க்கு ஐடியா இருக்கோ இலையோ...மத்தவங்கள்லாம் ஏன் அவ மட்டும் நிம்மதியா இருக்கானு யோசிக்க ஆரம்பிச்சுடுவாங்க! ஊர்லே, தெரிஞ்சவங்க யாராவ்து ஐடிலேர்ந்து வேலை இல்லாம வீட்டுக்கு வந்துட்டாங்கன்னு தெரிஞ்சாபோதும்..சும்மா நாள்லேயே வேலை கிடைக்காது,நம்ம பொண்ணுக்கு எங்கே வேலைக்கிடைக்கும்னு ஒரு முடிவுக்கே வந்துடுவாங்க!! உடனே என்ன இருக்கவே இருக்கு, யுனிவர்சல் சொல்யூசன் - ”டும் டும் டும்”!

“நெருப்புன்னா வாய் வெந்துடவா போகு்து...உடனேவா கல்யாணம் பண்ணிட போறோம்..ஆரம்பிக்கலாம்..பார்த்துக்கிட்டே இருப்போம்..அமைஞ்சா பண்ணலாம்...எப்படியும் ஒரு வருஷம் ஆகும்..அதுக்குள்ளே நீயும் வேலைக்கு டிரை பண்ணு”னு ஜாதகத்தை/பயோடேட்டாவை தூசு தட்ட ஆரம்பிச்சுடுவாங்க!! சமாளிக்கணுமே...
”நாங்க ப்ராஜக்ட் பண்ற இடத்துலேர்ந்தே எனக்கு வேலைக் கொடுக்கறேன்னு சொல்லியிருக்காங்க,செண்ட்ரல் கவர்மெண்ட் வேலை...இதெல்லாம் அப்புறம் பாக்கலாம்”!!

இந்தப் பொய்யை சொன்னப்புறம்தான் எங்களுக்கே இந்த ஐடியா கிளிக் ஆச்சு.. இவங்க கிட்டேயே கேட்டு பாக்கலாம்,”சம்பளம் வேணாம்..எக்ஸ்பிரியன்ஸ்க்காக ஒரு ஆறுமாசம் வேலை செய்றோம்”னு பிட்டை போட்டா என்னனு! வொர்க் அவுட் ஆச்சு! வைவா முடிஞ்சு இரு வாரம் ரெஸ்ட் எடுத்துகிட்டு சென்னைக்கு வந்துட்டோம்!! ஆறுமாசம் வேலை - கண்ட்ராக்ட் பொசிஷன்! அதுக்குள்ளே அவங்களே ”பட்சி சிக்கிடுச்சு” ரேஞ்சுலே ப்ராஜக்ட் அசிஸ்டெண்டா 5000 சம்பளத்துலே வேலை தந்துட்டாங்க!! எப்படியோ, அதுக்குள்ளே கொஞ்சம் கொஞ்சமா பிக்கப் ஆச்சு, எங்க ஐடி! ஃப்ரெஷரா இருந்தப்போ எங்களை கண்டுக்காத இந்த ஐடி கம்பெனிங்கல்லாம் நாம ஒரு வருஷம்/ ரெண்டு வருஷம் எக்ஸ்ப்ரியன்ஸாகிட்டோம்னு தெரிஞ்சதும் நமக்குக் கொடுக்கற வரவேற்பு இருக்கே! அதும் நம்மை கண்டுக்காத கம்பெனிங்க, நம்மளை வா வான்னு கூப்பிடறபோ ‘ப்போ போ'னு நாம சொல்றதுல இருக்க ஒரு (அல்ப) சந்தோஷம்!! சான்ஸே இல்ல!! :-) எப்படியோ ஒன்றரை வருசம் அந்த கேம்பஸிலே ஒட்டிக்கிட்டு ஆளுக்கொரு சாஃப்ட்வேர் கம்பெனியிலே செட்டில் ஆகியாச்சு..அப்புறமா..கொஞ்ச நாள்லே கல்யாணம்..என்ன..And then they lived happily ever after-ஆ!!அவ்வ்வ்வ்..அதெல்லாம் only in fairy tales-ன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன்! நீங்க இன்னுமா புரிஞ்சுக்கலை...ஐயோ ஐயோ!! :-) (எப்படியோ கேப்லே நான் fairy ஆகிட்டேன்!!)

சரி இதெல்லாம் எதுக்கா..சென்னையை எனக்குத் தெரிஞ்சவரைக்கும் சுத்திக்காட்டி இருக்கேன்லே!! :-)

உபரிக்குறிப்பு : அந்த அடையார் பேக்கரிக்கு மேலே 'Shakes n Creams 'னு ஒரு கடை இருக்கும் - காலேஜ் டைப் 'பர்த்டே பார்ட்டி'க்கு பர்ஸுக்கு ஏற்ற இடம் - குவாலிட்டி நல்லா இருக்கும் - யாரும் வந்து என்ன வேணும்னெல்லாம் கேட்க மாட்டாங்க. நீங்க எவ்ளோ நேரம் வேணா பேசிக்கிட்டு இருக்கலாம்..நீங்களே போய் சொன்னாதான் உண்டு!

40 comments:

G3 said...

//அந்த அடையார் பேக்கரிக்கு மேலே 'Shakes n Creams 'னு ஒரு கடை இருக்கும்//

அதானே பாத்தேன். எங்கடா அடையார் பேக்கரி வரைக்கும் வந்துட்டு இந்த லோகேஷன கண்டுக்காம விட்டுட்டீங்களோன்னு ;)))

G3 said...

//Long, Long Ago....
//

இதுக்கும் ஒரு தொடர் கும்மி ஆரம்பிச்சிடுவோமா ;-)))

ச.செந்தில்வேலன் said...

கல்லூரி நாள்களில், பல பொழுதுகளை இந்த shakes & Creamsல் கழித்திருக்கிறேன். அதெல்லாம் லாங்க் லாங்க் எகோ..

சின்ன அம்மிணி said...

//மத்தவங்கள்லாம் ஏன் அவ மட்டும் நிம்மதியா இருக்கானு யோசிக்க ஆரம்பிச்சுடுவாங்க!//

நம்ம அப்பா அம்மா யோசிக்காட்டியும் மத்தவங்க யோசிக்க வைச்சுடுவாங்க. நல்லவேளை எனக்கு ஒரு அக்கா இருந்ததினால தப்பிச்சேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பதிவு முழுக்க அதகளம் பண்ணி வெச்சிருக்கீங்க ஆச்சி, அசத்தல்.

இப்போ பேக் டூ த பெவிலியன் - காட்டன் ஸ்ட்ரீட்தான்! ஏனா? புரியலையா..அதான் கல்யாணம் ஆகிடுச்சே..அவ்வ்வ்வ்! //

அஃதே அஃதே அஃதே

இதேமாதிரி நாமளும் தோசைக்கடையாவது வைக்கலாம்னு மனசைத்தேத்திக்கிட்டோம்! (Career is important!!) //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நல்லவேளையா சென்னைவாசிகள் தப்பிச்சாங்க, உங்களுக்கு வேலை கொடுத்த அந்த புண்ணியவான்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும் :))))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

'தொலைஞ்சு போய்டுவேன்' இல்லன்னா 'யாராவது கடத்திட்டு போய் கண்லே கரப்பான் பூச்சியை கட்டி பிச்சை எடுக்க விடுவாங்க' //

கண்ண கட்டி பிச்சை எடுக்க விடறதெ கொடும, அதுல கரப்பான் பூச்சி வேறயா.

உங்க ஆயா கற்பனையை ஹாரி பாட்டர் கூட மிஞ்ச முடியாது போல இருக்கே :))))))

ஆயில்யன் said...

செம ஃப்ளோ கலக்கல் பாஸ் :) சிரிச்சுக்கிட்டே இருக்கேன் சில லொக்கேஷன்ஸ்ல :))))))

ஸ்ரீமதி said...

//என்னோட வாஸ்து எப்படின்னா, அஞ்சாவது முடிக்கறேன்னா அந்த வருஷம்தான் ஆறாவது சிலபஸ் மாறும்! நான் எட்டாவது படிக்கறேன்னா அப்போதான் அதைப் பொதுத்தேர்வா மாத்துவாங்க.பத்தாவது படிக்கும்போதுதான் விடைத்தாள் மார்க் போடற பேட்டர்ன் மாத்துவாங்க..பன்னெண்டாவது வரேன்னு தெரிஞ்சதும் ப்ராக்டிகல்ஸ் மாத்துவாங்க!! //

உங்களுக்குமா?? எனக்கும் தான். நான் 10th முடிக்கும்போது 11th சிலபஸ் மாறிச்சு.. 12th முடிக்கும் போது Enterence exam இருக்கு இல்லன்னு Govt வெளாண்டுச்சு.. ஒரு வழியா காலேஜ் சேந்தப்பறம் கேம்பஸ் கிடையாதுன்னு சொன்னாங்க... எப்படியோ ஒரு வழியா முடிச்சி வேலைல சேர்ந்தா ரெசஷன்னு சொல்றாங்க... :(((

ஆயில்யன் said...

/இதேமாதிரி நாமளும் தோசைக்கடையாவது வைக்கலாம்னு மனசைத்தேத்திக்கிட்டோம்!///

(
)
(
)
(
)
அப்படியே ஒரு ரீவைண்ட் ஆகி, ஆச்சி தோசைக்கடையில மீ த சிட்டிங்க் !

ஆச்சி ரெண்டு மசால் தோசை பார்சலோய்ய்ய்ய்ய்ய்!
மூணு இங்க தின்னுக்கிறேன்! :))

ஆயில்யன் said...

//ப்ராஜக்ட்-காகக் கொடுக்கற காசுதான்!! மெட்டீரியல் கலெக்ஷ்ன் பண்ணனும்ங்னு காசு கேட்டா - 'கம்ப்யூட்டர்லே என்ன மெட்டீரியல் கலெஷன்'னு திருப்பிக்கேட்டா இப்படிதான் ஆகும்!!(ஹிஹி...பெரிம்மா..மன்னிச்சுடுங்க!!)//

பெரிம்மா:- எல்லாம் எனக்கு தெரியும் கண்ணு நாங்களும் காலேஜ் படிச்சுட்டுத்தான் வந்திருக்கோம்ல! :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இது அடுத்த தொடரா? :))

எதையல்லாம் அடிக்கோடிட்டு சொல்றது.. நீங்க சைக்கிள் கேப்ல ஃபேரி ஆனதையா.. மெட்டீரியல் கலெக்சனுக்காக இப்ப மன்னிப்பு கேப்பதையா... பேக் டு பெவிலியனையா..கேரியரையா..

சரி சரி சொல்லிட்டனா எல்லாத்தையும்.. :) சூப்பரூ..

யாருப்பா இதை முதல்ல தொடரப்போறது..?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அச்சச்சோ அந்த டிவின் டவர் டிவிஸ்ட் பத்தி என் பாராட்டு லிஸ்ட்ல விட்டுப்போச்சே..

கைப்புள்ள said...

//உபரிக்குறிப்பு : அந்த அடையார் பேக்கரிக்கு மேலே 'Shakes n Creams 'னு ஒரு கடை இருக்கும் - காலேஜ் டைப் 'பர்த்டே பார்ட்டி'க்கு பர்ஸுக்கு ஏற்ற இடம் - குவாலிட்டி நல்லா இருக்கும் - யாரும் வந்து என்ன வேணும்னெல்லாம் கேட்க மாட்டாங்க. நீங்க எவ்ளோ நேரம் வேணா பேசிக்கிட்டு இருக்கலாம்..நீங்களே போய் சொன்னாதான் உண்டு!
//

இப்போ அது அதே பில்டிங்கில் கீழே வந்துடுச்சு

வனம் said...

வணக்கம்

\\க்கத்துலே ஒரு குட்டி சந்து மாதிரி இருக்கும்.அங்கே, ஒரு கடை சாயங்காலத்துலே மட்டும் ஓபன் ஆகும்\\

என்னோட கல்லூரி காலங்களில் நானும் அந்த கடையின் கஸ்டமர்தான்.

நல்லா இருக்கும்

இராஜராஜன்

சென்ஷி said...

//பதிவு முழுக்க அதகளம் பண்ணி வெச்சிருக்கீங்க ஆச்சி, அசத்தல்.
//

வழிமொழிகிறேன். ஆரம்பத்தில் வேகமாக ஆரம்பிக்கும் நடை கொஞ்சமும் தளர்வில்லாம் இறுதிவரை சுவாரஸ்யப்படுத்திவிட்டீர்கள்..

தொடருங்கள் உங்கள் பயணத்தை..

நட்புடன் ஜமால் said...

அதுவும் இல்லாம, இது மெட்ராஸுக்கு போனா உருப்படாது(மெட்ராஸ் உருப்படாதுன்றது வேற விஷயம்!!]]

உங்க நேர்மை - ஹி ஹி ஹி ...

நட்புடன் ஜமால் said...

ஏரோப்ளேன் போனா அண்ணார்ந்து பார்க்கறதுன்னு!! ]]

சேம் சேம் - பசங்க என்னை 3 வருஷத்துக்கு கிண்டலினானுங்க ...

மாதவராஜ் said...

இயல்பான நகைச்சுவை இழைந்தோடியது இந்தப் பதிவில். ரசித்தேன்.

விக்னேஷ்வரி said...

நல்லா போரடிக்காம படிக்குற மாதிரி எழுதிருக்கீங்க. சிரிச்சிட்டே படிச்சேன்.

குடுகுடுப்பை said...

போராட்டத்த நகைச்சுவையா சொல்லிட்டீங்க

தீஷு said...

சூப்பரா எழுதியிருக்கீங்க முல்லை.. என்ன இது? சென்னைப் பத்தின பதிவா வருது..

கோமதி அரசு said...

”நண்பனொருவன் வந்த பிறகு விண்ணைத் தொடலாம் உந்தன் சிறகு”

நட்பு வாழ்க!

நிஜமா நல்லவன் said...

/அமிர்தவர்ஷினி அம்மா said...

பதிவு முழுக்க அதகளம் பண்ணி வெச்சிருக்கீங்க ஆச்சி, அசத்தல்./


Repeattuuuuuuu....

சிங்கக்குட்டி said...

//”சம்பளம் வேணாம்..எக்ஸ்பிரியன்ஸ்க்காக ஒரு ஆறுமாசம் வேலை செய்றோம்”//

எல்லோருமே இப்படிதானா :-))

அன்புடன் அருணா said...

//அதும் நம்மை கண்டுக்காத கம்பெனிங்க, நம்மளை வா வான்னு கூப்பிடறபோ ‘ப்போ போ'னு நாம சொல்றதுல இருக்க ஒரு (அல்ப) சந்தோஷம்!! சான்ஸே இல்ல!! :-)//
அது சரி....!!கலக்கிட்டீங்க!

மணிநரேன் said...

பல இடங்களில் சிரிக்க வைத்தது பதிவு.

Deepa said...

அசத்தல்! வெகு சுவாரசியமாக இருந்தது.

//“மெட்டீரியல் கலெஷன்' என்னனு தெரியலையா...நீங்க ரொம்ப நல்லவஙகன்னு நம்பிட்டேன்!//

நம்பித்தான் ஆகணும்! ஆனா guess பண்ணேன்.

மங்களூர் சிவா said...

பதிவு செம ரகளையா இருக்கு. நிறைய இடங்களில் சிரித்தேன்.

பின்னோக்கி said...

//ஏரோப்ளேன் போனா அண்ணார்ந்து பார்க்கறதுன்னு!! //

சந்தனமுல்லை, நீங்கள் இல்லை, ஜப்பானில் கூட, ஏரோப்ளேன் போனா, பார்ப்பாங்க. அது பறக்குற கம்பீரம், அனைவரயும் பார்க்கவைக்கும்.

நல்ல பதிவு.

☀நான் ஆதவன்☀ said...

சென்னைய ஒரு வழி ஆக்கியிருக்கீங்க போல :)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இது மெட்ராஸுக்கு போனா உருப்படாது(மெட்ராஸ் உருப்படாதுன்றது வேற விஷயம்!!)//


:)))))
அவ்வ்வ்வ்வ்வ்வ்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

(இதே பிட்டு லதா வீட்டுலேயும் ஓடுச்சு!!) பில்டப் கொடுத்து சமாளிச்சாச்சு! //

பிட்டுக்கு எதுக்கு பில்டப்பு!?

ஒரு லட்டு கொடுத்தா, பர்மிசன் கிராண்டட்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உங்களுக்குமா?? எனக்கும் தான். நான் 10th முடிக்கும்போது 11th சிலபஸ் மாறிச்சு.. 12th முடிக்கும் போது Enterence exam இருக்கு இல்லன்னு Govt வெளாண்டுச்சு.. ஒரு வழியா காலேஜ் சேந்தப்பறம் கேம்பஸ் கிடையாதுன்னு சொன்னாங்க... எப்படியோ ஒரு வழியா முடிச்சி வேலைல சேர்ந்தா ரெசஷன்னு சொல்றாங்க... :(((//

அப்படியா?
இப்பல்லாம் ஸ்கூலுக்கு பஸ்ஸ மாத்தி மாத்தி விடுறாங்க. உங்க காலத்துல சில பஸ் தானே மாறினிச்சு. சந்தோசப்படுங்க.

எண்ட்ரன்ஸ் வச்சாலும் லாபம், வக்காட்டியும் லாபம். எதப் பண்றதுன்னு அரசாங்கம் கொழம்புனது உண்மைதான்!

இதுவும் உண்மைதான்.
இப்பல்லாம் பெரியகடைத்தெரு காம்ப்லக்ஸ் -ளயே மூனாவது மாடியில நாலு ரூம தடுத்து அதுல காலேஜு நடக்குது. காம்பஸுக்கு எங்க போறது. ஜாமன்ரி பாக்ஸுல பத்தாத்தான் உண்டு,

வேலைக்கு போனாக்கூட ஆளைக் குறைக்கிறான். நாமதான் ஜாக்கிரதையா இருந்துக்கனும்.

:))))) :P

லதானந்த் said...

மிக நல்லா வந்திருக்கு இந்த இடுகை!
பத்திரிக்கைகள் எதிர்பார்க்கிறது இப்படித்தான்.
வாழ்த்துக்கள்!

ராஜா | KVR said...

//G3 said...
//அந்த அடையார் பேக்கரிக்கு மேலே 'Shakes n Creams 'னு ஒரு கடை இருக்கும்//

அதானே பாத்தேன். எங்கடா அடையார் பேக்கரி வரைக்கும் வந்துட்டு இந்த லோகேஷன கண்டுக்காம விட்டுட்டீங்களோன்னு ;)))

//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய் :-)

நிஜமா நல்லவன் said...

/மங்களூர் சிவா said...

பதிவு செம ரகளையா இருக்கு. நிறைய இடங்களில் சிரித்தேன்./

ஆபீஸ்ல படிச்சிட்டு வீட்டுக்கு போறப்போ நிறைய இடங்களில் சிரிச்சியா சிவா...ஹையோ...ஹையோ...:))

kanagu said...

பதிவு ரொம்ப சூப்பருங்க :))) அதுவும் சென்னை-ய பத்தி சொல்லி இருக்கீங்க :))

/*மெட்ராஸ் உருப்படாதுன்றது வேற விஷயம்!!*/

என்னை மாதிரியான சென்னைவாசிகளை இந்த வரிகள் கடுமையாக தாக்குகின்றன :)))

/*அடையாரிலே 'அடையார் பேக்கரி' இருக்கு..அதுதான் எல்லாருக்கும் தெரியுமே! ஆனா அங்கே போகக்கூடாது..*/

LOL :)))

/*“நெருப்புன்னா வாய் வெந்துடவா போகு்து...உடனேவா கல்யாணம் பண்ணிட போறோம்..ஆரம்பிக்கலாம்..பார்த்துக்கிட்டே இருப்போம்..அமைஞ்சா பண்ணலாம்...எப்படியும் ஒரு வருஷம் ஆகும்..அதுக்குள்ளே நீயும் வேலைக்கு டிரை பண்ணு”னு*/

செம உவமை :)))

துபாய் ராஜா said...

இயல்பான எழுத்துநடையில் சுவையான அனுபவப்பதிவு.

தமிழன்-கறுப்பி... said...

ஆச்சி றொக்கிங்ஸ்..!

:)

" உழவன் " " Uzhavan " said...

அனுபவம் இனிமை, கலக்கல் :-)