Tuesday, August 11, 2009

பன்றிக்காய்ச்சல், வேளச்சேரி,பள்ளிகள் மற்றும் பெற்றோர்...

அமெரிக்கா, மெக்ஸிகோ என்றுக் கேள்விப்பட்டு கடைசியில் இந்த பன்றிக்காய்ச்சல் வந்துவிட்டது எங்கள் வீட்டுக்கருகில். நான்காவது Hop-இல் தெரிந்த ஒருவருக்கு பாஸிடிவ். நேற்றுக்காலை வரை எந்தக்கேள்வியுமில்லாமல்தான் அவரவர் பணியிடத்திற்குச் சென்றுக்கொண்டிருந்தோம். பப்புவை பள்ளிக்கு அனுப்புவதிலும் எந்தக் கேள்வியுமில்லாமல். அந்தச் சிறுவனின் மரணம், உடனே பரவிய முன்னெச்சரிக்கை பற்றிய மின்மடல்கள், மாஸ்க்குகள் பற்றிய விவரங்கள், சம்பாஷணைகள் என்று நேற்று மதியத்திற்குள் நீக்கமற நிறைந்திருந்தது பன்றிக்காய்ச்சல் கவலைகள்.

மதியத்திற்குள் அலுவலக நண்பரின் குழந்தைகள் படிக்கும் பள்ளி விடுமுறையை அறிவித்திருந்தது. அதைக்கேட்டு முடிப்பதற்குள், வேளச்சேரியில் பத்து பள்ளிகளில் விடுமுறை என்றச் செய்தியும் சேர்ந்திருந்தது. பப்புவின் பள்ளிக்குத் தொடர்புக் கொண்டபோது, அவர்கள், இதைக்குறித்து அரசு அலுவலர்களைத் தொடர்புக்கொண்டு பேசிக்கொண்டிருப்பதாகவும், விடுமுறை அறிவிக்க அரசு ஆணை எதுவும் அந்தப்பகுதிக்கு இல்லாததாகவும், குழந்தைகளை அழைத்துச் செல்ல விரும்பும் பெற்றோர் அழைத்துச் செல்லலாமென்றும் கூறினர்.

பப்புவுக்கு வேறு நேற்றிலிருந்து மூக்கு ஒழுக ஆரம்பித்திருந்தது. அந்த மின்மடல்களைப் படித்து படித்து எனக்கும் அதிலிருந்த அறிகுறிகள் இருப்பதாகவே ஒரு மாயை. சொல்லவா வேண்டும்...கவலைப் படுவதுதான் கை வந்த கலையாயிற்றே!! மூன்று மணிக்கு பப்பு வீட்டிற்கு வந்துவிட்டாள். டைரியில் நோட் : அரசு ஆணை வரும் வரை பள்ளி இயங்கும் என்றும் குழந்தைகளுக்கு சளி இருமல் காய்ச்சல் இருந்தால் அனுப்ப வேண்டாமென்றும் இருந்தது. இந்தவாரம் முழுவதும் பள்ளிக்கு அனுப்ப வேண்டாமென்று இப்போது முடிவு செய்துள்ளோம்.

அனுப்பிவிட்டு பயந்துக்கொண்டிருப்பதை விட இது மேல் என்றுத் தோன்றுகிறது. ஆனால் எவ்வளவு நாளைக்கு?!! I am paranoid. அதீத எச்சரிக்கையுணர்வும், அச்சமும், கவலையுங்கொள்வதுமே திடீரென்று நமது வாழ்க்கையாகிவிட்டதோவென்றுத் தோன்றுகிறது!
முன்பு ஆந்தராக்ஸ் பயம் பரவியபோது இப்படி இல்லவே இல்லை, நான்!! எனது அச்சம், கவலை, நம்பிக்கை எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் - பப்பு!! (கடவுளுக்கு நன்றி!)

சஞ்சயின் அம்மாவை நினைத்துப்பார்த்தேன். இதயம் வலித்தது. தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியை இறைவன் அவருக்குத் தரவேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன். அந்தக்குழந்தையின் வலி, அதைக்கண்டு பெற்றோரின் வலி....எல்லாம் ஒரு வைரஸினால்! அந்தச்சிறுவனின் தந்தை சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தார், அச்சிறுவனுக்கு ஏற்கெனவே ஆஸ்த்மா என்று எத்தனையோக் காரணங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்...ஆனால், அந்ததாயின் இழப்பை எந்தக் காரணம் ஈடு செய்யும்?! :-(

23 comments:

பைத்தியக்காரன் said...

பின்னூட்டமாக என்ன எழுதுவது என்று தெரியவில்லை ஆச்சி. ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது.

பப்புவை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Deepa said...

ரொம்ப பயமாகத் தான் இருக்கிறது.

சிறுவன் சஞ்சயின் நினைவு தான் நேற்று முழுதும் எனக்கும்.
நீங்கள் சொல்வது போல் ஒரு சின்ன வைரஸ் எப்பேர்ப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கூடியவரை தற்காத்துக் கொள்வோம்.

http://abidheva.blogspot.com/2009/08/14.html

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆ முல்லை அங்கயுமா.. இங்க எனக்கும் திகிலாவே இருக்கு.. பிள்ளைங்கள பள்ளிக்கு அனுப்பிட்டு நான் என்னவோ பெரிசா குத்தம் செய்தமாதிரியே பயந்துட்டு உக்காந்திருக்கேனே.. :(

நட்புடன் ஜமால் said...

சஞ்சயின் அம்மாவை நினைத்துப்பார்த்தேன். இதயம் வலித்தது. தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியை இறைவன் அவருக்குத் தரவேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன்]]

நாமும் ...

கவிதா | Kavitha said...

முல்ஸ், போன் செய்து சொல்லனும்னு நினைச்சேன்... பப்பு வை ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டாம்னு..

பைபாஸ் ரோடில் ஒருக்கும் வசந்த் அப்பார்ட்மென்ட் (ஃபுட் வேர்ட் எதிரில்) குழந்தை பாதிக்கப்பட்டு இறந்தும்விட்டான். 4 வயது, அங்கேயே 6 பேருக்கு இன்னும் தாக்கி இருக்கிறது.

சின்ன அம்மிணி said...

//ச்சிறுவனுக்கு ஏற்கெனவே ஆஸ்த்மா//

ஏற்கெனவே ஏதாவது நோய் இருந்தா , பன்றிக்காய்ச்சலுக்கு மருந்து குடுக்கறது சிக்கல்னு இங்கயும் சொல்றாங்க. இங்க விக்டொரியால தான் ஸ்வைன் ஃபுளூ அதிகம். இதப்பத்தி ரொம்ப கவலைப்பட காரணமே இது மூணு வயசில இருந்து அம்பது வயசு வரை இருக்கறவங்களுக்கு வர்றது தானாம்.
Basic hygine - அதாவது வெளியே போனால் கைகால் கழுவுவது, தும்மும்போது மூக்கை மூடிக்கொல்வது போன்றவைகளை நிச்சயமாய் கடைபிடிக்கணும்.

ஆயில்யன் said...

//அதீத எச்சரிக்கையுணர்வும், அச்சமும், கவலையுங்கொள்வதுமே திடீரென்று நமது வாழ்க்கையாகிவிட்டதோவென்றுத் தோன்றுகிறது! //

:((

வல்லிசிம்ஹன் said...

கவலைப் படுவதும் முன்னெச்சரிக்கையாக இருப்பதும் அம்மாக்களில் ப்ரையாரிட்டி. முல்லை.
அதனால் குழந்தை விஷயத்தில் கவனமாகத் தான் இருக்க வேண்டும். அடிக்கடி கைகளைக் கழுவிக்கொண்டும்,ஹாண்ட் சானிடைசர் உபயோகித்தலே போதும்.

அமுதா said...

/*ஆனால், அந்ததாயின் இழப்பை எந்தக் காரணம் ஈடு செய்யும்?! :-(
*/
:-((
மிகவும் சோகமான விசயம். மிகவும் வலித்தது. மனதில் இருந்து கொண்டே இன்னும் வலிக்கிறது.

பள்ளிக்கு விடுமுறை விடுவது பற்றி பல கருத்துக்கள் இருந்தாலும், குழந்தைகள் என்று எண்ணும்பொழுது உணர்வுப்பூர்வமாகத் தான் யோசிக்க முடியும். ஒரு மாதம் பள்ளி செல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று தான் மனதில் தோன்றியது. பள்லி விடுமுறை என்பது நிச்சயமாக கொஞ்சமேனும் "exposure" குறைக்கும் என்றால் விடுமுறையாக இருக்கட்டுமே.

அமிர்தவர்ஷினி அம்மா said...

:(

எனக்கும் பயமாத்தான் இருக்கு முல்லை.

அதீத எச்சரிக்கையுணர்வும், அச்சமும், கவலையுங்கொள்வதுமே திடீரென்று நமது வாழ்க்கையாகிவிட்டதோவென்றுத் தோன்றுகிறது //

ரொம்பவும் பத்திரமா பார்த்துக்க சொல்லிட்டு வந்திருக்கேன்.


தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியை இறைவன் அவருக்குத் தரவேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன் //

எனது ப்ரார்த்தனையும்

தீஷு said...

ரொம்ப‌ ப‌ய‌மா இருக்கு முல்லை. வீட்டில‌ விட்டா பார்த்துக் கொள்ள‌ ஆளும் இல்லை. என்ன‌ செய்வ‌து என்று புரிய‌வில்லை.

ஆகாய நதி said...

:( fear is spreading more than the fever....

take care of pappu mullai....

husband is in US... so no comments about my fear :(

கோவி.கண்ணன் said...

//
சஞ்சயின் அம்மாவை நினைத்துப்பார்த்தேன். இதயம் வலித்தது. தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியை இறைவன் அவருக்குத் தரவேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன்.//

:((

என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

நிஜமா நல்லவன் said...

:(

jackiesekar said...

சஞ்சயின் அம்மாவை நினைத்துப்பார்த்தேன். இதயம் வலித்தது. தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியை இறைவன் அவருக்குத் தரவேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன். அந்தக்குழந்தையின் வலி, அதைக்கண்டு பெற்றோரின் வலி....எல்லாம் ஒரு வைரஸினால்!//
உண்மைதான் வேளச்சேரி மடிப்பாக்க வாசிகள் பயத்தில் பல் கடித்த படி இருக்கின்றார்கள்...

குடுகுடுப்பை said...

ரொம்ப பயமாதான் இருக்கு, ஆனால் ஒரே நம்பிக்கை இந்தியாவில் மருத்துவத்துறை இதை விரைவில் கட்டுக்குள் கொண்டுவரும் என்பதுதான்.

தாரணி பிரியா said...

:(

வீணா said...

//
சஞ்சயின் அம்மாவை நினைத்துப்பார்த்தேன். இதயம் வலித்தது. தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியை இறைவன் அவருக்குத் தரவேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன்.//

:((

மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. வேண்டுவதை தவிர வேறென்ன செய்ய.. :-((

Rithu`s Dad said...

வேளச்சேரி என்றதும் நினைவுக்கு வந்தவர் நீங்கள் தான்..

அறிவு இது ஒன்றும் பெரிய வியாதி இல்லை கட்டுப்படுத்த / சரியாக்கக் கூடியது தான் என்றாலும் (வேறு எந்த ஒரு வியாதியும் ஏற்கனவே இல்லை என்றால்) .. இந்த மனது தான் கேட்கிறதா என்ன..

இருந்தாலும் தற்சமய தேவை அடிப்படை சுத்தம் மற்றும் தேவை இல்லாதா கூட்ட பங்கேற்ப்புகள்..

இங்கு ஏற்கனவே பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை விட்டிருந்தார்கள் ஆண்டு விடுமுறையுடன் சேர்த்து.. இன்னும் அது பத்து நட்கள் நீட்டித்ததாக கேள்வி..

கோமதி அரசு said...

//சஞ்சயின் அம்மாவை நினைத்துப் பார்த்தேன் இதயம் வலித்தது தாங்கிக்
கொள்ளக்கூடிய சக்தியை இறைவன் அவருக்கு தர வேண்டுமாய் வேண்டிக்
கொள்கிறேன்//

நானும் அப்படியே வேண்டிக் கொள்கிறேன், முல்லை.

கானா பிரபா said...

:(

mayil said...

ரொம்ப பயமா இருக்கு முல்லை, ஸ்கூலில் போய் பேசி கொஞ்ச நாளைக்கு லீவ் போடலாம்னு இருக்கேன். வர்ஷா வேற சும்மா இருமல் வருதுங்கறா. என்ன பன்றதுனே தெரியலை. ::((

மங்களூர் சிவா said...

பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் எச்சரிக்கையாகவே இருங்கள்.