Monday, November 24, 2008

Phase D

...has hit us now!!

பப்புவின் வளர்ச்சிகளை மகிழ்ச்சியோடு பதிவதுபோலவே இதையும் பதிகிறேன்! பப்பு ஒரு புதிய சொல்லாடலை கற்றுக் கொண்டிருக்கிறாள்!

அது ஒரு தவறான பிரயோகம் என்பது தெரிந்திருக்கிறது!!

எந்த நேரத்தில் (அவளுக்கு பிடிக்காததை நாம் செய்யும்போது, கோபப்படும் போது) உபயோகிப்பது என்பதையும் அறிந்திருக்கிறாள்!!

நாம் திருப்பி “என்ன சொன்னே?! “ என்றுக் கேட்டால், திரும்பச் சொல்கிறாள். (மறைக்கத் தெரியவில்லை..:-)!)

பப்பு “டி” போட்டு பேசக் கற்றுக் கொண்டிருக்கிறாள், வீட்டில் அப்படி ஒரு சொல்லாடல் வழக்கத்தில் இல்லாத போதும்! And she thinks its fun! பப்புவின் சைக்காலஜி, எதை செய்யாதே என்று சொல்கிறோமோ அதை செய்வதுதான்! அதனால், “இதுவும் கடந்து போகும்” என்று பொறுமையுடன் காத்திருக்கிறோம்...பதில் பேசும்போது நாங்களும் வாங்க, போங்க என்று அவளிடம் பேசுகிறோம் அல்லது கண்டுக் கொள்ளாமல் விட்டுவிடுகிறோம்(அப்படிதான் ராஸ்கல் என்று சொல்வது மறைந்துப் போயிற்று)!

இந்தப் பதிவை படிக்கும் நீங்கள் ஒரு பெற்றோர் எனில் இதே போன்ற சூழலை கையாண்டிருக்கிறீர்கள் எனில் பகிர்ந்துக் கொள்ளவும். இதைவிட நல்ல வழிமுறைகளை எதிர்நோக்கி!!

28 comments:

அதிரை ஜமால் said...

\\பப்பு “டி” போட்டு பேசக் கற்றுக் கொண்டிருக்கிறாள், வீட்டில் அப்படி ஒரு சொல்லாடல் வழக்கத்தில் இல்லாத போதும்! And she thinks its fun! பப்புவின் சைக்காலஜி, எதை செய்யாதே என்று சொல்கிறோமோ அதை செய்வதுதான்! அதனால், “இதுவும் கடந்து போகும்” என்று பொறுமையுடன் காத்திருக்கிறோம்...பதில் பேசும்போது நாங்களும் வாங்க, போங்க என்று அவளிடம் பேசுகிறோம் அல்லது கண்டுக் கொள்ளாமல் விட்டுவிடுகிறோம்(அப்படிதான் ராஸ்கல் என்று சொல்வது மறைந்துப் போயிற்று)! \\

சிறந்த வழி முறை.

தமிழன்-கறுப்பி... said...

காலப்போக்கில் மாறி விடலாம்...

அமுதா said...

/*இந்தப் பதிவை படிக்கும் நீங்கள் ஒரு பெற்றோர் எனில் இதே போன்ற சூழலை கையாண்டிருக்கிறீர்கள் எனில் பகிர்ந்துக் கொள்ளவும். இதைவிட நல்ல வழிமுறைகளை எதிர்நோக்கி!!"
ம்.. அப்புறம் வந்து எழுதறேன்... (கொஞ்சம் பிஸி:-)) "இதைவிட நல்ல வழிமுறைகளை" அல்ல... என் அனுபவத்தை...

ஆயில்யன் said...

காலப்போக்கில் மாற்றி விடலாம்..

ஆயில்யன் said...

//இந்தப் பதிவை படிக்கும் நீங்கள் ஒரு பெற்றோர் எனில் இதே போன்ற சூழலை கையாண்டிருக்கிறீர்கள் எனில் பகிர்ந்துக் கொள்ளவும். இதைவிட நல்ல வழிமுறைகளை எதிர்நோக்கி!!//

பெற்றோர்கள் மட்டுமின்றி என்னை போன்ற குட்டீஸ்களும் எப்படி மாறிக்கிட்டோம்ன்னு எழுதக்கூடாதா ஆச்சி?

தமிழ் பிரியன் said...

என் மகன் வெண்ணை என்று திட்டக் கற்றுக் கொண்டுள்ளானாம்... கேட்டால் மச்சான்(என் அக்கா மகன்) சொன்னாங்க.. என்று சொல்கின்றான். என்ன செய்யவென்று தெரியவில்லை.

தமிழ் பிரியன் said...

அப்புறம் அவங்க அம்மா அடிச்சா “அப்பாகிட்ட சொல்லி அடி வாங்கித் தர்ரேன்” அப்படின்னும் சொல்றானாம்..;))

மங்களூர் சிவா said...

காலப்போக்கில் மாறிவிடும். என்ஜாய் பண்ணுங்க குறும்புகளை!

மங்களூர் சிவா said...

/
தமிழ் பிரியன் said...

என் மகன் வெண்ணை என்று திட்டக் கற்றுக் கொண்டுள்ளானாம்... கேட்டால் மச்சான்(என் அக்கா மகன்) சொன்னாங்க.. என்று சொல்கின்றான். என்ன செய்யவென்று தெரியவில்லை.
/

ஒன்னும் செய்யத்தேவையில்லை தானா சரியாகிடும் சாரே!

மங்களூர் சிவா said...

/
தமிழ் பிரியன் said...

அப்புறம் அவங்க அம்மா அடிச்சா “அப்பாகிட்ட சொல்லி அடி வாங்கித் தர்ரேன்” அப்படின்னும் சொல்றானாம்..;))
/

அப்பாவே அம்மாகிட்ட அடிவாங்கறவர்னு தெரியாது போல
பாவம் குழந்தைல்ல

:)))))))))))))))

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

//கண்டுக் கொள்ளாமல் விட்டுவிடுகிறோம்// சிறந்த வழி முறை!

உண்மையில், என் குழந்தைகள் வளர வளர, பள்ளிக்கூடத்தில், பொத்தி பொத்தி வைக்காமல் வளர்க்கப்பட்ட மற்ற குழந்தைகளிடமிருந்து "இன்னும் பெரிய" வார்த்தைகளை/attitude-ஐ அறிந்தததாக வந்து சொல்கின்றன. நேற்றைக்கு அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில், நானும் கணவரும் அவசரக் கூட்டம் நடத்தினோம்! (தமிழ்மணத்தில் இவ்வளவு நாள் தாக்குப் பிடித்தவள் ஆதலால்?) என் கருத்து: "நான் வளரும் போது சுற்று வட்டார வீடுகளில் கேட்ட கெட்ட வார்த்தைகளுக்கு அளவில்லை. தமிழ் கற்பதில் எனக்கு அப்ப இருந்த ஆர்வம் இன்னும் வளர்கிறது.. எனவே..." ரங்க்ஸ்: "சரி" (:-) மாற்றப்பட்ட வள்ளுவம்: களவும் கற்று மற.

Seriously, பப்புவைப் போன்ற சின்ன வயதில் எங்கள் குழந்தைகளிடம் நாங்கள் கையாண்ட முறை:
1. சிறுகதை: எப்படி "பப்பு"வுக்கு பிடித்த கேரக்டர் (டோராவாக இருக்கலாம்), இப்படி எல்லாம் பேசக் கூடாது என்று சொல்லி போட்டியில் வென்று பரிசை வென்றது.
2. பெற்றோர் ஒருவரை ஒருவர் தெரியாமல் அப்படிச் சொல்வது போல் சொல்லி, மிகுந்த மனவருத்தத்துடன் மன்னிப்பு கேட்பது.
3. (குழந்தையின் வயதைப் பொறுத்து) உட்காரவைத்து, "எனக்கு மரியாதை முக்கியம். ____ இப்படியும், _____அப்படியும் நீசெய்யும் போது உன்னைப் பார்த்தால் ரொம்பப் பெருமையாக இருக்கு... இனிமே டீ போடாதே என்ன? அது தான் எனக்குப் பிடிக்காது".

வாழ்த்துகள்!

தீஷு said...

நாங்கள் தீஷுவிடம் கையாளும் முறை - கதை. நாங்கள் இதற்காகவே ராமன், சோமன் என இரண்டு பெயர்கள் வைத்திருக்கிறோம். நைட் தூங்கும் முன், கதை சொல்லும் பொழுது, அவள் செய்த தப்பை, ஒருவன் செய்ய மற்றவன் திருத்துவான். மறுநாள் நல்ல மாற்றம் தெரியும். பயனுள்ளதாக இருக்கிறது.

தீஷு said...

நாங்கள் தீஷுவிடம் கையாளும் முறை - கதை. நாங்கள் இதற்காகவே ராமன், சோமன் என இரண்டு பெயர்கள் வைத்திருக்கிறோம். நைட் தூங்கும் முன், கதை சொல்லும் பொழுது, அவள் செய்த தப்பை, ஒருவன் செய்ய மற்றவன் திருத்துவான். மறுநாள் நல்ல மாற்றம் தெரியும். பயனுள்ளதாக இருக்கிறது.

பிரேம்குமார் said...

கெக்கேபிக்குணி சொன்ன யோசனைகள் நல்லாத்தான் இருக்கு.... :)

முல்லை, நீங்க என்ன செஞ்சீங்க? பாப்பா பழக்கத்தை மாத்துனாங்களா என்பதையும் மறக்காமல் பதிவிலிடுங்கள் :)

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...

அப்புறம் அவங்க அம்மா அடிச்சா “அப்பாகிட்ட சொல்லி அடி வாங்கித் தர்ரேன்” அப்படின்னும் சொல்றானாம்..;))
///

:))

ரொம்ப டெரராத்தான் வளர்த்துக்கிட்டு வர்றீங்க போல!

அமுதா said...

ம். வந்துட்டேன். கண்டுகொள்ளாமல் விடுவதும் நல்ல வழிமுறைதான். ஆனால் சில சமயம் அது ரொம்ப நாள் நீடிக்கலாம், ஏன் என்றால் நான் பார்த்தவரை "டி" எல்லாம் ஸ்கூல்ல எப்ப்டியோ கற்றுக் கொள்வது. நம்மையும் உரிமையாக ஒரு தோழி போல் கூப்பிட விரும்பலாம் (இன்று வரை நந்தினி என்னைமட்டும் "ங்க" கொடுத்து பேச மாட்டாள். மீதி அனைவருக்கும் மரியாதை கொடுப்பாள். ஒரு முறை இது பற்றி பேசப்போக நீ என் ஃபிரண்ட், அப்படித்தான் பேசுவேன் என்று ரொம்ப டென்ஷன் ஆக, சரி எனக்கு மட்டும் தானே இந்த மரியாதை(?) என்று விட்டு விட்டேன்). எனவே ரொம்ப "டி" போடுவதுபோல் தெரிந்தால் நான் செல்லமாக, "டி" போடாதடா தங்கம் என்று கூறிவிட்டு பின் இயல்பாக மற்ற விஷயங்கள் பேசுவேன். "டி" போடுவது நல்ல முறைஅல்ல என்று உணர்ந்து கொண்டார்கள். எல்லா அணுகுமுறையும் குழந்தைக்கு , குழந்தைக்கு வேறுபடும். பெற்றோர் குழந்தையின் உணர்வுகளை மதித்து கவனிக்கும் வரை தெரியும் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று. எனவே முல்லைக்கு தெரியும் பப்புவுக்கு என்ன செய்தால் சரி வரும் என்று :-)

சந்தனமுல்லை said...

நன்றி ஜமால்! ஹாஜர் என்ன பண்றார்?

நன்றி தமிழன் - கறுப்பி. அதுதான் எங்களது நம்பிக்கையும்! நாம் அவள் சொல்வதைக்கேட்டு சிரிக்கும்போது என்கரேஜ் செய்வது மாதிரி ஆகிவிடுமோ என்று அப்படியே விட்டு விடுகிறோம்!


நன்றி அமுதா!
நன்றி ஆயில்ஸ்!நீங்க எப்படி மாறினீங்கன்னு எழுதுங்களேன்..:-)

நன்றி த்மிழ்பிரியன்! ஆஹா..:-)

சந்தனமுல்லை said...

நன்றி சிவா! தானா சரியாகிடும்ன்னு தான் நாங்களும் நினைக்கிறோம்.

//அப்பாவே அம்மாகிட்ட அடிவாங்கறவர்னு தெரியாது போல
பாவம் குழந்தைல்ல//

ரிப்பீட்டு..
தமிழ்பிரியன் அண்ணா : :)))))))))))))))

சந்தனமுல்லை said...

நன்றி கெக்கேபிக்குணி!

இங்கும் கதைதான்! அவளுக்கு நிறைய இமாஜினரி ப்ரெண்ட்ஸ் உண்டு....சிலசமயங்களில் அவளாகவே சொல்வாள்..அந்த பையன்தான் அபப்டி சொல்வான்..ஏன்னா அது பேட் ஹாபிட் என்று! :-).

ஆனால், அவளுக்கு அது தவறானது என்று தெரிகிறது. உபயோகிக்கக் கூடாது என்றும் தெரிகிறது. அதனால், அவளது கோவத்தை வெளிக்காட்டும் நேரத்தில் வருகிறது அந்த வார்த்தைகள்!
ம்ம்..

நன்றி ஐடியாக்களுக்கு!

சந்தனமுல்லை said...

நன்றி தீஷூ! நல்ல அணுகுமுறை! ஆமா..பப்புவும் அந்த வயதிலிருக்கும்போது ஒரே கதைமயம்தான். போட்ட குப்பை எடுத்து கூடையில் போட கதை, பெட்டில் கிறுக்ககூடாது என்பதற்கு கதை..ஆனால் இப்போது எது சரி, தவறு, தான் செய்வது சரியா இல்லையா என்றும் தெரிகிறது. தெரிந்து செய்வதை திருத்துவதுதான் கடினமாய் தோன்றுகிறது எனக்கு!

சந்தனமுல்லை said...

நன்றி பிரேம்! கண்டிப்பாக..கூடிய விரைவில் பதிவிடதான் ஆசைபடுகிறேன்! ;-)

சந்தனமுல்லை said...

நன்றி ஆயில்ஸ்!

//தமிழ் பிரியன் said...

அப்புறம் அவங்க அம்மா அடிச்சா “அப்பாகிட்ட சொல்லி அடி வாங்கித் தர்ரேன்” அப்படின்னும் சொல்றானாம்..;))
///

:))

ரொம்ப டெரராத்தான் வளர்த்துக்கிட்டு வர்றீங்க போல!//

அப்புறம் தமிழ்பிரியன் அண்ணாவை அடக்க ஆள் வேண்டாமா?
:-))

சந்தனமுல்லை said...

நன்றி அமுதா!

//நான் செல்லமாக, "டி" போடாதடா தங்கம் என்று கூறிவிட்டு பின் இயல்பாக மற்ற விஷயங்கள் பேசுவேன். "டி" போடுவது நல்ல முறைஅல்ல என்று உணர்ந்து கொண்டார்கள். //

ஆமா, செய்வது சரியா, தவறா என்று தெரிகிறது. தெரியாமல் செய்யும்போது சொல்வது எளிதாக இருந்தது. ஒரு க்ளீன் ஸ்லேட் போல. ஆனால் தவறென்று அறிந்துக் கொண்டபின்னர் செய்யும்போது சொன்னால் பிடிக்காமல் போகிறது.

//எல்லா அணுகுமுறையும் குழந்தைக்கு , குழந்தைக்கு வேறுபடும். பெற்றோர் குழந்தையின் உணர்வுகளை மதித்து கவனிக்கும் வரை தெரியும் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று.//

கரெக்ட்! மேலும் பகிர்ந்துக்கொள்வதுமூலம் நமக்கும் மற்ற அணுகுமுறைகள், பிறரின் அனுபவங்கள் அறிந்துக் கொள்ள முடிகிறதல்லவா? :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி, ஒரு வழிகாட்டல் பதிவிட்டதற்கு,

ம், அமித்து கூட டாய் என்று தான் கூப்பிடுகிறாள் அவளின் அப்பாவை, எப்போதாவதுதான் ப்பா, என்கிறாள்.

பதில் பேசும்போது நாங்களும் வாங்க, போங்க என்று அவளிடம் பேசுகிறோம்//
இதுதான் அங்கேயும் நடக்குது.

காலப்போக்கில் மாறி விடலாம்...
நம்பலாம்.

rapp said...

நீங்களே சூப்பராத்தான் இதை ஹேண்டில் பண்றீங்க:):):) சூப்பர்:):):) வாழ்த்துக்கள்:):):)

சந்தனமுல்லை said...

நன்றி அமித்து அம்மா! அந்த நம்பிக்கைலதான் ஓடிக்கிட்டிருக்கு!

நன்றி ராப்! :-)

அதிரை ஜமால் said...

\\ சந்தனமுல்லை said...
நன்றி ஜமால்! ஹாஜர் என்ன பண்றார்?\\

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்மாக வளர்கிறார் எங்கள் ஹாஜர் பாப்பா.
இன்னும் அழு குரலை மட்டுமே கேட்க முடிகிறது

ஏகலைவன் said...

என் பெண் அவங்க அம்மாவ டி போட்டு கூப்பிட நான் என்னம்மா இது அம்மாவ இப்படி சொல்றன்னு கேட்க போக அவுக சொன்னது “நானும் அம்மாவும் பிரண்ட்ஸ் அப்படித்தான் பேசிக்குவோம்”னு அடிச்சாங்க பாருங்க. இப்ப அம்மாவ டானும் அப்பாவ டின்னு கூப்பிடறாங்க.

பள்ளியில் மற்றவற்றை கற்றுக்கொள்ளும் போது இதுவும் கற்றுக்கொள்கிறார்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும்.
மாறும்.