Sunday, November 02, 2008

ஆட்டோகிராப் aka டைரி ரீவிசிட்டட்!!

12-ஆம் வகுப்பு படிக்கும்போது நான் வைத்திருந்த டைரியை ஊருக்குச் சென்றபோது கண்டெடுத்தேன். அதுவே எனது ஆட்டோகிராப் புத்தகமாயும் இருந்தது. டைரிக் குறிப்புகள் என்றால், இன்று இந்த ப்ராக்டிகல்ஸ் செய்தேன், இந்த சால்ட் வந்திருந்தது...எனக்குப் பிடித்த சில பாடல்கள், அதன் வரிகள்!! எல்லோருடைய ஆட்டோகிராப் எண்ட்ரிகளில் இருந்தது எதைப் பற்றியென்றால், நான் சொல்லும் கடி ஜோக்குகளைப் பற்றியும், என்னுடைய புன்னகையும்தான்..மேலும், சிரித்தால் குழி விழுவதைப் பற்றியும்!! எல்லாவற்றுக்கும் மேலாக அனைவரும் வாழ்த்தியிருந்தது புன்னகை வாழ்வின் எந்த சூழ்நிலையிலும் மாறிவிடக்கூடாதென்று! yes friends, the smile still remains the same with me, come what may the situations!!

ரீடர்ஸ் டைஜஸ்ட்-டிலிருந்து பிடித்த சில quotes-ம் எழுதி வைத்திருக்கிறேன், ஆவியிலிருந்ததும் சில கவிதைகளை!! அதைவிட சுவாரசியம், நானே கூட கவிதைகள் எழுதியிருக்கிறேன்..:-)). And I managed to get some interesting stickers with funny messages. ஆண்ட்ரி அகாஸியின் ஹைட், வெயிட், அட்ரஸ், சொத்து பற்றிய குறிப்புகளும் இருக்கின்றன! :(..ம்ம்ம்! ஒவ்வொரு பக்கத்திலும், ஏதாவதொரு ஸ்டிக்கர்/ரெயின்போ இருக்கிறது..நான் அப்பொழுதே ப்லாக் எழுத ஆரம்பித்துவிட்டேன் போலிருக்கிறாது!! அப்புறம் கோட் வேர்ட்ஸ் நிறையக் இருக்கிறது..ஆட்டோகிராப் என்ற பெயரில் கொஞ்சம் அட்வைஸ் வேறு!எதுகை மோனைகளிலும், உவமைகளிலும் மக்கள்ஸ் பின்னியெடுத்திருக்கிறார்கள்!எழுத்துப் பிழைகள் வேறு!

கொஞ்சம் சுமாராயிருக்கிறது என்று நான் எண்ணுகிற கவிதையை..

வாழ்வை
ஊடுருவிப்
பார்த்தபோது..!

எண்ணமுட்டை வெடித்து
வண்ணக்கனவுகள்
வானுயர வளர்ந்து நிற்கும்!
கனவுகள் கரியாய் மரித்து
உண்மைகள் இயல்பாய் புரிய
மனம் இயலாமையில்
சூம்பிப் போகும்!
நடப்புகளை கிரகிக்க
சக்தியற்ற மனம்
வெதும்பி வெதும்பி ஏங்கும்..
இனிமையாய் கழித்த
இளம்பிராயத்துக்காக....!


(அநேகமா எங்க பாட்டி ஏதாவது என்னைத் திட்டியிருப்பாங்க, அதுக்கு நான் இவ்ளோ பெரிய கவிதை எழுதியிருப்பேன்ன்னு நினைக்கிறேன்..காலையில் எழுந்து படிக்காததற்காக!சத்தியமா எதுக்கு இப்படியெல்லாம் எழுதினேன்னு இப்போ ஒன்னும் புரியல!!:-)))

32 comments:

புதுகை.அப்துல்லா said...

மீ த ஃபர்ஷடா???

புதுகை.அப்துல்லா said...

ரீடர்ஸ் டைஜஸ்ட்-டிலிருந்து பிடித்த சில quotes-ம் எழுதி வைத்திருக்கிறேன்,
//

இங்லீசு புக்கல்லாம் அப்பயே படுச்சுருக்கீக!!!ஏம்மா பெரிய ஆளா இருப்பீக போல தெரியுது. வெவரம் தெரியாம பழகிகிட்டு இருக்கேனோ???
:)))

புதுகை.அப்துல்லா said...

நடப்புகளை கிரகிக்க
சக்தியற்ற மனம்
வெதும்பி வெதும்பி ஏங்கும்..
இனிமையாய் கழித்த
இளம்பிராயத்துக்காக....!
//

சிஸ்டர் உண்மையிலேயே +2 படிக்கையில் எழுதுனதா???
ரொம்ப மெச்சூர்டா இருக்கு. பாராட்டுக்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்வை
ஊடுருவிப்
பார்த்தபோது..!

ஆக நீங்க அப்பவே ஊடுருவிப்பார்க்க ஆரம்பிச்சுட்டீங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

உண்மைகள் இயல்பாய் புரிய
மனம் இயலாமையில்
சூம்பிப் போகும்!
நடப்புகளை கிரகிக்க
சக்தியற்ற மனம்
வெதும்பி வெதும்பி ஏங்கும்..
இனிமையாய் கழித்த
இளம்பிராயத்துக்காக....!

தத்துவார்த்தமான வரிகள். நல்லா இருக்கு கவிதை. இப்பல்லாம் இப்படி எழுதறதில்லயா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

கொஞ்சம் சுமாராயிருக்கிறது என்று நான் எண்ணுகிற கவிதையை..

சூப்பராவே இருக்கிறது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நடப்புகளை கிரகிக்க
சக்தியற்ற மனம்
வெதும்பி வெதும்பி ஏங்கும்..
இனிமையாய் கழித்த
இளம்பிராயத்துக்காக....!

சாரி ஒரு டவுட், 12ம் வகுப்பு படிக்கிறச்ச உங்களுக்கு வயது 40தா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சிரித்தால் குழி விழுவதைப் பற்றியும்!!

குழி எங்கே விழுந்தது என்று குறிப்பிடவில்லையே.

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

இந்த அணுபவம் எனக்கும் உண்டு அக்கா. +2வில் வாங்கிய ஆட்டோகிராஃப் மிக இனிமையானது. நானும் கவிதை எழுத தொடங்கியது அப்போதுதான்.
திருமணமானபின் மனைவியுடன் அந்த அனுவத்தை பகிர்ந்துகொண்டதும் இனிமை....

நல்ல பதிவு நன்றி அக்கா,,,, :)

ராமலக்ஷ்மி said...

//வெதும்பி வெதும்பி ஏங்கும்..
இனிமையாய் கழித்த
இளம்பிராயத்துக்காக....!//

அருமையான கவிதை.

எழுதின போதே இளம் பிராயம்தானே. அதை விடச் சின்ன பிராயத்தில் பாட்டியின் (என்ன செய்தாலும் திட்டு வாங்காத) செல்லக் குட்டியாக இருந்திருப்பீர்கள்:), சரிதானே?

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

பள்ளிச்சோலைக்குள் சுற்றித் திரிந்தோம்
இருந்தாலும் சுதந்திரமில்லை
உள்ளே வேடனாய்
ஆசிரியர்...
வெளியேறப் போகிறோம்
இருந்தாலும் சுதந்திரமில்லை
வெளியே வேடனாய்
எதிர்காலம்!!!

இதுதான் என் ஆட்டோகிராஃப் ஏட்டின் முகப்பில் நான் எழுதிய கவிதை... :)

ஆயில்யன் said...

//12-ஆம் வகுப்பு படிக்கும்போது நான் வைத்திருந்த டைரியை ஊருக்குச் சென்றபோது கண்டெடுத்தேன்.//

ஓ வைத்திருந்த டைரியா? அப்ப அது எழுதினது யாரு?

நாங்கெல்லாம் எழுதி வைச்சிருப்போம்! :) அதுவும் இறுதி வகுப்பு டைரின்னா படு ரகசியம்!எம்புட்டு பேரு என்னோட அறிவை பத்தி அழகை பத்தி புகழ்ந்திருப்பாங்க அதையெல்லாம் பொதுவாகவாக வைக்கிறது அதுக்குத்தான் நீங்கம் 1ம் தப்பா நினைக்கவேணாம்! :))))0

ஆயில்யன் said...

//ஆட்டோகிராப் எண்ட்ரிகளில் இருந்தது எதைப் பற்றியென்றால், நான் சொல்லும் கடி ஜோக்குகளைப் பற்றியும்,//

அட! பெரிய ஆளுதான் போல தங்கச்சி!

வெரிகுட்!

வெரிகுட்! (நினைச்சுப்பார்த்தா நொம்ப பெருமையா இருக்கும்மா!)

ஆயில்யன் said...

//சிரித்தால் குழி விழுவதைப் பற்றியும்!!//


அட உண்மையாவா?

சில சமயம் கடைவாய் பல்லு ரெண்டும் காணாமல் போனாக்கூட அப்படி நடக்குமாம்ல (ஹிஹிஹி எனக்கு நடந்திருக்கு அதான்!)

ஆயில்யன் said...

//புன்னகை வாழ்வின் எந்த சூழ்நிலையிலும் மாறிவிடக்கூடாதென்று!

மீ 2 வாழ்த்திக்கிறேன் :))

ஆயில்யன் said...

//ரீடர்ஸ் டைஜஸ்ட்-டிலிருந்து பிடித்த சில quotes-ம் எழுதி வைத்திருக்கிறேன்///

அடேங்கப்பா! (இன்னொரு வாட்டியும் உன்னைய நினைச்சு பெருமைப்படறேம்மா!)

ஆயில்யன் said...

//நானே கூட கவிதைகள் எழுதியிருக்கிறேன்..:-)). ///


யேயம்மாடியோவ்வ்வ்வ்வ்! இதுவும் உண்டா! அப்ப நீங்க ஒரு சகலகலாவல்லிதான் போல

ஆயில்யன் said...

//வாழ்வை
ஊடுருவிப்
பார்த்தபோது..!//


யேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்????

ஆயில்யன் said...

//எண்ணமுட்டை வெடித்து /

அதிகமா முட்டையும் பிரியாணியும் தின்னா இப்படித்தான் தோணுமாம் எனக்கு யாரோ சொன்ன ஞாபகம்!

ஆயில்யன் said...

//நடப்புகளை கிரகிக்க
சக்தியற்ற மனம்//

ஆமாம் நியூஸ் பேப்பர்ல முதல் பக்கத்தை படிச்சுட்டு ரெண்டாம்பக்கம் போனாலே எல்லாம் மறந்துடுது :( (வயசானதும் கூட ஒரு காரணமா இருக்கும் - எனக்கு சொல்லிக்கிட்டேன்!)

ஆயில்யன் said...

சத்தியமா எதுக்கு இப்படியெல்லாம் கும்மினேன்னு இப்போ ஒன்னும் புரியல!!:-)))

கானா பிரபா said...

ஆஹாஆஆஆஆ ஆட்டோகிராப்பா ;-)

எனக்கும் ஆட்டோகிராப் நினைவுகள் இருக்கு, ஆனா சொல்லமாட்டேன் வெக்கமா இருக்கு ;)

ஆயில்யன் said...

//கானா பிரபா said...
ஆஹாஆஆஆஆ ஆட்டோகிராப்பா ;-)

எனக்கும் ஆட்டோகிராப் நினைவுகள் இருக்கு, ஆனா சொல்லமாட்டேன் வெக்கமா இருக்கு ;)
//

நீங்க சொல்லாம மறைக்கிறதை பார்த்தா எனக்கு வெக்கம் வெக்கமா வருது தல !!!

சும்மா சொல்லுங்க தல

ஆயில்யன் said...

//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
பள்ளிச்சோலைக்குள் சுற்றித் திரிந்தோம்
இருந்தாலும் சுதந்திரமில்லை
உள்ளே வேடனாய்
ஆசிரியர்...
வெளியேறப் போகிறோம்
இருந்தாலும் சுதந்திரமில்லை
வெளியே வேடனாய்
எதிர்காலம்!!!

இதுதான் என் ஆட்டோகிராஃப் ஏட்டின் முகப்பில் நான் எழுதிய கவிதை... :)
//

வேடனாய் வாத்தியார் !!!!!

தம்பி அம்புட்டு அடி வாங்கியிருக்கீயாப்பா நீ பாவம் தான் போ! :((((

தாமிரா said...

கவிதை அந்த வயசுக்கு நல்லாதான் இருக்குது.! (அதெல்லாம் சும்மா ஒருத்தர ஒருத்தர் பாராட்டிக்கிறதுதான்)

rapp said...

ஹி ஹி, நான்கூட ரெண்டு கவுஜ எழுதினேங்க, ஆனா பாருங்க அதை பதிவேத்துனதுல இருந்து எல்லாரும் என்கிட்டே கவித அப்டின்னு ஆரம்பிக்கிற எந்த விஷயத்தைப் பத்தியும் பேச மாட்டேங்குறாங்க:):):)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

எண்ண முட்டை உடைந்து ஆகா.. கோழி முட்டை எப்ப உடையும்ன்னு வேடிக்கைப்பார்த்திருப்பீங்களோ.. :)

அகாஸி ரசிகையா நீங்களும்..சரி சரி..
பள்ளிக்கூடத்துல எல்லாம் டீச்சர்ங்க கிட்ட மட்டும் தான் ஆட்டோக்ராப் வாங்கினேன்.. கல்லூரியில் தான் ப்ரண்ட்ஸ்கிட்ட அய்யோ அதெல்லாம் படிச்சா சிரிப்பாத்தான் வரும்.

சந்தனமுல்லை said...

நன்றி முத்துலெட்சுமி..அப்போ நீங்களுமா?

//அதெல்லாம் படிச்சா சிரிப்பாத்தான் வரும்//

நாங்களும் ரொம்ப சிரிச்சோம், என்னோட ஆட்டோகிராப் நோட்டை படிச்சிட்டு!

ஆகாய நதி said...

கவிதை சூப்பர் பப்பு அம்மா! என்னுடையதும் இன்னும் பத்திரமா வெச்சுருக்கேன் எங்க பொழிலனுக்காக...:)

KVR said...

//நானே கூட கவிதைகள் எழுதியிருக்கிறேன்//

ஏன் ஏன் ஏன் இந்தக் கொலவெறி?????????

சும்மா சொல்லக்கூடாது, அந்தக் கவிதை நல்லா தான் இருக்கு. நீங்க திரும்ப கவிதை எழுத முயற்சிக்கலாம்.

திகழ்மிளிர் said...

/வாழ்வை
ஊடுருவிப்
பார்த்தபோது..!

எண்ணமுட்டை வெடித்து
வண்ணக்கனவுகள்
வானுயர வளர்ந்து நிற்கும்!
கனவுகள் கரியாய் மரித்து
உண்மைகள் இயல்பாய் புரிய
மனம் இயலாமையில்
சூம்பிப் போகும்!/

அருமையான வரிகள்

Anonymous said...

not too bad!