எல்லாக் கதவுகளையும் தாளிட்டுவிட்டாலும் படுப்பதற்கு முன் ஒருமுறை சரிப்பார்ப்பதற்கு அன்று விடுபட்டுபோயிற்று! பப்புவிற்கு பொறுப்பு வர வைக்கலாமென்று
"பப்பு, கதவு பூட்டியிருக்கா பார்த்துட்டு வா, பப்பு" - என்றேன்!
நாளைக்கு பார்க்கறேன், ஆச்சி!
நாளைக்கு பார்க்கச் சொல்வேனோவென்று சந்தேகம் வந்துவிட்டது போல,
பெரிய பொண்ணாயிட்டு பார்க்கறேன், ஆச்சி!
நான் இப்போதெல்லாம் அடிக்கடி "பப்பு, நீதான் பெரிய பொண்ணாயிட்டேயில்ல பப்பு" என்று சொன்னது நினைவுக்கு வந்திருக்கும் போல..
நான் இப்போ குட்டி பெரிய பொண்ணா இருக்கேன் இல்ல..பெரிய்ய (கைகளை உயரே உயர்த்திய படி) பொண்ணாயிட்டு பார்க்கறேன், சரியா?!
அடுத்த நாளுக்கான காய்கறிகளை கழுவி வைக்கும்போது கண்ணில் பட்ட மாங்காயை ஒரு துண்டு வெட்டி சாப்பிட்டுக் கொண்டே சமையலறையிலிருந்து வந்தேன். அதைப்பார்த்த பப்பு,
"நீ சாப்பிட்டுட்டு எனக்கு தருவியா, ஆச்சி?"
என்றபோதுதான் உறைத்தது..கடவுளே, எப்படி விட்டேன் இவளை என்று!
அதைவிட அவள் கேட்ட விதம் எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. உனக்கு இல்லையென்று சொல்லிவிட முடியாத ஒரு கேள்வி!
ஆச்சி, எனக்கு தா என்று சொல்லியிருந்தால் என் குற்றவுணர்ச்சி அதிகமாயிருந்திருக்கும். ஆனால், மிகவும் பாசிடிவாக, அடுத்து அவளுக்குத்தான் தருவேன் என்ற நம்பிக்கையோடு கேட்ட அவளதுத் தொனி காதுகளில் இன்னும் ஒலிக்கிறது!!
Wednesday, November 19, 2008
ம்ம்..என்ன சொல்வேன் நான்?
Subscribe to:
Post Comments (Atom)
.jpg)


13 comments:
me the first?
சூப்பரா சொல்லிருக்கீங்க, பப்புவோட நம்பிக்கையான கேள்வியும், அதை கரெக்டா நீங்க புரிஞ்சிக்கிட்ட விதமும் ரொம்ப நல்லா இருக்கு:):):)
வாவ்! என் மருமக, முல்லை தங்கச்சி மாதிரி இல்ல. எம்புட்டு நல்ல பொண்ணா இருக்கு பாருங்க..;))
(மச்சான் டூரில் இருந்து ஊருக்கு வரும் போது கொண்டு வந்த பார்சலில் ஏதும் எங்களுக்கு வரலை என்பதை இங்கு சொல்லிக் கொள்கின்றோம்..;)) )
/* ஆனால், மிகவும் பாசிடிவாக, அடுத்து அவளுக்குத்தான் தருவேன் என்ற நம்பிக்கையோடு கேட்ட அவளதுத் தொனி காதுகளில் இன்னும் ஒலிக்கிறது */
வெரி குட் பப்பு...
ஒன்னு ஒன்னு தான் சொல்ல தோணுது... 'பப்பு படு உஷார்' :)))))))))))))))
ம்ம்..என்ன சொல்லுவோம் நாங்க?
நெகிழ்வான இந்தப் பகிர்தல்களுக்கு ‘நன்றி’ என்பதைத் தவிர..
ம்ம்..என்ன சொல்லுவோம் நாங்க?
நெகிழ்வான இந்தப் பகிர்தல்களுக்கு ‘நன்றி’ என்பதைத் தவிர..
நன்றி ராப்! நீங்கதான் முதல்! :-)
நன்றி அமுதா!
நன்றி பிரேம்! எப்போதும் அபப்டியே இருக்க வாழ்த்துங்கள்! :-)
நன்றி ராமலஷ்மி!
பப்புவோட உங்களின் புரிதல் அலாதிதாங்க.
சரியாத்தான் “தாமிரா” அவரின் பதிவுக்கு உங்க ரெண்டு பேர் பேரையும் வெச்சிருக்காரு.
very nice
பப்பு ஒரு பல்கலைக்கழகம் போல்
தோன்றுகிறாள் ! :))
நல்லா இருக்கணும்..!
:))
பப்பு சுட்டி
Post a Comment